Budget Analysis in Kalki

Thalayangam – Kalki

சமுதாய நல(?) பட்ஜெட்!

தமிழக பட்ஜெட்டில் பற்றாக்குறை 2.93 சதவிகிதம் என்பது பாராட்டுக்குரிய விஷயம். இதே முன்னேற்றம் தொடர்ந்து, இன்னும் இரண்டாண்டுகளில் பற்றாக்குறையே இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஆனால், இந்த நற்செய்திக்கு இன்றைய தி.மு.க. அரசு முற்றிலும் பொறுப்பாகி பாராட்டுபெற முடியாது.

முந்தைய ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா, தாம் முதல்வரானதுமே ஏகப்பட்ட வரிகளை விதித்து, அரசு வருவாயைக் கூட்டும் முயற்சியில் இறங்கினார். இதனால் மக்கள் திணறிப் போனாலும் அரசின் நிதி நிலைமை சீரடைந்தது. அந்தப் பயனைத்தான் இன்றைய தி.மு.க. அரசு அனுபவிக்கிறது.

நடப்பு ஆண்டின் வருவாய் இலக்குகளை எட்டி, பட்ஜெட்டை தி.மு.க. எப்படி நிறைவேற்றப் போகிறது என்பதுதான் கேள்வி. இவ்வாண்டு நிதி நிலைமை சீராக இருப்பதால் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. பருப்பு வகைகள் மீதான விற்பனை வரி மற்றும் வேறு சில வரிகள் நீக்கப்பட்டும் உள்ளன.

சமுதாய நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மொத்த செலவில் 35 சதவிகிதம் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது! கடந்த ஆண்டு ரூபாய் 11,942.49 கோடி நலத்திட்டங்களுக்கென செலவிடப்பட்டிருக்க, இவ்வாண்டு அது வரலாறு காணாத வகையில் ரூ.13,983 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் இரண்டாயிரம் கோடிக்கும் மேலாக கூடுதல் ஒதுக்கீடு!

நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை. அதிலும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிப்பது மிக நியாயமே. ஆனால் பிற ஒதுக்கீடுகள் ஒரு வரையறைக்குட்பட்டு இருப்பதுதான் நல்லது என்பதுடன், தனி நபர் வருமானமும் மாநில பொருளாதாரமும் பெருகப் பெருக, இந்த ஒதுக்கீடுகள் குறைந்துவர வேண்டும். ஆனால், அவ்வாறு நடப்பதேயில்லை.

இரண்டாயிரம் கோடி ரூபாயை சமுதாய நலத் திட்டங்களில் கூடுதலாகச் செலவிடும்போது, அது தொழிற்பெருக்கத்துக்கோ, வேலைவாய்ப்புப் பெருக்கத்துக்கோ, உற்பத்திப் பெருக்கத்துக்கோ, வருவாய்ப் பெருக்கத்துக்கோ வகை செய்யாது! அவ்வளவு பெரிய தொகை பலவாறாகப் பங்கு பிரிக்கப்பட்டு, பல்வேறு திட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். ஆனால், இறுதிப் பயனீட்டாளரைச் சென்றடையும் தொகை, பட்ஜெட் ஒதுக்கீடைக் காட்டிலும் மிகக் குறைவாகவே இருக்கும். போதாக்குறைக்கு, தேர்தல் வாக்குறுதியாக அள்ளித் தந்த சலுகைகளும் இலவசங்களும் ஏராளமான செலவுக்கு வழிவகுக்கும்.

நலத்திட்டங்களுக்கான நிர்வாகச் செலவும் கணிசமாக இருக்கும் என்பதோடு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிலவும் லஞ்ச – ஊழல் கலாசாரம் ஏராளமான தொகையைக் காவு கொள்ளும்!

இவ்வாறு நிகழாமல் தடுப்பதிலும் மேற்பார்வை செய்வதிலும் இன்றைய அரசு வெற்றி காணுமென்றால், அது உலகமகா அதிசயமாகவே இருக்கும்.

