Tag Archives: முடி

சில்வானம் – சிறுதனம் – சேடி

ரீடர்ஸ் டைஜஸ்ட் என்றால் இரண்டு விஷயம் நினைவிற்கு வருகிறது.

ஆர்.டி. மாதாந்தரியில், காசே கொடுக்காமல் நீங்கள் சந்தாதாரர் ஆகலாம் என்னும் துண்டுச் சீட்டு எப்பொழுதும் வரும். நயா பைசா முன் பணம் கொடுக்காமல், சென்ற வருடத்தின் எல்லா இதழ்களையும் வி.பி.பி. அஞ்சல் மூலம். பெற்றுக் கொள்ள வசதி உண்டு. நான் எண்பதுகளின் துவக்கத்திலேயே, திருட்டு வி.சி.டி. கிடைக்காதா என கற்பனை நுட்பத்தை, வீட்டில் இருந்தே தேடியவன்.

குடும்பத்தில் உள்ள பெரியோருக்கும் பெற்றோருக்கும் தெரியாமல், அந்தத் தபால் தலை தேவையில்லாத மடலை போஸ்ட் செய்து, தபால்காரரும் பொதியோடு வந்தார். அம்மா கையில் விழுந்தோ கத்தியில் மிரட்டியோ அவரை அதை அனுப்பித்தவருக்கேத் திரும்ப அனுப்ப வைத்தார்,

அன்று கற்றுக் கொண்ட பாடம்: எங்காவது முகவரி கொடுத்தால் – உன் சொந்த முகவரியைத் தராதே. எவராவது பெயரைக் கேட்டால், புனைப்பெயரைச் சொல்லு.

பணம் இல்லாமல், இந்த உலகில் எதுவும் கிடைக்காது என்பது இன்னொரு தரிசனம்.

அடுத்த தரிசனம் – நடிகை ஸ்ரீதேவிக்கு முந்தைய காலழகிகள்.

ஆனி ஃப்ரெஞ்ச் என்றொரு விளம்பரம் வரும். எல்லோரும் நல்ல கதையைக் கத்தரி போட்டு சேகரத்தில் வைப்பார்கள். எழுத்தாளர் அனுராதா ரமணன் என்றால் தினசரி நாளிதழில் வரும் செய்திகளை சேமிப்பேன் என்பார். எனக்கு சாடின் துணியில் வலக்காலை நீட்டி இடக்காலை தலைக்கு முட்டுக் கொடுத்து, பட்டென்று மயிர் நீக்கும் குழைமப் பெண்மணிகளின் சாந்தமான மோவாய் தாங்கிய மோனப் புன்னகை – சில்வானம்.

அதுதான் என் ரீடர்ஸ் டைஜஸ்ட். மழைக்கு ஒதுங்கியது போல் இன்னும் அந்த விளம்பரங்களின் பின் பக்கங்களை வாசிக்க வைத்திருப்பேன்.

ஆத்தா நீ காதழகி
அம்மா நீ காலழகி 

https://youtu.be/APjlA_ZBI8U?si=MEezCEvnuh_SP64v

இன்றைய சந்தேகம் & அறச்சீற்றம்

anjathey-prasanna-daya-lengthy-hair-cinema-movies.jpgதமிழக சினிமா காவல்துறை மேல் எனக்கு பெருத்த அவமரியாதை கூடிய சந்தேகம் எழுந்துள்ளது.

என் மகளுக்கு இருக்கும் கொஞ்சூண்டு தலைமுடியை வாரி விடுவதற்குள் பிராணன் போகிறது. இங்கே ‘வேட்டையாடு விளையாடு’ டேனியல் பாலாஜி, ‘அஞ்சாதே’ பிரசன்னா என்று எல்லா வில்லர்களும் சடாமுடியுடன் அருள்பாலிக்கிறார்கள். நாராயண் ‘சத்யா’ போன்ற லஞ்சப் பேர்வழிகள் நிறைந்த திரைப்பட போலீசால் ஏற்பட்ட வினை!

Vettaiyadu Vilaiyaduஇதில் டேனியல் பாலாஜி இன்னும் அக்கிரமம். அமெரிக்கா வந்த பிறகு பின் வழுக்கையும் முன் வழுக்கையும் தலை குலுக்கிக் கொள்ளும் தண்ணீரில் நீராடியும் ‘வேட்டையாடு விளையாடு’ என்று கொலையுதிர்த்தும் சிலிர்த்துக் கொண்டே பான்டீன் விளம்பரமாயும் கொழிக்கிறார்.

இதெல்லாம் நல்லதுக்கில்லை.

மயிரை சீராட்டி பாராட்டி சாம்பிராணி போடும் நேரத்தில் நாலு பொண்ணை வியாபாரம் செய்தோமா… ராகவனுக்கு எலுமிச்சை அனுப்பினோமா என்றெல்லாம் பொறுப்பாக செயல்படாமல் கூந்தல் வளர்த்து வெறுப்பேற்றும் நெகடிவ் நாயகர்களை நம்ப முடியாத குணச்சித்திரமாக சித்தரிக்கும் மிஷ்கின் & கவுதம் மேனனுக்கு கண்டனங்கள்!!!

ஜான் எட்வர்ட்ஸ் – 'என்னைப் பார்! என் அழகைப் பார்!!'

தொலைக்காட்சியில் அழகாகத் தோன்றுவது வேட்பாளர்களுக்கு காலத்தின் கட்டாயம். வியர்த்து, விறுவிறுத்து காணப்பட்டால், ‘சோர்வானவர்; பதைபதைப்புடன் செயல்படுபவர்‘ என்றெல்லாம் வாக்காளர்களின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும்.

ஆனால், அழகு பார்க்கும்போது, செல்பேசி விழியப்பதிவுகளை தடுத்தாட்கொள்வது அரசியல் வெற்றிக்கு முக்கியமான விஷயம்.

இங்கே, ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஜான் எட்வர்ட்ஸ் ‘நான் நடந்தால் நடையழகு; நான் கோதினால் முடியழகு’ என்று கண்ணாடி களிப்புறும் காட்சி:

இதற்கும் முன்னால் நானூறு அமெரிக்க வெளிகளுக்கு சிகையலங்காரம் செய்து கொண்டு சர்ச்சைக்குள்ளான செய்தி: Edwards’ $400 haircut, and other curious facts hiding in the presidential campaign-finance reports.

இவருக்கு முன்னோடியான பில் க்ளின்டன் அந்தக்கால விலைவாசிக்கு ஏற்றவாறு இருநூறு டாலர்களுக்கு முடிவெட்டி வழிகோலியிருக்கிறார்: