அங்கனா என்பது இந்தப் பெண்ணுக்குக் காரணப் பெயர்தானாம். அவள் முற்றத்தில் (ஆங்கனில்) இருக்கும் வகுப்புப் பெண்களைச் சார்ந்ததினால் அவள் பெயரைக் கூட அறியாமல் அங்கனா என அவளை அழைக்கிறார்கள். worse form of discrimination. NO identity.
இது கூம்கூம் ராய் கட்டுரையில் சொல்லப்படவில்லை. நான் அவள் பெயரே அங்கனா என நினைத்திருந்தேன்.
ஜெயமோகன் (வெண்முரசு) அவள் பெயரை சிவை என்கிறார். இது வடமொழியில் சிவா என்றிருந்திருக்கலாம். விக்கி அவள் பெயர் பரிஸ்ரமி என்கிறது
It is believed that the Mahabharatha has been modified many times. It is possible that a closer to our times version was written a few hundred years back.
Anamni Angana deals with Vidura’s mother. She had her simple desires and dreams which were teampled upon for the convenience of The royal household. Maybe Vidura got treated better because he was Satyavati’s grandson too.
குரல் கொடுப்பதிலிருந்து இடம் கோருவது வரை – அனாம்னி அங்கனா வும் அதற்கப்பாலும் கூம் கூம் ராய் தமிழில்: முத்து காளிமுத்து
1. காலையில் மூன்று மணி நேரம்; மாலையில் நான்கு மணி நேரம். நான் இரண்டு நேரங்களிலும் ஓரளவு கேட்டேன்; கலந்து கொண்டேன். காலை சந்திப்பின் துவக்க தொண்ணூறு நிமிடங்கள் நேரலையில் யுடியுப் வாயிலாக உன்னிப்பாகக் கேட்டேன். அதே போல் மாலை சந்திப்பின் கடைசி 90 நிமிடங்களில் ஜூம் வாயிலாக இணைந்தேன். இவ்வளவு நேரம் பேசுவது என்பது, ஜஸ்ட் சாதனை. அதுவும் தெளிவாக, கோர்வையாக, மேமிராவைப் பார்த்துக் கொண்டு, இருந்த இடத்தில் இருந்து அசையாது – பிரமிக்கிறேன். உங்களால் கூறியது கூறல் இன்றி சொற்கோர்வையுடன் ஏழு மணி நேரம் பல் வேறு (வாசகர் + உலகளாவிய அளவில் காணுவோர்) தரப்போடு அளவளாவ முடியுமா?! இந்த ஆசான் என்பவர் கதைகளில் வருபவர். வியாசர். குரு பகவான். தெய்வம் மனுஷ ரூபேண
2. இந்த மாதிரி ஒருவரால் உரையாட முடியும் என்று எவராவது சொல்லி இருந்தால் நகைத்து புறந்தள்ளி இருப்பேன். அதிலும் காலையில் 400 பேர், மாலையில் 400 பேர் இருப்பார்கள் என்றால், “அலுத்துப் போய், பாதியில் கழன்று கொண்டு விடுவார்கள்” என்றெல்லாம் கருத்து சொல்லியிருப்பேன். என்னுடைய கணக்கின் படி ஐநூறு பேராவது இதில் பங்கெடுத்திருப்பார்கள். பல பேர் என்னைப் போன்று காலையிலும் மாலையிலும் என இரு வேளையிலும் ஆஜர் செய்தாலும், 500+ இலக்கிய வாசகர்களை மூன்று மணி நேரத்திற்கு இணையச் சந்திப்பில் ஒரேயொருத்தர் கட்டுற வைத்திருப்பார் / வைத்திருந்தார் என்பது சற்றே நம்ப இயலவில்லை. ஆனால், நம்புங்கள். சினிமா நடிகரோ, திரைப்படக் கவர்ச்சியோ, பொய்யோ, ஆபாசமோ, கிசுகிசுவோ, வம்போ எதுவும் இல்லாமல், வெறும் மஹாபாரதம்; அவரின் நாவல்; 7 வருடங்கள் ,26 நாவல்கள், 25,000 பக்கங்கள் – அதற்காக நன்றி சொல்லவும் ஆசி வாங்கவும் கருத்துகளைப் பகிரவும் வந்தவர்கள். அசகாய சூரருக்கு வணக்கங்கள்.
