Me, Myself, Balaji

சமீபத்தில் நண்பர்களுக்கு அறிமுகமாக நான் எழுதிகொண்டது:

நான் பாலாஜி. அமெரிக்காவில் பாஸ்டன் பக்கம் வசிப்பதாலும் இணையத்தில் நிறைய பாலாஜிகள் இருந்ததாலும் புனைப்பெயர் வைக்க கற்பனைப் பஞ்சத்தினாலும் ‘பாஸ்டன்’ பாலாஜி என்று அழைக்கப் படுகிறேன்.

பள்ளிக் கூட பருவத்தில் வீடு நிறைய புத்தகங்களாக இருக்கும். அம்மா ஆர். பொன்னம்மாள் ஓர் எழுத்தாளர். ஆன்மிகம், குழந்தை இலக்கியம், சங்க இலக்கியம் போன்றவற்றில் தீவிர ஈடுபாடும் நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். என்னுடைய அம்மாவைக் குறித்து விரிவான அறிமுகம் தொகுக்க ஆரம்பித்து, பாதியில் தொக்கி நிற்கிறது. தற்போதும் காமகோடி, கோகுலம், ஞான ஆலயம் போன்ற பத்திரிகைகளிலும் வானதி, திருமகள் போன்ற பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்களிலும் செயல்பட்டு வருகிறார்.

அவர்கள் உந்துதலில் +2 வரை கண்டதும் படிக்க முடிந்தது. சில சமயம் அமுதசுரபி; கணையாழி; மஞ்சரி; பல சமயம் விகடன்; குமுதம்; திசைகள்; தவறவிடாமல் புஷ்பா தங்கதுரை; சுஜாதா; ப.கோ.பி.; ராஜேஷ்குமார். எப்பொழுதாவது லஷ்மி; சிவசங்கரி; கல்கி.

கல்லூரியில் படிப்பும் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே வாசிக்க கிடைத்த வடக்கு இந்தியா. என்றாலும் படைப்பார்வத்தில் பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதினேன். அவற்றில் சில தமிழோவியம் வெளியிட்டது:
கங்கை இல்லாத காசி | சுய சாசனம்

ஐந்து வருடம் முன்பு இரா. முருகனால் நடத்தப்படும் ராயர் காபி கிளப் சேர்ந்த பிறகுதான் மீண்டும் தமிழில் எழுதப் பழகினேன். அதன்பின் திண்ணை, வலைப்பதிவு, மரத்தடி, தமிழோவியம் போன்ற வலையகங்களில் தொடர்ந்து (பெரும்பாலும்) கட்டுரைகள், சில சமயம் புனைகதைகள் எழுதி வருகிறேன்.


சமீபத்தில் தினமொரு வலைப்பதிவாக அறிமுகம் செய்யும் தேன்கூடு கொடுத்த அறிமுகம்:

பாஸ்டன் பாலாஜி [பாபா] (என்கிற) பாலாஜி சுப்ரா, ஒரே சமயத்தில் பல குதிரைகளில் பயணம் செய்பவர்! தனது வலைப்பதிவில் தினம் ஏதாவது ஒன்று புதிதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் நபர்களில் ஒருவர். தமிழ் இணையத்தில் எங்காவது ஏதாவது தீப்பொறி கிளம்பினால், அதைக் குறித்து மறைமுகமான நையாண்டிக் கட்டுரையோ அல்லது கணிப்போ இவரது வலைப்பதிவில் இடம் பெற்றிருக்கும்.

இவரது வலைப்பதிவில் குமுதம் ரேஞ்ச் பதிவுகளும் இடம் பெறும்; இலக்கிய சர்சைகளும் இடம் பெறும். ஏகப்பட்ட தகவல்கள், தொடுப்புகள் என்று கொடுத்திருப்பார். இத்தனை தகவல்களை இவர் எங்கிருந்து திரட்டுகிறார் என்பதில் பலருக்கு பிரம்மிப்பு. இணையம் மற்றும் வலைப்பதிவுகள் குறித்து பாஸ்டன் பாலாஜியால் எழுதப்படும் கட்டுரைகள், கவனத்தினை ஈர்ப்பவை.

இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலைப்பதிந்து வரும் பாஸ்டன் பாலாஜி, குழுமங்களிலும், தமிழோவியம், திசைகள் போன்ற பல இணைய இதழ்களிலும் பரவலாக எழுதி வருபவர். இலக்கிய ஆர்வலர். வலைப்பதிவாளர்களை உற்சாகப்படுத்தும் சகா. படித்தில் பிடித்ததை சொல்லத் தயங்காதவர். கில்லி – யில் ஒரு ஆட்டக்காரர்.தமிழோவியம் ஆசிரியர் குழுவிலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


விளம்பரம் இத்துடன் முடிகிறது; வழக்கமான ஜல்லிகள் தொடரும்.

| |

Erode DMK Campaign in Hindi – Dinamalar

Thinamalar

நன்றி: http://www.dinamalar.com/

விஜய்காந்த் குறித்து அறிவுமதி

Arivumathi on Vijaiganth Politics

நன்றி: தமிழ் முரசு

Petite Parties’ Ballot Symbol Allotments

சின்னத்தை எதிர்பார்க்கும் சிறியக் கட்சிகள்வீர.ஜீவா பிரபாகரன்

சின்னக் கட்சிகளின் நிலைதான் பரிதாபம். சின்னம் பெறுவதற்காகவே வேறு கட்சிகளின் தயவை எதிர்நோக்கியுள்ளன. அதிமுக, திமுக கூட்டணிகளில் இடம் கிடைக்காததால் பல சிறிய கட்சிகள் தனித் தனியாக அணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

பாஜக அணியில் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி, டாக்டர் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, அம்பேத்கர் மக்கள் கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதில் சின்னம் இல்லாத சிறிய கட்சிகள் பாஜக சின்னத்தில் போட்டியிடவுள்ளன.

திமுக கூட்டணியில், உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் பார்வர்டு பிளாக் (வல்லரசு பிரிவு) கதிரவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிடவுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த இல. சந்தானம், மூவேந்தர் முன்னேற்ற கழக திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் ஆகிய இருவரும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் 9 தொகுதிகளிலும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது.


தேமுதிக சின்னம்?: தமிழகத்தில் இம்முறை அனைத்துத் தொகுதியிலும் போட்டியிடும் ஒரே கட்சியான நடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சின்னம் என்ன என்று தெரியாததால் சின்னத்தைச் சொல்லாமல் வாக்கு கேட்கும் நிலையில் அக்கட்சியினர் உள்ளனர்.

“அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம். மோதிரம், தீபம், புத்தகம் ஆகியவற்றை சின்னமாக அளிக்க கேட்டுள்ளோம். ஆனால், இவ்விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை. எனவே, சின்னம் கிடைத்த பின்னரே தீவிர பிரசாரத்தை தொடங்கும் நிலையில் உள்ளோம்” என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.


சிங்கத்தில் சிக்கல்? நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால் அதற்கு “சிங்கம்’ சின்னம் வழங்க வேண்டும். ஆனால் அச்சின்னத்தை வழங்குவது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதால், அக்கட்சியினரும் பொதுச் சின்னம் பெறும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். 75 தொகுதிகளில் இக்கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.


யானை – அம்பு: டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி இம்முறை 150 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் யானைச் சின்னத்தில் இக்கட்சி போட்டியிடுகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல்ராஜன் தலைமையிலான மக்கள் விடுதலைக் கட்சி, நாடார் பேரவை உள்ளிட்டவை ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து “அம்பு” சின்னத்தில் போட்டியிடவுள்ளன.

