மாம்பழம் சுவையாக இருக்குமா?

கடந்த வாரம் தேர்தல் வரிசையில் கம்யூனிஸ்ட் கட்சிகளை பற்றி அலசினோம்.இந்த வாரம் அந்த வரிசையில் பா.ம.க.ஏற்கனவே பா.ம.க வை பற்றி தமிழ் சசி அருமையான ஒரு அலசலை வெளியிட்டுள்ளார். என் பார்வையில் சில விஷயங்கள்.

பா.ம.கவை பற்றி அதிகம் பாஸிடிவ் விஷயங்கள் மீடியாவில் பேசப்படுவதில்லை என்பது உண்மை. தினமலர் மாதிரியான “நடுநிலை” நாளேடுகள் பா.ம.க.வை பற்றி எழுதாதது ஆச்சரியம் இல்லை.ஆனால் தி.மு.க ஆதரவு தொலைக்காட்சியும் அவர்களுக்கு சாதகமாக எந்த செய்தியையும் சொல்வது இல்லை.பா.ம.க வளர்ந்துவிடுமோ என்ற பயம் தான் காரணம்.ஆனால் ராம்தாஸ் கலைஞரை சந்தித்தால் மட்டும் பெரிதாக சொல்லுவார்கள். கூட்டணி உடைய கூடாதாம்.

என்னதான் இது ஒரு சாதி கட்சி இல்லை என்று சொன்னாலும் இது பெரும்பாலும் ஒரு இனமக்களை நம்பித்தான் இருக்கிறது. வட மாவட்டங்களில் இவர்களுக்கு கண்டிப்பாக நிறைய செல்வாக்கு உள்ளது. ஏறத்தாழ முப்பது தொகுதிவரை வெற்றியை நிர்ணயிப்பது இவர்கள் கையில் உள்ளது. தனியாக நின்றால் அதிகப்பட்சம் பத்து தொகுதிகள் கூட இவர்களால் வெல்ல முடியும்.சேலம் மாவட்டத்திலும் தர்மபுரி மாவட்டத்திலும் இவர்களுக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ளது.ஆனால் ஒன்று. கருணாநிதியும் தி.மு.க.வும் தங்களுடைய சில கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவில்லையென்றால் அதே சமயம் பா.ம.க மற்ற சாதி மக்களையும் அங்கீகரித்து பதவிகளும் கொடுக்க முன்வந்தால் தி.மு.க. வின் அழிவு ஆரம்பாகிவிடும்.

இராமதாஸ் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் மக்கள் கேட்பது பாஸிடிவ் பாயிண்ட். இந்த விஷயம் தான் மற்ற சாதி கட்சிகளையும் பா.ம.க வையும் வித்தியாசப்படுத்துகிறது.எத்தனையோ சாதி சங்கங்கள் அரசியலில் கால்பதிக்க முயற்சி செய்தாலும் ராம்தாஸ் மட்டும் வெற்றி பெறுவதற்கு காரணம் அவர் இனமக்களுக்கு அவர்மேல் இருக்கும் மகத்தான நம்பிக்கை.இன்னொன்று மக்கள் அவ்வளவாக வசதி இல்லாதவர்களாக இருப்பது.இது எனது அவதானிப்புதான்.தவறாகவும் இருக்கலாம்.
கூட்டணி மாற இவர் எந்த காரணமும் கூறி தம் மக்களை சமாதானப்படுத்த தேவையில்லை.

மருத்துவர் ராமதாஸ் ஒரு சாதனையாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.கருணாநிதியை மடக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை ஏற்படுத்திய போதே அவர் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார்.மைனஸ் பாயிண்ட் என்று பார்த்தால் தன் மகனை மந்திரியாக்கி வாரிசாக்கி விட்டதுதான். பணமும் நிறைய சேர்த்து விட்டதாக குற்றச்சாட்டுக்கள் சொல்கிறார்கள்.அதுவெல்லாம் இன்னும் பெரிதாக பேசப்படவில்லை.
ஆனால் அவர்கள் கட்சிக்காரர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் அவர்களுக்கும் பிரச்சனை இல்லை.

