Tag Archives: வளைகுடா

சிரியா – ஒபாமா நலமா?

சிரியா பிரச்சினையின் 101 என்ன என்பதை பா ராகவன் தி ஹிந்துவில் எழுதுகிறார். சிரியா ஏன் திடீரென்று செய்திகளில் அடிபடுகிறது?

ஒபாமாவிற்கு இந்த மூன்று மாத காலம் சிரமதசை நடக்கிறது. இதற்கு மாற்றாக குரு பார்வை, சுக்கிர பலம் எல்லாம் கிடைத்தால் நன்றாக இருக்கும். குரு போன்ற முக்கிய கிரகம் பார்ப்பதுதான் சிரியா மீது போர்மேகங்கள் சூழ்வதற்கான அஸ்திவாரம்.

இந்த மாத இறுதியில் ஒபாமாவின் சேமநல காப்பீடு திட்டம் முழுவீச்சுடன் இயங்கப் போகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் சகல அமெரிக்கருக்கும் உடல்நல பாதுகாப்பு திட்டத்தை முடக்க எதிர்க்கட்சி திட்டம் போட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு தலைவலி கொடுக்கும் ரிபப்ளிகன் கட்சியை எப்படி சமாளிப்பது? முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பது போல் குடியரசு கட்சிக்கு பிடித்தமான நாட்டுப்பற்றை முதலில் கையில் எடுத்தார் ஒபாமா.

ஸ்னோடென் கிடைத்தார். அவரும் உலக மகா ரகசியம் போல் அமெரிக்கா வேவு பார்க்கிறது என்பதை சொல்கிறார். தேசநலன், தீவிரவாதிகளை கண்காணித்தல், அமெரிக்காவை பாதுகாத்தல் போன்ற விஷயங்கள் செய்தியில் அடிபடுகின்றன. Tea party செயல்பாடுகளை வருமானவரித்துறை மூலம் ஒடுக்கியதில் இருந்து ஒபாமா மீள்கிறார். தேயிலைக் கட்சிகாரர்களின் கெடுபிடிகளை மறக்கடித்து கொடி காத்த குமரனாக பராக் ஒபாமா மிளிர்கிறார்.

கொஞ்ச நாள் போனதும் எட்வர்ட் ஸ்னோடென் பழைய செய்தியாகிப் போகிறார். மீண்டும் ஒபாமா கேர் தடுக்கப்பட வேண்டும் என்று போர் முரசு கொட்டுகிறார்கள் ரிபப்ளிகன் கட்சியினர். எப்படித் தப்பிப்பது? இப்பொழுது Wag the Dog சமயம். அமெரிக்காவே சண்டக்கோழி. இதில் மிகப் பெரிய சண்டியர்களாக குடியரசுக் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அஸ்திரம்தான் ”போர்”. ஒபாமாவே அதை கையில் எடுத்தால்…?

ஒபாமா கேர் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. சேமநலத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதைப் பற்றி பேசுவதற்கு பதில் போர் மூண்டால் எவ்வளவு ஏவுகணை விற்கும்… எத்தனை எஃப்16 தயாரிக்கலாம்… என்று முட்டைக்கணக்கு போடத் துவங்கி இருக்கிறார்கள். பெட்ரோடாலரும் வலுக் கொண்டது. ரூபாயும் போன்ற இன்ன பிற நாணய மதிப்புகளும் வீழ்ச்சி முகம் கொண்டன. இது பொக்கீடு (பட்ஜெட்) சமயத்தில் ஒபாமாவின் கரத்தை வலுப்படுத்தும். அப்படி இல்லாமல், அப்பொழுதும் பால் ரையான் & மார்க்கோ ரூபீயோ கோஷ்டியினர் தர்ணா நடத்தினால், சிரியா மீது நிச்சயம் குண்டு விழும்.

