சுந்தர் சி

எனக்கு பிடித்த பாடல்‘ என்று சுந்தர் சி பட்டியல் போட்டுக் கொண்டிருந்தார். நடிகர்களிடம் இந்த மாதிரி ‘நடித்ததில் பிடித்தது’ என்று கேட்கும்போது ‘politically correct’ நடுநிலைமையான பதில்களை சொல்வார்கள்.

‘ரஜினி சார் மாதிரி வருமா… அவர் பெரிய மனுஷத்தனம் இல்லாமப் பழகுவார்.’
‘கமல் மாதிரி கலைஞன் இருப்பாரா… எனக்கு நடிப்பு சொல்லித் தந்ததே அவர்தான்!’
‘கேப்டனுடன் நடிப்பதற்குக் கொடுத்து வச்சிருக்கணும்… நமக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு ஒதுங்கி நின்று குழந்தை போல் சிரிப்பார்.’

என்னும் ரேஞ்சுக்கு அடுக்கி செல்வார்கள்.

சுந்தர் சி கொஞ்சம் அடக்கி வாசித்தார்.

1. ‘அதோ அந்தப் பறவை போல’ – ஆயிரத்தில் ஒருவன்

படம் முடியும் தருணத்தில் வரும் பாடல்களின் தாத்பரியத்தை விளக்கினார். அன்னியனில் ‘ரண்டக்க ரண்டக்க’ வரும்போது பார்வையாளன் கடுப்பாகக் கூடாது. ‘எப்படா படம் முடியும்’ என்றோ, தம்மடிக்கவோ வெளியில் செல்லாமல், பாடலை ரசிக்க வேண்டும். அந்த விதத்தில் தன்னைக் கவர்ந்த பாட்டாக அமைந்திருக்கிறது என்றார்.

(எம். ஜி. ஆர் ஆச்சு)

2. ‘மறைந்திருந்து பார்க்கும்’ – தில்லானா மோகனாம்பாள்

திரைக்கதையுடன் ஒத்திசைவாக அமைந்திருக்கும் பாடலுக்கு எடுத்துக்காட்டாக இதை எடுத்துக் கொண்டார். நகைச்சுவை சேஷ்டைகள், காதல் ரசம், சீரியஸ் நடனம், அப்பாவி ஜனங்கள் என்று பல விஷயங்கள் கலந்து கட்டி எடுப்பதில் உள்ள கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.

(சிவாஜி ஓவர்)

3. ‘சொன்னது நீதானா’ – நெஞ்சில் ஓர் ஆலயம்

எனக்கு இந்தப் படத்தில் ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்’ நெஞ்சில் மறக்காத பாடல். அவருக்கு இது பிடித்தமான பாடல். அத்தனை சிறிய அறையில் ஒரு படுக்கை, மெகா வீணை, எல்லாவறையும் சுழலும் கேமிரா கோணங்கள் வைத்து ஸ்ரீதர் படம் பிடித்ததை வியந்தார். ஒளிப்பதிவில் சாதனை கல்லாக தான் கருதும் பதிவு என்ற பிறகுதான் குட்டி ரூமையும், அதில் வரும் காட்சியமைப்பின் மூலம் நிலைமை கை மீறுவதையும் சோகத்தையும் கொண்டு வந்ததை கவனிக்க முடிந்தது.

4. ‘காதல் வந்தால்’ – இயற்கை

அந்தக் காலத்துக்கு ஸ்ரீதர். இந்தக் காலத்திற்கு எஸ். பி. ஜகன்னாதன். நல்ல படப்பதிவு, இசை, வரிகள். அமைதியான ஷாம்.

5. ‘காதல் வளர்த்தேன்’ – மன்மதன்

என்னென்னவோ காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். எதுவும் மனதில் நிற்கவில்லை. ‘ஆளவந்தான்’ மூலம் கமல் அழித்தார்; ‘பாபா’ மூலம் ரஜினியும் சுந்தர் சி.யை மூட்டை கட்டினார். ‘யூ டூ சிம்பு!?’ என்று கேட்கும் போல் படம் ஏதாவது இயக்க வாய்ப்பளித்திருக்கிறாரா என்று அறியேன்.

