TK-TO Contest: #32 – #44 : Snap Reviews

  1. மழை: தாய் – உறவுகள்பிரதீப்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1 / 4

    நாலு வரியில் நறுக்குன்னு முடியுமே அதுவா
    வார்த்தைக்கோலங்களில் சமூக அவலம் வைத்திருக்குமே அதுவா
    வரிக்கு மேலே வரி போர்த்தியிருக்குமே அதுவா
    சீர்திருத்தமாக நினைத்து சிந்தனை தெளிக்குமே அதுவா
    ஒரு நிமிடம் படித்துவிட்டு ஓசி பதிவு போடுமே அதுவா
    பட்டியல் போட்டு ப்ளஸ் வாக்கு கோருமே அதுவா
    தன்னோட கவிதைக்கு மட்டும் நாலு போடுமே அதுவா

    யாருடைய கவிதைங்க இது?

    எளிமைக்காக +1.

  2. எண்ணம்: அன்புள்ள எரியும் திரிக்கு…அபுல் கலாம் ஆசாத்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 2 / 4

    நீ
    மோர்ப் பானை போர்த்திய முதுமக்கள் தாழி

    செந்தில் குமரன் (குமரன் எண்ணம்): விட்டிலுக்கும் மெழுகு வெளிச்சத்திற்கும் உள்ள உறவா? மனிதர் புரிந்து கொள்ள இது மனித உறவு இல்லை என்று நினைக்கிறேன்.

  3. உறவுகள்ராசுக்குட்டி

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 3.25 / 4

    கவிதைக்கான எல்லா பயத்துடனும் படிக்க ஆரம்பிக்கிறேன். மகளின் சொல்லாடல் ‘அட…’ சொல்லும் எதுகை மோனை + நிகழ்வுகளின் எண்ண அணிவகுப்பு. முடிவில் டச்சோ டச். தலை மூன்றில் இடம்பிடித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

  4. பினாத்தல்கள்: கீழ்நோக்கியே பாயும் நீர்வீழ்ச்சிசுரேஷ்

    (சிறுகதை) மதிப்பெண் – 3.25 / 4

    ஒருவனாவது என்னை அடையாளம் கண்டுகொண்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவனை எனக்குத் தெரியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும்.

    “எங்கே இருந்தாலும் நல்லா இரு. காசை செலவழிக்காதே. நல்லா சிக்கனமா சேத்து வையி. அப்போதான் நாளைக்கு என் நிலைமை வராது. புள்ளைங்கள நம்பாம இருக்கலாம்”

    நான் மௌனம் காத்தேன். என்ன விஷயம் என்று சரிவரத் தெரியாத வெளியாள் வேறென்ன செய்ய முடியும்?

    பாந்தமான உரையாடல்கள். போட்டியென்று வந்துவிட்டால் பெனாத்தலார் சிங்கம். மே 2006 என வெற்றி மேல் வெற்றி கண்டவர். அழகாய் இருக்கிறது. பயமாய் உள்ளது.

  5. எனக்கேற்ற தமிழச்சிகள்: அன்புள்ள அம்மாவுக்குமதுரா

    (சிறுகதை) மதிப்பெண் – 3 / 4

    எப்படிக் கசக்கிப் பிழிந்து அடித்துத் துவைத்து பார்த்தாலும் ஒரு சாயமும் கரையவில்லையே நம் உறவைப் பற்றிய நினைவுகளில்! மனம் அவ்வளவு பெரிய புளுகு மூட்டையா?

    “நான் என் பையனை நன்றாகத் தானே வளர்த்தேன்; எதில் விட்டு விட்டேன்; வீட்டு வேலைகள் எல்லாம் அவன் அக்காக்களைப் போல செய்ய வைத்து தானே வளர்த்தேன்”

    நான் என் அம்மாவிடம் மனம் விட்டுப் பேசியது போல், உங்கள் மகன் உங்களிடம் தனியாகப் பேசுவதே இல்லை என்பதை கவனித்த போது வருத்தமாக இருந்தது!

    சில உறவுகள் ஒதுங்கி இருப்பதே பிற உறவுகளுக்கு மரியாதை.

    தடாலடியான ஆரம்பம் உள்ளிழுக்கிறது. அதே உணர்ச்சி வேகம் பிசிறு தட்டாமல் தொடர்கிறார். நல்ல சிறுகதையின் அடையாளம் ‘சொந்தக் கதையா?’ கேள்வியை மிரட்சியுடன் தொண்டைகுழியில் ஊசலாட வைப்பது. ‘ஆச்சரியமான உறவின் உன்னத உணர்வுகளை’ உணரவும் வைக்கிறார்.

  6. உறவுகள் ஒடிந்த பறவைகள் !!!demigod

    (சிறுகதை) மதிப்பெண் – 2 / 4

    கோயிலும் குளமும் இருந்தா போதுமா? மொபைல் போன் வேலை செய்ய ஒரு டவர் போடக்கூடாது?

    அலட்டல் இல்லை. என் இளவயது குமுதம் கதை போன்ற நடை. எப்படி முடியப் போகிறது என்று அனுமாணிக்க விட்டே ஆரம்பிக்கிறார். கிராமத்துடன் ஆன உறவை இன்னும் கொஞ்சம் ஊடாட விட்டிருக்கலாம்.

  7. இன்றும்கப்பி பய

    (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

    கப்பி பய மீது இருந்த எதிர்பார்ப்பா? அல்லது ‘பிரா’வை உள்ளிழுத்து கற்பு காக்கும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ வகை ஸ்பரிசக் காதல் காட்சிகளா? பெரும் ஏமாற்றம்.

  8. பேசலாம்: செக்ஸ் இல்லாத கதைவா மணிகண்டன்

    (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

    ஜெஸிலா: ஜனரஞ்சக புத்தகத்தில் வரும் கதைப் போல் இருக்கிறது.

    அத்தைப் பாட்டி சொல்வாங்களே… அது போன்ற விவரணை + மதிப்பீடு. கிசுகிசு நெடி. உறவுகளில் உணர்வுகளைக் காணவில்லை.

  9. பொருனைக்கரையிலே: அம்மாவும் மாமியாரும் கமலம்மாவும்மானு (yezhisai)

    (சொந்தக்கதை) மதிப்பெண் – 1.5 / 4

    எனக்கு இரண்டு மாமியார்கள்.
    அடடா நீங்கள் நினைப்பது போலில்லை..
    இது என் உண்மையான ,என் வீட்டுக்காரரைப் பெற்றவர். இன்னொருவர் என் மாமனாரைப் பெற்றவர்.

    எப்போது நான் ஏதாவது உளறினாலும் (எப்போது என்று கேட்க வேண்டாம்.that was a full time occupation for me.)இப்போதும் அந்தப் பழக்கம் தொடருவதால்தான் ப்ளொக்கிங் ஆரம்பித்தது!!!)

    உள்ளொன்று மறைக்காத எழுத்து.

  10. பொருனைக்கரையிலே: மென்மைப் பூக்கள்மானு (yezhisai)

    (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

    ஏதோ எனக்கு தெரியாத கேரக்டருங்களை (ஃபீமேல் கைண்ட் குறித்து) சொல்றாங்க.

    கவிதையாக எழுதவில்லை என்பதால் +1. நிஜ சம்பவம் என்பதால் +1. நகாசு இடவில்லை என்பதால் +1.

    மினுக்கிடவில்லை என்பதால் -1. இது போன்ற தெரிந்த நிகழ்வுகளை வித்தியாசமாக சொல்லவில்லை என்பதால் -1.

  11. சென்னைக் கச்சேரி: தீவுகள்தேவ்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 0.5 / 4

    சில சந்தேகங்கள்:

    • கூட்டமாய் தான் (அல்லது) கூட்டமாகத்தான் ?
    • தனித் தனித் தீவுகளாய் (அல்லது) தனித் தனி தீவுகளாய்
    • கரையேரி
    • எங்கேங்கோ
    • நம் உறவுகள்… என்று முடிகிறது. எந்த உறவு என்றே சொல்லவில்லையே :ஓ!

