Day 3 :: அனுமந்த வாகனம்: ஸ்ரீநிவாசர் வைகாசி விழா
மாலை: சந்திர பிரபை
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Brahmotsavam, Culture, Hindu, Mylai, Mylapore, Naagam, Nagam, Paambu, Pambu, Perumal, Sesha, Sesham, Snake, Sreenivasar, Srinivasar, Street, Temples, Vaganam, Vahanam, Vaigasi, Vaishnavite
தங்க கருட வாஹனம் :: ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் கருடோத்ஸவம்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Aanchaneya, Aanjaneya, Anjaneya, Bajrang Bali, Brahmotsavam, Culture, Hanuman, Hanumantha, Hindu, Maruthi, Maruthy, Mylai, Mylapore, Perumal, Sreenivasar, Srinivasar, Street, Temples, Vaganam, Vahanam, Vaigasi, Vaishnavite
சூரியப் பிரபை :: Srinivasa Perumal Brahmotsavam: Day 2
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Brahmotsavam, Culture, Garuda, Garudan, Garudar, Hindu, Mylai, Mylapore, Perumal, Sreenivasar, Srinivasar, Street, Temples, Vaganam, Vahanam, Vaigasi, Vaishnavite
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Brahmotsavam, Culture, Hindu, Mylai, Mylapore, Perumal, Sooriyan, Soorya, Sreenivasar, Srinivasar, Street, Sun, Surian, Suriyan, Surya, Suryan, Temples, Vaganam, Vahanam, Vaigasi, Vaishnavite
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Brahmotsavam, Culture, Hindu, Leo, Lion, Mylai, Mylapore, Perumal, Simha, Simham, Simma, Simmam, Sreenivasar, Srinivasar, Street, Temples, Vaganam, Vahanam, Vaigasi, Vaishnavite, Yaali
ஒளிப்படங்கள், விழியம்: Kaisika Purana Nadagam: Nambaduvaan Sarithiram by Prof. Ramanujam
வரலாறு + சரித்திரம்: கைசிக புராண நாடகம் :: நம்படுவான் சரிதம்
தமிழ் உலா – என்றென்றும் அன்புடன், பாலா: திருக்குறுங்குடி கிராமமும் ‘கைசிக’ நாட்டிய நாடகமும்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Alwaar Tirunagari, Alwar Thirunagari, anita Ratnam, Arts, Chennai, Culture, Devadasi, Events, Heritage, Kaisiga, Kaisika, madras, Nadagam, Nadakam, Nambi, Nellai, Performing, Perumal, Play, Ramanujam, Reviews, Shows, Stage, Temple, Theater, Theatre, Thirunelveli, Tirunelveli, Vaishnavism
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Brahmotsavam, Culture, Hindu, Mylai, Mylapore, Perumal, Sreenivasar, Srinivasar, Street, Temples, Vaigasi, Vaishnavite
ஒளிப்படங்கள், விழியம்: Kaisika Purana Nadagam: Nambaduvaan Sarithiram by Prof. Ramanujam
திருக்குறுங்குடி திரு வடிவழகிய நம்பித் திருக்கோவில் கைங்கர்யமான
பிறவித்துயரிலிருந்து ஈடேற எளிதான வழி எது எனப் பூமாதேவி கேட்க, இசைத்தொண்டே வழி என்று ஸ்ரீவராகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியது கைசிக புராணம். இதைக் கேட்ட பூமாதேவி ஆண்டாளாக அவதரித்து பூமாலையுடன் பாமாலையும் சூட்டி திரு அரங்கனை மணந்தார்.