ஒரே சின்னம் பெற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைக்கும் நிலை சின்னக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

France Labor Law Rescinded amidst French Riots

ஃப்ரான்சில் மாணவர் போராட்டம்இந்த வாரத் தமிழோவியத்தில் வெளியானது

சீட்டைத் தேய்க்கும் உத்யோகம்‘, ‘விகடன், குமுதம் படிக்கும் அரசு அலுவலகம்‘, ‘மேஜை மேல் கவுந்தடித்துத் தூங்கலாம்

என்று பணி நீக்க பயமற்ற, சிரத்தையில்லாத இந்திய அரசுத்துறை ஊழியர்கள் மேல் துணுக்கு நகைச்சுவைகள் வெளிவருவது சாதாரணம். போராடுவதற்கு விஷயப் பற்றாக்குறையால் தவிக்கும் ஃப்ரென்ச் இளைஞர்களும் ‘வேலைநீக்கம்’ மேல் அச்சம் கொண்டு களமிறங்கி, தங்கள் பலத்தை யூனியன் தோழர்களுடன் கைகோர்த்து வெளிக்காட்டி, வாபஸ் பெற வைத்திருக்கிறார்கள்.

பிரான்ஸ் நாட்டின் பிரதம மந்திரி டாமினிக் வில்லேபின் (Dominique de Villepin) சி.பி.ஈ. (CPE, the “Contrat Premiere Embauche”) என்னும் “முதல் வேலைக்கான ஒப்பந்த”த்தை உள்ளடக்கிய தொழில்துறை மாற்றங்களை ஜனவரி 16-ஆம் தேதி அறிவித்தார். சர்சைக்குரிய அந்த இளைஞர்-தொழில் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதை ஒரு பெரிய வெற்றியாக அந்நாட்டு மாணவர்களும், தொழிற்சங்கங்களும் வரவேற்றுள்ளன.

ஃபெப்ரவரி ஏழாம் தேதி பேரணி ஆகட்டும்; ஏப்ரல் இரண்டாம் தேதி சட்டமாக்கப்பட்ட பின் நடந்த கிளர்ச்சிகள் ஆகட்டும்; பெரிய அளவிலான எதிர்ப்பைத் பறைசாற்றியது. ஏன்?

  • 26 வயதுக்கு உட்பட்டோரை மட்டுமே இந்த புதிய சட்டம் குறி வைக்கிறது.
  • வேலைக்கு சேர்ந்த இரண்டு வருடத்துக்குள், எந்தவிதக் காரணமும் காட்டாமல் இவர்களை வேலையை விட்டு தூக்கலாம்.
  • ஒரு மாதத்திற்கு மேல் வேலையில் வைத்துக் கொண்டால், இரு வார முன்னறிவிப்புத் தர வேண்டும்; ஆறு மாதங்களுக்கு மேல் வேலையில் இருந்திருந்தால், குறைந்தபட்சமாக ஒரு மாதத்திற்கு முன்பு வேலை போகப்போவதை தெரிவிக்க வேண்டும்.
  • இரண்டு வருடங்கள் வேலையில் இருந்து விட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் ப்ரான்ஸ் நாட்டு ஒப்பந்தங்கள் இருபத்தாறு அகவைக்குள் இருப்போருக்கும் பொருந்தும்.

    கடந்த ஆகஸ்ட் மாதம் (2005) இதே மாதிரி சட்டம், சி.என்.ஈ (CNE, “Contrat Nouvelle Embauche”) நடைமுறைக்கு வந்தது. இருபது ஊழியர்களுக்குக் குறைவானவர்களே உள்ள நிறுவனங்களுக்காக அது இயற்றப்பட்டது. சிறு முதலாளிகளை, புதியவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ள, ஊக்குவிக்க, அந்த சட்டம் பயன்பட்டது. தற்போது, அதே சட்டம் இருபது பேர்களுக்கு மேல் இருக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்துமாறு நீட்டிக்கப்பட்டதே, மாணவர்களின் எழுச்சிக்கு வித்திட்டது.