  12. நிகழ்வுகள்: உறவு என்பதால்சிவமுருகன் நீலமேகம்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 0.5 / 4

    ஸ்டீரியோடைப்களை் தொடுக்கிறார். எழுத்துப்பிழைகள் உண்டு (சிலிர்பதில்லை, பெணென்பதால், பெணென்று, ஏற்கமாட்டரே, தவிற்பதில்லை).

  13. பனி விழுதுகள்… 2தொட்டராய ஸ்வாமி

    (புதுக்கவிதை)கள்

    மூன்று எழுதியிருக்கிறார்:

    1. தன்னலதாயின் உறவுகளில்…. :: கருத்துக்காக – 0 / 4
    2. தாய்மடி வாசம் :: நான்கடிக் கவிதையில் பிழைகள் மலிந்திருப்பதால்: 0.5 / 4
    3. அப்பா.. :: 1.5 / 4

போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


| |

Pets – Cat Experiences

நல்ல கதையைப் படித்தவுடன், புத்தகத்தை மூடிவைத்துவிட்டு யோசனை செய்யத் தோன்றும். வலையில் கதை படித்தால், குளம்பி அருந்தவோ, அலுவல் வேலையை தொடரவோ வைக்கும். சிமுலேசனின் பூனைக்குட்டிகள் கதையை படித்தவுடன் என்னுடைய பூனை மஹாத்மியங்கள் எழுத வைத்தது.

கரப்பான் பூச்சியை சாப்பிடும் என்றுதான் எனக்கு பூனை அறிமுகம் ஆனது. கரப்புகளுக்கு பாகுபாடு தெரியாது. குத்திட்டு உட்கார்ந்து மோட்டுவளையை அண்ணாந்து நோக்கி எண்ணிக்கை போடும் இடத்திலும் மீசையை ஆட்டும். ஸ்லோக புஸ்தகங்களிலும் குடியிருக்கும்.

அஃபிஷியலாக வீட்டுக்குள் நுழைய, ஜூ.வி.யில் உலாவிய கிளுகிளு ராத்திரி ரவுண்ட-அப் போகும் ஆந்தையாருக்கும் சினிமா கிசுகிசுக்கும் மிஸ்டர் மியாவுக்கும் மட்டுமே அனுமதி உண்டு. ஆனால், கரப்புகள் இரவு நேரங்களில் சமீபத்திய Barnyard: The Original Party Animals திரைப்படம் போல் என்ன குசுகுசுக்குமோ? பாத்ரூமில் அரட்டை கச்சேரி நடந்தேறும். பயம் கலந்த அறுவருப்புடன் விளக்கைப் போட்டு, ஐக்கிய கரப்புகள் சபை கூட்டத்தை கலைப்பேன்.

கிளி பறந்து வந்து தோளில் உட்கார்ந்தால் அழகு. இரு தோளில் உட்கார கரப்புகளுக்குள் பறக்கும் போட்டி நடந்தால்? வேற்று கிரகவாசிகள் தங்கும் ‘Men in Black’ தோற்றங்களுடன், கனவில் ‘War of the Worlds’ பூதாகரத்துடன் மிரட்டியதால், பூனையார் தருவிக்கப்பட்டார்.

தம்பி, தங்கை இல்லாதவனுக்கு அடக்கி ஆள, சொன்னதை அடியொற்ற, தோற்றத்தில் சிறிய தோழி கிடைத்தது. கிட்டத்தட்ட ‘Meet the Parents’ மிஸ்டர் ஜின்க்ஸ் (Mr. Jinx) பழக்கவழக்கம். வேறு யாராவது வேடிக்கை பார்த்தால் மலஜலம் கழிக்காது. கதவை சார்த்திக் கொள்ளாத வருத்தத்துடன் காலைக்கடனை கரெக்டாக முடிக்க வேண்டிய இடத்தில் புத்திசாலித்தனமாக முடிக்கும்.

எது உடைந்தாலும், எவ்வளவு சிதிலமடைந்தாலும் தூக்கிப் போடாமல் பாதுகாப்பது, மத்தியவர்க்க குடும்பங்களின் முக்கிய அடையாளம். அமெரிக்காவில் பூப்பூக்கும் காலத்திற்கு ஒரு முறை, இலையுதிர் காலத்திற்கு இன்னொரு முறை என்று ‘காராஜ் ஸேல்’ (Garage sale) போட்டு பழையன கழிதலை நிறைவேற்றுகிறார்கள். அவ்வாறு புதியன புகாத எங்கள் வீட்டு சிதிலமடைந்த கிணற்றுக் கம்பியில் தவறி தண்ணீருக்குள் விழுந்தார் ‘பூனை’.

நாமகரணமிடாத பூனைகள்தான் எனக்குப் பழக்கம். அமெரிக்கா வந்தவுடன் ஆர்வக் கோளாறினாலும், தனிமை வாட்டியதாலும், வாடகை வீடாக இருந்தாலும் செல்லப் பிராணி வளர்க்க அனுமதி இருந்ததனாலும், இரு ‘அனாதரவான பூனைகளுக்கு அடைக்கலம் கொடுப்போர் தேவை’ அறிவிப்பில் தடுக்கி விழுந்ததனாலும், ஒரே சமயத்தில் இருவர் வந்து சேர்ந்தனர். ஒரு பூனையையும் இன்னொன்றையும் வேறுபடுத்த பெயர் வைத்தே ஆக வேண்டிய கட்டாயம்.

காதலியின் பெயரை குழந்தைக்கு வைத்து அழகு பார்ப்பது சினிமா தாத்பர்யம். வீட்டுக்கு அடிக்கடி வருகை புரியும் நண்பனின் காதலியின் பெயரை, பூனைக்கு சூட்டுவது, தமிழ் சினிமா ரசிகனின் அடையாளம். தோழனின் சந்தியா (படிக்க: சவுண்ட் பார்ட்டி: நிஜமல்ல, கதை-3!) நினைவாக ‘சாண்டி’ ஆனாள்.

செல்லங்களுக்கான உணவு மூன்று வகைப்படும்:
* உயர் உயர் உயர் உணவு
* உயர் உயர் உணவு
* மிச்சம் மீதி கழிசடை.

நான் தயாரித்த தக்காளி ரசம், முழு மிளகுடன் நெய்முந்திரி கூடிய வெண்பொங்கல் வகையறா ருசிக்காததால், வாரந்தோறும் வாங்கும் மளிகைப் பட்டியலில் உயர் உயர் உணவு கூடிக் கொண்டது.

சென்னையில் காற்றோட்டமாக குப்பைத் தொட்டி, மரஞ்செடி பக்கம் ஒதுங்கிய தங்களின் ஒன்று விட்ட அண்ணாக்கள் போல் இல்லாமல், வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி தங்கள் ரகசியத்தைப் பதுக்க ‘சிறப்பு மலமணல்’ அமைக்க வேண்டும். ஒரு முறை சென்ற பிறகு ‘சொர்க்கம் என்பது நமக்கு புத்தம்புதிய மலமணல்தான்’ என்று விடாப்பிடியாக ‘மியாவ் மியாவ்’ தொண்டை கிழிய, மாற்ற வைக்கும். மலஜல மணல் மாற்றுவது, குழந்தைக்கு டயாபர் மாற்றுவதற்கு முன்னோட்டமாக அமையும்.

மேற்கத்திய உலகில் பிராணி வளர்ப்பது நச்சுப்பிடித்த வேலை. உரிமம் பெற வேண்டும். கருத்தடை முடிக்க வேண்டும். நகம் வெட்ட வெண்டும்; மீறி எழும் நக அரிப்புக்கு ஏற்ற உபகரணங்களை வீட்டிற்கு வாங்க வேண்டும். முடியை சீராக்க வேண்டும்; அதையும் தாண்டி உதிரும் ரோமங்களை சுத்தமாக்க பொறுமை வேண்டும். பல்வலி, மூட்டு டாக்டர், வயதானவை, குண்டு உடம்பு என்று சிறப்பு மருத்துவ வசதி கவனிக்க வேண்டும். நான் நீள் விடுமுறையில் பதினைந்து நாள் பயணித்தாலும் பூனையை ஒழுங்காக பராமரிக்கா விட்டால், எஸ்.பி.சி.ஏ முதல் அனிமல் ப்ளானெட் டிவி வரை ஜீவகாருண்யம் இல்லாமல் முட்டிக்கு முட்டி தட்டி விடுவார்கள்.