ஸ்ரீ வராக புராணத்தில் உள்ள இந்த புராணத்தை கார்த்திகை மாதம் சுக்லபட்ச கைசிக ஏகாதசி முடிந்த துவாதசி காலையில் வைணவக் கோயில்களில் ஸ்ரீ பராசர பட்டர் வியாக்கியானத்துடன் பாராயணம் செய்து வருகிறார்கள். கைசிக ராகத்தின் பலனைச் சிறப்பித்துக் கூறுவதால் கைசிக புராணம் என்று பெயர் பெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரிக்கு 10 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திர கிரி அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடியில் நம்படுவான் சரிதம் நடைபெற்றதால் அப்பதியிலுள்ள வடிவழகிய நம்பி சன்னதியில் கைசிக ஏகாதசியன்று இந்நாடகம் நடித்துக்காட்டும் கைங்கர்யமாக நடைபெற்று வருகிறது.
ஐநூறுக்கும் மேலான ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாடகம் அதன் முழுவலிமையையும் இழந்து நின்றது. சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள், நம்பி போன்ற பாரம்பரியக் கலைஞர்களின் கைங்கர்ய உள்ளம் ஓரளவேனும் நடைபெறும் அளவில் இம்மரபைக் காத்து வந்தது.
திருக்குறுங்குடி நம்பி திருக்கோவில் பொறுப்பில் டிவியெஸ் (TVS) குடும்பத்தினர் பங்கேற்றதும் அக்குடும்பத்தில் ஒருவரான நாட்டிய வல்லுநர் திருமதி. அனிதா ரத்னம் அவர்களது உதவியும், முயற்சியும் இந்நாடகத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது.
திரு நாராயண அய்யங்காரின் தத்துவார்த்த ஆலோசனை, பேராசிரியர் சே இராமானுஜத்தின் ஆய்வு மற்றும் வழிகாட்டல், கலைமாமணி பா. ஹேரம்பநாதனின் வடிவாக்கம் ஆகியவை நம்பி திருக்கோவிலில் பத்து ஆண்டுகளாக இத்திருசேவையைத் தொடர வழி செய்துள்ளன.
பாணர் குலத்தில் பிறந்த சிறந்த வைணவ பக்தரான நம்படுவான் தினசரி இரவில் திருக்குறுங்குடி நம்பியை இசையால் பாடிப் புகழ்வதை தமது கைங்கர்யமாகக் கொண்டவர்.
கார்த்திகை மாதம் சுக்கில பட்சம் கைசிக ஏகாதசியன்று நம்படுவான் உண்ணாது உறங்காது விரதங்காத்துப் பெருமாளை சேவிக்க இரவில் வரும்போது, பிரம்ம ராக்ஷசன் ஒருவனால் வழி மறிக்கப்படுகிறார்.
கொன்று தின்று பசி தீர்த்துக் கொள்ள வந்த அந்த ராஷசனிடம், தான் பெருமாளை சேவித்து விட்டுத் திரும்பி வருவதாகப் பல சத்தியங்கள் சொல்லியும் ஏற்காதபோது, பெருமாள் மீதே சத்தியம் செய்து அனுமதி பெறுகிறார்.
பெருமாளைப் பாடி பிரியாவிடை பெற்றுத் திரும்பும் போது வடிவழகிய நம்பியே கிழவராக வந்து சோதிக்க எண்ணி, இராட்சனிடம் திரும்பிப் போகாமல் தப்பித்துச் செல்லும்படி நம்படுவானிடம் கூறுகிறார். ஆனால் நம்படுவானோ சத்தியம் தவறாமல் இராஷஸனிடமே மீண்டும் வருகிறார்.
ஆனால் ராக்ஷஸன் அவரை உண்பதற்குப் பதில் அவரது புண்ணியத்தில் குறிப்பாக கைசிக ராகத்தில் பெருமாளைப் பாடிக் கிடைத்த புண்ணியத்தில் எள்ளளவாவது தருமாறு கெஞ்சுகிறான். அந்தணர் காலத்தில் சோம சர்மாவாக பிறந்த அந்த இராக்கதன் அகந்தையால் யாகத்தில் மந்திரத்தைத் தவறாகச் சொன்னதால் இராட்சனாக சபிக்கப்பட்டான்.