    சோஷலிஸத்துக்கும் மாறாமல், கேபிடலிஸத்தையும் விடாமல், திரிசங்கு சொர்க்கமாக ஃப்ரான்ஸ் தவிக்கும் காலம் இது. ஆர்செலோர் (Arcelor)-ஐக் கைப்பற்ற நினைக்கும் லஷ்மி மிட்டலைத் தட்டிக் கழித்து, அன்னியரை உள்ளே விடாமல் பாதுகாக்க நினைக்கிறது. உலகத்துக்கே முற்போக்காக வறுமையை ஒழிப்பதில் புத்தம் புதிய சிந்தனைகளை முன்வைப்பதோடு நில்லாமல், செயல்வீரராக, ஃப்ரான்ஸ் நாட்டுக்குள் நுழையும் விமான பயணிகளுக்கு வரி விதித்து (airline ticket levy – ATL) அறுநூறு மில்லியன் யூரோக்களை ஈட்டி, கொடையாக வழங்குவதற்கு வழிவகுத்திருக்கிறது.

    தங்கள் நாட்டின் அரதப்பழசான தொழில்துறை சட்டங்களை தூசு தட்ட நினைக்கும் அரசாங்கம். உலகமயமாக்கல் என்னும் அதிவேக ஜெட்டைத் தவறவிடக்கூடாது என்னும் தொலைநோக்குப் பார்வையுடன் புதிய வரைவுகளை முன்வைக்கின்றன.

    ஃப்ரென்ச் இளைய தலைமுறைக்கும் அதே பயங்கள்தான். பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் கூடிய வாழ்க்கைமுறை, வாரத்துக்கு 35 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கும் சொகுசு, அலுவலில் இருந்து வருடத்துக்குக் கிட்டத்தட்ட இரண்டு மாதகாலத்துக்கு உல்லாச விடுமுறை போன்றவை குறைந்து விடுமோ என்னும் பயங்கள்.

    அலுவலில் ஆள்குறைப்பு என்பது தனியார் துறைகளில் (இந்தியாவிலும், அமெரிக்காவிலும்) சாதாரணமாக நிகழ்வது. வயது வித்தியாசம், இன, மொழி பாகுபாடுகள் பாராமல் எவரும் வேலையில் ஜொலிக்காவிட்டால் அல்லது நிறுவனத்திற்கு கஷ்ட காலம் என்றால் நீக்கப்படுவார்கள். பிறிதொரு வளரும் நிறுவனம் இவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதும் பொருளாதார சுழற்சியின் கட்டாயம்.

    தீவிர இடதுசாரிகள் இந்த நிகழ்வை அமெரிக்க பொருள்முதல்வாதத்தின் பின்னடைவாகக் கருதுகிறார்கள். பாதுகாப்பான வேலையை ஏற்படுத்திக் கொடுக்காததன் மூலம் தொழிலாளிகளிடையே பயம் நிறைந்த சூழ்நிலையை முதலாளிகள் நிலவவிடுகிறார்கள். கடைநிலைத் தொழிலாளிகள் சம்பள உயர்வு, விடுமுறை கோருவதை நிறுத்தி விடுகிறார்கள். அதன் மூலம் கிடைத்த சேமிப்புகள், ஏற்கனவே பணம் பெருத்த மேலாளர்களின் ஊக்கத்தொகையாக அமைகிறது.

    கழிவிறக்கம், சுய பச்சாதபம் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு உளவியல் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள் தொழிலாளிகள். ‘ஆட்குறைப்பு’ என்பது தேவையற்ற ஒன்று என்னும் கருத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள். நீக்குவதற்கு பதிலாக, அவர்களையே புதிய நுட்பங்களிலும், தேவையான மேலாளர் பயிற்சிகளிலும் ஈடுபடுத்தி, நிறுவனம் அவர்களின் நம்பிக்கையைக் கோருமாறு பரிந்துரைக்கிறார்கள்.