3. நாம் நம் ஆதர்சங்களை சம கால சாதனையாளர்களைக் கொண்டாடுவதில்லை. இந்த நிகழ்வு எல்லா தொலைக்காட்சிகளிலும் அனைத்து சமூக ஊடகங்களிலும் சாதாரண திரள் மந்தை வாட்ஸப் வாயிலாக வைரலாக வேண்டியது. பாதி நிகழ்வில் கலந்த பிறகுதான் தோன்றியது. இதை நான் லைவ் ட்வீட் செய்திருக்க வேண்டும். பட்டி தொட்டியெங்கும் பரப்ப வேண்டும். இதற்கு டீசர் ஒன்று வீடியோவாக விட்டிருக்க வேண்டும். அதன் பிறகு டீஸர் ட்ரெயிலர் விட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல், ஆசானின் வாசகர் eன்று சொல்லுவதில் அர்த்தம் என்பதேயில்லை.
4. திருவள்ளுவரே எல்லா குறள்களையும் எழுதவில்லை. 1330 குறள்களும் தொகை நூல் போல் பல வள்ளுவர்களால் உருவாக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். இப்போது சத்தியமாக நம்புகிறேன். ஒருவரே எல்லாவற்றையும் செய்திருக்க முடியும்; செய்திருப்பார். அறம், பொருள் மற்றும் இன்பம் – எல்லாமும் ஒருவரே எழுதுவார். தெளிவாக கூறியது கூறல் இருந்தாலும் இலக்கிய நயமும் இலக்கணக் கட்டமைப்பும் புதுமையும் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தாலும் பொருந்தும் தன்மையும் கொண்டு இயற்றுவார் என்பதற்கு நவீன வியாசர் ஜெமோ-வே ஆகச் சிறந்த உதாரணம்.
6. ஆங்கிலத்தில் ஜெயமோகனின் புகழ் பாட வேண்டும். இதை ஏன் இன்னும் ஜெர்மனியில் இங்கிலாந்தில் அமெரிக்காவில் உள்ளவர்கள் அவரவர் நாட்டின் உள்ளூர் மொழியில் கொண்டு செல்லவில்லை? ஆங்கில விக்கிப்பிடியா ஆகட்டும்; அல்லது மற்ற மொழிகள் ஆன ஃப்ரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ் ஆகட்டும்; அந்தந்த ஊரில் மைந்தருக்கு ஏற்றவாறு வலையகங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும். மஹாபாரதம் எனபது எது? அது எவ்வாறு தமிழில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது? எங்கனம் அதை நீங்கள் வாசிக்கலாம்? அதெல்லாம் அந்தந்த மொழியின் வலையகங்களில் அறிமுகங்களாகவோ குறிப்புகளாகவோ விமர்சனங்களாகவே செய்யப்பட வேண்டும். ஆங்கிலத்திற்கான வலைத்தளங்களிலாவது நான் செய்ய வேண்டும்!
7. ஜெயமோகனின் தனிப் பதிவுகளை, விமர்சனங்களை, இடையிடையே போடும் ஆசுவாசங்களை எல்லோரும் எதிர்கொள்கிறார்கள். சுந்தர ராமசமியின் பிள்ளை கெடுத்தாள் விளை சிறுகதைக்கு கிடைத்த கடுமையான எதிர்வினையில் ஒரு சதவிகிதம் கூட ஜெமோ-வின் வெண்முரசு மகாபாரதத்தின் எந்தப் பகுதிக்கும் கிடைக்கவில்லை என்பது சற்றே வருத்தம் கலந்த சோகமான நிகழ்வு. 2000-களில் இலக்கியகர்த்தாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரேயொரு கதையை அது சொல்லாத விஷயங்கள், உணர்த்திய விஷயங்கள்; புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்று ஒன்று சேர்ந்து சு.ரா.வுக்கு எதிரே காலச்சுவடு என்னும் பண்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக வெறுமனே கிளர்ந்தார்கள். இன்று அது போல் வெண்முரசு வாசிப்புள்ளாக்க வேண்டும். எல்லோரும் அதன் ஒவ்வொரு கூறுகளையும் விடுபடுதல்களையும் சேர்த்தல்களையும் அர்த்த அனர்த்தங்களையும் அறைகூவி அலசி ஆராய வேண்டும். இப்பொழுது இல்லாவிட்டால்… எப்பொழுது!?