கருணாநிதி தமிழ் தமிழர் ஆகிய கோஷங்களை இப்பொது எழுப்புவதை குறைத்துக்கொண்டுவிட்டார்.அதை ராமதாஸ் எடுத்துக்கொண்டுவிட்டார். தமிழ் சமுதாயத்தில் இந்த கோஷத்திற்கு இன்னும் தேவை உள்ளது என்பது உண்மை.பல புதிய “அறிவியல்” கண்டுபிடிப்புகள் வந்தள்ள நிலையில் தற்போது தேவை கொஞ்சம் அதிகமாகி உள்ளது. தமிழ் , தமிழர் என்ற கொள்கை தங்கள் வளர்ச்சியை பாதிப்பதாக தி.மு.க. நினைக்க தொடங்கிவி்ட்டதாக தெரிகிறது. சன் டி.வி சம்பந்தமாக அவர்கள் செய்யும் செய்ய நேரும் காம்ப்ரமைஸ் கட்சியை பாதிக்க தொடங்கிவிட்டது.ஆனால் ராமதாஸ் மீடியாவுக்கு பயப்படுவதில்லை.அது பாஸிடிவ் விஷயம்தான்.
பா.ம.க.வை பத்திரிக்கைகள் படித்து சாதிக்கட்சி என்று விமரிசிக்கும் பலர் ஓட்டு போட வருவதில்லை.இதெல்லாம் அவருக்கு தெரிந்திருக்கிறது.

இந்த தேர்தலில் அவர் தி.மு.க அணியில் தொடர்ந்து இருப்பார் என்றே நினைக்கிறேன்.ஏற்கனவே மூன்று எம்.எல்.ஏக்களை ஆளுங்கட்சி பிள்ளை பிடிப்பவர்களை போல் பிடித்துள்ள நிலையில் மருத்துவர் அய்யாவிற்கு வேறு வழியில்லை.

ஆனால் தி.மு.க வும் வடமாவட்டங்களில் கணிசமாக செல்வாக்கு பெற்றுள்ளதால் தொகுதி பங்கீட்டில் சில சலசலப்புகள் வரலாம்.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால் திருமாவையும் தோளில் போட்டுக்கொண்டு அலைகிறார் ராமதாஸ். தொகுதி பங்கீட்டின் போது அவரையும் கவனித்து கொண்டால் நல்லது.இந்த இணை மேல் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.இவர்களுக்கு பிரச்சார மீடியா இல்லாதது ஒரு பெரிய குறை என்பேன் நான்.இணையத்தில் பிரச்சாரம் பண்ணுவது எல்லாம் வேஸ்ட்.ஒரு சாடிலைட் டிவி கண்டிப்பாக தேவை.

ஒருவேளை பெரிய திராவிட கட்சி இரண்டுக்கும் பெரும்பான்மை வராவிட்டால் பா.ம.க முக்கியத்துவம் பெரும்.கண்டிப்பாக கூட்டணி அமைச்சரவையை ராமதாஸ் டிமாண்ட் செய்வார்.அதில் நியாயமும் உண்டு.

படமும் பாடலும்

செல்வம் ::

இருக்காது…
அப்படி எதுவும் நடக்காது…
நடக்கவும் கூடாது!
நம்ப முடியவில்லை! இல்லை!!!

உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா?


நான் ஆணையிட்டால்

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்

நானே எழுதி நானே நடித்த
நாடகத்தில் நல்ல திருப்பம்

கண் மேல் பிறந்து கை மேல் தொடரும்
கதையில் என்ன தயக்கம்

Image hosting by Photobucket


நல்ல நேரம்

ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடிப்பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்

இதை அடுத்தவன் சொன்ன கசக்கும்
கொஞ்சம் அனுபவமிருந்தா இனிக்கும்

வலிமை உள்ளவன் வெச்சதெல்லாம் சட்டம் ஆகாது தம்பீ
பிறர் வாழ உழைப்பவன் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பீ

நல்ல சமத்துவம் வந்தாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்

நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
நாட்டுக்குப் படிப்பினை தந்தாகணும்

Image hosting by Photobucket


| |

எஸ் ஜி இராமானுஜுலு நாயுடு

பெ சு மணி :: ஓம் சக்தி – டிசம்பர் 2005

தமிழ் இதழியல் வரலாற்றைக் கட்டமைக்க உதவும் பழம்பெரும் பத்திரிகையாளர்களைப் பற்றிய செய்திகளை ஆவணப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர் ‘திரிசிரபுரம் எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு’ (1885 – 1935). பிரஜாநுகூலன், திராவிடபிமானி, ஆநந்த குணபோதினி, அமிர்த்த குணபோதினி முதலான இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