    ஃப்ரான்சின் வீதிகளில் இறங்கிப் போராடும் மாணவமணிகளும் இதே கருத்தாக்கத்தை அதிகார எதிர்ப்பாக நினைத்துக் கொண்டு முன்வைத்திருக்கிறார்கள். ஃப்ரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை பத்து சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இதே போல் வேலை கோருபவர்களின் சதவீதம் ஐந்துக்கும் குறைவாகவே உள்ளது. ஃப்ரான்சில் இளைய தலைமுறையினரில் இருபத்தி இரண்டு சதம் வேலையில்லாமல் இருக்கிறார்கள். கடந்த வருட இறுதியில் நிகழ்ந்த, கலவரம் மூண்ட பிறப்டுத்தப்பட்ட பகுதிகளில் இது 50% ஆக உள்ளது.

    இதற்கு என்ன காரணம்?

    ஃப்ரான்ஸ் அமெரிக்க ஸ்டைல் பொருள்முதல்வாதத்தை முன்னிறுத்துவதில்லை. தொழிலாளர்களுக்கு ‘உறுதியான நிலையான நீடித்த வேலை’ என்று நிறுவனங்களை அச்சுறுத்துவதால், புதியவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ள மேலாளர்கள் தயங்குகிறார்கள்.
    தேவையான போது தொழிலாளர்களைக் கூட்டவும், குறைக்கவும் அமெரிக்காவில் இருக்கும் சட்டங்கள் எளிதாக உள்ளன. ஆனால், ·ப்ரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், இந்த வசதி இல்லாததால், நிறுவனங்களுக்கு கடும் மனத்தடை ஏற்படுகின்றன. பொருளாதாரம் வீழ்ந்தாலும் தொழிலாளர்களை நீக்க முடியாத நிலை. நீக்கினால், நஷ்ட ஈடாக பெரும்பணம் கொடுத்தனுப்பவேண்டிய மொகஞ்சதாரோ காலத்து சட்டதிட்டங்கள்.

    ஃப்ரான்சில் இவ்வகை பழமையான சட்டங்களை மாற்றுவதற்குத்தான் சிராக் (Jacques Chirac) முயல்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு கிடைக்காதது; தேர்தல்களில் தோற்பது என்று இறங்குமுகமாகவே இருந்தாலும் லே பென்னின் (Jean-Marie Le Pen) அதிரடி வலதுசாரிப் பிரச்சாரத்தினாலேயே மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிராக். கட்டாய இராணுவப் பணியை நீக்கியதும், வேளாவேளைக்கு பாரிஸ் நகரக் குப்பைத்தொட்டிகள் நீக்கப்படுவதையும் தவிர இவர் எதையுமே சாதிக்கவில்லை என்று ஊடகங்கள் இவரைக் கிண்டல் செய்வதை அகற்றும் முயற்சியாகத்தான் ‘முதல் வேலைக்கான ஒப்பந்த’த்தைத் தீட்டியிருந்தார்.

    இவ்வளவு பெரிய கிளர்ச்சியைக் கடைசியாக 1968-இல் ப்ரான்சு கண்டிருந்தது. கலகத்தைத் தூண்டும் பிரசுரங்களை அச்சிட்டதற்காக, பல்கலையில் இருந்து மாணவர்கள் நீக்கப்பட்டதை அடிநாதமாகக் கொண்டு, அன்று கலகம் மூண்டது. அடக்குமுறைக்கு எதிரான குரலாக, தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொண்டது. பொருளாதார முன்னேற்றம் கண்ட காலத்திலேயே, கிளர்ச்சி ஏற்பட்டது. சம்பள உயர்வு, குறைந்த பட்ச சம்பளவிகித அதிகரிப்பு என்று பேரங்கள் பேசப்பட்டு தொழிலாளிகளுக்கு வெற்றியும், கொள்கையளவில் நோக்கமும் கொண்ட போராட்டம் அது.

