பராசக்தி – கலைஞர் கருணாநிதி வசனம் – நீதிமன்றத்தில் சிவாஜி:
ஜெண்டில்மேன் – பாலகுமாரன் வசனம் – நீதிமன்றத்தில் அர்ஜுன்:
பராசக்தி – கலைஞர் கருணாநிதி வசனம் – நீதிமன்றத்தில் சிவாஜி:
ஜெண்டில்மேன் – பாலகுமாரன் வசனம் – நீதிமன்றத்தில் அர்ஜுன்:
Posted in Uncategorized
* அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்கிலிருந்த நீக்கப்பட்ட எம்.எல்.ஏ சந்தானத்துக்கு ஒரு சீட் வழங்கியிருக்கிறார் ஜெயலலிதா.
* 234 தொகுதிகளிலும் தமது சங்கம் போட்டியிடப்போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
* ரஜினி ‘நோ வாய்ஸ் திஸ் டைம்; ஒன்லி சிவாஜி’ – என்கிறார் ரஜினி மன்ற அகில இந்தியத் தலைவரும், என் பக்கத்து வீட்டுக்காரருமான சத்தியநாராயணா.
Posted in Uncategorized
நான் அஞ்ஞாதவாசம் இருந்தப்ப துபாய்வாசி அழைத்தார். இப்ப கேவியாரும் கூவுகிறார்.
தலை பத்து கணக்கா, தலை நாலு சொல்லச் சொல்றாங்க…
நான்கு வசிப்பிடம்:
முதன் முதலாக இந்தக் கேள்விக்கு அமெரிக்கன் விசாவை நிரப்பும்போதுதான் யோசித்தேன். இவ்வளவு நாடோடியா இருக்கிறேனே என்று சந்தோஷமாக இருந்தது.
1. +2 முடிகிற வரைக்கும் வீடு/பள்ளிக்கூடம் இருந்த சென்னை மைலாப்பூர். +1 சேர்ந்த பிறகுதான் மைலாப்பூரைத் தவிர சென்னையில் வேறு சில இடங்களும் இருக்கிறது என்று அறியப்பெற்றேன். அப்போதைய திமுக மந்திரிகள் சாதிக் பாட்சா மற்றும் பொன். முத்துராமலிங்கத்தின் மகன்கள் பள்ளியில் சேர்ந்ததும் இரு வருடங்களை கொஞ்சம் வேகமாக நகர்த்தியது.
2. டெல்லி: கொஞ்ச காலம்தான் இருக்கப் போகிறோம் என்று தெரிந்தே ரசித்த ஊர். சென்னைக்கு மாற்றாக உயர்தர சாலைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், இயல்பாக நட்பு பாராட்டும் எதிர்பாலார் கொண்டவை. சென்னையைப் போலவே மோசமான பேருந்து வசதி. சென்னையில் இருக்கும் பத்து மணி நைட் ஷோ சுதந்திரம், இளைப்பாற கடற்கரை, பயமற்ற நகர்வலம் போன்றவை மிஸ்ஸிங்.
3. பெங்களூர்: துள்ளலான நகரம். டெல்லியின் நுகர்வோர் முகத்தையும் சென்னையின் தளர்ச்சியான போக்கையும் தன்னுடைய ஸ்டைலில் கலந்துகட்டி best of both worlds கொண்டது.
4. பாஸ்டன்: ரொம்ப காலம் வசித்ததால் கொஞ்சம் போரடித்து நிறையப் பழகிப் போயிருக்கிறது.
நான்கு அரசியல்வாதி:
1. விஜயகாந்த்: இறந்து போனவர்களை நான் நினைவு கூர்வதை விட இருந்து சாதிப்பேன் என்று நம்பிக்கையாகப் பேசும் இவரை நம்புகிறேன். வரப் போகும் கூட்டணி ஆட்சிகளுக்கு ஏற்றவர். பெண்களை வேட்பாளராக்குவதில் முக்கியத்துவம்; வித்தியாசமாக செய்யவேண்டும் என்னும் துடிப்பு; நடித்து சம்பாதித்ததை அரசியலில் விட்ட முன்னோடிகள் இருந்தும், தைரியமாக களத்தில் குதிப்பு; ரஜினி மாதிரி பொதுமகனாக இல்லாமல் தலைமகனாக வேண்டும்.
2. ஸ்டாலின்: திட்டம் தீட்டுறேன்; அடிப்படை வசதியைப் பெருக்குகிறேன் என்று ஜல்லியடிக்காமல், திறம்பட சென்னை மேயராக செயல்பட்டவர். கலைஞருக்கு மகனாக இருப்பதினாலேயே கிடைக்கும் எதிர்மறை விமர்சனங்களை நேர்த்தியாக எதிர் கொள்பவர்.
