Madurai (Central) – History of the Elections & Victories

Dinamani.com – TamilNadu Page

மதுரை மத்திய தொகுதி: வரலாறு திரும்புமா? மாறுமா?

பா. ஜெகதீசன்

சென்னை, அக். 1: ஒட்டுமொத்த தமிழகமே உற்றுநோக்கும் மதுரை மத்திய தொகுதி சட்டப் பேரவை இடைத்தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

கடந்த காலங்களில் நடைபெற்ற 12 பொதுத் தேர்தல் முடிவுகளைப் போல ஆளும் கட்சிக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சாதகமாக இத்தொகுதி இருக்குமா? அல்லது அதற்கு மாறான புதிய வரலாற்றைப் படைக்குமா என அரசியல் கட்சிகள் ஆவலோடு எதிர்பார்க்கின்றன.

1957-ல் இருந்து 2006 வரையிலான காலகட்டத்தில் 12 பொதுத் தேர்தல்களில் இங்கு காங்கிரஸ் 4 முறையும், தி.மு.க. 4 முறையும் வெற்ற்பெற்றன. த.மா.கா. 2 முறையும், அ.தி.மு.க. ஒரு முறையும், நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.

ஆளும் கட்சியின் வசம்: 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றிபெற்று ஆளும் கட்சியாகத் திகழ்ந்தது. அவ்விரு தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளரான வி. சங்கரன் வெற்றிபெற்றார்.

1967 தேர்தலில் அண்ணா தலைமையில் ஆட்சிக்கு தி.மு.க. வந்தது. அப்போது தி.மு.க வேட்பாளர் சி. கோவிந்தராஜன் வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் வி. சங்கரன் தோற்றார்.

1971 தேர்தலிலும் தி.மு.க. வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அப்போது கே. திருப்பதி (தி.மு.க.) வெற்றிபெற்றார். அவரை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் நெடுமாறன் தோற்றார்.

1977 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று, எம்.ஜி.ஆர். தலைமையிலான முதல் அமைச்சரவை அமைந்தது. அப்போது இங்கு என். லட்சுமிநாராயணன் (அ.தி.மு.க.) 29,399 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரத்தினம் (காங்.) 16,420 வாக்குகளையும், எஸ். பாண்டி (தி.மு.க.) 14,676 வாக்குகளையும், எஸ். சுகுமாரன் (ஜனதா) 12,780 வாக்குகளையும் பெற்று தோற்றனர்.

நெடுமாறனின் சாதனை: 1980 தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்று, 2-வது முறையாக ஆட்சிக்கு வந்தது. அ.தி.மு.க.வின் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸின் தலைவரான நெடுமாறன் இத் தொகுதியில் வெற்றிபெற்றார். அதுவரையில் இங்கு யாருக்கும் கிடைக்காத அளவு 45,700 வாக்குகள் பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (தி.மு.க.) 31,566 வாக்குகள் பெற்று, தோற்றார்.

1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்று, 3-வது முறையாக ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஏ. தெய்வநாயகம் 41,272 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நெடுமாறன் 39,012 வாக்குகளைப் பெற்று, வெற்றி வாய்ப்பை இழந்தார்.

1989 தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று, ஆட்சிக்கு வந்தது. 3-வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆனார். அப்போது தி.மு.க. வேட்பாளர் எஸ். பால்ராஜ் 33,484 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 22,338 வாக்குகள் பெற்று, தெய்வநாயகம் (காங்.) தோற்றார்.

அணிகள் மாற்றம்: 1991 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று, ஜெயலலிதா முதல்வர் ஆனார். அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் ஏ. தெய்வநாயகம் 47,325 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

1980-ல் நெடுமாறனுக்குக் கிடைத்ததை விட அதிக வாக்குகள் தெய்வநாயகத்துக்குக் கிடைத்தன. தி.மு.க. வேட்பாளரான மு. தமிழ்க்குடிமகன் 26,717 வாக்குகள் பெற்று தோற்றார்.

