Abu Salem 

Abu Salem Posted by Picasa

New Yorker – janitor Cartoon 

New Yorker – janitor Cartoon Posted by Picasa

Database 

Database Posted by Picasa

XML 

XML Posted by Picasa

இதுதான் ஐயா நுட்பம்

என்ன ஒரு வித்தியாசம் – சின்னத்தம்பி

DatabaseXML & Data Base இரண்டும் எப்படி வேறுபடுகிறது என்று அலுவலக நண்பனை கேட்டேன் அவன் சொன்ன பதில்..

DB : உருவாக்குவது, கையாளுவது சற்று கடினம். அதிக பொறுமை/திறனும் தேவைப்படும்.
XML : உருவாக்குவது / கையாளுவது எளிது.

DB : தவறு நேர்ந்தால் வெளிப்படியாக தெரியாது. அதே நேரம் வேலையும் சரியாக செய்யாது. ஒவ்வொரு காரணமாய் ஆராய்ந்து கண்டு பிடிப்பதற்குள் உயிரே போய்விடும்.

XML : உபயோகிக்கும் போது தவறு செய்தால், உடனடியாக எந்த இடத்தில் தவறு என்று சுட்டி காட்டி, திருத்திக்கொள்ள எளிதாக இருக்கும்.

DB : அதன் போக்கில் போனால்தான் வேலை நடக்கும். இல்லை அதனோடு ஒத்துபோக கூடிய மென்பொறுளை வாங்கி சரி செய்ய வேண்டும்.
XML : நாம் இழுத்த இழுப்பிற்கு வரும். Notepad போது, சொன்னதை செய்யும்.

XMLDB : ‘admin’ ஆக இருந்தால் மட்டுமே முழுமையாக கையாள முடியும். இல்லையென்றால் உடனே எல்லை மீறிவிட்டாய் என்று எரிந்து விழும்.
XML : ‘admin’ அக இருந்தல் அவசியம் இல்லை.

DB : இது கண்டிப்பாய் வேண்டும், இது இல்லாமல் வேலைக்கு ஆவாது என்பது பழைய சித்தாந்தம்.
XML : புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் XML மட்டும் வைத்துக்கொண்டு சில இணையதளங்கள் முழுமையாக செயல்படுகின்றன. இவைகளுக்கு DB தேவையில்லை.

சுருக்கமாக DB என்பது மனைவி போல,
XML என்பது காதலி போல.

சரி மறுபடியும் படியுங்கள்..
வித்தியாசம் புரியும்.

தலைப்புக்காக: Simple Sharing Extensions for RSS and OPML | வ.கே.கே.


| | |

யோகம்

எளிய முறையில் முதுகுவலி உண்டாகாமல் யோகா செய்ய சொல்லித் தருகிறார்:

இயற்கையாக நெடுநேரம் ஆழ்துயிலில் அமரும் முறை

படத்துக்கும் மதிமயக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் இன்றைய நியு யார்க் டைம்ஸில் வந்திருக்கும் ஹிப்னாடிஸம் குறித்த கட்டுரை இந்தியாவில் பயன்படுத்த ஆரம்பித்ததையும் தற்போதைய வளர்ச்சிகளையும் விவரிக்கிறது.


| |

குரங்கு கையில் வோர்ட்பிரஸ்

WordPress-இல் இலவசமாக வலைப்பதிய அழைக்கிறார்கள். வலையகம் தோறும் மடல் முகவரி வைத்துக் கொள்வது போல் இங்கும் தொடங்கலாம்.

சில சுவாரசியங்கள்:

  • எழுதியதை துறை வாரியாகப் பிரிக்கலாம்.
  • ஹாலோஸ்கான் போலவே மறுமொழிந்தவர்களின் ஐ.பி.யை தெரிந்து வைத்துக் கொண்டு மோப்பிக்கலாம்.
  • எழுதியவற்றில் ஒரு பகுதியை மட்டும் முகப்பில் காட்டும் வசதி இருக்கிறது. முழு நீளக்கதையையும் முகப்பிலேயே போட்டு பயமுறுத்தாமல், சுருக்கமாக உள்ளிழுக்கலாம்.
  • ஒவ்வொரு பதிவிலும் கொசுறாக Meta (தகவல் குறித்த) தகவல்களை கொடுக்கலாம்.
  • என்னுடைய கையில் மாட்டிய பூமாலையை பார்க்கலாம் 😉
  • மேற்கண்டவாறு இளித்தால் (:-)), சிரிப்பாகவே சிரிக்க வைக்கிறார்கள்!