3. தயாநிதி மாறன்: வாரிசு என்பதால்தான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்பதைத் தயங்காமல் ஒத்துக் கொண்டு, அதை மீறி, தன்னுடைய தொலைநோக்கு திட்டங்களினாலும் ஆர்வத்தினாலும் வீரியமாய் முக்கியமான மந்திரியாக விளங்குகிறார். சன் டிவி பேட்டியில் இயல்பான பேச்சு; அரசியல்தனமற்ற உரையாடல்; போலிகளற்ற வெளிப்பாடுகள் மூலம் பெரிதும் கவர்ந்தார்.
4. சோ: மார்க்ஸிஸம், பெரியாரியம், காந்தீயம் என்பது போல் இணையத்தில் சோத்தனம் என்று சொல்லுமளவு தனக்கென நடை, எவரையும் உரசிப் பார்க்கும், உறுத்தும் விமர்சனங்கள் வைப்பவர். நக்கீரன், நெற்றிக்கண் என்று புதிய தலைமுறை பத்திரிகைகள் வந்தாலும் துக்ளக்கை இன்னும் தாக்குப்பிடிக்க வைப்பது. Provocative & incisive.
நான்கு படம்:
1. ஜோ ஜீதா வஹி சிக்கந்தர்: பதின்மப் பருவத்தில் பார்த்த காதல் படம். ‘வள்ளி’ பாணியில் சொல்வதானால் ‘உன்னை யாரைக் காதலிக்கிறாங்களோ, அவளைக் காதலி!’ இதன் உல்டாவாக வந்த ‘பத்ரி’ ரசிக்கவில்லை. இந்தப் படத்துக்காகவே இன்றளவும் ஆயிஷா ஜூல்காவின் விசிறி.
2. பொய்க்கால் குதிரை: பாலச்சந்தரின் நிறையப் படங்கள் அழுது வடிய கிரேசியாய் சிரிக்க வைத்த படம். அதன்பிறகு இதே பாணியில் வந்த ‘அரிச்சந்திரா’வும் நல்ல உல்டா.
3. இன்று போய் நாளை வா: ‘இதயம் பேசுகிறது’வில் பாக்கியராஜ் தன்னுடைய கதையை எழுதும்போது இதில் நடந்த பல சம்பவங்களை சொல்லியிருப்பார். படத்தைப் பாராட்டினால் ‘ஈவ் டீஸிங்’ என்று ப்ளாங்க் நாய்ஸ் ப்ராஜெக்டில் ப்ராக்கெட் போடப்படும் அபாயம் இருக்கிறது.
4. திருவிளையாடல்: தருமியின் கேள்வி பதில்; பாடல் போட்டிக்கு பயம்; சிதறலான சம்பவங்களைக் கோர்த்து படத்தின் பகுதிகளைப் பார்த்தாலும் சேனல் மாற்றாமல் தொடர வைக்கும். ஷார்ப் வசனங்கள். இன்று இந்த மாதிரி மூட நம்பிக்கைகளைப் பாராட்டாமல் ஆனால் தத்துவ விசாரத்தைக் கோரும் ஆன்மிகப் படங்கள் வராதது இன்னொரு காரணம்.
நான்கு உணவு:
1. கோபி/சிக்கன் மன்சூரியன்: அமெரிக்காவின் சீன உணவகங்களில் கிடைக்காத பதார்த்தம். சில தென்னிந்திய இடங்களில் மட்டுமே நாவில் நிற்கும் தனிச்சுவையுடன் கொறிக்க விடுகிறார்கள்.
2. ஸ்பினாஷ் க்ரொய்ஸாண்ட்: கிட்டத்தட்ட கீரை வடை போல் டேஸ்ட். ஆனால், நடுநடுவே வெண்ணெய் நீக்கமற நிறைந்திருக்கும். எண்ணெயில் பொரிக்காமால் bake செய்யப்படுவதால் ‘சத்து’ என்னும் பிம்பம் உண்டு.
3. மோர்க்குழம்பு: காரமும் உண்டு; தயிர்ச்சுவையும் உண்டு; பூசணிக்காய், வறுத்த வெண்டை, சுண்டக்காய் என்று விதவிதமான காய்கறிகள்.
4. ஹாஷ் ப்ரௌன்ஸ்: உருளை போண்டா மாதிரியான பதார்த்தம்தான். காலைப்பசியில் மெக்டோனால்ட்/பர்கர் கிங் சென்று வாங்கி விண்டு வயிற்றுக்கு செல்லும்போது ‘கொண்டா… கொண்டா…’ சொல்லும்.
