Tamil Blogs – 2006

முந்தைய பரிந்துரைகள், பாராட்டுகள்:

ஜூலை 2005 பதிவு: அகப்பாடு பத்து

டிசம்பர் 2005 வலைப்பதிவுகள் – 2005

ஆகஸ்ட் 2006 : What are the Top Tamil Blogs

தொடக்கத்திலேயே இருவருக்கு நன்றியை சொல்லி விடுகிறேன்.

1. சும்மா டைம் பாஸ் மச்சி….. &
2. வெட்டிப்பயல்

ஒருவர் பின்னூட்டமாகவும், மற்றொருவர் தனியாகவும் கேட்டுக் கொண்டு, இந்தப் பதிவை எழுதுவதற்கு ஊக்குவித்தார்கள். இந்தப் பதிவுக்கு காரணகர்த்தாவாக இருந்த பாவத்தினால், இவர்களுக்கு, எந்தப் பட்டியலிலும் இடம் கிடையாது 🙂

இந்த வருடத்தின் மிகச் சிறந்த பத்து பதிவுகளாக நான் இவற்றை சொல்கிறேன்:

இவர்கள் தவிர ஏழு நாள்களுக்கு ஒன்றாக எழுச்சியூட்டும் எழுவர்:

கடைசியாகத் தலைப்பை கடன் வாங்கி விருதுகள்:

  1. Best Humanities தமிழ் பதிவு – என்றால் என்ன – கார்திக்வேலு
  2. Best Entertainment தமிழ் பதிவு – கார்த்தியின் கனவுலகம்
  3. Best Science/Technology தமிழ் பதிவு – சுந்தரவடிவேல்
  4. Best தமிழ் பதிவு directory/service/clique/network – கில்லி – Gilli
  5. Best Topical தமிழ் பதிவு – ஊசி aka pin
  6. Best Designed தமிழ் பதிவு – பொன்ஸ் பக்கங்கள்
  7. Most Humorous தமிழ் பதிவு – பினாத்தல்கள்
  8. Best Travel தமிழ் பதிவு – தேசிகன் பக்கம்
  9. Best New தமிழ் பதிவு – rajavanaj
  10. Best Group/Community Blog – சென்னபட்டிணம்
  11. தமிழ் பதிவு of the year எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் | எண்ணங்களை எழுதுகிறேன்

நன்றி: The Indibloggies » Indibloggies 2006 ~ The Award Categories


| | | | | |

Tamil Film Songs – 2006 Best

என்றும் கேட்கலாம் பத்து

  1. லேலாக்கு :: ஆதி (வித்யாசாகர்)
  2. கோலிகுண்டு கண்ணு :: எம் மகன் (வித்யாசாகர்)
  3. சித்திரையில் என்ன வரும் :: சிவப்பதிகாரம் (வித்யாசாகர்)
  4. ரகசியமானது காதல் :: கோடம்பாக்கம் (சிற்பி)
  5. ஏதோ நினைக்கிறேன் :: தலைநகரம் (டி இமான்)
  6. ஆணும் பெண்ணும் :: உயிர் (ஜோஷுவா ஸ்ரீதர்)
  7. கண்ணனை நினைக்காமல் :: நீ வேணுண்டா செல்லம் (தினா)
  8. சரச லோக :: பச்சக் குதிர (சபேஷ் – முரளி)
  9. கண்கள் தேடுதே :: மனதோடு மழைக்காலம் (கார்த்திக் ராஜா)
  10. உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே :: வெயில் (ஜிவி பிரகாஷ் குமார்)

ஒளிப்பதிவு பத்து (பாடல் அருமை என்றால், வெள்ளித்திரை படமாக்கலில் பின்னி அமர்க்களப்படுத்திய பத்து கானங்கள்)

  1. கற்க கற்க :: வேட்டையாடு விளையாடு (ஹாரிஸ் ஜெயராஜ்)
  2. காதலைப் பிரிக்க காதலர் போடும் திட்டம்தான் :: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (யுவன் ஷங்கர் ராஜா)
  3. வாள மீனுக்கும் :: சித்திரம் பேசுதடி (பாபு)
  4. ஏதேதோ எண்ணங்கள் வந்து :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
  5. நெஞ்சாங்கூட்டில் :: டிஷ்யூம் (விஜய் ஆண்டனி)
  6. தையத்தா :: திருட்டுப் பயலே (பரத்வாஜ்)
  7. கண்ணை விட்டு :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
  8. பூப்பறிக்க நீயும் :: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (தேவி ஸ்ரீபிரசாத்)
  9. இது என்ன வாழ்க்கை :: ஆச்சார்ய (ஸ்ரீகாந்த் தேவா)
  10. லூசுப் பெண்ணே :: வல்லவன் (யுவன் ஷங்கர் ராஜா)