குடும்பம் குட்டி என்று ஆன பிறகு, தற்போது ‘பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே, பெற்ற பிள்ளை போல நல்லுறவாய் கூடி வாழுதே’ என்று எம்.எஸ் ராஜேஸ்வரியின் குரலில் களத்தூர் கமல் பாடும்போது நெஞ்சம் குறுகுறுப்பதில்லை.


| |

Opinions, Suggestions, Advices – Horsebuyer

ராசுக்குட்டிக்கு ஒரு பாக்யராஜ் வகை பதில்:

—-தேன்கூடு போட்டிக்கு படைப்பவர் பெயரே போடக்கூடாதுன்னு… இந்த கருத்துக் கணிப்பெல்லாம் பரவாயில்லயா—-

எனக்கு ரொம்பப் பிடித்த கதை ஒன்று :-D)

http://flickr.com/photos/lowfive/98058065/பக்கத்து ஊர் சந்தைக்கு குதிரை வாங்க அப்பாவும் மகனும் போறாங்க. நிறைய குதிரை வந்திருக்கிறது. தங்கள் பொக்கீடுக்கு ஏற்ற குதிரையை வாங்கி, தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வருகிற வழியில் ‘பஹேலி’ படத்தில் வருமே… அந்த மாதிரி ஒரு குக்கிராமம்; பஞ்சாயத்து கூடும் மரநிழல். அதன் அடியில் இருவர் பேசிக் கொள்கிறார்கள்.

‘என்னங்க… காசு கொடுத்து வாங்கிட்டீங்க இல்ல? சவாரி செய்வதற்குத்தானே குதிரை இருக்கு… எதுக்கு ரெண்டு பேரும் நடந்து போறீங்க? பெரியவர் உட்கார்ந்து வரலாமில்ல!’

நல்ல யோசனையாக தென்பட, அப்பா குதிரை மேல் ஏறிக் கொள்கிறார்.

அடுத்த ‘வானத்தைப் போல’ குக்கிராமம். இன்னொரு மரத்தடி. இரண்டு வழிப்போக்கர்கள்.

‘அநியாயத்தப் பாருடா! கொளுத்தற வெயிலில் சின்னப் பையனை நடக்க விட்டு வேடிக்கை பார்த்துண்டே, பெருசு போடற ஆட்டத்தப் பார்த்தியாடா?’

அப்பாவுக்கு சுருக்கென்று மனம் நோகிறது. சடாரென்று குதிரையை விட்டு குதித்து, அவர்களின் கண் முன்னாலேயே, பையனை ஏற்றிவிட்டு, பயணத்தைத் தொடர்கிறார்.

இன்னொரு குறுக்கு சந்து. பிறிதிரண்டு பொழுதுபோகாதவர்கள்.

‘இதப்பாருடா… குதிரையை வாங்க தெரிஞ்சிருக்கு. அது எப்படி பயன்படும் என்று கூட அறியாதவங்களா இருக்காங்க. ஜம்முன்னு ரெண்டு பேரும் ஏறிக் கொண்டு, ஊருக்கு போய்சேருவதை விட்டுட்டு, ஒருத்தர் அன்ன நடை நடக்கிறார்.’

சரிதானே என்று மின்னல் வெட்ட, அப்பாவும் ஏறிக்கொள்கிறார்.

அடுத்த முக்கு. டீக்கடை பெஞ்சு. வேறொரு அலசல்வாதிகள்.

‘அய்யோ பாவம்… எனக்கு மட்டும் மனேகா காந்தி ஃபோன் நம்பர் கிடைச்சா உடனே சொல்லிடுவேன். வாயில்லா ஜீவண்டா அது. இரண்டு தடிமாடுங்களும் புஸ்ஸு புஸ்ஸுன்னு மூச்சு முட்ட குதிரையை நோகடிக்கறத பார்த்தா ஆத்தாமையா இருக்குடா. காசு கொடுத்து வாங்கிய பணத்திமிர். நல்லது செய்ய வேண்டாம். இந்த மாதிரி கொடுமையை பார்க்கிறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்’

மிரண்டு போகிறார்கள் இருவரும். அப்பா முடிவெடுக்கிறார். குதிரையின் முன்னங்கால்களைத் தானும், பின்னங்கால்களை மகனும் தாங்குவது. தாங்களே புத்தம்புதிய உச்சசிரவஸ் குதிரையை தலைமேல் தூக்குகிறார்கள். குதிரை மிரண்டு போய், நாலுகாலில் ஓடியே போய்விட்டது.

http://flickr.com/photos/lowfive/98058065/

இந்தக் கதையில் நான் இந்த சந்துதோறும் கருத்து சொல்லும் சாதி 😉 அப்பா/மகன் மாதிரி பங்குபெறுவோர் குழம்பாத வரைக்கும் சந்தோசமே ;-))


| |

Raksha Bandhan

அன்பிற்கினிய சகோதரிகளுக்கு ரசிகனின் ராக்கி வாழ்த்துகள்!

பொக்கீடு பிரச்சினையாலும், பாலிவுட் அறிமுகம் இல்லாததாலும், கண்ணாடி உடைந்து போனதாலும், பாண்ட்வித் பிரச்சினையாலும், முகவரி கண்டுபிடிப்பு சிரமங்களினாலும், யாருக்கு அனுப்பலாம் என்று குழப்பத்தில் உள்ளேன்…

சகோதரர்களே உதவுங்கள் 🙂

1. ரெய்மா சென்

2. இஷா கோபிகர், சுஷ்மிதா ஸென், நிஷா கோத்தாரி, அனுஷ்ரி தத்தா, ப்ரியங்கா சோப்ரா, ப்ரீத்தி ஜிந்தா

3. கத்ரீனா கய்ஃப்


| |

TK-TO Contest: #28 – #31 : Snap Reviews

  • சிந்திக்கலாமா?: பயணம்எண்ணம் எனது

    (அறிபுனை) மதிப்பெண் – 1.5 / 4

    சிறப்பான இறுதிப்பகுதி. அறிவியல் தகவல் மனதில் விழுமாறு தரவில்லை. கதாமாந்தர்களின் அவசரம் கதையினூடும் ஜெர்க் ஆட்டம் காணுகிறது.

  • ஸ்மைல் பக்கம்: “உறவுகள்”லிவிங் ஸ்மைல் வித்யா

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1.5 / 4

    பாதித்த பதில்மொழிகள்:

    • மனதின் ஓசை: எத்தனையோ உறவுகள் கண்ணாடியை போல வெளிக்காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் உண்மை வேறு விதமாய் இருப்பதுண்டு…
    • சந்திப்பு : உறவு என்ற கண்ணாடியை உடைக்கலாம். ஆனால், கண்ணாடி பிரதிபலிக்கும் உருவத்தை உடைக்க முடியாது. உறவு பிரதிபலிப்பதாகட்டும்.
  • தேன்: உறவுகள்சிறில் அலெக்ஸ்

    (சிறுகதை) மதிப்பெண் – 2.5 / 4

    நண்பர் என்றாலே சிறப்பாய் கவனிக்க ஆசை பிறக்கும். அதுவும் முந்தைய போட்டியில் வாகை சூடியவர். ஏமாற்றவில்லை.

  • ராசபார்வை… : என்ன உறவு ? – ‘கொங்கு’ ராசா

    (சொந்தக்கதை) மதிப்பெண் – 3.25 / 4

    ராத்திரி எத்தனை சுத்து போனாலும், நீ மட்டும் எப்படிடா காலங்காத்தால சரியா ஆபீஸ் வர்றேன்னு நம்ம சக பொட்டிதட்டியாளர்கள் கேக்கும் போதெல்லாம் எனக்கு போசு தான் ஞாபகத்துக்கு வருவான்.