ஜனவரி மாத ‘ஓம் சக்தி’ இதழில் முழுக் கட்டுரையும் அவர் பணியாற்றிய பத்திரிகைக் குறிப்புகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

பிற ‘ஓம் சக்தி‘ இதழ்களுக்கு: Om Sakthi Publications – Downloads

பெ சு மணியின் கட்டுரையை இங்கும் சேமிக்கப்பட்டுள்ளது: 1 | 2 | 3 | 4 | 5 | 6


| |

Wear Red Day

Vethikaa Madarasi Arjun

‘என்னது இது? சிவப்பு டிரெஸ் போட்டுக்கலே?’

‘ஏன்?’

‘பெண்களிடையே இதய நோய்களுக்கான விழிப்புணர்வை பரவலாக்குவதற்காக ஃபெப்ரவரி மூன்றை சிகப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு தினமாகக் கொண்டாடுகிறார்கள்.’

‘ஓ… என்னைக் கொஞ்சம் பெயிண்ட்ஷாப் செஞ்சு விடேன்!’

இனிய இதயமாக உடல் நலனைப் பாதுகாப்போம்.

தொடர்புள்ள சுட்டிகள்: கொலஸ்ட்ரால் கணக்குகள் | என்னுடைய முந்தையப் பதிவு


|

ரெண்டு

குங்குமத்தில் வெளிவரும் பா ராகவனின் புதுசு கண்ணா புதுசு தொடர்கதையில் கவர்ந்த சில பகுதிகள்:

  • பீரோவிலிருந்து எடுத்துப் பொருத்திக்கொண்டது போன்ற புன்னகையை விமானமெங்கும் படரவிட்டுக்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்கள்.
  • இரண்டாக உடைத்துப் பல்குத்திக்கொள்ளலாம் போல அப்படியரு ஒல்லி (தேகம்).
  • தொழில்முறை வில்லன்கள் தம்மிடமிருக்கும் யுதங்களைத் தமிழ் சினிமா வில்லன்கள் போல விரித்துக் காட்டுவதில்லை போலிருக்கிறது.
  • போராளிகள் தூங்கினால் தப்பில்லை. புரட்சிதான் தூங்கிவிடாமல் இருக்கவேண்டும்.
  • அந்த ஜீவனின் (காட்டெருமை) பிரும்மாண்டமான கிருதியும் ஆண்மையும் கம்பீரமும்தான் மனிதர்களைக் கோழைகள்போல் அவற்றைத் திருட்டுத்தனமாகக் கொலைசெய்யச் செய்கின்றன.
  • எத்தனை கோடி இன்பம் வைத்தான் தாமஸ் ஆல்வா எடிசன்.

    ‘ரெண்டு’ தொடர்கதையின் ஹீரோயின் பெயர் அவந்திகா. இயக்குனர் சுந்தர். சி., குஷ்பூவின் மகள்களின் பெயர் அனந்திகா மற்றும் அவந்திகா.

    ஒற்றுமை அவ்வளவுதானா? அல்லது இன்னொரு குட்டி ரேவதி அல்லது குஷ்பு விவகாரமாக மாறுமா?

    ‘குங்குமம்’ வாசகன் பாலாஜி


    | |

  • சண்டக்கோழிக்கு முன்

    பா.மு. ராமகிருஷ்ணனும் பா.பி. ராமகிருஷ்ணனும் :: அ. மார்க்ஸ்

    சிறுகதை எழுத்தாளர் ஜி. சரவணனின் திருமணம் குடந்தை அம்மா சத்திரத்தில் இலக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. முதல் நாள் நிகழ்வில் செப்டம்பர் 4 அவரது ‘தெற்கு பார்த்த வீடு‘ சிறுகதைத் தொகுப்பு (அகரம், தஞ்சாவூர், ரூ 40) வெளியிடப்பட்டது.

    கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், பொதியவெற்பன், நான், அகரம் கதிர், ஜமாலன், யூமா வாசுகி, பிரான்ஸிஸ், கிருபா, கைலாஷ்சிவன் எனப்பலரும் கலந்து கொண்டோம். நான் பேசும் போது நமது எழுத்தாளர்களின் வேர்களைத் தேடும் முயற்சியை விமர்சித்தேன். வீடு தாண்டிய ஒரு வெளியை, குடும்பம் தாண்டிய பிரச்சினைகளைத் தனது கதைக்களத்திற்குள் கொண்டு வந்த சாதத் ஹஸன் மண்ட்டோவைச் சுட்டிக் காட்டினேன்.