நான்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி:
1. பாஸ்டன் லீகல்: நிறைய சட்டநுட்பங்களை சாமானியனும் அறியுமாறு எளிமையாகத் தரும்விதம். பார்வையாளனை புத்திசாலியாகக் கருதி காட்சிகளை நகர்த்தும் வேகம். இவற்றுடன் துளி காதல்; துளி பாசம்; துளி செண்டிமெண்ட்.
2. முதல் பயணம் (கே டிவி): அதிகம் பிரபலமில்லாதவர்களை அறிய முடிகிறது. திரைக்குப் பின் பணிபரியும் டப்பிங் கலைஞர்கள், ஒளி ஓவியர்கள், பாடகிகள், துண்டு கதாபாத்திரங்கள் எடுப்பவர்களைப் பேட்டி காண்கிறார்கள். கிட்டத்தட்ட ‘நூற்றுக்கு நூறு’ என்னும் நிகழ்ச்சியும் இதே காரணங்களுக்காக விருப்பமானது. (பேட்டி எடுக்கும்போது தேவதர்ஷினி இடையூறாக தடைப்படுத்துவதுதான் ஒரே படுத்தல்.)
3. நினைவுகள் (சன் டிவி): அம்மு. (நடுநடுவே ஏதோவொரு திரைப்படத்தையும் காட்டுவார்கள் என்று ஞாபகம்.)
4. வெஸ்ட் விங்: அமெரிக்க அரசியலை தடாலடியாகப் புரிய உதவுகிறது. ஜிவ்வென்று சீட் நுனிக்குத் தள்ளும் உலகப் போராட்டங்கள்; ஆள்பவர்களின் மனக் குமுறல்கள்; மேலிடத்து பதவி விளையாட்டுக்கள்.
நான்கு வலையகம்:
1. ஜஸ்ட் சமாச்சார்: நோ நான்சென்ஸ்; ஒன்லி நியூஸ்
2. இன்றைய சிறந்தக் கருத்துப்படங்கள்:மாரடைப்பு கொடுக்கவைக்கும் அன்றாட நிகழ்வுகளை நகைச்சுவையாகப் பகிடி செய்கிறார்கள்.
3. தேன்கூடு: வரிசைக்கிரமமாக படிக்கமுடிகிறது. எங்கு வரைக்கும் படித்தோம் என்பதை அறிந்து விட்ட பதிவில் இருந்து மேய முடிகிறது. அதிகம் பார்வையிட்ட பதிவுகளைத் தவறவிடாமல் காட்டுகிறது. பின் எப்பொழுதோ நிதானமாகப் போக வேண்டிய பதிவுகளை சேமிக்க முடிகிறது.
4. டெக்னோரட்டி: இணையத்தில் என்ன நடக்கிறது? என்ன பேசிக் கொள்கிறார்கள்?
அடுத்து அழைக்க விரும்பும் நால்வர்:
இதைப் படிக்கும் முதல் நான்கு பேரை அழைக்கிறேன். எனக்கொரு லிங்க் கொடுத்தால் தன்யனாவேன். முன்கூட்டிய நன்றி 🙂
Posted in Uncategorized
Posted in Uncategorized
1. சாகசமாயிரம் : விஞ்ஞானத் தொடர் – சுஜாதா (கல்கி)
2. டிகாசன் போடும் கலை – பாக்கியம் ராமசாமி (தமிழ் சிஃபி)
3. அந்தக் கால அரசியல் நினைவுகளும் தேர்தல் களங்களும்: ஒன்று | இரண்டு (ஆனந்த விகடன்)
4. மிஸ்டர் மியாவ்: ஜூனியர் விகடன் –
‘நீ வேணுண்டா செல்லம்‘ படத்தில் ‘கள்ளத்தோணி கள்ளத்தோணி… என்னை அக்கரைக்குக் கொண்டு போக வாடா…‘ என்ற பாடலை எழுதி இருக்கிறாராம் கவிஞர் யுகபாரதி. ஒரு தடவைக்கு நூறு தடவை யோசித்து யோசித்து எழுதிய பாடலாம் இது. அதுசரி… இன்றைய அரசியலை வைத்து யோசித்தால் இந்தப் பாடல் எங்கேயோ இடிக்கிற மாதிரி இருக்கே, மிஸ்டர் யுகபாரதி?