    8.57 வண்டி வழக்கம் போல, கட்டுக்கு அடங்காம திமிறிகிட்டு இருக்கிற வக்கப்போரு லாரி மாதிரி நிறைஞ்சு வந்துச்சு, எப்படியோ ஒரு காலை.. காலா, ஒரு ரெண்டு விரலை வைக்க கதவுகிட்ட இடம் கிடைச்சுது,

    விமர்சனம் செய்யவேண்டும் என்று ஆரம்பித்தாலும், உள்ளிழுக்கும் லாவகம் கட்டிப்போடுகிறது. ‘என்ன ஆச்சோ‘ என்று பதற வைக்கும் விவரிப்பு. உபகதைகளைப் பொருத்தமான இடங்களிலும், ஒப்புமைகளை தேவையான விகிதத்திலும் கலந்து, ஆரவாரமில்லாத பேச்சுமொழி. டெல்லியில் பேருந்து ஓட்டத்தில் இருந்து தப்பித்த நினைவுகளை் கண்முன்னே மீட்டுவதால் முதல் மூன்று இடங்களுக்குள் வர வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


| |

Cars, Dead Man’s Chest – Siesta & Cerebral aneurysm

பொன்ஸ் பக்கங்கள் :: கார்ஸ் | Instant Kaapi: Cars – a boring ride to nowhere

படம் பார்த்துவிட்டு, வெளியில் வந்தால் பார்க்கும் ஒவ்வொரு காருக்கும் “ஏன் கண், வாய் இல்லை?” என்று யோசிக்கத் தோன்றியது. கார்கள், ட்ரக்குகள் எதுவுமே பேசாமல் இருப்பது ரொம்ப அசாதாரணமானது என்னும் உணர்வு விலக ஒரு அரை மணி ஆனது.

படம் பார்க்கும்போது தூக்கம் சொக்கி வழிவது இயக்குநருக்கு செய்யும் துரோகம். முதன் முதலாக நான் தூங்கியது ‘காந்தி‘ திரையிட்ட ஈகா அரங்கில். ஓரத்து இருக்கை. ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் புலமைக்கு எட்டாத பரங்கியர்களின் உச்சரிப்பு. அப்பொழுது குறட்டை விடாதது எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்தது. மெட்ராஸ் (அப்பொழுது சென்னை கிடையாது) வெயிலுக்கு ஏற்ற குளிரூட்டலில், பென் கிங்ஸ்லி சட்டையைக் கழற்றி ஆற்றில் விட்டுக்கொண்டிருக்க, நான் உறங்கினேன்.

ஞாயிறு மதியம் தூக்கம் வராது. சாப்பிடவுடன் குடும்பத்தினர் (அட… உறவுகள்!) தாச்சிக் கொண்டிருக்க, நான் மட்டும் மத்திய அரசின் அவார்ட் படம் பார்க்கும் கூத்தாடிக் கோலமாய் சோபாவில் எத்தனித்தால், கிடந்த கோலமாக மாறும். மலையாளப் படத்தில் பசுவை விரட்டும் காட்சிகள் காணும் பாக்கியம் வாய்த்தால், மோன நிலையை எட்டும் ் வேகம் சித்திக்கும்.

கடைசியாக கொட்டாவி விடாமல் இருக்கையிலே தலையை சாய்த்தது மணி ரத்னத்தின் ‘உயிரே‘. பயணக் களைப்புடன் இந்தியா சென்றிருந்த நேரம். ‘தில்ஸே‘வை பாஸ்டனின் பெரிய திரையில் ஏற்கனவே கண்ணுற்றிருந்த ஜெட்லாக் அலுப்பு. ஈஞ்சம்பாக்கம் திறந்தவெளி ப்ரார்த்தனாவின் சுவர்க்கோழி அழைப்பு. ஜம்மென்று உறங்கினேன்.

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்‘ குறுந்தட்டுடன் விடாக்கண்டன் – கொடாக்கண்டனாக கண்விழிப்பு போராட்டங்கள் தொடர்கிறது. முதல் பாகத்தை முடிக்காமல், மற்ற இரண்டையும் பார்க்க கூடாது என்பதால் முதல் வட்டைப் போட்டு அரை மணி நேரத்தில் ‘கொர்’ என்று சயனித்து விடுகிறேன்.

மீண்டும் ‘கார்ஸ்‘ படத்தில் கண்ணயர்ந்தேன். ‘மான்ஸ்டர்ஸ் இன்க்’, தி இன்க்ரெடிபிள்ஸ் என்று ஆசை ஆசையாய் எதிர்பார்ப்பு. முந்தைய பிக்ஸார் ஆக்கங்களுடன் ஒப்பிட முடியாத திராவை. இழு இழுவென்று நீட்டி முழக்கி, ‘எப்பொழுது அப்பா படம் முடியும்?’ என்று வினவ வைத்தார்கள்.

‘லட்சியத்தை சிகரத்தை அடைவதை விட, செல்லும் பாதையை கருத்தில் கொள்’ என்னும் அசத்தலான கருத்தை உப்புக் காரமில்லாமல் தந்திருந்தார்கள். ஆனால், படம் முடிந்து வெளியே வந்தவுடன் ‘நம்ம கார் பேசுமா அப்பா?’ என்று சேரியமாய் வினவ வைத்திருந்தார்கள்.

அதற்கு அடுத்த வாரம் பரிகாரம் தேட ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்: டெட் மேன்ஸ் செஸ்ட்‘ (விரிவான & உருப்படியான விமர்சனம்: Pirates of the Caribbean: Dead Man’s Chest Movie Review – Pirates of the Caribbean: Dead Man’s Chest Movie – The Boston Globe). பாஸ்டன் க்ளோப் ‘போகாதே போகாதே பொன்னுரங்கம்… பொல்லாத படம் உன்னைக் கொன்று விடும்‘ என்று அறிவுரைத்ததைக் கேளாமல், திரையரங்கில் நித்திராதேவியின் அனுக்கிரஹம் கூட கிடைக்காதவாறு தலைவலி கொடுத்தார்கள்.

சூப்பர்மேன் அல்லது டெவில் வியர்ஸ் ப்ராதா சென்றிருக்கலாம்.


| |

TK-TO Contest: #19 – #27 : Snap Reviews

  • 07/08/06 # 27 பல்லிடுக்கில் மாட்டிய பாக்குத்தூள்! லக்கிலுக்

    (சொந்தக்கதை) மதிப்பெண் – 1 / 4

    எவ்வளவு தடவை ….. (கிட்டத்தட்ட 64) வருகிறதோ, அவ்வளவு ‘நாமே உணர்ந்து, தெரிந்து, புரிந்து, விரிந்து, பரந்து, சுரந்து, கறந்து கொள்ள’ வேண்டியவை.

  • 07/08/06 # 26 உறவில்லாத உறவுஜெஸிலா

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1.5 / 4

    நீயே என்
    இன்பத்தின் ஆரம்பம்
    தவிப்பின் துணை
    தனிமையின் தீர்வு
    துன்பத்தின் தேடல்

    சண்டேன்னா ரெண்டு; கவிதைன்னா 1.5 🙂

  • 07/08/06 # 25 செம்புலப் பெயல் நீர்குமரன் எண்ணம்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1 / 4

    ஆரம்பத்தில் தாய் மேல் உள்ள Oedipus complex விவரணை. கொஞ்சம் பாண்டீன் ப்ரொ-வீ திருவிளையாடல். அப்புறம் கொஞ்சம் மழை நீர் வாசம் (Howstuffworks “What causes the smell after rain?”). ‘இருவர்’ படத்தில் சங்கப்பாடலை நவீன வெள்ளித்திரையாக்குவது போன்ற புனைவு. அறிவியலும் காதலும் பாசமும் இலக்கியமும் உளவியலும் பல்கிப் பெருகிப் பின்னிப் பிணையும் உறவு.

  • 07/08/06 # 24 சாயல்ஜெயந்தி சங்கர்

    (சிறுகதை) மதிப்பெண் – 3 / 4

    ஏன் உன்ன மாதிரி ஒம்பையன் இருக்கறதா யாராவது சொன்னா சந்தோஷப் படற, நீ அவங்கப்பா மாதிரி இருக்கறதா சொன்னா ஏன் வெறுக்கணும்.

    ஏதோ முதன்முதலாக பிரமுகர் ஒருவரைச் சந்திக்கப் போவதைப் போல ஒரு படபடப்பு.