அதெல்லாம் சரி… சிரியாவில் எண்ணெய் இருக்கிறது என்கிறதே கட்டுரை… எவ்வளவு இருக்கிறது? சுவத்துக் கீரை வழிச்சுப் போடுடி, சொரண கெட்ட வெள்ளாடச்சி என்போமே அது போல் உலகத்தின் மொத்த பங்கில் 0.4% (0.004)! அது சும்மா அடுப்பு பொங்கக் கூடக் காணாது.

புத்தகங்கள் – Must browse Books: Library

சமீபத்தில் படிக்க வேண்டும் என்று நூலகத்தில் முன்பதிவு செய்துவைத்துக் கொண்ட புத்தகங்களின் பட்டியல்:

1. Nudge: Improving Decisions About Health, Wealth, and Happiness: Richard H. Thaler, Cass R. Sunstein

  • மக்கள் எடுக்கும் முடிவுகளில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்துவது எவ்வாறு?
  • மோசமான தேர்ந்தெடுப்புக்கு வழிவகுக்காமல், வாழ்க்கையில் வெற்றியும் சமூகத்திற்கு நன்மையும் கிடைக்கும் வழி செல்ல வைப்பது எப்படி?

தொடர்புள்ள வலையகம்: Nudge

2. McMafia: A Journey Through the Global Criminal Underworld: Misha Glenny

  • சிரியானா, ட்ராஃபிக் மாதிரி உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களை அறிந்து கொள்ள வேண்டுமா?
  • இஸ்ரேலின் விலைமாதுக்கள் முதல் 93 மும்பை குண்டுவெடிப்புகள் வரை உள்ள தொடுப்பு

தொடர்புள்ள பேட்டி: McMafia: A Journey Through the Global Criminal Underworld by Misha Glenny – Carnegie Endowment for International Peace

3. அ) When Men Become Gods: Mormon Polygamist Warren Jeffs, His Cult of Fear, and the Women Who Fought Back: Stephen Singular

ஆ) Stolen Innocence: My Story of Growing Up in a Polygamous Sect, Becoming a Teenage Bride, and Breaking Free of Warren Jeffs: Elissa Wall, Lisa Pulitzer

இ) Escape: Carolyn Jessop, Laura Palmer

  • அமெரிக்காவில் பைபிள் பெல்ட் என்றழைக்கப்படும் டெக்சாஸ் சார்ந்த சுற்றுப்புறங்களில் இயங்கும் Fundamentalist Church of Latter Day Saints (FLDS) குறித்த பின்னணி
  • கடவுள் நம்பிக்கைகளுக்கும் சட்டத்திற்கும் இடையே உள்ள உறவு
  • மனித உரிமைகளும் மதங்களும் எங்கு உரசுகின்றன?

4. Worst-Case Scenarios: Cass R. Sunstein

  • எம்பி3 பேட்டி: Sunstein on Worst-case Scenarios, EconTalk Permanent Podcast Link: Library of Economics and Liberty
  • உலக வெம்மையாக்கலும் தீவிரவாத ஆபத்துக்களும் – எவ்வாறு ஒப்பிடலாம்?
  • இந்தியா & ஆப்பிரிக்கா: சுனாமி, ஏவியன் பறவை காய்ச்சல், ஒசோன் படலம் – பேராபத்து களங்கள்

5. அ) Freedom From Oil: How the Next President Can End the United States’ Oil Addiction: David Sandalow

ஆ) Over a Barrel: The Costs of U.S. Foreign Oil Dependence: John Duffield

  • உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளம் இருந்தும் அமெரிக்கா ஏன் எண்ணெய் மேலே மட்டும் சார்ந்திருக்கிறது?
  • ஒவ்வொரு நாளும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதியாகிறது. இது அதிகாரபூர்வ தகவல். இதில் வெளியே தெரியாமல் மறைந்திருக்கும் செலவினங்கள் எவ்வளவு?
  • சுருக்கமான செயல்திட்டம்: How the Next President Can End Our Oil Addiction
  • பாட்காஸ்ட் பேட்டி: Freedom from Oil: How the Next President Can End the United States’ Oil Addiction – Brookings Institution

6. The Really Inconvenient Truths: Seven Environmental Catastrophes Liberals Don’t Want You to Know About–Because They Helped Cause Them: Iain Murray