சாப விமோசந்த்திற்காக நம்படுவானின் கைசிக ராகப் புண்ணியத்தைப் பெறக் காத்திருப்பதாகக் கூறி நம்படுவானின் அடிகளில் விழுந்து வணங்குகிறான். நம்படுவானும் இரக்கப்பட்டு தனது பாட்டின் பலனைத் தந்து அவனுக்கு விமோசனம் கொடுத்து நம்பியின் திருவடிகளை அடையச் செய்தார்.
அரங்கில்
நம்படுவான் கைவாரம்: கலைமாமணி குரு பி ஹேரம்பநாதன்
நம்படுவான்: முனைவர் சுமதி சுந்தர்
திருமதி எம் ராஜகுமாரி
பிரம்மராட்சஷன்: திரு எஸ். கோபி
நம்பிக்கிழவர்: குமாரி எம்.ஏ. அருணோதயம்
துணைப்பாத்திரங்கள்: குமாரி. தமிழ்மதி, குமாரி ஜோதி
இசையில்
நட்டுவாங்கம்: திரு எச் ஹரிஹரன்
பாட்டு: திருமதி எஸ் லலிதா
திருமதி எஸ் பானுமதி
குழல்: திரு என் கிரீஷ்குமார்
மிருதங்கம்: திரு என் ஆர் மணிகண்ட தீட்சிதர்
நாதஸ்வரம்: திரு அருண்குமார்
தவில், சுத்தமத்தளம்: திரு டி செந்தில்குமார்
வல்லுநர் ஆலோசனையில்
தத்துவம்: திரு உ.வே திருநாராயண ஐயங்கார்
அரங்க இயல்: கலைமாமணி நா முத்துசாமி
பனுவல்: முனைவர் ம வேலுசாமி
இசை: பேராசிரியர் ம வைத்தியலிங்கம்
முனைவர் அரிமளம் பத்மனாபன்
ஆவணப்படுத்துதலில்
முனைவர் கு. முருகேசன்
திரு எஸ் ஏ கன்னையா
நிர்வாக ஒருங்கிணைப்பு: திரு ஆர் நாகராஜன்
திரு ஜி ராஜமாணிக்கம்
உதவி: திரு ஜி விஜயகுமார்
வடிவமைப்பு: கலைமாமணி பி ஹேரம்பநாதன்
வழி நடத்துநர்: பேராசிரியர் சே இராமானுஜம்
கலையாக்க ஆலோசகர் மற்றும் தாளாளர்: கலைமாமணி திருமதி அனிதா ரத்னம்
தாளாண்மை: ‘அரங்கம்’ அறக்கட்டளை, சென்னை.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது anita Ratnam, Arts, கலை, கைசிக, கோயில், கோவில், சென்னை, டிராமா, நம்பி, நாடகம், பெருமாள், வைணவம், வைஷ்ணவம், Culture, Drama, Events, Heritage, History, Kaisika, Kalai, madras, Nadagam, Nadakam, Nellai, Performance, Professor, Ramanujam, Shows, Stage, Temples, Theater, Traditions
Posted in Arts, சமூகம், நிகழ்வுகள்
குறிச்சொல்லிடப்பட்டது anita Ratnam, Anitha Rathnam, Arts, ஆழ்வார் திருநகரி, இ.பா., இந்திரா பார்த்தசாரதி, கலை, கைசிக, கோயில், கோவில், சரித்திரம், தாசி, தேவதாசி, நாடகம், பேராசிரியர், ராமானுஜம், Chennai, Culture, Devadasi, Drama, Events, Heritage, Indira Parthasarathy, Indra Parthasarathy, IPa, Kaisiga, Nadagam, Nadakam, Nambaduvaan, Nambatuvaan, Nampaduvaan, Performance, Ramanujam, Shows, Sponsors, SriVaishnava, Stage, Temple, Tradition, TVS, Vaishnavites