ஜெம் எழுதும் இராஜன் குறை, மாமல்லன் போன்ற ஆசுவாசங்களைத் தவிர்த்து அது போன்ற பா ஜெயபிராகாசர்களும் இன்ன பிறரும் இலக்கிய விமர்சனங்களை முன் வைத்து விவாதிக்க வேண்டும் என்பது தீரவொண்ணா ஆவல் + வேண்டுகோள். எவராவது சுவாரசியமாக அக்கபோர் அற்று விவரங்கள் உடன் வெண்முரசு போன்ற காவியத்தை விமர்சித்து அளவெடுக்க வேண்டும். இப்போதைக்கு அடிமுடி காணமுடியாத அண்ணாமுலையான் போல் வியாபித்து பிரமித்து ஸ்தம்பிக்க வைக்கிறது. காட்டான் ஜெமோ!
8. தமிழில் எழுத்தாளர் எக்கச்சக்கம். ஒவ்வொருவரையும் கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரையும் மேலும் மேலும் மேலும் (முன்று முறை சொல்லியாகி விட்டது) ஆராதித்துக் கொண்டாடி மகிழ வேண்டும். ஒரு பட்டியல்:
புதுமைப்பித்தன்,
கல்கி,
மௌனி,
ஜெயகாந்தன்,
கு.அழகிரிசாமி,
கு.ப.ரா,
சி.சு.செல்லப்பா,
ந.பிச்சமூர்த்தி
லா.ச.ரா,
சுஜாதா. — நிறைய பேசிவிட்டோம்
ராஜம் கிருஷ்ணன்,
சுந்தரராமசாமி, — நிறைய பேசிவிட்டோம்
ஆதவன்,
கரிச்சான்குஞ்சு,
ஆர்.சூடாமணி,
ஜெயந்தன்,
ப.சிங்காரம்,
நகுலன்,
ஜி.நாகராஜன்,
லட்சுமி,
நா.பார்த்தசாரதி,
எம்.வி.வெங்கட்ராம்,
பாலகுமாரன்,
ஆர்.சண்முகசுந்தரம்,.
ர.சு.நல்லபெருமாள்,
கந்தர்வன்,
மேலாண்மை பொன்னுசாமி
அன்றையத் தேதியில் வாழும் எழுத்தாளர்கள் :
அ.முத்துலிங்கம், – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது அம்பை, – சொல்வனம் சிறப்பிதழ் நன்றாக கவனம் கோருகிறது பாவண்ணன்– பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; இயலாதவை. நாஞ்சில்நாடன் – பதாகை சிறப்பாக செய்திருக்கிறார்கள்; அதை மீறி இன்னும் நன்றாக செய்ய நம்மிடம் நல்ல உழைப்பு தேவை; மற்ற ஆதர்சங்களைப் பகிர்வோம்.
இந்திராபார்த்தசாரதி,
கி.ராஜநாராயணன்,
வண்ணதாசன்,
பிரபஞ்சன்,
வண்ணநிலவன்,
மாலன்
ஆ.மாதவன்,
நீலபத்மநாபன்,
எஸ்ராமகிருஷ்ணன் — இன்னும் தீவிரமாக இயங்குபவர். இப்போதைக்கு சந்திப்புகள், யுடியுப் கேள்வி நேரங்கள், ஜூம் தொலைக்காணல்கள் என்றே வைத்துக் கோள்வோம். மேதை!