    இன்றைய சூழலும் பொருளாதார வளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டம்தான். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி போன்ற சக நாடுகளை விட அந்நிய முதலீடு, அதிக அளவில் ஃப்ரான்சை சென்றடைகிறது. உடல்நலத் திட்டத்தில், உலகிலேயே சிறந்து விளங்குவதாக உலக சுகாதார மையம் (World Health Organization) ஃப்ரான்சை அறிவித்திருக்கிறது. ஆனால், போராடத்தான் எதிரிகள் இல்லாமல், எதற்கு எதிராக கலக்கொடி தூக்கலாம் என்று குழம்பிய இளைய சமுதாயம்.

    தாற்காலிகமாக வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் போக்கை மாற்ற நினைத்தார் சிராக், CNE, New Recruitment Contract, CPE, CDD என்று சிண்டைப் பிய்த்துக் கொள்ளவைக்கும் சட்டச்சுழல்கள். நிரந்தரமாக வேலைக்கு அமர்த்திக் கொள்ள நேர்காணல்கள் பயன்படும் என்றாலும், இது போன்ற புதிய திட்டங்கள் நிறுவனங்களுக்கு சூழலை லகுவாக்குகிறது.

    அரசன், ராஜா போன்றவையாகவே ஃப்ரென்சு நிறுவனங்களையும், அடிமைக்கூலியாகத் தம்மையும் தொழிலாளிகள் கருதுகிறார்கள். அமெரிக்காவில் நிறுவனங்களை வேலை கொடுப்பவர்களாகவும், தொழிலாளிகளை வேலை தருபவர்களாகவும் நினைக்கிறார்கள். சந்தைப்படுத்திய குமுகாயத்தில் சில சமயம் வேலை வேண்டுபவர்கள் அதிகமாக இருக்கலாம்; சில சமயம் வேலை கொடுப்பவர்கள் அதிகமாக இருக்கலாம்.

    இல்லாத அடிமைத்தளைக்கு எதிராக தடியெடுத்து, இருதலைக்கொள்ளி அரசனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தங்கள் தலையில் கொள்ளிக்கட்டை வைத்து போராட்டத்தை ஒலிக்க விடுகிறார்கள் மாணவர்கள்.

    இளைய தலைமுறைக்கு ஐம்பது வயதில், வேலையில் இருந்து ஓய்வூதியம்; குறைந்தபட்ச ஊதியமாக ஆயிரம் வராகன்கள் என்று செட்டிலாக நினைப்பு. உலகம் மாறுவதை தாம்ஸ் ஃப்ரீட்மான் ‘The World Is Flat’ஐ ஃப்ரென்ச் மொழிக்கு மொழிபெயர்க்க சொன்னாரா என்று தெரியவில்லை.


    உதவிய, தொடர்புள்ள செய்தி ஊடகங்கள், புத்தகம்:

    1. போராடுபவர்களின் வலைப்பதிவு

    2. தி கார்டியன் நாளிதழ்

    3. பிபிசி

    4. ·ப்ரென்சு அமைச்சகம்

    5. The Disposable American : Layoffs and Their Consequences

    6. C-SPAN


    | |

  • பாண்டிச்சேரி திமுக காங்கிரஸ் உடன்பாடு

    நடக்க இருக்கும் பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் (ஐ) கட்சி திமுகவுடன் தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

    இதன்படி காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் திமுக 11 தொகுதிகளிலும் போட்டியிடுவார்கள். மிச்சம் மூன்று தொகுதிகளில் பாமகவுக்கு இரண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒன்றும் தருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாமக இதற்கு உடன்படாது என்று தெரிகிறது. தனியாக நின்றாலே நான்கு தொகுதிகளில் ஜெயிக்கலாம் என்று பாமக கருதுவதாக தினமணி செய்தி கூறுகிறது.

    கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எந்த இடமும் இந்தக் கூட்டணியில் இல்லை. ஆனால் தனியாக அவர்கள் மூன்று-நான்கு இடங்களில் நிற்கப்போகிறார்கள். ஆகவே ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பாண்டிச்சேரியில் பிரிந்துவிடும் என்றே தோன்றுகிறது. இது நான் முன்கூட்டியே எதிர்பார்த்த ஒன்றுதான். வெறும் 30 இடங்களை வைத்துக்கொண்டு ஏழு அல்லது எட்டு கட்சிகளுக்கு என்று பிரித்துத் தர முடியாது. அதிலும் காங்கிரஸ் (ஐ), திமுக இரண்டுமே முன்னர் பதவியில் இருந்தவர்கள். பாமக தம்மால் தனியாகவே பதவிக்கு வரமுடியும் என்று நினைத்தவர்கள்; நினைப்பு இன்னமும் இருக்கும்.

    பாமக முன்னதாகவே திட்டமிட்டு பாண்டிச்சேரியில் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுடனும் தொகுதி உடன்பாடு செய்திருக்கலாம். பாமக 22 தொகுதிகள் என்றும் இரண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 4 தொகுதிகள் என்றும் கொடுத்து மும்முனைப் போட்டியாக நடந்திருக்கலாம். கேப்டன் வேறு தன் பங்குக்கு எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறார்! பாஜகவும் பிற தோழமைக் கட்சிகளும் நிற்கப்போகிறார்கள்.

    பாமக கூடிய விரைவில் தனது நிலையை வெளிப்படுத்தும்.

    When one doesn’t get an MLA Seat

    அமைச்சர் பொன்னையனுக்கு எதிராக நாமக்கலில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள். அதிமுக பாதுகாப்பு படை என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட இந்த சுவரொட்டி, மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

    1. Thiru C Ponnaiyan

    2. State Elections 2001 – Partywise Comparision for Tiruchengode Constituency of TAMIL NADU

    நன்றி : தமிழ் முரசு

    Chandramukhi – One Year & Counting

  • ஒரு வருடம் முன்பு திரைப்படத்தை ரசித்தவுடன் ரஜினியின் மேல் வெறுப்புடையவர்கள் எழுதக்கூடியதாகப் பதிந்தது
  • மந்திரமுகி கதை
  • சந்திரமுகி ஏப்ரல் 14 வெளியீடு
  • சந்திரமுகி விமர்சனங்கள்
  • ரஜினியால் சந்திரமுகியில் ரி-மிக்ஸ் செய்ய முடியாத பாடல்கள்: மிஸ்ட் ரி-மிக்ஸ்

    Chandramuki - 365 Days

    விளம்பரம் வந்த செய்தித்தாள்: தமிழ் முரசு

  • Intellectuals should be Elected Unopposed?

    இவர்கள் சட்டப்பேரவைக்குப் போவது சாத்தியமா?

    கடந்த கால ஆட்சியில் மீண்டும் செப்பனிட முடியாத அளவுக்கு தமிழகத்தில் கேடுகள் நிறைந்துவிட்டன. இந்த கேடுகளை களைய வேண்டுமானால் இப்படிப்பட்டவர்கள் தான் சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும். அவர்கள் எல்லாம் போட்டியிட்டு செல்வது என்பது இந்த யுகத்தில் நடக்காது. எனவே அவர்களை போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யோசனை கூறியுள்ளது MS Uthayamoorthy தலைமையிலான மக்கள் சக்தி இயக்கத்தின் நாமக்கல் கிளை.

    இதன்படி போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

    ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பொறியாளர் சி.எஸ். குப்புராஜ், உந்துனர் அறக்கட்டளை அ.கி. வேங்கடசுப்ரமணியன், கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி, சிலம்பொலி செல்லப்பன், ஆனந்தகிருஷ்ணன் – இப்படி நீண்டுகொண்டே போகிறது.