  • ஆல் கோர் நோபல் பரிசு பேசுவதற்காக சுற்றுச்சூழல் குறித்து ஏட்டுச்சுரைக்காயாக கவலைப்படுகிறாரா?
  • பூச்சிக்கொல்லிகளை தடை செய்ததும் மலேரியா பரவியதும்
  • உணவுத் தட்டுப்பாடு x பயிர்களில் தயாரகும் எண்ணெய் – சாப்பாட்டு பஞ்சம்

7. Invisible Nation: How the Kurds’ Quest for Statehood Is Shaping Iraq and the Middle East: Quil Lawrence

  • குர்திஸ்தான் வலுப்பெறுவதை மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளை துருக்கி எந்நாளும் விரும்பாது.
  • இரானுக்கும் சிரியாவுக்கும் கூட குர்து பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தின் மீது நிறையவே பாசம் இருக்கிறது. இப்படியாகப் பட்ட சந்தர்ப்பத்தில் உள்ள அலசல்

8. அ) Free Ride: John McCain and the Media: David Brock, Paul Waldman

ஆ) Amazon.com: The Real McCain: Why Conservatives Don’t Trust Him and Why Independents Shouldn’t: Cliff Schecter

  • அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் ஜான் மெகெயின் குறித்த பின்னணித் தகவல்கள்
  • மெக்கெயின் – இடதுசாரியா? மிதவாத வலதுசாரியா? கைதேர்ந்த அரசியல்வாதியாக எவ்வாறு ‘வெளிப்படையானவர்’ போல் வேஷம் கட்டுகிறார்?

9. An Unbroken Agony: Haiti, From Revolution to the Kidnapping of a President: Randall Robinson

  • அமெரிக்காவின் அருகில் இருந்தாலும் ஆப்பிரிக்காவை விட பரம ஏழையாக இருக்கும் ஹைதி நாட்டின் மேலோட்டமான சரித்திரம்
  • சமீபத்தில் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ழான் – பெர்ட்ரான்ட் ஆர்ட்டிசைட் குறித்த டைரிப் பதிவுகள்

10. Stuffed and Starved: The Hidden Battle for the World Food System: Raj Patel

  • நவோமி க்ளெய்ன், சாய்னாத் என்று டிஸாஸ்டர் கேபிடலிசம் படிப்பவர்களுக்கு, மேலும் புரிதல்கள் கிடைக்கும்
  • அமெரிக்காவில் உழவர்களுக்கு கிடைக்கும் மானியங்கள், வரிவிலக்குகள் எவ்வாறு உலக சந்தையை பாதிக்கிறது?
  • மொத்த உணவு வர்த்தகத்திற்கு பல்லாயிரக் கணக்கான தயாரிப்பாளர்களும் கொள்முதலாளர்களும் இருந்தாலும் ஒரு கைக்குள் அடங்கும் இடைத்தரகர்கள்தான் விலையை நிர்ணயிக்கிறார்கள்

11. Inside the Jihad: My Life with Al Qaeda: Omar Nasiri

  • அல் க்வெய்தா, ஜிஹாத் எல்லாம் குழந்தைகளும் அறிந்த பெயராக ஆகுமுன் உள்ளே இருந்து உளவாளியான கதை

12. Snoop: What Your Stuff Says About You: Sam Gosling

  • அலுவலில் உங்கள் இடம் எப்படி இருக்கிறது? என்ன பொருட்கள் வைத்திருக்கிறீர்கள்? என்பதை வைத்து வேலைக்கு ஏற்றவரா என்று அலசலாம்
  • காதலிப்பவரின் உண்மையான குணாதிசயங்கள் என்ன என்று உளவியல் ரீதியாக அறிவது எவ்வாறு?
  • வலைப்பதிவரின் எண்ணவோட்டங்கள் எப்படி என்பதை கேள்வி-பதில் போன்ற எளிய அலசல்களில், புறச்சூழலை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்