சிவசங்கரி,
பொன்னீலன்,
எஸ்.சங்கரநாராயணன்,
சா.கந்தசாமி,
வாசந்தி,
கோணங்கி,
சோ .தர்மன்,
தோப்பில்முகமது மீரான்,
பூமணி,
சு.வேணுகோபால்,
பாமா,
திலீப்குமார்,
இந்துமதி,
அழகிய பெரியவன்,
சாரு நிவேதிதா, — நிறைய செய்கிறார். ஆதரவு (பணம் அல்ல) நல்குவோம். இன்னொரு அகிலன் போன்று காணாமல் போவாரா அல்லது சோ போன்று குறிப்பிட்ட சராரின் இஷ்ட தெய்வமாவாரா என்று காலம் இவரின் இலக்கிய இடத்தை நிர்ணயம் செய்யும்.
இது சின்ன வயதில் படித்த மகாபாரதக் கதை. முக்கோணக் காதல் கதை. பிருகு முனிவர் புலோமையை விரும்புகிறார். புலோமையோ புலோமனை விரும்புகிறாள். ஆனால், யாராவது தன்னுடைய நேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே, கட்டிவைக்கப்பட்ட கணவன் பிருகுவை விட்டு விட்டு, இராட்சஸன் புலோமன் பின் செல்லலாம். அக்னியை அழைக்கிறாள். அக்னிதேவனும், ‘மனசுக்குப் பிடிச்சா, போயிட்டு வா!’ என ஆக்ஞை தர, அரக்கன் புலோமனுடன் சந்தோஷமாக இருந்து விட்டு, மகள் இந்திராணி பிறந்தவுடன் முன்னாள் கணவன் ஆன, பிருகு முனிவரிடமே திரும்பி விடுகிறாள்.
இவ்வளவுதான் கதை. சின்னக் கதை. தினத்தந்தியில் கூட வந்து இருக்கிறது. சிவமகா புராணம் தர்ம ஸம்ஹிதையில் இடம் பெற்ற கதை. நைமிசாரணிய முனிவர்கள், தக்ஷப்பிரஜாபதி, காஸ்யப முனிவர், வைவஸ்வத மன்வந்தரம், பூதகிருதாயி என கோடிக்கணக்கான கதாபாத்திரங்களும் இடங்களும் மிருகங்களும் இயற்கை அதிபதிகளும் வந்து போகும் மஹாபாரதத்தில் இடம் பெற்ற கதை. அரச வம்சாவழி, அவர்கள் திருமணம் செய்து கொண்டவர்கள், முறைப்படி மணம் புரியாமல் காதல் புரிந்தவர்கள், அவர்களின் சந்ததி என பட்டியலிட்ட காவியத்தில் ஒரு துளி.
இத்தனை விஷயங்களையும் கதையில் வைக்கிறார். அதைவிட இலக்கிய நயம் என்றால் எப்படி இருக்கும் என்பதை சொல்லுமாறு எழுதுகிறார். குழப்பமான குடும்ப அமைப்புகளையும், யாருக்கு யார் தகப்பன், எப்பொழுது எங்கே மகவு பிறந்தது, எவ்வாறு வளர்ந்தது, என்னும் சிக்கல் மிகுந்த கிளைகளை லாவகமாகச் சொல்கிறார். எல்லா விஷயங்களையும் சொல்வது ஒரு கலை; அந்த விஷயங்களை மனதில் பதியுமாறு ‘திருஷ்யமா’க ஆக்கி வார்த்தைகளில் விளக்கினாலும் நினைவின் அடி ஆழத்தில் இருத்துவது இன்னொரு கலை. அகரமுதலியையும் அபிதான கோசத்தையும் வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய காப்பியத்தை சுளுவாக உரித்து ஊட்டி விடுகிறார்.
ஜெயமோகனை எவ்வளவோ பாராட்டி இருப்போம். இருந்தாலும் அசகாய சூரரை இன்னொரு தடவை வாழ்த்துகிறேன்.
1. ”கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.”