ஆடலுடன் பாடலும் சுகம் பத்து

  1. நம்ம காட்டுல :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
  2. எம்மாடி ஆத்தாடி :: வல்லவன் (யுவன் ஷங்கர் ராஜா)
  3. அருவா மினுமினுங்க :: வெய்யில் (ஜிவி பிரகாஷ் குமார்)
  4. எங்க ஏரியா :: புதுப்பேட்டை (யுவன் ஷங்கர் ராஜா)
  5. சங்கு தாரை தப்பட்ட :: பச்சக் குதிர (சபேஷ் – முரளி)
  6. ஆ சொன்னா அயனாவரம் :: கொக்கி (தினா)
  7. ஒரே முறை தப்பு :: (ஸ்ரீகாந்த் தேவா)
  8. நூறு நூறு :: தலைமகன் (பால், ஸ்ரீகாந்த் தேவா)
  9. ஒவ்வொரு பிள்ளையும் :: வட்டாரம் (பரத்வாஜ்)
  10. நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே ::வேட்டையாடு விளையாடு (ஹாரிஸ் ஜெயராஜ்)

ஆறுதல் பரிசுகள்

  1. கீரை வெதப்போம் :: திருப்பதி (பரத்வாஜ்)
  2. நியூ யார்க் நகரம் :: சில்லென்று ஒரு காதல் (ஏ ஆர் ரெஹ்மான்)
  3. சுடும் நிலவு :: தம்பி (வித்யாசாகர்)
  4. கிங்கிணி மிங்கிணி :: கிழக்குக் கடற்கரை சாலை (பால்)

Top 10 Movie Songs: “திரைப்பாடல்கள் – 2005”

இசையமைப்பாளர்களும் இடம் பெற்ற எண்ணிக்கையும்

  1. யுவன் ஷங்கர் ராஜா – 7
  2. வித்யாசாகர் – 4
  3. பரத்வாஜ் – 3
  4. ஸ்ரீகாந்த் தேவா – 3
  5. பால் – 2
  6. ஹாரிஸ் ஜெயராஜ் – 2
  7. தினா – 2
  8. ஜிவி பிரகாஷ் குமார் – 2
  9. சபேஷ் – முரளி – 2
  10. பாபு – 1
  11. தேவி ஸ்ரீபிரசாத் – 1
  12. விஜய் ஆண்டனி – 1
  13. சிற்பி – 1
  14. டி இமான் – 1
  15. ஜோஷுவா ஸ்ரீதர் – 1
  16. கார்த்திக் ராஜா – 1
  17. ஏ ஆர் ரெஹ்மான் – 1

| | | | | | |

H1-B Skil Issue & Indian Strikes

அமெரிக்க அச்சம் & அரசு ஊழியர் வேலை நிறுத்தம்

பொருளாதார வளர்ச்சி காணாத நாடுகளிடம் அவுட்சோர்ஸிங், எச்1-பி ஆவதைக் கண்டு அமெரிக்கர்கள் பயப்படுகிறார்கள்:
1. Immigration is beneficial — if it’s legal

2. Programmers Guild fears lame duck Congress will pass the Skil Bill

3. The SKIL Bill and Your Local Elementary School

மேற்கத்திய உலகைக் கண்டு இந்திய அரசு ஊழியர்கள் தங்கள் வேலைக்கு உலையோ என்று அச்சம் கொள்கிறார்கள்:
Dinamani.com – TamilNadu Page :: தொழிலாளர் விரோதப்போக்கு மற்றும் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து பொது வேலை நிறுத்தம்: மத்திய – மாநில அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் துறை உள்பட பல்வேறு அரசு துறையினர், தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் அன்றாடப் பணிகள் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதியத்தை தனியார் மயமாக்க மேற்கொள்ளும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்பது உள்பட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

தொலைபேசி ஊழியர்கள்: இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனமும் அறிவித்துள்ளது.


அமெரிக்கா வாசிகளுக்கு ஏன் பயம்?