    நீ ஆல்பர்ட்ட உன் மகன்ற உணர்வையும் தாண்டி ஒரு தனி மனிதனா, ஒரு சிநேகிதனாப் பாரு. அவன் மூணு நாலு வயசுலயே உன்னப் பிரிஞ்சு, எவ்வளவோ குழப்பங்கள அனுபவிக்க ஆரம்பிச்சவன். உன்னப் புரிஞ்சுக்க அவனுக்கு டைம் கொடு. அந்த டைம்ல நீ அவனையும் புரிஞ்சுக்கோ.

    இயல்பாக உள்ளிழுக்கிறது. சண்டை போட்ட குடும்பத்தில் இருந்து வீட்டோடு தங்க வரும் உறவு. முந்தைய மண உறவுகளை அணுகுதல். பழமைவாத கலகம் செய்யும் முதியோர் என்று சிதறலாக பல முகங்கள் அறிமுகம். நல்ல கதை.

  • 07/08/06 # 23 என்ன உறவில் நான்… – மதுமிதா

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1.5 / 4

    கொஞ்சம் சுற்றிவளைத்த சுற்றங்கள் சிதறுவதை வழக்கமான கவிதையாக்குகிறார்.

  • 06/08/06 # 22 உறவுகள்vaik

    (சிறுகதை) மதிப்பெண் – 1 / 4

    மின் அரட்டையைக் களமாக வைத்து உருப்படியாக எந்தக் கதையும் வரவில்லை என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. தட்டை என்பார்களே… அதற்கு எ-டு.

  • 06/08/06 # 21 அஞ்சல் நெஞ்சுல (கானா)அபுல் கலாம் ஆசாத்

    (ஒலிக்கவிதை) மதிப்பெண் – 3 / 4

    உங்களுக்கு கானாக் கவிதை எழுதத் தெரியுங்களா (+1)? அதை மூச்சு முட்டாம பாடத் தெரியுங்களா? எல்லோர் முன்னாடியும் பாடுவீங்களா (+1)? பாட்டைக் கேட்டு குத்தாட்டம் போட முடியுங்களா (+1)? வலையொலி பரப்பத் தெரியுங்களா (+1)? அஜீத், மணிவண்ணன், மகேஸ்வரி ஆட வைத்து ஒளிப்பதிவாக்காததால் -1 😉

    எம்பி3 கானாவ கேட்டேன் அஞ்சல – ஆசாத்து
    எம்மாம் கலக்கலா பாடறாரு பதிவுல!

  • 06/08/06 # 20 உறவு..!இரா.ஜெகன் மோகன்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 1.5 / 4

    கவிதை படிப்பதற்கு எளிது.

  • 06/08/06 # 19 பூனைக்குட்டிகள் – தேன்கூடு – உறவுகள்சிமுலேஷன்

    (சிறுகதை) மதிப்பெண் – 2.5 / 4

    வள்ர்ப்பு பிராணிகள் குறித்த இரண்டாவது கதை. விறுவிறுப்பாக நகர்கிறது, என்னுடைய வாக்கு உண்டு.

    நாய் படிக்கும்போதே தோன்றினாலும், பூனையிலாவது கேட்டு விட்டுகிறேன்:

    அ) இந்தியாவில் பூனை வளர்த்தால், வீட்டுக்குள்ளேயே ‘வெளிக்கு/ஒன்றுக்கு’ இருக்குமே. ஐந்து உறவுகளைக் கொண்டு இந்தப் பிரச்சினையை யாரும் தொடவே இல்லையே.

    ஆ) இராத்திரி எல்லாம் தூங்க விடாமல் கத்தி, சாப்பாட்டை தட்டி விட்டு, ஆசாரம் பார்க்கும் பாட்டியிடம் விழுப்பு ஏற்படுத்தி, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து என்று கஷ்ட நஷ்டங்களையும் கவனிக்காமல் தவறவிட்டது ஏன்?

    போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


    | |

  • TK-TO Contest: #7 – #18 : Snap Reviews

  • 06/08/06 # 18 உயிர் (இயக்குனர் – சுவாமிநாதன்) ராசுக்குட்டி

    (திரைப்பட விமர்சனம்) மதிப்பெண் – 1.5 / 4

    ஸ்ரீகாந்த்தை சதாய்த்ததற்காக 0.5; சங்கீதா வெறும் கண்களாலும், எல்லை தாண்டாத கவர்ச்சியிலுமே கலக்கியதை கவனித்தத்ற்கு 0.5; காதலர் அறிமுக கற்பனை வறட்சி அவதானிப்புக்கு 0.5; மற்ற நச் விமர்சனங்களுக்கு +1; திரைப்பட விமர்சனம் எழுதுவது எளிது என்பதால் 1.

  • 06/08/06 # 17 உறவும் பிரிவும் ராசுக்குட்டி

    (சிறுகதை) மதிப்பெண் – 3 / 4

    அப்பாவின் TVS-50 சத்தத்தை எப்படித்தான் அம்மா கண்டுபிடிக்கிறார்களோ, அம்மா வாசலுக்கு ஓடுவதற்கும் அப்பா வருவதற்கும் சரியாக இருந்தது.

    கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் ஆலோசனை கூறினார். “இதுக்கு மட்டும் வந்துருங்கய்யா” என மனதில் நினைத்துக்கொண்டேன்.

    இனிமையான மெல்லிய விவரிப்புடன் ஒன்றவைக்கிறார். வலைப்பதிவிலே மட்டும் சாத்தியப்படக் கூடிய முடிவுரை கொடுப்பதின் மூலம் சிறுகதை பெருங்கதை ஆகிறது. எழுத்துப்பிழைகள் உண்டு (எல்லோரிடனும்).

  • 04/08/06 # 16 எழுத்தாளர்களோடு உறவு மலர என்.சுரேஷ், சென்னை

    (கட்டுரை) மதிப்பெண் – 0 / 4

    அவர்களும் மனிதர்கள் தானே, எல்லோரும் செய்யும் தவறுகளைத்தானே அவர்களும் செய்தார்கள், செய்கிறார்கள் என்றால், நாம் அதை ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில் எல்லோரையும் விட எழுத்தாளர்களிடம் அதிகமாய் நல்ல குண நலங்களை எதிர்பார்க்கிறது இந்த உலகம்!

    எழுத்துப்பிழைகள் உண்டு. படிக்கும் வேகத்தில் உறுத்திய ஒவ்வொன்றுக்கும் 0.5 கழிவு போட்டுக் கொண்டேன். (பரிமாரிக்கொள்வதோ, மோசமான், க்விஞர்கள், கூட்டம, குடடையிலிருந்து, த்ங்களின், திருந்துபவரகளாக, எழுதவாள், பகமையுமில்லை, பைய்யன்)

  • 04/08/06 # 15 ஒவ்வொரு மனிதனும் உறவும் என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 14 நடிக்கும் உறவுகள் என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 13 இறைவனோடு உறவு என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 12 தேடும் உறவு என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 11 உறவுகள் என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 10 அவரகளும் நம் உறவினர்களே… என்.சுரேஷ், சென்னை
  • 04/08/06 # 7 உறவுகள் என்.சுரேஷ், சென்னை

    (புதுக்கவிதை) மதிப்பெண் – ? / 4

    16 + 6 ==> 22 பதிவுகள். கவிதையின் அழகு தலைப்பில். உறவு என்னும் வார்த்தை #13-இன் தலைப்பில் மட்டும் இல்லை என்று என்னால் விமர்சிக்க முடியுமளவு மழை பொழிந்திருக்கிறார்.

    லெபனானியர் பெருமளவில் இறந்திருக்கிறார்கள். ஹிஸ்பொல்லா பக்கம் நியாயம் இருக்க வேண்டும் என்று செய்தியை மட்டும் வைத்து கணிப்பிட முடியாது. அதே போல், சுரேஷ் நிறைய கவிதை எழுதியிருக்கிறார். சிறப்பாக அமைந்திருக்கிறது என்று உடனடியாக சொல்ல முடியாது. பொறுமையாகப் படித்துவிட்டு வருகிறேன்.