1996 தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று, ஆட்சிக்கு வந்தது. 4-வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆனார். அப்போது தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த த.மா.கா. வேட்பாளர் ஏ. தெய்வநாயகம் 38,010 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட வி.எஸ். சந்திரலேகா 20,069 வாக்குகள் பெற்று, 2-வது இடத்தைப் பெற்றார். அ.தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி. தங்கராஜ் 11,841 வாக்குகள் பெற்று, 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

2001 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று, 2-வது முறையாக ஜெயலலிதா முதல்வர் ஆனார். அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்திருந்த த.மா.கா. வேட்பாளர் எம்.ஏ. ஹக்கீம் 34,393 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தி.மு.க. வேட்பாளர் பால்ராஜ் 34,246 வாக்குகள் பெற்று அதாவது 147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

2006 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று, 5-வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆனார். இத்தொகுதியில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் (தி.மு.க.) 43,185 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.டி.கே. ஜக்கையன் (அ.தி.மு.க.) 35,992 வாக்குகளையும், ஆர். சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.) 12,038 வாக்குகளையும் பெற்று தோற்றனர்.

தி.மு.க. – அ.தி.மு.க. கடும் போட்டி
2006 மே பொதுத் தேர்தலின்போது மதுரை மத்திய தொகுதியில் இருந்து தி.மு.க. வேட்பாளரான சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகவும் அவர் ஆனார்.

அவர் மரணம் அடைந்ததையடுத்து, இத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 11-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

உண்மையான போட்டி: வி.ராஜன் செல்லப்பா (அ.தி.மு.க.), சையது கௌஸ் பாஷா (தி.மு.க.), பன்னீர்செல்வம் (தே.மு.தி.க.) உள்பட மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் இம்மூவருக்கும் இடையேதான் உண்மையான போட்டி உள்ளது.

தி.மு.க.விடம் இருந்து இத்தொகுதியைக் கைப்பற்ற தனது தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து முனைப்பான பிரசாரத்தில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளது.

தொகுதியைத் தங்கள் வசம் தக்க வைத்துக் கொள்வதற்கான தீவிர முயற்சியில் தனது தோழமைக் கட்சிகளுடன் இணைந்து தி.மு.க. இறங்கி உள்ளது.

அரசியல் களத்தில் வெற்றி -தோல்வியை நிர்ணயிப்பதில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை நிரூபிப்பதற்கான நடவடிக்கையை தே.மு.தி.க. மேற்கொண்டுள்ளது.

Anti-DMK posters in Madurai Central bypoll constituency

Headline News – Maalai Malar:

தி.மு.க.வுக்கு எதிராக திடீர் சுவரொட்டிகள்: மத்திய தொகுதியில் பரபரப்பு தி.மு.க.வுக்கு எதிராக திடீர் சுவரொட்டிகள்

மதுரை, அக். 2-
அகில இந்திய தேவர் பேரவை தலைமையகம் என்ற பெயரில் மதுரை மத்திய தொகுதி முழுவதும் தி.மு.க.விற்கு எதிரான பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டியில், தி.மு.க. ஆட்சியில் மூக்கையா தேவரின் பாப்பாபட்டியும், 2006-ம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் பசும்பொன் கிராமமும், பூலித்தேவரின் நெற்கட்டும் செவல் கிராமமும் தனி தொகுதியாக்கப்பட்டன. கடந்த 1996-ம் ஆண்டும், 2006-ம் ஆண்டும் முக்குலத்தோர் எவரும் கலெக்டராக நியமிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத் தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் தேவர் பேரவை தி.மு.க.விற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Thiruttu Payaley – Audio Blog

திருட்டுப் பயலே

இந்தக் கதை சுவாரசியமான கதை. மூளை மட்டும் இருந்தால் போதாது; புத்தியை உபயோகிக்க வேண்டும் என்பதை சாதுர்யமான சிக்கல்களுடன் சொல்கிறது.