பயனற்ற செலவுகளைக் குறைத்து, வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, மக்களுடைய வருமானத்துக்கு வழிசெய்யும் முகமாக இந்த பட்ஜெட்டில் என்ன செய்யப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், பிரமாதமாக ஏதுமில்லை. இதைச் செய்யாதவரையில் தமிழகத்தில் உற்பத்தி பெருகாது; விலைவாசி குறையாது. விலைவாசி அதிகமாயிருக்கிறது என்பதற்காக அரசு மீண்டும் ஏழை – எளியவர்களுக்கான சமுதாய நலத்திட்ட ஒதுக்கீடுகளைத்தான் அதிகரிக்க வேண்டிவரும். இந்த விஷ வட்டத்திலிருந்து விடுபட துணிவும் தீர்க்கதரிசனமும் தேவை. அடுத்த பட்ஜெட் தயாரிக்கும்போதாவது தி.மு.க. அரசும் நிதி அமைச்சரும் அவற்றைக் கைகொள்ளட்டும். சமுதாய நலன் என்பது ஏழைகளை ஏழைகளாகவே நீடிக்கச் செய்வதல்ல; அவர்களை உழைப்பாளிகளாகவும் அதன்மூலம் தன்னிறைவு பெற்றவர்களாகவும் மாற்றுவதுதான் உண்மையான சமுதாய நலன்.

Contest : Aug 3 – Quick Takes

#6 சந்திப்பு: உறவுகளின் வேர்!செல்வபெருமாள்

(கட்டுரை) மதிப்பெண் – 2 / 4

எதிர்பார்ப்பு அல்லது பலன் கிடைக்காத போது உறவுகள் முறிகிறது.
………..
இந்த போலி உறவுக்கு முடிவு கட்டுவது என்பது இந்த நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ சமூகத்தை தூக்கியெறிவதோடு பிணைக்கப்பட்டுள்ளது.

‘குடும்ப உறவுகள் எதை அடிப்படையாக வைத்து அமைகிறது’ என்பது அடிநாதம் என்கிறார். முன்வைக்கும் அடிக்கோளுக்கேற்ப, இந்தப் பதிவு போதுமான அளவு உதாரணங்களையும் வாதங்களையும் முன் வைக்கவில்லை. நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்காமல் axiom-கள் மட்டுமே சொல்லிப் போகிறார்.

#7 எண்ணம்: உறவுகளே! (கட்டளைக் கலித்துறை) – போட்டிக்காகஅபுல் கலாம் ஆசாத்

(மரபுக்கவிதை) மதிப்பெண் – 2.5 / 4

பத்து தடவை கண் இமைப்பதற்குள் என்னால் நூறு மீட்டர் ஓட முடியாது; நீச்சல் தெரியாது; 72 மணி நேரத்தில் தொடர்ந்து 33 திரைப்படங்கள் பார்க்க இயலாது; முயன்றால் ஒருக்கால் நடக்கலாம். தளை தட்டுதா என்று பார்ப்பதற்குக் கூட தெரியாத கட்டளைக் கலித்துறையும் இந்தப் பட்டியலில் சேரும். ஆசாத்திடம் இருந்து மற்றொரு வித்தியாசமான முயற்சி. புதுமையான கருத்துக்கள் இல்லாதது முதல் வருத்தம். மரபுக்கே உரித்தான ரசமான உவமைகள் பேணாதது மற்றொரு வருத்தம்.

இரண்டு கையையும் சேர்த்து வைத்து ஆடினாலும், போட்டுக் கொடுத்த பந்தைக் கூட வலையில் படாமல் எதிராளியின் பக்கம் அடிக்கும் டென்னிஸ் ஆட்டத்தை, ஆடிப் பார்த்து, அதன் கஷ்டத்தை உணர்ந்தவுடன், பின்னன்ங்கையால் அநாயசமாக வீசுபவரைப் பார்த்து பொறாமைப்படுவதைப் போல் இந்தப் பதிவுக்கு வாக்களிக்க விரும்புகிறேன்.