    அடுத்துப் பேச எழுந்த எஸ். ராமகிருஷ்ணன் ஆவேசம் கொண்டார்.

    “நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்”

    என்கிற நீதியில் அவரது பதில் இருந்தது.

    ராமகிருஷ்ணனின் பேச்சில் உள்ள முரண்களை விரிவாக விளக்க வேண்டியதில்லை. எழுத்துகளுக்கு ‘மாடல்கள்’ இருக்க முடியாது என்பது உண்மையே. ஆனால் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மட்டும் எப்படி மாடலாக முடியும்? அவர்களை விட நமது பக்கத்து மாநிலக்காரரான மண்ட்டோ மட்டும் ஏன் உதாரணமாக முடியாது. ஒருவேளை அவர் முஸ்லிம் என்பதாலா? ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களை மதிப்பிடும்போது அவன் எழுதும் போது என்ன செய்து கொண்டிருந்தான் என்பது ஒரு அளவுகோலாக இருக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். அவனை மதிப்பிட மட்டுமே அத்தகைய தரவுகள் உதவும். அவனது பிரதிகளை அல்ல. அது சரி, சமகால அரசியலிலும் சர்ச்சைகளிலும் இத்தனை பேசுகிற ராமகிருஷ்ணனின் பங்கு என்ன?

    கருத்தரங்கு முடிந்த பின்பு திருமண மண்டபத்து மாடியில் அம்மா சத்திரம் நண்பர்கள் ஒரு சிறிய ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்திருந்தனர். முன்பு குறிப்பிட்டிருந்த எல்லோரும் வரிசையாக அமர்ந்திருந்தோம். இளங்கோவனும் இதர நண்பர்களும் அன்புடன் உபசரித்தனர். வழக்கம் போல கோணங்கி குவளைகளை நிரப்பினார். யாரோ கேட்டார்கள்:

    “ராமகிருஷ்ணன் எங்கே?”

    “அவர் குடிப்பதில்லை” என்று பதில் வந்தது.

    “இல்லை குடிப்பாரே” என்று இன்னொருவர் சொன்னார். கோணங்கியும் ஒப்புக் கொண்டார்.

    நான் சொன்னேன்; “குடிப்பது பா.மு. ராமுகிருஷ்ணன். குடிக்காதது பா.பி. ராமகிருஷ்ணன்”.

    “அதென்ன பா.மு., பா.பி?” என்றார்கள். ‘பாபா’வுக்கு முன்பு, ‘பாபா’வுக்குப் பின்பு என்று விளக்கினேன். God is great.

    நன்றி: அநிச்ச, நவம்பர் 2005


    | |

    நிலைமை உரை

    லெக்சர் கேட்க வந்தவர்களுக்கும் விளம்பரதாரர்களுக்கும் வழங்கப்பட்ட விதிமுறைகள்:

    1. பேச்சின் நடுவே புஷ் ஆங்காங்கே மூச்சு வாங்கிக் கொள்வார்; அப்பொழுது கை தட்டுங்கள்.
    2. எப்பொழுதெல்லாம் டிக் சேனி எழுந்திருக்கிறாரோ, அப்பொழுதெல்லாம் நீங்களும் தூக்கத்தை விட்டு எழுந்திருக்கவும். இருக்கையின் மேல் நின்றால், ஈராக்கிற்கு அனுப்பப்படுவீர்கள்.
    3. State of the Union குறித்து வலைப்பதிவாளர் உரை கொடுக்கக் கூடாது. மீறி நோட்ஸ் போட்டால், தங்களின் தொலைபேசி, நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிகள், குளியல் சோப், யாஹூ மின்னஞ்சல்கள், அனைத்தும் நோட்டமிடப்படுவீர்கள்.
    4. நீதிபதிகள் ஸ்டீவன்ஸ் அல்லது ஜின்ஸ்பெர்க் உங்கள் அருகே அமர்ந்திருந்தால், முடிந்தவரை அவர்களின் உச்சநீதிமன்ற இடத்தை காலியாக்கும் முயற்சிகளை எடுக்கப் பணிக்கப்படுகிறீர்கள்.
    5. தங்கள் சட்டைகளில் ‘எக்ஸான் நாமம் வாழ்க; மொபில் நாமம் போடுக‘ என்றோ ‘ஒன்றே காண்ட்ராக்ட்; ஒருவனே ஹாலிபர்ட்டன்‘ என்னும் வாசகங்களையோ மட்டுமே அணிந்து வாருங்கள்.