  • 04/08/06 # 9 உறவுகளும் ஒற்றுமைகளும் :: சிவமுருகன்

    (புதுக்கவிதை) மதிப்பெண் – 2 / 4

    வைரமுத்துவின் எளிமை வாசம் வீசுகிறது (ஆங்கிலப் பயன்பாட்டிலும்) கவர்ச்சியான கட்டமைப்புக்கு ஒரு மதிப்பெண். பதிவாளரின் தட்டச்சை முடக்கும் அளவு ஒற்றுமைகளை அள்ளி வீசாமல், முடுக்கும் அளவோடு நிறுத்திவிட்டதற்காக மற்றொன்று.

  • 04/08/06 # 8 நிலைத்து இருக்கும் உறவுகள் :: நாச்சியார் வள்ளி (yezhisai)

    (சொந்தக்கதை) மதிப்பெண் – 1.5 / 4

    அவசரமாக ஓடுகிறது. உறவுகள் என்னும் போட்டி எழுவாய்க்கு ஏற்ப நிறைய பெயர்களை அறிமுகம் வைக்கிறார். சிலரை மட்டும் வைத்து, முக்கிய மாந்தர்களின் குணாதிசயங்களை விவரித்திருந்தால், சுவாரசியமான உறவினர்களை அறிந்திருக்க முடியும். எழுத்துப்பிழைகள் உண்டு.

    போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


    | |

  • Jeyamohan in Thinnai

    கள்ளமோ கரைந்தழும்

    இரு கலைஞர்கள் : ஜெயமோகன்

    இரண்டு நண்பர்கள். ஒருவரின் பெயர் ஜெ.கருணாகர். சுருக்கமாக ஜெ.கெ. முன்னாள் கம்யூனிஸ்ட். ‘மன்றத்தில் அவரது நீண்ட தன்னுரையாடல்களையும் ஊடாகக் பொழியும் வசைகளையும் நக்கல்களையும் கேட்பதற்கென்றே வரும் ரசிகர்கள்‘ இருக்கிறார்கள். முறுக்கு மீசை. பெரிய எழுத்தாளர்.

    இன்னொருவர் யுவராஜ். ஞானி போல் தோற்றம். பாவனை. ‘ஆச்சாரிய ஸ்வாமிகள் மாதிரி. பழங்கள்தான் குடுக்கணும். அதில ஒண்ணை எடுத்து ஆசீர்வாதம் பண்ணி நமக்கு பிரசாதமா எறிஞ்சு குடுப்பான்.‘ என்று கிண்டலுக்கு உள்ளாவார். திருவண்ணாமலை ரமண ஆசிரமம் செல்பவர். ”ஜனனீ ஜனனீ” பாடுபவர். சுருக்கமாக ராஜா சார்.

    Thinnai Jeyamogan Short Fiction on Two Artistes

    ஸ்ரீசக்ரராஜசிம்மனேஸ்வரி‘ என்னும் பாடல் கேள்விப்பட்டதில்லை. ‘ஸ்ரீசக்ரராஜ சிம்மாஸனேஸ்வரி‘ பாடல் மிகப்புகழ் பெற்றது.

    ஜெயமோகன் எழுதினார்் என்பதால் படித்தேன். யாரை குறிப்பால் உணர்த்துகிறார் என்று அறிந்தவுடன் கொஞ்சம் கிளுகிளுப்பும் பரபரப்பும் சேர்ந்தது. அவருடைய நடையில் இல்லாமல், வேறு ஓட்டத்தில் ஓடிய கதை.

    நெருங்கியவரின் மரணத்தில் கூட அழ முடியாத நிலை எனக்கு உண்டு. அழுகை வந்திருக்காது. அதற்காக ‘பரிவிலோ நேசத்திலோ குறை வைத்தவர்… அதனால்தான் பீறிடவில்லை’ என்று விட்டு விடவும் முடியாது. சுந்தர ராமசாமியின் மரணத்தில் ஜெயமோகன் அழுத காட்சி நினைவுக்கு வந்தது. சமீபத்தில் படித்த பிரேமலதாவின் (Kombai: Periyaachchi – IV) பதிவு மனதில் ஓடியது.

    ஒவ்வொருவர் ஒரு மாதிரி என்று சொல்ல வருகிறாரா? அழாதவனைப் பார்த்து ‘ஏன் அழவில்லை’ என்று கேட்காதே. அரற்றுகிறவனைப் பார்த்து ‘அதீத நடிப்பு எதற்கு? எல்லாருக்கும் அதே துக்கம்தானே!’ என்று கட்டுப்படுத்தாதே என்கிறாரா? அல்லது ஜெயகாந்தனுடனும் இளையராஜாவுடனும் திருவண்ணாமலை சென்ற அனுபவத்தில் தன் புனைவைக் கலந்து கொடுக்கிறாரா?

    வாசகனுக்கே வெளிச்சம்.

    இந்த வாரத் திண்ணையில் தாஜ்:

    ‘இருகலைஞர்கள்’ மிகவும் தட்டையாக இருந்தது. குமுதம் ஒரு பக்கக் கதைக்கு போட்டியோ என்றுகூட நினைக்கத் தோன்றிற்று. சுமார் இருபது வருட காலமாக நான் வாசித்த அவரது சிறுகதைகளில், இப்படியொரு சாதாரண கதை மையத்தை நான் கண் டதில்லை. ‘கைபோகும் போக்கிற்கு தடையற எழுத வரும்’ எழுத்து என்பது இதுதானோ என்னமோ!

    ஜெயமோகன் கூட தாளாமையால் கரைந்தழுகிறவர்தான்.

    ஜெயமோகன் நிழற்படம் நெஞ்சின் அலைகள்: ஒரு நதியின் கரையில் – எழுத்தாளர் ஜெயமோகனுடன்!


    | |

    Art Appreciation & Classics Introduction Series – PA Krishnan

    முந்தைய பதிவின் தொடர்ச்சி. தொடரைப் பகிர்ந்து கொண்ட பிஏ கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி

    மரணத்தின் கலை
    1

    ஓவியங்களைப் பற்றி, குறிப்பாக மேற்கத்திய ஓவியங்களைப் பற்றி, எண்ணற்ற விவரங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இந்த விவரங்கள் வியப்பளிப்பவை. ஆனால் ஓவியங்களைப் பற்றிய ஒரு தெளிவை நோக்கி நம்மை இட்டுச் செல்ல இயலாதவை. தெளிவிற்கு இன்றும் புத்தகங்கள்தான் தேவைப்படுகின்றன.

    நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் E.H.கோம்பிரிட்ஜ் (இவரது மகன் இந்திய கலை அறிஞர்களில் ஒருவர்) எழுதிய கலையின் கதை என்ற புத்தகம். என்னிடம் இருப்பது 1992 ம் ஆண்டு வெளிவந்த பன்னீரண்டாம் பதிப்பு. இன்று வரை உலகெங்கும் பதிப்பில் இருக்கும் புத்தங்களில் இதுவும் ஒன்று.

    கோம்பிரிட்ஜ் கூறுவது இது:

    (கலையைப் பற்றி சிறிது ஞானம் பெற்றவர்களில் சிலர்) ஒரு படைப்பைப் பார்க்கும் போது அதை நிதானமாகப் பார்ப்பதில்லை; மாறாக தங்கள் மூளையைக் குடைந்து அந்தப் படைப்பிற்குத் தகுந்த லேபிளைத் தேடுகிறார்கள். உதாரணமாக, ரெம்பிராண்ட் chiaroscuro (ஒளியும் நிழலும்) என்ற நுட்பத்திற்குப் புகழ் பெற்றவர். இவர்கள் எந்த ரெம்பிராண்டின் ஓவியத்தைப் பார்த்தாலும் தங்களுக்குள் ‘அருமையான chiaroscuro’ என்று முணுமுணுத்துக் கொள்வார்கள், உடனே அடுத்த ஓவியத்திற்கு நகர்ந்து விடுவார்கள்… கலையைப் பற்றி கெட்டிகாரத்தனமாக பேசுவது அவ்வளவு கடினம் அல்ல. ஏனென்றால் கலை விமர்சகர்கள் பல சொற்களை பல வேறு பட்ட தருணங்களில் பயன் படுத்தியிருப்பதால் இச் சொற்கள் அவற்றின் துல்லியத்தை இழந்து விட்டன. ஓர் ஓவியத்தை களங்கமற்ற கண்களால் பார்த்து ஒரு கண்டுபிடிப்புப் பயணத்தைத் தொடங்குவது (கெட்டிக்காரத் தனமாக பேசுவதை விடக்) கடினம் மட்டும் அன்று, பயன் அளிப்பதும் கூட. பயணம் முடிந்து திரும்பி வரும் போது எந்தப் புதையலைக் கொண்டு வருவோம் என்று சொல்ல முடியாது.