போட்டியில் கலந்து கொள்ளும் பதிவுகள் குறித்த முந்தைய பதிவு


| |

Madurai, Coimbatore mayor posts to be reserved for Women

Madurai, Coimbatore mayor posts to be reserved for Women

மதுரை, கோவைக்கு பெண் மேயர்கள்

மதுரை, கோவை அகிய மாநகராட்சிகளின் மேயர்கள் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் அக்டோபர் மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது.

மாநகராட்சிகள் – 6

  • சென்னை,
  • மதுரை,
  • சேலம்,
  • கோவை,
  • திருச்சி,
  • நெல்லை

  • 102 நகராட்சிகள்,
  • 385 யூனியன்கள்,
  • 561டவுன் பஞ்சாயத்துக்கள்,
  • 12,800 பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு
  • 1,31,684 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநகராட்சி, நகர சபைகளில் கவுன்சிலர்களே மேயர் மற்றும் நகரசபை தலைவர்களை தேர்வு செய்ய புதிய சட்டம் கொண்டு வந்தது. இதன் மூலம் மேயர் பதவிக்கு தனியாக தேர்தல் நடக்காது.

    மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிகளை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கவும் திட்டமிட்டுள்ளது அரசு.

    அதன்படி தற்போது பொது பிரிவில் இருக்கும் பதவிகள் தாழ்த்தப்பட்டோர் அல்லது பெண்களுக்கு ஒதுக்கப்படும். தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் பெண்கள் மற்றும் பொது பிரிவுக்கு மாற்றப்படும்.

    மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 2 மாநகராட்சிகளில் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளது. கடந்த முறை நெல்லை, திருச்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன.

    இப்போது சுழற்சி முறையில் மதுரை, கோவைக்கு பெண் மேயர் பதவி வழங்கப்படவுள்ளது. நெல்லை, திருச்சி ஆகிய மேயர் பதவிகள் பொது பிரிவுக்கு மாற்றப்படும். அதே போல சென்னை, சேலம் மாநகராட்சிகளும் பொது பிரிவில் இடம் பெறவுள்ளது.

    மேலும் நகாரட்சிகள், யூனியன்கள், டவுன் பஞ்சாயத்து, பஞ்சாய்துக்களிலும் சுழற்சி முறை மாற்றத்துக்கு பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி வார்டுகளிலும் சுழற்சி முறை மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

  • Karunanidhi attacks Kalimuthu

    Karunanidhi attacks Kalimuthu

    ஒரு சபாநாயகர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் காளிமுத்து: கருணாநிதிஆகஸ்ட் 03,

    தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால், அதன் மீது ஓட்டெடுப்பு நடக்கும் முன்பாகவே அதிமுகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர்.

    இதையடுத்து அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

    ஆட்சியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதா, முதல்வர் மீது கொண்டு வருவதா என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து, எதற்கு வம்பு, தாற்காலிகமாக சபாநாயகர் மீதே கொண்டு வந்துவிடலாம் என்று இன்று இந்த தீர்மானத்தை கொண்டு வந்து சோதித்துப் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள்.

    இதுவரையிலேயே அவர்கள் மைனாரிட்டி அரசு என்று சொன்ழது நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கவும் முடியாது என்ற காரணத்தால் அவர்களாகவே இன்றைக்கு வெளியேறி தங்களுடைய தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

    நீங்கள் இந்த ஐந்தாண்டு காலத்துக்கும் எங்களுக்குப் பேரவைத் தலைவர் தான். ஆனால், பேரவைத் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் சொல்லலாம்.

    ஏறத்தாழ 57ம் ஆண்டிலிருந்து நான் இந்த அவையிலேயே இருந்தவன் என்ற காரணத்தால் எங்களைக் கூட கடிந்து கொண்ட பேரவைத் தலைவர்கள் உண்டு. நாங்கள் அவர்களை திருப்பி கடிந்ததில்லை.

    எப்படி ஒரு சபாநாயகர் இருக்கக் கூடாது என்பதற்கு ஒன்றைச் சொல்ல நான் விரும்புகிறேன்.