திரும்பிப் பார்ப்பது கிரேக்க தொன்மத்திலும் ஆதிசங்கரர் புராணக் கதைகளிலும் கூட அடிக்கடி வருகிறது. உதாசீனப்படுத்துவது ஒரு வகை என்றால், “உனக்கும் கீழே உள்ளவர் கோடி!” என சொல்வது கூட திரும்பிப் பார்ப்பதில் ஒரு வகை.
2. ஜெயமோகனின் மகாபாரதம் படிக்கும்போது உங்களுக்கு எந்த மாதிரி உணர்வு வருகிறது? கல்கியின் “பொன்னியின் செல்வன்” போன்ற அனுபவம் என நினைத்து; சுஜாதா எழுதிய சரித்திர நாவலான “இரத்தம் ஒரே நிறம்” போன்ற எதிர்பார்ப்புடன் துவங்கினால்; சாண்டில்யன் கதை படிப்பது போல் இருக்கிறது. ஜெயமோகனிடம் எனக்குப் பிடித்ததாக இருப்பது அவர் எழுதும் உளவெளிப்பாடுகளின் பதிவுகள். நம் மனம் என்ன நினைக்கிறது, ஏன் அவ்வாறு முடிவெடுக்கிறது என்பதற்கான தத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை வெளிப்படையாக விவரிப்பது எனக்குப் பிடிக்கும். இங்கே கதை மட்டுமே ஓடுகிறது. சாண்டில்யனில் அதுவும் ஓடாது. ஆனால், இன்னும் கொஞ்சம் நிதானமாக மாரத்தான் துவங்கி இருக்கலாம்.
3. ”அறம்” வந்தபிறகு இந்த சம்பவம் சார்ந்த நடைக்கு மாறிவிட்டாரோ? அல்லது அதுதான் இன்றைய தலைமுறைக்கு எடுபடுகிறதோ? அல்லது சட்டுபுட்டுனு எல்லாருக்கும் தெரிந்த கதைக்கு வருவதற்கான அவசரமோ? தினசரி வாசகர் வருகையைத் தக்கவைத்துக் கொள்ளும் விருப்பமோ?
4. ”அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. நதிகள், மலைகள், நகரங்கள், ஜனபதங்கள். ஒவ்வொன்றும் அவன் முன் சொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் கொண்டன.”
பட்டால் மட்டுமே புரியும். எத்தனை சொன்னாலும், எவ்வளவு படித்தாலும் அனுபவம் போல் வருமா?
5. சுட்ட ஒவியங்களாகப் போடாமல், இதற்கென பிரத்தியேகமாகப் போடப்படும் படங்களைக் கண்டு கொண்டாட வேண்டும். அந்தக் கால விகடனில் சில்பி போல் இந்தக் கதைக்கான ஓவியங்களும் காலந்தோறும் பேர் சொல்லும். வெறுமனே கூட்டுக்கலவையாக பல்லிளிக்காமல், பிரதிபிம்பமாக மனிதர்களின் அவயங்களை மட்டும் கிறுக்காமல், படு சிரத்தையாக, அமர்க்களமாக வந்து கொண்டிருக்கிறது. நாளைய தேதியில் பளபளா தாளில் மினுக்கும் ஓவியங்களுக்காகவும் பலரின் காபி மேஜைகளை அலங்கரிக்கும் புத்தகமாக உருவாகிறது.
6. ”பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை. ”
நான் இது வரை சீனப் பெருஞ்சுவரை நேரில் பார்த்ததில்லை. அங்கொரு செஞ்சிக் கோட்டையும் இங்கேயொரு லண்டன் பிரபுக்களின் பீரங்கி பாதுகாப்பு கொண்ட இருப்பிடங்களும் எங்கேயோயொரு ராஜபுத் அரண்மனையின் சிதிலமடைந்த மதில்களும் பார்த்திருந்தாலும், ஜெயமோகன் விவரிக்கும் அஸ்தினாபுரி கம்பீரமாக அதே சமயம் தத்துவார்த்தமாக எழுந்து நிற்கிறது.
7. ஆஸ்திகன் பகுதியை சன் டிவியின் முதல் வார மகாபாரதத்தில் பார்த்ததால், இன்னும் எளிதாக உள்வாங்க முடிந்தது. திரைக்காட்சியாக்கத்தில் கண்ட ஒன்றை, படிப்பது என்றுமே அந்த கதாபாத்திரத்தை உருவகப்படுத்த உதவுகிறது.
8. அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும்? யார் யார் வந்தார்கள்? எப்படி உட்கார்ந்திருந்தார்கள்? என்ன மாதிரியான அலங்காரம்? தாமதமாக வருபவர்களே முக்கியமானவர்களா? சுற்றுச்சூழலும் தட்பவெட்பமும் எங்ஙனம்? எங்கே நடக்கிறது என இடம் மட்டும் பெயர் சூட்டாமல், அந்த விவரிப்பிற்கு உயிர் தருகிறார் ஜெயமோகன்.
தினம் ஒரு கதை எழுதுகிறார் ஜெயமோகன். அசகாய சூரன். யார் வேண்டுமானாலும் தினசரி ஒரு பகுதியாக மகாபாரதம் எழுதிவிடலாம். ஆனால், ஜெ.மோ. எழுதும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்தை இயக்குவது போல்…
ஸ்டீவ் ஜாப்ஸ் காலத்து ஆப்பிள், புதிய நுட்பத்தை அறிமுகம் செய்வது போல்…
எனக்கு புதிய இடத்தில் வேலை கிடைப்பது போல்…
எல்லாமே எதிர்பார்ப்பு கலந்த ஆர்வம் எழவைக்கும் நிகழ்வுகள். வித்தியாசமாக இனி என்ன நிகழ்ந்துவிட முடியும் என நினைக்கும்போது அசத்தும் விஷயங்களைக் கொணர்பவை.
அம்மா ஆர். பொன்னம்மாள் எழுதிய கதையொன்றில் ஆஸ்திகரை கேள்விப்பட்டிருக்கிறேன். நாஸ்திகருக்கு எதிர்ப்பதம் ஆஸ்திகர் என்பது தவிர வேறு எதுவும் இவரைக் குறித்து என்னுடைய நினைவில் ஆழமாகப் பதியவில்லை. “தீபம்” பக்கங்களைப் புரட்டினால் அல்லாது தொலைபேசும்போது கேட்டால் ஏதாவது மேட்டர் கிடைக்கும். விசாரிக்க வேண்டும்.
முதல் பகுதியில் நிறைய பெயர்கள். கத்ரு-விற்கும், வினதை-க்கும் நடுவே கிடந்த ஓரகத்தி சண்டைகளை ஏற்கனவே கேட்டிருப்பதாலும், அருணனும், கருடனும் அறிந்திருப்பதாலும், அந்தப் பகுதிகளைப் படிக்க சிரமமில்லை. ஆனால், சுவாரசியமுமில்லை.
இந்தப் பத்தியில் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவையாக அந்த வரம் தரும் பகுதி அமைந்திருக்கிறது. மேட்ரிக்ஸ் படத்திற்கு பிறகு “What is your purpose in life?” வேரூன்றிய மாதிரி, கல்வியா / செல்வமா / வீரமா-விற்கு பதில், “உள்ளிருந்து எழும் கனல், அதை அடைய அடைய அடுத்ததை நோக்கும் தாகம்” என்னும் வேண்டுகோள் – புதிய கீதை ஒன்று.
ஜரத்காரு – மின்மினி – பிண்டம் – பித்ரு…விற்கெல்லாம் இன்னும் கொஞ்சம் நீட்டி முழக்கி இருக்கலாமோ? சுண்டுவிரல் அளவில் நடமாடும் மூதாதையர்களைக் கண்டு நாம் பயப்படுகிறோம். அவர்களுக்கு திவசம் போடுகிறோம். வாழைக்காய் கொடுக்கிறோம். அவர்களும் அந்தக் கன்றுக்குட்டியையும் எண்ணெயையும் வைத்துக் கொண்டு கடைத்தேறுகிறார்கள்.