1. ஏமாறாதே, ஏமாற்றாதே

this is an audio post - click to play

2. வளர்ந்த கதை:

this is an audio post - click to play

3. குதிரைத் திருடிய சம்பவம்:

this is an audio post - click to play

4. ‘சிங்கத்தை குகையிலே சந்தித்தால்’ – இரையா? இறப்பா?

this is an audio post - click to play

5. ஒல்லாளனுக்கே வெற்றி – இறந்தவர் மீண்டார்!

this is an audio post - click to play

6. திருவையாறு யோகிக்கு மோட்சம் கொடுத்த வைபவம்

this is an audio post - click to play

7. நண்டு, மயானக் கொள்ளை, தீபம்

this is an audio post - click to play


| |

சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (5)

Learn Tamil in 30 Daysஜெகத்ரட்சகனுக்கு பிரான்ஸ் கம்பன் கழக விருது:

ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச் செயலர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு இலக்கியப் பணிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. விழாவில் கலந்து கொண்ட நிருபர், ஆர்.எம்.வீரப்பனைக் குறித்து கம்பன் பாடவில்லையே என்று ஜெகத்ரட்சகனார் நெக்குருகி நின்றதை மனமுருகி வர்ணித்தார்.

The Holy Bookமேலும், ‘வள்ளுவர் கோட்டம்’ என்பது எதுகையும் இல்லாமல் மோனையும் இல்லாமல் மொண்ணையாக இருப்பதால், ‘கம்பன் கோட்டம்‘ என்று ஒன்றை அமைப்பதை டாக்டர் கலைஞரிடம் கோரிக்கை வைத்திருப்பதை உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார். ‘அகில உலக கம்பன் கழக விருது’ கொடுத்தால் கலைஞர் கருணாநிதியிடம் மனு வைக்க முடியும் என்று முழக்கத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்.

நன்றி: திண்ணை


| |

Pakistan ‘role in Mumbai attacks’

செய்தி: பிபிசி

மும்பை குண்டுவெடிப்புகளைத் துப்பறிந்த இந்திய காவல்துறை, 186 மக்கள் இறந்த சதிக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையே காரணம் என்று கண்டுபிடித்துள்ளது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு, லாஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Toiba) நிறைவேற்றியிருக்கிறது. சிமி (Students’ Islamic Movement of India)யும் நாசவேலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் பயிற்சியும் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் இந்த துப்பு துலக்கின் முடிவுகளை நிராகரித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்தியா முன்வைத்துள்ளதாக தாரிக் ஆஸிம் கான் (Tariq Azim Khan) பிபிசியிடம் சொன்னார். பாகிஸ்தானின் மதிப்பை இந்தியா தொடர்ந்து பாழ்படுத்துவதன் நோக்கத்தின் ஓர் அங்கமே இந்த முடிவுகள் என்று முடித்துக் கொண்டார்.

  • இந்தியா எந்தவிதமான ஆதாரங்களைக் கொடுத்துள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.
  • பாகிஸ்தான் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த பிற விஷயங்களுக்குப் புத்தகம் போட்டு பணம் பண்ணும் முஷாரஃப் இந்த அத்தியாயத்தை இரண்டாம் பதிப்பில் இணைப்பதற்காக சுறுசுறுப்பாக எழுதுவதாக தெரிகிறது.
  • புதிய வெளியுறவு அமைச்சராக (தினமணி: External Affairs Minstry – Conundrum for Prime Minister « Tamil News: யார், புதிய வெளியுறவு அமைச்சர் – நீரஜா சௌத்ரி :: தமிழில்: லியோ ரொட்ரிகோ) எவரும் இல்லாத நிலையில் நட்வர் சிங்காவது ஜஸ்வந்த்தாக புத்தகம் எழுதுவாரா என்பது தெரியவில்லை.
  • ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தலைகள் மறைந்திருப்பதாக தெரிந்தவுடன் தாக்கிய அமெரிக்கா போல், இந்தியா பாகிஸ்தானை தாக்க முடியாத நாடாக இருக்கிறது என்பது தெரிகிறது.
  • பாகிஸ்தானின் கைவரிசையுடன் கூடிய அப்பாவி இந்திய மக்கள் இறக்கும் அடுத்த குண்டுவெடிப்பு வரை பாகிஸ்தானை கண்டித்து பதிவு வெளிவிடுவேனா என்பது தெரியவில்லை.