6. ‘சின்னத் தாயவள்’ – தளபதி

ரஜினியின் பாடலை சொல்லாமல் எப்படி நிகழ்ச்சியை முடிக்க முடியும். ராக்கம்மா கையைத் தட்டி இருக்கலாம்.

Yamuna Rajendran (c) Thinnai.com 

Yamuna Rajendran (c) Thinnai.com Posted by Picasa

கண்டனம்

Yamuna Rajendran (c) Thinnai.comYahoo! 360° – RP RAJANAYAHEM – Entry for July 08, 2005 ::

யமுனா ராஜேந்திரன் ஆர்.பி. ராஜநாயஹமுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து….

இது ஒரு கோழைத்தனமான செயல்.இறந்தவர்கள் எல்லாருமே உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் எல்லா இனத்தையும், மதத்தையும் சார்ந்த்வர்கள்.

தீவிரவாத அரசியலை இழிக்க வேண்டும். இந்த பாதகர்களின் கொடுங்கோன்மையை இந்திய இடதுசாரிகள் இன்னும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

ஆங்கில மூலத்தை முழுவதும் படிக்க: LONDON BOMB BLASTS

திண்ணையில் யமுனா ராஜேந்திரன் படைப்புகள்

நன்றி: Yahoo! 360° – R.P. RAJANAYAHEM

டாப் 5

முற்போக்கான வலைப்பதிவு என்றால் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை கிண்டலடிக்க வேண்டும் என்பது முதற்கண் தேவை. ‘மெட்டி ஒலி’ முடிந்து போன இந்த நேரத்தில் வலைவாசகர்களுக்கு எந்த சீரியல் பார்ப்பது, எப்படி விமர்சிப்பது என்று சந்தேகங்கள் இருக்கும். அவர்களுக்கு ஒரு க்விக் கையேடு:

5. எங்கிருந்தோ வந்தாள்ஜெயா டிவி

கே. பாலச்சந்தர் இயக்குகிறார். வழக்கம் போல் புரட்சி, புதுமை என்னும் பெயரில் ஒவ்வொரு மனைவியும் வேறொருவருடன் உறவு வைத்திருப்பதை பட்டியலிடுகிறார். கூர் மழுங்கிய கதையை ஷார்ப் வசனங்கள் தூக்கி விடுகிறது. கதாநாயகி ரொம்ப லட்சணம் + தேர்ந்த நடிப்பு.

4. முகூர்த்தம் சன் டிவி

‘மெட்டி ஒலி’ டீம். இயக்குநர் மட்டும் மாற்றம். மூதாதையர்களைப் போலவே நிறைய கதாபாத்திரங்கள். பல்லாண்டு நீடூழி ஒளிபரப்பாகும்.

3. கெட்டி மேளம் ஜெயா டிவி

இன்னும் சூடு பிடிக்கவில்லை. யதார்த்தாம் நிறைய இடங்களில் வழுக்குகிறது. என்னதான் அவசரம் என்றாலும் வீட்டை தாழ்ப்பாள் கூட போடாமல் ஓடும் சென்னைவாசிகளை நான் பார்த்ததில்லை.

2. முடிச்சு ராஜ் டிவி

கெட்டி மேளத்துக்கு சரியான போட்டி. ரசிகர்களைக் கட்டிப் போடும் வித்தையை நன்றாக செய்கிறார்கள்.

1. செல்வி சன் டிவி

மீண்டும் ராதிகாதான் #1. தேர்ந்த வில்லி; இயல்பான ஹீரோ; தியாகச் செம்மல் செல்வி. ஒவ்வொரு முடிவிலும் குட்டி க்ளைமாக்ஸ். எப்பொழுது பார்த்தாலும் சீக்கிரமே பதிந்து போகும் சித்தரிப்புகள். கொஞ்ச நாளுக்கு அசைக்க முடியாது.

பள்ளிகளின் அவலநிலை

கும்பகோணம் சம்பவத்திற்குப் பிறகும் பள்ளி நிர்வாகங்கள் பள்ளிக் கட்டிடத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதில் அக்கறை காட்டவில்லை என்று சமீபத்திய சம்பவங்கள் காட்டுகின்றன.