    சரி – அப்படி என்ன கேடு ஏற்பட்டுவிட்டது தமிழகத்துக்கு? கேடுகள் குறித்தும் நீண்ட பட்டியல் போட்டுள்ளது அந்த இயக்கம். அவற்றில் சில:

  • முல்லைப்பெரியாறு, காவிரி ஆறுகளின் தமிழக பங்கு பறிபோய்விட்டது. தமிழகத்துக்கு வரவேண்டிய பல பெரிய திட்டங்கள் வேறு மாநிலங்களுக்குப் போய்விட்டன.
  • ஆறுகளில் படிந்திருந்த மணல் அள்ளப்பட்டு ஆறுகளின் பயன்பாடு மனித சமுதாயத்துக்கு கிட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது.
  • பண வசதி படைத்தோருக்கு மட்டுமே உயர்கல்வி என்றாகிவிட்டது.

    அரசியல் நோக்கம் ஏதுமின்றி, பொதுவான சிந்தனை உள்ள நிபுணர்கள் சட்டப் பேரவைக்குச் சென்றால், மக்கள் நலனில் அக்கறையுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று இந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    போட்டியில்லாமல் இதுபோன்ற நிபுணர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது சாத்தியமாகுமா?

    Thanks : Thinamani

  • Freebie Politics

    Dinamani.com – Editorial Page

    சுமை யாருக்கு? – என்.ஆர். ஸத்யமூர்த்தி, பெங்களூர்.

    அரசுகள் சலுகைகளை அள்ளிவிடும்போதும் தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளை வழங்கும்போதும் இதற்கான செலவு, பெரும்பாலும் நடுத்தர வகுப்பினரின் மீதான சுமைதான் என்பது உணரப்படுவதில்லை.

    திமுகவின் தேர்தல் அறிக்கையை எடுத்துக்கொண்டால், நெசவாளருக்கு இலவச மின்சாரம், இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை, இறந்த விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் ரத்து என்பன போன்றவை வரவேற்கத்தக்கன மட்டுமல்ல, சாத்தியமானவை. ஆனால், இருபது ரூபாய்க்கு விற்கும் அரிசியை இரண்டு ரூபாய்க்குக் கொடுப்பது, வீடுதோறும் இலவசக் கலர் டி.வி; இலவச கேஸ் இணைப்பு ஆகியவை தேவையற்றவை, நியாயமற்றவை. இருக்கின்ற கேஸ் இணைப்புகளுக்கே, அடிக்கடி கேஸ் தட்டுப்பாடு! இதற்கான மிக அதீதமான செலவுகளை நடுத்தர வர்க்கத்தினர்தான், பல வரிகள் மூலமாகச் செலுத்த வேண்டும்.

    இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கரிசனம், தமிழ்நாட்டில் அஞ்சல்துறையில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு ஏழாண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காத விஷயத்தில் ஏன் காட்டப்படவில்லை?

    இலவசக் கலர் டி.வி போன்ற சலுகைகளைவிட, தமிழ்நாட்டின் கிராமப்புறத்துப் பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் அமர்த்துவோம், கட்டடம் தருவோம், மருத்துவமனைகளில் லஞ்சமற்ற சேவைகளை உறுதி செய்வோம், ஒரு வன்னியரோ மற்றவரோ அந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்ற எளிய சான்றளிக்க ரூ. 500 முதல் ரூ. 700 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் கொடுமையைக் கொளுத்துவோம், தமிழ்வழிக் கல்வியே பெறுவோம் என்ற உறுதிகள் தேர்தல் அறிக்கையில் இல்லாதது வேதனைக்குரியது.

    எனவேதான், இக்கூட்டணிகளின் பதவிப்போட்டிகளுக்கு இரையாகாமல், மற்ற கட்சிகளின், சுயேச்சைகளின் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பது தேவையாகிறது.