    இருந்தாலும் ஒரு ஓவியத்தின் நுட்பங்களை உணர்வதற்கு சிறிதளவாவது ஓவியங்களைப் பற்றிய புரிதல் தேவை. நம்மில் பலருக்கு அந்தப் புரிதல் இல்லாததாலேயே, அவர்கள் தங்கள் தேடலை ஒரு மிக குறுகிய வட்டத்திற்குள் அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மற்றொரு சிறந்த விமரிசகர் கூறுகிறார்: ‘எனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு நிச்சயம் தெரியும்‘ என்று ஒருவர் சொன்னால் அதன் பொருள் அநேகமாக ‘எனக்கு என்ன தெரிந்ததோ அதுதான் எனக்குப் பிடிக்கும்‘ என்றுதான் இருக்கும்.

    நமது பத்திரிகைகளில் வரையப் படும் ஓவியங்கள் (படங்கள்?) நமக்குப் பிடித்திருக்கலாம். தவறே இல்லை. ஆனால் இவற்றைத் தவிர வேறு ஓவியங்கள் பக்கமே போக மாட்டேன் என்று கூறுவது எனக்கு ஆத்திச்சூடி பிடிக்கும் அதனால் மற்ற கவிதைகள் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என்பது போல.


    2
    போன இதழில் நாம் எகிப்திய ஓவியங்களைச் சந்தித்தோம். எகிப்திய ஓவியங்களில் கண்கள் வரையப் பட்டிருக்கும் விதம் பற்றியும் விவாதித்தோம். இயற்கையை அவர்கள் உன்னிப்பாகப் பார்த்து அதை வரைய முற்பட்டது அதிசயம் தருவது. ஆனால் அவர்கள் ஓவியங்களை அணுகிய விதம் வித்தியாசமானது. அவர்கள் தங்கள் நினைவின் துணை கொண்டு வரைந்தார்கள். அவ்வாறு வரைவதற்கு அவர்கள் சில மாற்ற முடியாத விதி முறைகளைக் கடைப் பிடித்தார்கள் என்பதும் தெளிவு. (உட்கார்ந்து கொண்டிருக்கும் கடவுளர்கள் அவர்களது கைகளை முட்டுக்களின் மீது வைத்திருக்க வேண்டும்; ஆண்கள் உருவங்கள் எப்போதும் பெண்களுடையவையை விட நிறம் மட்டாக வரையப் பட வேண்டும்.) இந்த விதிகள் எதை வரைந்தாலும் அது தெளிவாக இருக்க வேண்டியதையும் எதைப் பார்க்கிறோம் என்பதை பார்ப்பவனை உணரச் செய்ய வேண்டும் என்பதையும் கோடிட்டிருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம்.

    தீப்ஸ் நகரத்தில் இருந்த ஒரு கல்லறைச் சுவரில் வரையப் பட்ட ஒரு குளம் மற்றும் அதன் சுற்றுபுறத்தின் ஓவியம். தற்போது லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. இந்த ஒவியத்தில் பல வகை மரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. மரங்கள் ஓவியத்தின் விளிம்புகளில் ஒரு மாலை போல குளத்தைச் சுற்றியிருக்கின்றன. ஒரு மரத்தை அதனை தரையிலிருந்து பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்பதை சித்தரிப்பதே சரியாக இருக்கும் என்பதை இந்தக் கலைஞன் நன்றாக உணர்ந்திருக்கிறான். ஆனால் குளத்தைத் தரையிலிருந்து பார்ப்பது போல வரைந்தால் குளத்தில் இருக்கும் பறவைகளை சரியாகச் சித்தரிக்க முடியாது என்று அவன் நினைத்திருக்கலாம். ஒரு வேளை குளத்தை அவ்வாறு வரைவது ஒரு விதியாகக் கூட இருந்திருக்கலாம். எது எப்படியோ குளம் ஓவியத்தின் நடுவில் ஒரு செவ்வகம் போல வரையப் பட்டிருக்கிறது. வானத்திலிருந்து ஒரு குளத்தை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. ஆனால் குளத்தின் உள்ளிருக்கும் பறவைகளும் பூக்களும் குளக்கரையிருந்து பார்த்தால் எப்படித் தோன்றுமோ அப்படித் தோன்றுகின்றன.

    எனக்கு இந்த ஓவியத்தைப் பார்க்கும் போதெல்லாம் பழைய பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையில் (ரத்தின நாயக்கர்& சன்ஸ்?) வரையப் பட்ட ஓவியங்களின் நினைவு வருகிறது. பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை வெளிவந்தது சென்ற நூற்றாண்டின் முந்தைய ஆண்டுகள் என எண்ணுகிறேன். எகிப்திய ஓவியங்கள் வரையப் பட்டது ஏறத்தாழ 3400 வருடங்களுக்கு முன்னால். நமது தஞ்சாவூர் கிருஷ்ணன் போல எகிப்திய ஓவியங்களிலும் ஓவிய நாயகன் (அல்லது நாயகி) கிட்டத்தட்ட ஓவியம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்கிறார். மற்றவர்கள் அனைவர்களும் வாமனர்கள்.

    எகிப்திய ஓவியங்களில் என்னைக் கவர்ந்த இன்னும் இரண்டு ஒவியங்களை குறிப்பிட்டாக வேண்டும்.

    நீர் யானை வேட்டை என்ற ஒரு ஓவியம். இது 4500 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப் பட்டது. ஓவியத்தின் நாயகன் கல்லறையின் துயிலும் மனிதன். அவனுக்கும மேலே பேபிரஸ் மரம் ஒன்று. மரத்தில் வேட்டையாடும் சிறிய பிராணிகள் ஏறிக் கொண்டிருக்கின்றன. பறவைகள் அவற்றைக் கண்டு அங்கும் இங்கும் பறக்கின்றன. நாயகன் காலடியில் படகு. முன்னால் மற்றொரு படகில் வேட்டையாடுபவர்கள். பின்னால் ஒரு படகு. படகுகளுக்குக் கீழே அல்லாடும் பல மீன்கள், நீர் யானைகள். நீர் யானைகளும் மீன்களும் ஒரே அளவு. இந்த ஓவியத்தில் இருக்கும் எல்லா உயிர்களும் தாங்கள் உயிர் உள்ளவை என்பதை நமக்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றன. நாயகன் நடுவில் விரைத்து நிற்கிறான். மற்றவை அனைத்தையும் விட பரிமாணத்தில் பெரியவனாக. ஆனால் அவன் இந்த உலகில் இல்லாதவன் என்பது நமக்கு ஓவியத்தைப் பார்த்த உடனேயே தெரிந்து விடுகிறது. வாழ்க்கையின் பருவ மாற்றங்களை அவன் தொடர்ந்து மரணத்திற்குப் பின்னால் பார்த்துக் கொண்டிருக்கிறான். வரைந்தவன் இங்கு உழல்பவன். அவன் தான் பார்த்தவற்றை ஓர் உயிர்ப்போடு வரைந்திருப்பதால் இந்த ஓவியம் இறவாத் தன்மை பெறுகிறது.

    ஆற்றைக் கடக்கும் பசுக்கள் என்பது அடுத்த ஓவியம். இந்த ஓவியத்தில் பசுக்கள் முன்னால் மாடு மேய்ப்பவன் செல்கிறான். அவனது தோளில் ஒரு கன்றுக் குட்டி. தோளில் இருக்கும் பாரம் அவனை அழுத்துகிறது. கன்றுக்குட்டி பயத்தில் தலையைத் திருப்பி தனது தாயைப் பார்க்கிறது. பசுக்களின் தலை அசைவுகள் அவை முன் நோக்கிச் செல்கின்றன என்பதை நமக்கு அறிவிக்கின்றன. இந்த ஓவியத்தை வரைந்தவன் ஒரு அசாதாரணத் திறமை படைத்தவன் என்பதில் ஐயம் இல்லை.