    உணவு விடுதிகள் காலம் காலமாக பலராலும் ஏலம் எடுக்கப்பட்டோ, அல்லது ஒப்பந்தம் போடப்பட்டோ தொடர்ந்து நடந்து வருகின்றன. அதில் அண்ணா பெயரால் அமைந்த அசைவ உணவு விடுதி ஒன்றும் இருந்தது.

    அந்த அண்ணா உணவகத்தை நடத்தி வரும் கே.வி.ஆர். மணி என்பவர் அந்த உணவகம் நடத்த வழங்கப்பட்ட காலம் 03.02.2002 உடன் முடிவுற்றதால், அந்த உணவகத்தை உடனடியாகக் காலி செய்து ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

    அதற்கு அந்த கே.வி.ஆர்.மணி என்ற உணவக உரிமையாளர், அந்த உணவகத்தை ஒப்பந்த அடிப்படையில் வருடத்துக்கு ரூ. 2.6 லட்சம் வாடகைக்கு தொடர்ந்து நடத்த அனுமதி தருமாறு கேட்டு கடிதம் எழுதுகிறார். வருடத்துக்கு ரூ.2.6 லட்சம் வாடகை தந்துவிடுவதாகக் கூறுகிறார்.

    இதற்கான கோப்பில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து 16.02.02 அன்று தனது கைப்பட பிறப்பித்த ஆணையில், கே.வி.ஆர். மணிக்கே ஓராண்டு காலத்துக்கு அந்த உணவகத்தை நடத்த அனுமதிக்கலாம் என்றும், அதற்கு மாத வாடகையாக ரூ. 2,750யை நிர்ணயிக்கலாம் என்றும் எழுதியுள்ளார்.

    மணி தர முன் வந்த தொகை வருடத்துக்கு ரூ.2.6 லட்சம். ஆனால், காளிமுத்து (12 மாதத்துக்கு ரூ. 2,750 என்ற வகையில்) ரூ. 33,000 மட்டும் போதும் என்று ஆணை பிறப்பித்தார். மீதி பணம் எங்கே போனது?.

    Talkative & Unspeakable

    பாடுபொருளும் பேசாப்பொருளும்

    நண்பர்களுடன் தேநீர் விருந்து; வலைவாசிகளுடன் மறுமொழி அரட்டை; உறவினர்களுடன் மணமண்டபத்தில் வட்ட்மேஜை; அலுவலில் மதிய உணவு விவாதம்.

    உரையாடுவதற்கு ஏற்ற தலைப்புகள்:

    1. வானிலை
    2. போக்குவரத்து
    3. தொழில் நுட்பம்
    4. அரசியல் கலக்காத மனமகிழ் சினிமா
    5. விளையாட்டு
    6. தகவல் செய்தி
    7. பொழுதுபோக்கு கேளிக்கை
    8. மேலோட்டமான சொந்தக்கதை விசாரிப்பு
    9. வீடு/கார்/கணினி ஆலோசனை
    10. சமையற்குறிப்பு

    நெருங்கியவர்கள் இல்லாத பொதுவில், பேசுவதற்கும் எழுதுவதற்கும் முன், எந்த எழுவாய்களை எழாமல் தவிர்க்கிறேன் என்று யோசித்த பட்டியல்:

    1. காமம் – Trailing Technology: Sex Work in a Traditional City (வழி)
    2. மாதவிடாய் – தோழி.காம் – கனிமொழி :: ஆணியப் பழமைவாதிகளுக்குக் கூடுதல் ஆயுதம்: மாதவிடாய் – வேண்டும் இன்னொரு ஆலயப் பிரவேசம்
    3. பொருளாதாரம் – கடன், சம்பளம், பங்கு வருவாய், முதலீட்டு சாதனம்
    4. சொந்தக் கதை – மனங்குன்றிய தருணம், வெட்கி தலைகுனிந்தவை, நாணும் நிகழ்வு,
    5. சுடுசொல்
    6. எதிர்மறை விமர்சனம் – தனிப்பட்ட நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவது, பாதிப்பினால் உருவான கருத்துக்களை விவாதிப்பது, சர்ச்சைக்குரியவர்களை சர்ச்சைக்குள்ளாமல் விட்டுத்தள்ளுவது.
    7. மருத்துவ நோய் – சுகவீனம்
    8. குறை சுட்டல் – குற்றம் பார்க்கின் உறவுகள் இல்லை ;-))
    9. இதற்கு மேல் சொல்ல கூச்சமாக இருக்கிறது. பேசாப்பொருள் எப்படி எழுத வரும்?