    | |

    காஸ்ட்ரோ கவுண்ட்-அப்

    ஃபிடல் காஸ்ட்ரோவின் நரபலிகள் ::

    “க்யூபாவில் ‘வேட்டைப்படை’ எதுவும் கிடையாது. அரசியல் காரணங்களுக்காக ஒருவரைக் கூட காணாமல் போக்கியது கிடையாது. எவரையும் நாங்கள் துன்புறுத்தியது இல்லை. நாடு முழுக்க பயணம் செய்து, குடிமக்களிடம் கேட்டுப் பாருங்கள். ஒரு துப்பு கூட உங்களுக்குத் துலங்காது. எங்காவது ஓரிடத்திலாவது, ஒரு நபராவது அவ்வாறு அடக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டிருந்தால், இனிமேல் பொதுவில் வாயைத் திறக்கவே மாட்டேன்” – ·பிடல் காஸ்ட்ரோ, ஏப்., 2001

    (“There have never been death squads in our country, nor a single missing person, nor a single political assassination, nor a single victim of torture… You may travel around the country, ask the people, look for a single piece of evidence, try to find a single case where the Revolutionary government has ordered or tolerated such an action. And if you find them, then I will never speak in public again.”)


    ஜனவரி 1, 1959 முதல் மார்ச் 15, 2005 வரை காஸ்ட்ரோ அரசினால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல்
    படை வீரர்களினால் சாகடிக்கப்பட்டவர்கள் (Firing squad executions) : 5,640
    சட்டத்துக்குப் புறம்பாக கொலை செய்யப்பட்டவர்கள்: 1,203
    சிறைச்சாலை மரணங்கள்: 2,199
    காணாமல் போனவர்கள்: 198
    மொத்தம்: 9,240

    “Balseros” (கடல் வழியாக தப்பிக்கும் பொழுது உயிரிழந்தவர்கள்) 77,833
    மொத்தம்: 87,073

    ஆதாரம்: The Cuba Archive | Free Society Project


    உலகெங்கும் ‘டெத் ஸ்காவ்ட்’கள் பிரபலம். கிளர்ச்சியாளர்களை நசுக்குவதற்காக ஸ்டாலின் பிரபலப்படுத்திய ‘வேட்டைப்படை’ வீரர்களை சமீபத்திய ஈராக் வரை கூட பயன்படுத்துகிறார்கள். ஸ்டாலின் வழி வந்த ·பிடல் காஸ்ட்ரோ இன்றளவிலும் மிரட்சியை முன்னிறுத்தி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

    ‘Fog Facts’ என்னும் புத்தகத்தில் லாரி பென்ஹார்ட் (Larry Beinhart) அமெரிக்காவில் மூன்று விதமான மனிதர்கள் இருப்பதாக எழுதுகிறார். உலகெங்கும் பொருத்தமான பாகுபாடு அது.

    முதலாம் பிரிவில் பொதுஜனம். நீதி, நியாயத்துக்கு அடிபணிந்து செல்பவர்கள்.

    இரண்டாவது பிரிவில் பலிகடாக்கள். ஒரு வார்த்தை அதிகமாகப் பேசினாலோ, மறதியாக சாலையில் எச்சில் துப்பினாலோ கூட தீவிரவாதியாகக் கருதப்படுபவர்.

    மூன்றாவது பிரிவில் சர்வ வல்லமை பொருந்தியவர்களாக, சட்டத்துக்குப் புறம்பானவர்கள். உங்களின் தொலைபேசியை இவர்கள் ஒட்டுக் கேட்கலாம்; தவறில்லை. அந்தரங்கங்களை ஆராய்வதுடன் நிற்காமல் அவதூறு கிளப்பலாம்; அதுதான் அவர்களின் வேலை.