  1. புதிய சட்டம் அமலுக்கு வந்தால், எச்1-பியில் இருப்பவரின் துணைவரும் வேலைக்கு செல்லலாம்.
  2. அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்த மாணவர்கள் எச்1-பி கோட்டாவில் அடிபட்டு, விசாவிற்காக காத்திருக்க வேண்டாம்.
  3. நிரந்தரக் குடியுரிமை பெறும் முறை எளிதாகும்.
  4. H1-B எண்ணிக்கை அதிகரிக்கும். (310,000 ஆக உயர்கிறது).
  5. இப்பொழுதுதான் நிமிர்ந்திருக்கும் வேலைவாய்ப்புகளும், ஊக்கத் தொகைகளும், சம்பளங்களும், மேலும் உயராமல் ஸ்திரப்பட்டு விடும்.
  6. சாதாரணமாகப் படிக்கும் தங்களின் குழந்தைகள், ப்ரொஃப்ஷனல் துறைகளில் இருந்து துறவறம் பூணும் வாய்ப்பாக இந்த சட்டம் அமையும்.
  7. ஏனோதானோ என்றில்லாமல், கர்ம சிரத்தையாக பணியில் முனைப்பு காட்டினாலும், வேலை நிரந்தரம் இல்லாமல் போகும் அபாயத்திற்கு வழிவகுக்கும்.

இந்தியாவில் அரசு ஊழியர்கள் ஏன் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று என்னால் கணிக்க இயலவில்லை. தொடர்பாக மனதில் எழுந்த கேள்விகள்:

  1. பன்னாட்டு வங்கி, காப்பீடு, தொலைபேசி எல்லாமே வேலை நிறுத்தம் செய்யாமல் கிடைக்கிறது. அவ்வாறு தங்கு தடையற்ற சேவை கொடுக்கும் இடத்திற்கு பயனீட்டாளர்கள் மாறிவிடுவார்களா?
  2. அவ்வாறு மாற்றிக் கொண்டால், எழும் நஷ்டம் அல்லது லாபக் குறைவிற்கு ஏற்ப ஆட்குறைப்பு அரங்கேறுமா?
  3. திறமற்ற பணியாளர்களைக் குறைக்காவிட்டால், நாளடைவில் திவாலாகும் வாய்ப்பு இருக்கிறதா?
  4. முதலீட்டாளர்களுக்கே துண்டுச்சீட்டு கொடுக்கும் நிலை ஏற்பட்டால், அங்கு வேலை பார்த்த அரசு ஊழியரின் சேமநல நிதி என்னவாகும்?
  5. இவ்வாறு பற்றாக்குறையில் இயங்கும் நிறுவனத்தை அரசு நடத்த வேண்டுமா? வரிப்பணத்தின் மூலம் ஊழியரின் ஓய்வுப்பணத்தைக் கொடுக்க வேண்டுமா?


| | | | |

உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கு – காலச்சுவடு

பாரதி 125
புதுமைப்பித்தன் 100
சுந்தர ராமசாமி 75
Kalachuvadu: a magazine for arts and ideas

இடம்: கோயம்புத்தூர்
தேதி: 18-20 டிசம்பர் 2006

sundararamaswamy.com

பார்வையாளர்களுக்கு அனுமதிக் கட்டணம் கிடையாது


| | | | |

Happy Birthday to Super Star Rajnikanth

சக பதிவர்களில் சில வாழ்த்துக்கள்:

வசதிக்கேற்ப வாகான சித்தரிப்பு முகம்:

நிஜ முகம்:


| |

2005-06 Reminiscences

சென்ற வருட இறுதியில் விக்கி (தண்டோரா – இது கண்டதை சொல்லும்) வாக்குறுதி கொடுத்திருப்பது போல், 2005 நினைவுகளை அசை போட்டேன்.

அந்தப் பதிவுகள்:

  1. தமிழ் சினிமா – 2005
  2. டாப்டென் – 2005 :: நத்திங் சீரியஸ், ஒன்லி ·ப்ரிவலஸ்
  3. புத்தகங்கள் – 2005
  4. திரைப்பாடல்கள் – 2005
  5. பிரச்சினைகள் – 2005
  6. பட்டியல்கள் – 2005
  7. திரைப்படங்கள் – 2005
  8. வலைப்பதிவுகள் – 2005

2006 :: வலைப்பதிவுகளில், தமிழ்ச்சூழலில், வலையகங்களில், 2006-இல் என்ன நடக்கலாம்? என்ற என் கணிப்புகள் (நடந்த நிகழ்வுகளுடன் மீள்பதிவு):

  1. விகடன் கவர்-ஸ்டோரியாக வலைப்பதிவாளர் ஆகலாம். குறைந்தபட்சம், பதிவுகளில் வருபவைகளில் சிலதாவது பத்திரிகை column-ஆக மறுபதிப்பாகலாம்.