  • மே முதல் வாரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக் கூரை பெயர்ந்து விழுந்ததில் பல குழந்தைகள் காயமடந்தார்கள்.
  • மே இரண்டாவது வாரம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள் சேத்தூர் கிராமத்து ஸ்ரீராம் துவக்கப் பள்ளியிலோ, பழுதடைந்த சுவர் இடிந்து விழுந்து 5 குழந்தைகள் இறந்தார்கள்.

    நன்றி: இந்தியா டுடே

  • சத்குரு ஜக்கி வாசுதேவ்

    அத்தனைக்கும் ஆசைப்படு! ::

    ‘ஈஷா யோக மையம்’ கிராமப் புத்துணர்வு இயக்கத்தில் இவ்வளவு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறதே, உங்களுக்கு ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா?’ என்று என்னை ஓர் இளைஞர் கேட்டார். எனக்கு அந்தக் கேள்வி வேடிக்கையாக இருந்தது. வேதனையாகவும் இருந்தது.

    ‘வீட்டுக்குப் போய் உங்கள் தாயிடம் கேளுங்கள்… உங்களைப் பெற்றெடுத்தபோது பால் கொடுத்தாளே, அதற்கு என்ன உள்நோக்கம் என்று? அதே உள்நோக்கம்தான் எனக்கும்!’ என்று அந்த இளைஞரிடம் சொன்னேன். அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ஆதாயம் இல்லாமல், உள்நோக்கம் இல்லாமல் எதையும் செய்யத் தயாராக இல்லாதவர்களால் இந்தச் சமூகம் நிரம்பிவிட்டது. அதனால், யாவற்றையும் சந்தேகத்துடன் பார்ப்பதற்கே சமூகம் பழகிவிட்டது.

    வாழ்க்கையைகணத்துக்கும் கணம் முழுமையாக அனுபவித்து வாழ வேண்டுமானால்,குறைவற்ற அன்பைச் செலுத்திப் பாருங்கள். மாறாக, வாழ்க்கையைக் கொடுக்கல் வாங்கலாக மட்டுமே பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், உங்கள் நிம்மதி தொலைந்துவிடும்! எல்லாவற்றிலும் உங்களுக்கான ஆதாயத்தை மட்டுமே தேடிக்கொண்டு இருந்தால், மனதுக்குள் சாத்தானை அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!

    உங்களுக்கு மரியாதை என்பது நீங்கள் எவ்வளவு வெற்றிகரமான வியாபாரி என்பதில் அல்ல. நீங்கள் எந்த அளவுக்கு மனிதத்தன்மையுடன் நடந்துகொள்கிறீர்கள் என்பதில்தான்! உங்கள் உண்மையான மதிப்பு, வெளியில் நீங்கள் எவ்வளவு வெற்றிகரமானவராகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதில் இல்லை. உள்ளுக்குள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதில்தான் இருக்கிறது!

    தீண்டாய்

    Kurunthogai (c) DOK - Laavanya

    Thinnai – AnyIndian 

    Thinnai – AnyIndian Posted by Picasa

    திண்ணை வம்பு

    இந்த வார திண்ணை-யில் எனிஇந்தியன்.காம் எத்தனை முறை இடம் பிடித்திருக்கிறது?

    சரியான விடை சொல்பவரின் கவிதை அடுத்த திண்ணை இதழில் வெளிவரும் 🙂

    உள்ளுதல்

    இந்தியா அப்ராட்:

    Kanishka Belated Anniversary

    தொப்பை கண்ட்ரோல் ஆயில் குறித்த பதிவு அங்கே; படம் இங்கே (நன்றி: தி ஹிந்து):

    Lowes Marketing Campaign - Sunflower Oil

    குறிப்பேடுகளின் அட்டைப்படங்கள்

    Notebook covers with Actresses

    வலையைக் கூட படம் பிடித்திருக்கிறார்கள்:
    Spider Web Weave (நன்றி: தி ஹிந்து)