    | |

    Thenkoodu & Tamiloviam : Contest Entry – Quick Takes

    தேன்கூடு-தமிழோவியம் நடத்தும் ‘உறவுகள்‘ போட்டியில் பங்குபெற எண்ணம். என்னுடைய இடுகையை போதிய அளவு படிக்கவைக்க வேண்டும். மற்ற பங்காளிகளை விமர்சிப்பதன் மூலம் ‘நீ என்ன கிழிச்சுட்டே’ என்று படிக்க வைக்கலாம். எதிரிகள் குறைவதாகவும் வருத்தம். அதற்காக சிறு விமர்சனங்களும், மதிப்பெண்களும்

    *நவீன விக்ரமாதித்தனும் வைரஸ் வேதாளமும்! (அல்லது) மானங்கெட்ட உறவுகள்!!!! – luckylook

    (சிறுகதை) மதிப்பெண் 1 / 4

    சுவாரசியமான ஆரம்பம். குறிப்பால் எவரையாவது சொல்கிறாரா என்று யோசனை வருகிறது. நேற்று சொன்ன ‘அழகாய் இ.ப.இ.’ திரைப்படம் போல் இரண்டாவது பாதி படு சோகை. புத்திசாலித்தனமான முடிவு இருக்கும் என்று எதிர்பார்ப்பில் dejavu.

    *பொன்னியின் செல்லம்மா …! – கோவி.கண்ணன்

    (சிறுகதை) மதிப்பெண் 2.5 / 4

    என்னுடைய வாக்கு நிச்சயம் உண்டு. சீரான, பாதை விலகாத நடை. ஒன்றக்கூடிய சம்பவங்கள். மிதமான உரையாடல். முடிவில் பளிச். அதீத உணர்ச்சி சித்தரிப்புகளைத் தவிர்த்தல். நன்றாக வந்திருக்கிறது.

    *உறவுகள் – நிர்மல்

    (சிறுகதை) மதிப்பெண் 0.5 / 4

    பள்ளியில் முயற்சி செய்திருப்பதற்காக grace mark போடுவார்கள். மோசமான தமிழ்ப்படம் பார்த்த நிறைவு.

    *சுகம் – nirmal

    (புதுக்கவிதை) மதிப்பெண் 1.5 / 4

    கவிதை படிக்க எளிது. சிறுகதையைப் போல் விபரீத உறவை சுட்டுகிறதா என்பது வாசகரின் எட்டுதலுக்கு உட்பட்டது.

    *உறவுகள் – SK

    (வசன கவிதை) மதிப்பெண் 1 / 4

    பொங்கல் வாழ்த்துப்பா மாதிரி வந்திருக்கிறது. சொற்பொழிவுத் தாக்கம். சூடான தேநீர் இல்லாவிட்டால், வார்த்தை சிலம்பத்தை பாதியிலேயே கடந்து செல்லும் அபாயம் உண்டு. எழுத்துப்பிழைகள் உண்டு. (நேரேயே?)