5. அம்ஷன்குமார் நேர்காணல் – நிழல் ப திருநாவுக்கரசு (அமுதசுரபி)
6. சோ தர்மனின் கூகை – அ ராமசாமி (காலச்சுவடு)
Posted in Uncategorized
‘கல்யாணமாம் கல்யாணம்’ பாடல் பாடிய ‘கானா’ உலகநாதனுக்கு அறிமுகம்:
சன் டிவியின் ‘இளமை புதுமை‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரின் திறமை வெளிப்பாடு:
கானா உலகநாதனின் மற்றுமொரு கலக்கல் கானா:
‘கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு‘ என்னும் பாடலுக்கு புகழ்சேர்த்த மாளவிகாவின் ஆடலுடன் இடம்பெறும் ‘சித்திரம் பேசுதடி‘ பாடல் வரிகளுக்கு: கல்யாணமாம் கல்யாணம்
Posted in Uncategorized
INTUC – அதிமுக கூட்டணி செல்லாது
INTUC தமிழ்நாடு, அதிமுகவுடன் அமைத்துக்கொண்ட கூட்டணி செல்லாது என்று அவர்களது அகில இந்திய தலைமை கூறியுள்ளது. இரண்டு சீட்கள் ஒப்பந்தம் செய்த தமிழ்நாடு தலைவர்கள் இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பார்வர்ட் பிளாக் தனித்துப் போட்டியிடும்
நடிகர் கார்த்திக் தலைமையிலான ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக்கின் தமிழகக் கிளை தனித்தே போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளது. கார்த்திக் அதிமுகவுடன் கூட்டுசேர்வதை விரும்பினாலும் அம்மா விரும்பவில்லை போல…
விஜயகாந்த் நடிக்கும் படம் சுதேசி
விஜயகாந்த் நடித்து வெளியாகும் ‘சுதேசி’ படம் அவரது கட்சியின் (அவருடைய) கொள்கை விளக்கமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
பிற கட்சியின் தலைவர்களும் இப்படிப் படமாக எடுத்து வெளியிட்டால் மக்கள் நிலைமை என்னாகும்?
மற்றபடி தேர்தல் களத்தில் வேறு ஏதும் அதிரடியாக நடக்கவில்லை.
Posted in Uncategorized
தினமணி நாளிதழில் இருந்து:
1. தேர்தலில் வெளிப்படுமா மகளிர் சக்தி – வீர.ஜீவா பிரபாகரன்
தமிழகத்தில் தேர்தலுக்குத் தேர்தல் மகளிர் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சட்டப்பேரவையில் மகளிர் எண்ணிக்கை இதுவரை 14 சதவீதத்தைத் தாண்டவில்லை.
நமது நாட்டில் நாடாளுமன்றத்தில் மகளிர் பங்கேற்பு பத்து சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது.
தமிழகத்தில் 1991-ம் ஆண்டு தேர்தலில் மட்டுமே, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. அதிலும் பிற்பட்ட, ஆதிதிராவிட வகுப்புப் பெண்களின் அரசியல் பங்கேற்பு மிக, மிகக் குறைவாக உள்ளது.
பெண் உறுப்பினர்களையே தேர்வு செய்யாத மாவட்டங்கள்: நீலகிரி, பெரம்பலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் கடந்த 5 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரு பெண் உறுப்பினரைக் கூட தேர்வு செய்யவில்லை.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் போதிய பெண் உறுப்பினர்களை வேட்பாளர்களாக அறிவிக்காததும் மிக முக்கியமான காரணம்.
இம்முறை நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மட்டுமே தேர்தலில் மகளிருக்கு 33 சத இட ஒதுக்கீடு அளிப்போம் என அறிவித்துள்ளது. இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்விஷயத்தில் மௌனமாக உள்ளன.
2. இதுவரை….10% கூட பெண்களுக்கு வாய்ப்பில்லை
தேர்தகளில் மொத்த வேட்பாளர்களில் பெண்கள் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்துள்ளனர். மொத்த உள்ள 234 இடங்களில் ஒரே ஒரு தேர்தலில்தான் 10 சதவீதம் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 1996-ம் ஆண்டில் மொத்தம் போட்டியிட்ட 5 ஆயிரத்து 17 வேட்பாளர்களில் 156 பேர் மட்டுமே பெண்கள். பெண்களுக்கு 10 சதவீதம் வாய்ப்புக் கொடுத்திருந்தால் கூட 500 பெண் வேட்பாளர்கள் இருந்திருக்க வேண்டும்.
Posted in Uncategorized
சுவரொட்டி #1: வைகோ மண்ணின் குரல் (கலிங்கத்துப்பட்டியில் இருந்து)
சுவரொட்டி #2: சின்ன கலைஞர் (சைதாப்பேட்டையில் இருந்து)
Posted in Uncategorized
Posted in Uncategorized