    முந்தைய பதிவுகள்
    1. Train Stories

    2. Attacks continue in India: இந்தியாவில் தீவிரவாதம் & மும்பை குண்டுவெடிப்புகள்


    | |

  • சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (4)

    Kallu Shap menuகள் குடித்தால் 10 கிலோ அரிசி இலவசம்: கள்ளுக்கடையில் நூதன அறிவிப்பு:

    சிக்குன் குனியாவால் குடிக்க காசு கிடைக்காமல் வீட்டிலேயே கூலித் தொழிலாளர்கள் முடங்கி விட்டார்கள். வியாபாரம் படுத்து விட்டது. அதன் பின் இன்று,

    ‘கல்லாப்பெட்டி பொங்கி வழியுமாறு மாறியதன் ரகசியம் என்ன?’

    என்பதை அறிந்து கொள்ள கள்ளுக்கடை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

    in a toddy (local palm wine) shop.....Keralaவந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் சாயா கடை போடலாமா என்று கள்ளுக்கடை யோசித்தபோது தமிழக அரசியல் இவருக்கு கை கொடுத்ததாக தெரிகிறது. தேர்தல் சமயத்தில் இலவச அரிசி வாக்குறுதி போல், சாராயம் ஊற்றிக் கொள்ள வருபவர்களுக்கு பத்து கிலோ அரிசி தருவதாக அறிவித்தவுடன் ஆட்சியைப் பிடித்த கட்சியாக கூட்டம் அலைமோதுகிறது.

    நன்றி: திண்ணை


    | |

    சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (3)

    Google finally in Cairo!தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்வு:

    இணையத்தினாலும் உலகமயமாக்கலினாலும் நிகழும் சாபக்கேடாக பணவீக்கம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, சூடு மீட்டர் பொருத்திய ஆட்டோவாக எகிறுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் நமது நாட்டில் தங்கம் மற்றும் வைரம் போன்ற ஆடம்பர பொருள்களில் விலைகள் மட்டும் உயர்ந்து வந்தது.

    தற்போது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரத் தொடங்கி இருப்பதை Sacks of lentilsவலைவாசிகளிடம் விசாரித்தேன். ‘

    இணையத்தில் இப்போது தமிழில் மிகப் பலர் எழுத ஆரம்பித்திருக்கிறோம். அதன் நேரடிப் பலனாக விகடன் வாசகர் வட்டம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே #1 ஆனார்கள். குங்குமமோ போட்டி போட்டுக் கொண்டு சோப்பு, சீப்பு கொடுத்தாலும் சல்லிசாக இதழ் நடத்துகிறது. விற்பனையில் சாதனை புரிகிறது. இதெல்லாம் கூட வலையின் வீச்சினால்தான் சாத்தியப்படுகிறது. படிப்பவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு பயந்து, ப்ரிண்ட் புத்தகத்தை படிப்பதற்கு ஓடுவது சாதகமான உபாதைதானே!’

    என்று எதிர் கேள்வி எழுப்பி முடித்துக் கொண்டார்.

    நன்றி: திண்ணை


    | |

    Who will be the Next Mayor of Chennai?

    Dinamani.com – Chennai Page

    சென்னை மாநகராட்சி அடுத்த மேயர் யார்?

    சென்னை, செப். 29: சென்னை மாநகராட்சித் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அடிப்படையில், மேயர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் உருவாகியுள்ளன.

    புதுப்பேட்டை பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நா. பாலகங்கா, சைதாப்பேட்டை பகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன், கிண்டி பகுதியில் போட்டியிடும் கா. தனசேகரன் ஆகியோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றால், மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மா. சுப்பிரமணியன், கா. தனசேகரன் ஆகியோரில் ஒருவர் பெயர் முன்மொழியப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

    1996-ம் ஆண்டு மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தபோது மா. சுப்பிரமணியன் கவுன்சிலராக வெற்றிபெற்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி சிறந்த கவுன்சிலர் விருது பெற்றார்.

    2001-ம் ஆண்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் பல்வேறு விவாதங்களில் பங்கேற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    2005-ம் ஆண்டு சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண விநியோக மையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழக்கக் காரணம் என்று கூறி கைது செய்யப்பட்டவர் தனசேகரன். பின்னர் இவர் மீதான வழக்கில் எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறி நீதிமன்றம் இவரை விடுவித்தது.