    க்யூபாவில் முதலாம் பிரிவு கிடையாது என்பதுதான் வருத்தமான உண்மை. அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் நார்மன் மெயிலர் (Norman Mailer), ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் சக்திவாய்ந்த தலைவர் ஜெஸி ஜாக்ஸன் (Jesse Jackson), சி.என்.என். ஆரம்பித்து வெற்றியடைந்த டெட் டர்னர் (Ted Turner), இருத்தலியத்தின் புகழ்பெற்ற படைப்பாளி ழான் பால் சார்தர் (Jean-Paul Sartre) என்று பல துறைகளில் அனுதாபிகளைக் கொண்டிருப்பது, ·பிடல் காஸ்ட்ரோவின் வரப்பிரசாதம்.

    மே 27, 1966-இல் நூற்றி அறுபத்தியாறு க்யூபாவினரை, சொந்த நாட்டினரை, போராடும் பொதுமக்களை மட்டும் தனியே நிற்கவிட்டு, சுற்றியிருக்கும் க்யூபாவின் படை வீரர்கள் சராமாரியாக குண்டு மழை பொழிந்தார்கள். அதன்பின், ஒவ்வொருவரிடம் இருந்து மூன்றரை லிட்டர் இரத்தத்தை உறிஞ்சினார்கள். அதற்குப் பின், இந்த இரத்தங்கள் போரில் சிக்கியிருந்த வியட்னாமுக்கு, ஐம்பது அமெரிக்க வெள்ளிகளுக்கு விற்கப்பட்டது. வியட்னாமும் க்யூபாவும் கம்யூனிஸ்ட் நாடுகளாக இருந்தபோதும், கறுப்புச்சந்தை மதிப்பீட்டுக்கே க்யூபா போராளிகளின் இரத்தம் ஏற்றுமதியானது.

    யாஸர் அரா·பத் இறந்தபிறகுதான் பாலஸ்தீனத்தில் மாற்றம் ஏற்பட்டது. சுதந்திரமாகத் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்பவர்கள் ஆட்சிக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஆனால், க்யூபாவில் ·பிடலின் தம்பி ரவுலின் (Raul) பராக்கிரமம் இரும்புப்பிடியாக இருக்கும். அண்ணனைப் போன்ற கம்யூனிஸக் கொள்கைப் பற்று எதுவும் கொண்டிராமல் இருப்பது, ரவுல் காஸ்ட்ரோவின் தனித்தன்மை.

    அண்ணன் – தம்பி ஆட்சியில் இருந்து தப்பித்துச் செல்லும் வழியில் கிட்டத்தட்ட 78,000 ‘பால்செரோஸ்’கள் இறந்திருக்கிறார்கள். இவர்களின் இறப்பில் அமெரிக்காவுக்கும் பெரும்பங்கு உண்டு. அமெரிக்க மண்ணைத் தொடும்வரை அஞ்சி, பாதிக் கடலில் பிடிபட்டால், க்யூபாவுக்கே திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அமெரிக்கக் கரை கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தெரியும்போது, ஜனவரியின் குளிர்நீரில் நீஞ்சி வருபவர்களும் பத்திரமாக க்யூபாவுக்கே தூக்கியடிக்கப்பட்டு, காஸ்ட்ரோ நிர்வாகத்தினால் சாகடிக்கப்படுகிறார்கள்.

    காஸ்ட்ரோவைப் போல் sweeping statements விடாமல், ‘க்யூபன் ஆர்கைவ் திட்டம்’, ஒவ்வொரு கொலையையும் சரிபார்க்க பெரிதும் மெனக்கிடுகிறது. இந்த முறைப்படி ஒவ்வொரு மரணத்தையும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்கள் நிரூபிக்க வேண்டும். புகைப்படங்களின் மூலமாகவோ, நேரடியாக நிகழ்வைப் பார்த்தவர்களாலோ, உடன் இருந்தவர்களாலோ உறுதி செய்யப்பட வேண்டும்.

    இறக்கடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு, இந்த அமைப்பு செயல்படவில்லை. ‘லா கபானா’ கோட்டையில் 1959-இல் சே குவேராவினால் கொல்லப்பட்ட 151 நபர்கள் ஆகட்டும்; 94 சிறுவர்களின் கொலைகள் ஆகட்டும். ஒவ்வொரு மரணத்தையும் மனிதராகப் பார்த்து, அவர்களின் ஊர், பெயர், வாழ்க்கை அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.