    வன்மம் வைத்து எனக்கு கத்தியை தீட்டுங்கள் தோழர்களே :-D)

    மறுப்புக்கூறு: போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து இடுகைகளையும் விமர்சிக்க இயலாமல் போகலாம். காரணம் #1: நேரமின்மை; #2: அயர்ச்சி; #3: எதிர் விமர்சனங்களை சந்திக்க திராணியின்மை; #4: சமர்த்துப் போதாமை


    | |

    Celebrity == Tamil Bloggers

    இளவஞ்சி :: எம்மூஞ்சியும் ஒலக மொகரைகளும்… என்று ஆரம்பித்தார். அவர் வழியே சென்று MyHeritage face recognition – Find the Celebrity in You என்று மேய்ந்ததில்…

    1. சிகையலங்காரம் ஒத்திருப்பதால், முகத்திலும் இசைவிருப்பதாக கருதியிருக்கலாம். நேற்றும் இடம் பெற்றவர்.
    2. பத்து தடவை நான்கரையைத் தொட்டிருக்கும் இவருக்கு வயது தெரியாத பிரச்சினை கிடையாது.
    3. ‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ என்று எஸ்.பி.பி.யை பாட வைத்து விடுவாரோ!
    4. டிவி முதற்கொண்டு எல்லாப் பக்கமும் இருப்பவர். ஆனால், இப்பொழுது காண்பது அரிதாகி விட்டது.
    5. நேற்றும் இடம் பெற்றவர். விசாலமான நெற்றி ஒற்றுமை இருக்கிறது. ஸ்பேசியும் அமெரிக்கா வாசம்தான்.
    6. சுஜாதாவின் குட்டி; அல்லி அர்ஜுனா, நெத்தியடி, சாமி, எல்லாம் சென்னை தியேட்டரில் ரசித்தவர், இப்பொழுது மேற்கத்திய விமர்சனமாக வீசிக் கொண்டிருக்கிறார்.
    7. பசிக்குதே… ரொம்ப நாளா நளபாகம் செய்யாமல் தவிக்க விட்டிருக்கிறாரே
    8. காந்தியை ஓரங்கட்டியவர்
    9. கழுகு புகைப்படத்தை ஜூவி போடுவதில்லை. மலை போன்ற வலையில் இருந்து சுவாரசியங்களைக் கொடுக்கும் இவரோ சமீபத்தில்தான் புகைப்படம் மாற்றினார்.
    10. பொன்ஸ் பதிவிலும் இடம் பிடிக்காதவர்.
    11. ஆயிரங்கால் மண்டபத்தில் கிளி ஜோசியம் பார்த்து ரூபிக் க்யூப் விடையை புகைப்படத்தில் காண்பித்தாலும் என்னால் முடிக்க முடியவில்லை.
    12. நேற்றும் இடம் பெற்றவர். 33%-க்கு பதில் 16.67%.

    | |

    WordPress Top Blogs of the Day

    தினமணி, பிபிசி போன்ற சுட்ட செய்திக் கட்டுரைகளை சேமிப்பதற்காக வோர்ட்ப்ரெஸ்.காம் தளத்திற்குள் நுழைந்தவுடன், அன்றைக்கு எந்த வலைப்பதிவு மிக அதிக வருகையாளர்களைப் பெற்றது, எந்தப் பதிவு ஆர்வமாகப் படிக்கப்பட்டது என்று தலை ஐந்து பட்டியலிடுவார்கள். கடந்த சில நாள்களாக எப்பொழுதும் தமிழ் மட்டுமே காணக் கிடைக்கிறது!

    Top WordPress.com blogs today

    1. அங்கிங்கெனாதபடி
    2. ஒரு பார்வை
    3. demigod
    4. கவிதைச் சாலை

    Fastest Growing WordPress.com blogs

    1. demigod
    2. கவிதைச் சாலை
    3. அங்கிங்கெனாதபடி
    4. ஒரு பார்வை
    5. கோம்பை

    வாழ்த்துகள்.

    Movies: Mini Reviews, Ultra small reflections

    சினிமாவாய் பார்க்கிறேன் விமர்சனம்தான் வரவில்லை

    1. லொலிடா (Lolita): சின்ன வயதில் மேட்டர் எங்கே இருக்கும் என்பதற்காக நோடிய படம். அமிதாப் நடிக்கப் போவதாக சன்னாசி பயமுறுத்த மீண்டும் பார்ப்பதற்காக எடுத்தேன். நபகோவ் கதையை (நான்) படித்திருந்தால், படத்தை இன்னும் ரசிக்க முடிந்திருக்கலாம்.