    அதே வேளையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றால், மேயர் பதவிக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய முன்னாள் தலைவர் நா. பாலகங்காவின் பெயர் முன் மொழியப்படும் எனத் தெரிகிறது.

    2001-ம் ஆண்டு மேயர் பதவிக்கு நடைபெற்ற நேரடித் தேர்தலில் பாலகங்கா போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ 155 கவுன்சிலர்களில் ஒருவர்தான் மேயராக முடியும் என்பதால் மேயர் தேர்தலுக்கான முக்கியத்துவம் இந்த முறை கவுன்சிலர் தேர்தலுக்குக் கிடைத்துள்ளது.

    சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (2)

    ‘திரை உலகுக்கு கருணாநிதி அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு:

    Tamil Nadu - e-LECTIONS 2006இவரை அடுத்து இனி ஆட்சிக்கு யார் வந்தாலும் 2006-ல் திரையுலகுக்கு கலைஞர் அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள். அதற்காக நானும் துணை நிற்பேன்.” என்று ரஜினி பேசியதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தது. சிவாஜி பட ஷூட்டிங்கில் இடுப்பு வளையாததால் ஷங்கரிடம் திட்டு வாங்கி கடுப்பில் இருந்த சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    ss‘கேயெஸ் ரவிக்குமாரா இருந்தால் விரலை மட்டும் “விஷ்க் விஷ்க்” என்று அசைக்க சொல்வான். இவன் ரொம்பப் படுத்தறான்’ என்று உடம்பின் நோவைப் பகிர்ந்தார். தொடர்ந்து, ‘நான் பேசியதை மாற்றி விட்டார்கள். கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம் கொடுத்த உமறுப்புலவர் விருது கிடைத்திருக்கிறது. மேலும் ஆழ்வார், ஆரெம்வீ என்று பலரும் பல பரிசுகளையும் பட்டங்களையும் கொடுக்கிறார்கள். ‘கருணாநிதிக்கு அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ என்று சொல்ல வேண்டியது, ஷங்கர்ஜி கொடுத்த டார்ச்சரில் நாகுழறி விட்டது’ என்றார்.


    | |

    சுருக் + சறுக் + நறுக் <> பகீர் (1)

    musharraf_book

    Manmohan-Musharraf-NY-25-10-2004பாகிஸ்தான் அதிபர் முஷாரப் :: நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு:

    ஜேம்ஸ் ஃப்ரே (James Frey) என்று ஒருவர் இருக்கிறார். “A Million Little Pieces” என்னும் நனவோடை எழுதினார். பால்ய காலத்தின் பாலியல் கொடுமைகளை புத்தகமாக்கினார். இணைய ஆய்வாளர்கள் அது அவருடைய சொந்தக் கதை அல்ல என்பதை பிட்டு வைத்தவுடன் ‘கண்டு / கேட்டு / தீர விசாரித்து’ கட்டியதை சொன்னவுடன், கட்டுரை பகுதியில் இருந்த புத்தகத்தை, ‘புனைவு’ என்று வகை செய்து மாற்றினார்கள்.

    Times of India cartoonபாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப் எழுதி உள்ள புத்தகத்தில் கூறியருப்பதை சரிபார்க்க கூகிள் வழியாக ‘நியூக்ளியர்’ என்று இஸ்லாமாபத்தில் தேடியவர்களைக் கண்டுபிடித்து என் விசாரணையைத் துவக்கினேன். பாகிஸ்தான் நுட்பங்களை காப்பி அடித்து இந்திய அணுவிசை திட்டங்கள் உருவாக்கப்பட்டது என்பது கட்டுக்கதை என்பதை பாகிஸ்தானின் தொழில்நுட்பியலாளர் அப்போது தெரிவித்தார். மேலும் ‘கூகிள் அந்தக் காலத்தில் இல்லை’ என்று நினைவூட்டி ‘லெக்சிஸ்-நெக்சிஸ்’க்கு யுரேனியம் செறிவூட்டல் ப்ராஜெக்ட் நன்றிக்கடன் பட்டிருப்பதாக முடித்துக் கொண்டார்.


    | |