    தடாலடியாக வெற்று சவடால் பேசும் காஸ்ட்ரோவின் கூற்றை மறுப்பதற்காக, சத்தமேயில்லாமல், அவர்களினால் கொல்லப்பட்ட 9,240 பேர்களின் கதைகளையும் நம் முன் வைத்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள்.

  • க்யூபாவின் கடற்படையினரால் ‘ஆல்பர்ட்டோ லாசோ பாஸ்ட்ரானா’வின் படகு மூழ்கடிக்கப்படுகிறது. அம்மாவை சுறாமீன்கள் உணவாக்கிக் கொள்கிறது. மூன்று மகன்களின் பிரேதம் கூட கிடைக்கவில்லை.
  • ‘எஸ்தானிஸ்லௌ கொன்சாலஸ்’ போன்று சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்பட்டு சித்திரவதையில் உயிரிழந்தவர்களின் குறிப்புகள் ஏராளம்.
  • ‘கார்லோஸ் ஆல்பெர்ட் கோஸ்டா’ போன்று வழிதவறி பயணிகள் விமானம் ஓட்டி வந்த பலர், எந்த முன்னறிவிப்புமின்றி, எச்சரிக்கையுமின்றி, எதிரிகளின் ஆயுதம் தாங்கிய விமானம் போல் கருதப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.
  • ஈக்வடாரில் (Ecuador) தஞ்சம் புகுந்த பதினைந்து வயதே ஆன ‘ஓவன் டெல்காடோ டெம்ப்ரானா’, தூதரகத்திலேயே குற்றுயிராக அடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறான்.
  • பதினேழு வயதான ‘·ப்ளோரஸ் டயஸ¤’க்கு சிறையில் மருத்துவ வசதி மறுக்கப் பட்டிருக்கிறது. அவனைப் போன்று 2,199 சிறைக்கைதிகளின் இறப்புகளில் பலருக்கு அதிகாரபூர்வ காரணமாக, ‘ஹார்ட் அட்டாக்’ சொல்லப்படுகிறது.
  • எட்டு மாத கர்ப்பிணியான ‘லிடியா பெரஸ் லோபஸி’ன் வயிற்றில் எட்டியுதைத்து, கால்பந்து விளையாடி, தாயையும் சேயையும் கொன்றதன் மூலம், ஆண்-பெண் வித்தியாசம் பார்க்காமல், இருபாலாரையும் சமமாக பாவித்திருக்கின்றனர் க்யூபாவின் அரசு.
  • வயது வித்தியாசமும் பார்க்காமல் எழுபது வயது ‘எட்முண்டா செர்ரட் பாரியோஸை’ சிறைச்சாலையில் அடித்தேக் கொன்றிருக்கிறார்கள்.

    தீவிரவாத அமைப்பின் வெற்றி அது உண்டாக்கும் பயத்தில் இருக்கிறது. புரட்சியாளர்களை நசுக்கும் ஆதிக்க அரசுகளின் வெற்றி, சொந்த சகோதரர்களின் இழப்பை பார்த்து மனம் வெதும்புவதில் இருக்கிறது.

    காஸ்ட்ரோவுக்கு எதிராக குரல் எழுப்பிய சாண்டாமாரியா (Haydee Santamaria), மரியல் துறைமுக (Port of Mariel) வெளியேற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் பார்த்தபின், மனம் பாதிப்படைந்து தற்கொலை செய்து கொண்டதில், க்யூபாவின் அராஜக வெற்றி மிளிர்கிறது.

    இவ்வளவு நிகழ்வுகள் வெளிப்படையாக இருந்தபோதிலும், உலக மத்தியில் புரட்சியாளர் பிம்பத்தை காஸ்ட்ரோ தக்கவைத்துள்ளார். நாற்பத்தியேழு ஆண்டுகளாக அரியணை சுகம் அனுபவித்தாலும் அரசியல் அரங்கில் அர்ஜெண்டைனாவின் ஜனாதிபதி போன்றோரிடையே ‘மனித உரிமைக் காவல’ராக கொண்டாடப்படுவதின் ரகசியம் தெரிந்தால் சொல்லுங்கள்.

    இந்தக் கட்டுரைக்கு பாஸ்டன் க்ளோபும் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளிவந்த பத்திகளும் உதவியது.

    தொடர்புள்ள வலையகம்: பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கதை


    | |

  • Qutub Minar 

    Qutub Minar Posted by Picasa

    Dome City 

    Dome City Posted by Picasa