      A normal man, given a group photograph of school girls and asked to point out the loveliest one, will not necessarily choose the nymphet among them.

    2. இகிரு: Ikiru குறித்து மிக அழகாக பலர் எழுதி இருக்கிறார்கள். இறுதிக் காட்சி 12 Angry Men போல் வளர்ந்தது. Autumn Spring போல் பல எண்ணங்களை தளிரவிட்ட படம்.

    3. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது: நிலவுவெளி சிவராமன் கருத்துடன் ஒத்துப் போகிறேன். பினாத்தல்கள்: சினிமா ரசிகர்களில் ஒரு கோயிஞ்சாமி போல் முரளியின் காபிரைட் சொல்லாத காதலை இரண்டாம் பாதில் உபயோகப்படுத்தி சொதப்பாமல் இருந்திருந்தால் மிக நல்ல நகைச்சுவைப்படமாக வந்திருக்க வேண்டியது என்று சபிக்குமளவு ஒழுங்காக சென்ற படத்தை பிற்பகுதியில் படுத்தி எடுத்தார்கள். கொஞ்சம் Addicted to Love வாசம். ஆனால், அது ரம்மியமான ரகளை.
    4. The Life and Death of Peter Sellers (2004): விவரணப் படம் எடுத்தால் கூட மனிதர்களின் குணாதிசயங்களை இலகுவாக திரைக்கதையாக்கி இருக்கிறார்கள். வாழ்க்கையில் பெரிய நிலையை அடைய எடுக்கும் முயற்சிகள்; பெற்றோரின் வளர்ப்பு விதங்கள்; இல்லற எதிர்பார்ப்பு… ஸ்டான்லி க்யூப்ரிக் இப்படிப்பட்ட ஆளா?

      Peter Sellers: Can’t I have your support?
      Anne Sellers: You’ve always had my support. It’s my patience


    | |

    Tamil Bloggers’ Faces – Identify

    உன் கண்
    உன்னை ஏமாற்றினால்…

    நம்மிடையே முகத்தைக் காட்டி உலாவும் வலைப்பதிவர்களில் சிலரின் கண்கள். தன்னை அறிந்தவர்கள் பின்னூட்டமிடலாம்.

    1. இசைஞானி
    2. தேவா பிரியர்
    3. கல்யாணமாம் கல்யாணம்
    4. அக்கம் பக்கம் பார்க்காதீங்க… பின்னாடி பார்த்தாலே போதும்
    5. கவிஞர்களுக்கு பிடித்த பாடுபொருள்
    6. பதிப்பகத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்
    7. உம் கொட்டுங்க… ஒரு U போடுங்க…
    8. அறிமுகத்தில் ‘வலைப்பகுதிகளை உருவாக்கி, “எழுதித்தள்ளாமல்”, யோசித்து எழுதுபவன்’ என்றவர்.
    9. மண்ணின் மணம் மாறி மினசோட்டா வந்தாலும் சொந்த ஊரை மறவாதவர்.
    10. ஒரு க்ரூப்பாகத்தான் துவக்கியிருக்காங்க
    11. தந்தை என்று செல்லமாய் சதாய்க்கப்படுபவர்
    12. அவர் தந்தை என்றால், இவர் படைக்கும் கடவுள்
    13. டவுட் வந்தால் இவரிடம் தெளியலாம்
    14. அண்மையில் இவர் படித்த புத்தகங்கள் :
      1. நட்புக்காலம் – அறிவுமதி
      2. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி ரூ.10000 ரூ.100000000000 ஆன கதை – என்.சொக்கன்
      3. பாலகாண்டம் – நா.முத்துக்குமார்
      4. தெருப்புழுதி – எம்.ஏ.இளஞ்செல்வன்
    15. இப்பொழுதெல்லாம் இவரைப் பார்த்தால் ‘யானை வரும் பின்னே; மணியோசை…’ புதுமொழி தோன்றுகிறது.
    16. குஷ்பு படம் கிடைக்குங்களா?
    17. குசும்பு செய்தாலும் மனதில் விகல்பம் இல்லாத நல்லவர்; வல்லவர்.


    | |