வரமோ… சாபமோ… கொடுத்ததற்குப் பின்னேயே கவலை கொள்கிறோம். ஆத்திரம் வந்தால் திட்டிவிடுவது ஆகட்டும்; அன்பு பெருகினால் வைரமாலை வாங்கி விடுவது ஆகட்டும். சிந்திய வார்த்தைகளையும் வாங்கிய கடனையும் அடைப்பது பெரும்பாடு என்பதை மகாபாரதத்தைப் பார்த்தும் அமெரிக்கா புரிந்துகொள்ளவில்லை.
’தழுவித்தழுவி இறுகியபின் மேலும் தழுவும்பொருட்டு அவர்களின் தழுவல் சற்றே தளர்ந்தபோது இருவருக்கும் நடுவே காலம் புகுந்து கொண்டது.’ : )
இவ்வளவு பெரிய கதையில் அயர்ச்சியூட்டும் பிரயோகங்கள்… ஒரே மாதிரிக் கதைகளை வேறுவேறு விதமாக சொல்வது… பத்தாண்டுகளாக தொடர்ச்சியான மொழிநடை! பிரமிக்க வைக்கிறார்.
’உன்னுடைய சின்னஞ்சிறு உடலுக்குள் விதைக்குள் பெருமரம்போல இப்பிரபஞ்சத்தின் பெருநிகழ்வொன்று குடியிருக்கிறது.’ – இது ஜெயமோகனை நோக்கி சொல்லப்பட்டாலும் சரியே!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். உலக வர்த்தக மையத்தை இடித்த தாலிபான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்படியே, சும்மா கொஞ்சம் மகாபாரத புராணக் கதை.
துரோணருக்கு முன்பு பாண்டவர்களுக்கு ஆசிரியராக, குருவாக இருந்தவர் கிருபர். கிருபருடைய சகோதரி கிருபியை, துரோணருக்கு மணம் செய்வித்தார்.
கிருபர், கௌரவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்த அவர், மகாபாரதப் போரில் கௌரவப் படையின் 11 படைத்தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். அர்ஜுனன் மகன் அபிமன்யுவை தீர்த்துக் கட்டியவர்களில் முக்கியாமானவர்.
கிருஷ்ணரின் சதியால் அசுவத்தாமாவை படைத் தளபதியாக நியமிக்கவே இல்லை. மகாபாரதப் போரின் இறுதியில் எஞ்சிய கௌரவர்களுள் கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமா ஆகிய மூவரே. மூவரும் பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்குப் பிறகு, துரியோதனனின் வீழ்ச்சியால் மனம் கொதித்திருந்தார்கள். அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.
கிருபர், அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். கிருஷ்ணரின் சகாவான கிருதவர்மா என்ற யாதவ குல மன்னரும் அவ்வாறே கூறினார். ஆனால் கிருபரின் யோசனையை அஸ்வத்தாமா ஏற்கவில்லை. அஸ்வத்தாமா கிருபரின் உடன் பிறந்த கிருபியின் மகன். துரோணருக்கு முன்பே அஸ்வத்தாமன் கருத்தரிப்பு நடந்துவிட்டது.
அஸ்வத்தாமா இரவோடு இரவாக பாண்டவர்களின் பாசறை நோக்கிச் சென்ற போது, கிருபரும், கிருதவர்மனும் உடன் சென்றார்கள். அஸ்வத்தாமா பாசறைக்கு உள்ளே சென்றபோது, கிருபர், கிருதவர்மன் இருவரும் பாசறையின் முன்வாசலில் ஒருவரும், பின்வாசலில் ஒருவருமாக காவலுக்கு நின்றார்கள். பாஞ்சாலியின் புதல்வர்களையும் திருஷ்டத்யும்னனையும் கொன்ற பிறகு, மூவரும் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்று இந்தச் செய்தியைக் கூறிய பின்பே துரியோதனனின் உயிர் பிரிந்தது.
கிருபர் ஹஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத்தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே, ஆசாரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத்தந்தார்.
* Accept that some days you’re the pigeon, and some days you’re the statue.
* Solitude is independence
* Call no man happy until he is dead - Oedipus
* It is what you read when you don't have to that determines what you will be when you can't help it. - Oscar Wilde
* The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read. - Oscar Wilde