    சில கடுப்புகள்:

  • இயங்கு எழுத்துரு போட முடியவில்லை.
  • வலப்பக்கம், இடப்பக்கம் என்று படங்களாகவும், இன்ன பிற சேவைகளாகவும் கூட்டி கழிக்க முடியவில்லை.
  • டெம்பிளேட்டில் கை வைக்க முடியவில்லை.
  • கூடிய சீக்கிரமே காசு கேட்கலாம்.
  • TypePadக்கு இணையாகாது.


    | |

  • மாயா

    லோகமே மாயை.

    மேலே இருக்கும் படத்தை அருகில் இருந்து பார்த்தால் ‘கோபமான அன்னியன்’ பீச்சாங்கைப் பக்கமாகவும், சாந்த சொரூபி ‘அம்பி’ வலப்பக்கமும் இருப்பார்.

    கொஞ்சம் அப்படியே 12 தப்படி தள்ளிப் பின்வாங்கினால், சோற்றங்கைப் பக்கமாக கோபாக்காரர் இடம்மாறி பிளவாளுமை காட்டுவார்.

    மாயாவி விமர்சனத்தில் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் பற்றி சொன்னார் மீனாக்ஸ்.

    கடத்தியவனையே கைப்பற்றக் காத்திருக்கிறாள் டினா மரீ ஸ்டெப்பின்ஸ்.

    நிழல் நிஜமாகிறது புகைப்படம்: Phillippe G.Schyns and Aude Oliva
    of the Univ. of Glasgow.

    சுய குறிப்பு; அடுத்த ‘புத்த(க)ம் ச.க.‘யில் எது உண்மை என்று படிக்கலாம்.


    வாரயிறுதி வருத்தம்

    மாச்சு பிச்சுவை நோக்கும் செம்மறியாடு:

    சன் டிவி டாப் டென் (ஆங்கிலப் பதிவாகும் அளவு தமிழ் வார்த்தைகளை அள்ளித் தரும் கன்னல்)-ன் சிவகாசி பட விமர்சனத்தில் கேட்டது:

    ‘ரஜினிகாந்த் படம் போல் எடுக்கப் பார்த்திருக்கிறார்கள்.’

    சே… இதை விட மோசமாக thalaivarஐ திட்ட முடியாது :-(((((

    ஆறாதக் கண்ணிருடன்,
    அற்பன்,
    பாலாஜி

    ஓவியத்தை ரசித்தவர்களின் குப்பைகளை அள்ளுபவள்:


    நீ எங்கே

    1. நண்பர்களை அறியலாம் வாருங்கள்: Frappr – உங்களையும் சேர்த்துக் கொண்டால், புதிய முகங்களை பார்க்க வாய்ப்பு கிட்டும்.

    2. பிடித்த பதிவுகள், பொருத்தமான தளங்களில் மட்டும் தேடுவதற்கு rollyo வசதியாக இருக்கிறது. ஏற்கனவே ஆடி அசைந்து அமைதியாக இறங்கும் என்னுடைய பதிவிலும், இணைத்துக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீகாந்த் மீனாஷியின் தேவதையும் இருக்கிறார்.

    3. Eurekster Swicki: உங்கள் வலையகத்திற்கு வருகை புரிபவர்களின் தேடலை மேம்படுத்த ஸ்விக்கி உதவுகிறது.

    4. கடைசியாக தொடர்மேகம்: டெக்னோராடியின் tag கொடுத்தால், இங்கே மேகமாக தெரிகிறது. தான் இப்போதைக்கு பெரியதாக இருந்தாலும், நாளடைவில் சினிமா முதல் சிரிப்பு வரை சிறப்பாக, ஒரு சொடுக்கில் கண் வாங்கலாம். தமிழ் வலைப்பதிவுகளின் தொடர்மேகத்தை இங்கு பார்க்கலாம்.


    | |