    எகிப்தைப் பற்றிப் பேசும் போது நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீர் யானை வேட்டைக்கும் தீப்ஸ் நகரக் குளத்திற்கும் உள்ள இடை வேளை கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள். நமக்கும் ராஜ ராஜ சோழனுக்கும் உள்ள இடை வேளை.


    3

    எகிப்திய கல்லறைகள் அவை கட்டப் பட்ட காலத்திலிருந்து திருடப் பட்டு வந்தன. கல்லறைகள் சுவர்களில் எழுதப் பட்டிருந்த சாபங்கள் எல்லாம் திருடர்களைத் தடுத்ததாகத் தெரியவில்லை. எனவே திறக்கப் படாத கல்லறை ஒன்று கிடைப்பது நடக்க முடியாத ஒன்று என்று சென்ற நூற்றாண்டின் முதல் ஆண்டுகள் வரை பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். 1923 ம் ஆண்டு ட்யூடன் காமன் என்ற ஃபாரோவின் கல்லறை கண்டு பிடிக்கப் பட்டது. 18 வயதில் இறந்த இவர் இன்று உலகிலேயே மிகப் புகழ் பெற்ற ஃபாரோ. காரணம் இவரது கல்லறை திருடர்களால் அதிகம் சேதப் படாத கல்லறை. இவரது சவப் பெட்டி தங்கத்தால் செய்யப்பட்டது எடை 100 கிலோவிற்கும் அதிகம். கல்லறையில் உள்ள ஒரு பெட்டியில் ட்யூடன்காமன் வேட்டையாடும் ஒரு காட்சி தீட்டப் பட்டிருக்கிறது. ட்யூடன்காமன் ஓரத்தில் தன்னுடைய ரதத்தில் உறைந்து காணப் படுகிறான். கையில் வில்லை வளைத்துக் கொண்டு நின்றாலும் அவனிடம் துடிப்பு இல்லை. முன்னால் மான்கள், பறவைகள், மானைக் குதறும் நாய் ஒன்று. எல்லா மிருகங்களும் ஒன்றை ஒன்று மிதித்துக் கொண்டு ஓடுகின்றன. உறைந்திருக்கும் ஃபாரோவின் அம்பிற்குப் பயந்து. இந்த ஓவியம் எனக்கும் மொகலாய ஓவியங்களை நினைவு படுத்துகிறது. 2000 ஆண்டுகளுக்குப் பின்னும் இருந்த இந்தத் தொடர்ச்சி நம்மை வியப்பில் ஆழ்த்தும் ஒன்று.

    நமக்குக் கிடைத்திருக்கும் எகிப்திய ஓவியங்களில் அநேகமாக எல்லாமே மரணம் சார்ந்து இருப்பதால் எகிப்திய மக்கள் மரணத்தையே நினைத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. கிடைத்ததைக் கொண்டு பழமைக்கு உருவமைக்கும் வேலை, மதனகாமராஜன் கதையில் தலைமயிரைக் கொண்டு இளவரசியின் உருவச் சிலையை அமைக்க முற்படுவது போன்றது.


    4

    கிரேக்க கட்டிடங்கள் இன்று வரை உலகெங்கும் பல கட்டிடங்களுக்கு முன் மாதிரியாக இருந்து கொண்டு வருகின்றன. டோரிக் மற்றும் ஐயோனியன் தூண்கள் இன்றும் சென்னை நகரில் பல கட்டிடங்களை அலங்கரிக்கின்றன. இதற்கு ஒரு காரணம் இந்தக் கட்டிடங்களின் எளிமையான வடிவமைப்பு. மற்றொன்று எவ்வளவு பெரிதாக இருந்தாலும் விரைத்துக் கொண்டு நிற்காமல், ஒரு அழகிய இயைபோடு தோன்றுகின்றன.

    கிரேக்க ஓவியங்களில் நம் வரை வந்தவை மிகச் சிலவே. அவற்றில் பலவற்றிற்கு முன்னோடி எகிப்திய ஓவியங்கள்தான் என்பது தெளிவு. இந்த ஓவியங்கள் ஜாடிகள் (vase) மற்றும் மது அருந்தும் கோப்பைகள் (kylix) மீது வரையப் பட்டவை. இவற்றில் குறிப்பிடத்தக்க ஓவியங்களில் ஒன்று நியூ யார்க் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தில் இருக்கும் மூன்றரை அடி ஜாடி ஒன்றின் மீது வரையப் பட்ட ஓவியம் ஒன்று. இதுவும் இறப்பைச் சித்தரிப்பது. ஆனால் இறந்தவன் இறந்தவனாகவே சித்தரிக்கப் படுகிறான். அவன் கிடத்தப் பட்டிருக்கிறான். அவன் இரு மருங்கிலும் பெண்கள் கைகளை தலைக்கும் பின்னால் வைத்துக் கொண்டு துயரம் காக்கிறார்கள். இந்த உலக வாழ்க்கை போலவே மரணத்திற்கு பின்னால் உள்ள வாழ்க்கையும் இருக்கும் என்று கிரேக்கர்கள் எண்ணவில்லை. அந்த வாழ்க்கை ஒரு வண்ணமில்லாத நிழல் வாழ்க்கை.

    ஹோமரின் இறந்த அக்கிலிஸ் ஒடிஸியஸிடம் கூறுவது இது: ஒடிஸியஸ், இறப்பைப் பற்றி உயர்வாகப் பேசாதே. நான் இந்த பாழிடத்தின் அரசனாக இருப்பதை விட பூமியில் ஒரு ஏழையாக வாழ விரும்புகிறேன். எனவே இறப்பு என்பதை ஒரு இழப்பாகவே கிரேக்கர்கள் நினைத்தார்கள். இந்த இழப்பு ஓவியத்தில் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது.

    மனித உடலை எல்லாக் கோணங்களிலிருந்தும் பார்க்கலாம், பார்த்ததை வரையலாம் என்பது மெல்ல மெல்ல கிரேக்க ஓவியர்களுக்கும் பிடிபட்டது. இது நடந்ததும் ஓவியக் கலையின் தளை உடைந்து விட்டது. “அஜாக்ஸும் அக்கிலிஸும் பகடை விளையாடுவது” என்ற ஒரு ஓவியம். மனித உடலுக்கும் வளைவுகள் இருக்கின்றன என்பதை ஓவிய வடிவில் காட்ட முயலும் ஓவியம். இந்த ஓவியத்தில் அக்கிலீஸின் இடது கையின் ஒரு சிறு பாகம் மட்டும் தெரிகிறது. ஓவியன் இரண்டு கைகளையும் ஓவியத்தில் வரைய வேண்டும் என்ற விதியை உடைத்து எறிந்து விட்டு இந்த ஓவியத்தை வரைந்ததாகத் தோன்றுகிறது.

    ஓவியக் கலையின் திருப்பு முனை என்று சொல்ல வேண்டும் என்றால் மற்றொரு ஜாடி ஓவியத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். பெற்றோரிடம் விடை பெறும் போர் வீரன் என்ற இந்த ஓவியத்தில்தான் ஓவியன் ‘முன் குறுக்கம்’ (Foreshortening) என்ற உத்தியைக் கையாளுகிறான். இடது கால் விரல்கள் ஐந்து வட்டங்களாகத் தெரிகின்றன. ஒரு மனிதனுடைய கால் விரல்களை அவனுக்கு முன்னால் நின்று பார்த்தால் எப்படித் தெரியுமோ அப்படி வரைய இந்தக் கலைஞன் முயன்றிருக்கிறான். அவன் இடதுகால் அருகே சுவரில் ஒரு கேடயம் சாத்தப் பட்டிருக்கிறது. இந்தக் கேடயம் பக்கவாட்டில் வரையப் பட்டிருக்கிறது.

    பார்ப்பதைப் படைப்பதற்கு விதிகள் தேவையில்லை என்பது மனிதனுக்கு கிட்டத்தட்ட அவன் ஓவியம் வரையத் தொடங்கி பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே புரிந்தது.

    பி.ஏ.கிருஷ்ணன்


    | |