13. The Fate of Africa: A History of Fifty Years of Independence: Martin Meredith

14. Maxims and Reflections (Penguin Classics): Johann Wolfgang von Goethe

  • அந்தக் காலத்தில் ட்விட்டர் இல்லை. அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா? சில எடுத்துக்காட்டுகள்:
    • என்ன வார்த்தை சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதம் நிழலாடுவது இயல்பு
    • பாராட்டிப் பேசுவதும் வெட்டிப் பேசுவதும் சுவாரசியமான உரையாடலுக்கு வசதிப்படாது
    • உங்களைப் பார்த்து மற்றவர் சிரித்தால் நேர்பட இயங்குகிறீர்கள் என்று அர்த்தம்
  • மேலும்: Johann Wolfgang von Goethe – Wikiquote

15. Weird History 101: John Richard Stephens

  • சரித்திரத்தை ரொம்ப சேரியமாய் எடுத்துக் கொண்டு வாசித்தறிவது இயல்பு. பிரச்சினை செய்து பரபரப்புக்கு பதிவு போட விஷயம் தேடுவது வலை இயல்பு. இரண்டாவது பிரிவுக்கு ஏற்ற புத்தகம்

16. அ) The Translator: A Tribesman’s Memoir of Darfur: Daoud Hari

ஆ) They Poured Fire On Us From The Sky: The True Story of Three Lost Boys from Sudan: Alphonsion Deng, Benson Deng, Benjamin Ajak, Judy A. Bernstein

  • சூடானில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிவரின் குறிப்புகள்
  • தன் குடும்பம் கரையேற்றப்பட்ட பிறகும், பிறருக்காக மீண்டும் தாய்நாடு சென்று பணியாற்றிவரின் வரலாறு.
  • தனி மனிதரால் என்ன செய்ய முடியும் என்பதற்கான விடை

17. Aristotle and an Aardvark Go to Washington: Thomas Cathcart, Daniel Klein

  • அரசியல்வாதி பேச்சை கனகாரியமாக எடுத்து ஆராய்ந்து, ஓட்டைகளை நகைச்சுவையாக கட்சிப் பாகுபாடின்றி கோர்க்கும் புத்தகம்.
  • இவர்களின் முந்தைய புத்தகத்தின் ரசிகன் என்பதால், எமாற்றி இருக்க மாட்டார்கள்.

18. The Logic of Life: The Rational Economics of an Irrational World: Tim Harford

  • ஆணுறை அணியாமல் விலைமாதுக்கள் ஏன் உறவு கொள்கிறார்கள்?
  • கால்பந்தாட்ட பெனால்டி கிக்கில் எந்தப் பக்கம் அடிப்பது என்று பெக்கம் எப்படி முடிவெடுகிறார்?
  • திருமணத்திற்கும் விவாகரத்திற்கும் இடையே உள்ள பொருளாதார அடிப்படை, கணக்கு என்ன?

19. The Year of Living Biblically: One Man’s Humble Quest to Follow the Bible as Literally as Possible: A. J. Jacobs

  • பைபிளில் சொல்வது போல் பரீட்சார்த்தமாக வாழ்ந்த காலத்தின் அனுபவங்கள்
  • பொய் சொல்லக்கூடாது, வதந்தி பேசக்கூடாது, அடுத்தவரின் பொருள் மேல் கண்வைக்க கூடாது என்று கர்ம சிரத்தையாக கடைபிடிக்க முடியுமா?
  • வாரத்தில் ஒரு நாள் வேலை பார்க்காமல் (அதாவது வலைப்பதியாமல்) வெறுமனே இருக்க முடியுமா?

20. How to Read Literature Like a Professor: Thomas C. Foster

  • இலக்கியத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்கு கோனார் நோட்ஸோ க்ளிஃப் உரையோ உங்களுக்குத் தேவையா?
  • எந்த உவமை வந்தாலும், குறிப்பால் உணர்த்தினாலும் தட்டையாக உணராமல், உள்ளே உறைந்திருக்கும் பொருளைப் (உள்குத்து) புரிந்து கொள்வது எப்படி?