    குங்குமத்தில் செந்தழல் ரவி, மதுமிதா, லிவிங் ஸ்மைல் வித்யா போன்ற வலைப்பதிவர்கள் இடம்பிடித்தார்கள்.

  2. பதிவுகளை விட பின்னூட்டங்கள் சுவாரசியமாகும் காலம் இது. மறுமொழிகளை சேகரித்து தருவதற்கென்றே தமிழ்மணம், தேன்கூடு, கூகிள் ரீடர் போல் ஒரு திரட்டி உருவாகலாம்.

    ஆங்கிலத்தில் இது போன்று பல வெப் 2.0க்கள் உருவாகி இருந்தாலும், தமிழுக்கென்று தனியாக எதுவும் வரவில்லை.

  3. கிரிக்கெட்டைத் தொடர்ந்து தமிழ் சினிமா, செய்தி, கிண்டல் போன்றவற்றுக்கு கூட்டு வலைப்பதிவு வரலாம்.

    சென்னைக் கச்சேரி: தமிழ் பதிவுலகம் 2006 – நம்ம வியூ பாயிண்ட் என்று இந்த வருடம் உருவான குழுப்பதிவுகளைத் தொகுத்துள்ளார். விக்கிப்பசங்க இன்னும் புதுக்கருக்கு அழியாதவர்கள். அவர்கள் தவிர்த்து பார்த்தால், சென்னபட்டிணம் தவிர எதுவுமே கவரவில்லை.

  4. கூகிள் விளம்பரங்களை விட, விற்பனையாளர்களே வலைப்பதிவர்களை நேரடியாக அணுகுவார்கள். விமர்சனங்களும், அறிமுகங்களும் product positioning செய்யப்படும்.

    ஊசி aka pin சொல்வதைப் பார்த்தால் பொய்த்து விட்டது. தற்போதைக்கு புதிய இசையை வெளியிடுபவர்கள், புத்தகங்களை பிரசுரிப்பவர்கள் போன்றோருக்கு வலைப்பதிவுகளின் மூலம் இலகுவான மையமான கேந்திரம் எதுவும் இல்லை.

  5. விகடனைப் போல் குமுதமும் சந்தா கட்டி படிக்கும் தளமானாலும், வெற்றிகரமாக வாசகர்களைத் தக்கவைத்து கொள்ளும்.

    குமுதம் இன்றளவும் இலவசமாகவேத் தொடர்கிறது. துக்ளக் வலையகத்தைத் தொடங்கியவுடன் சந்தாவைக் கோரியது. (சைட் பார்: ஜூலை ’06 தொடங்கிய Tamil Newsக்கு எதையாவது தேடித் தடுக்கி வந்து பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து மாதத்தில் 70,000-ஐ தொடப் போகிறது. இதில் எத்தனை பேர் ரிப்பீட்டு, எத்தனை பேர் அப்பீட்டு என்பது தெரியவில்லை).

  6. வலைப்பதிவர்களின் குறிப்புகள் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டு அச்சேறலாம்.

    பூங்கா, கில்லி, Snap Judgement என்றுதான் மீள்குறிக்கப்பட்டதேத் தவிர, அச்சில் வரக் காணோம்.

  7. வலைப்பதிவுகளில் ஏற்கனவே எழுதிவிட்டதாகவோ அல்லது திருடி விட்டதாகவோ, ஏதாவதொரு பிரபலமான எழுத்தாளருக்கு தர்ம அடி கொடுக்கப்படும்.

    நாடு கட்டிய நாயகன் :: எம்.கே.குமார் | பத்ரி | ஓகை நடராஜன் |

  8. அனுமதியின்றி வலையேற்றியதாகவோ, தரக்குறைவாக எழுதியதாகவோ பதிவர் மீது வழக்குத் தொடரப் படலாம்.

    பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், வழக்கம் போல் புறக்கணித்து கவனியாமல் தவிர்ப்பதே நிரந்தரமாகத் தொடரப்பட்டது.

  9. தமிழ்மணம், தேன்கூடு, போன்ற தமிழ் வலைதிரட்டிகளில் இணைத்துக் கொள்ளாமல் தனிபட்ட சுற்றில் வலைப்பதிபவர்கள் அதிகம் ஆவார்கள்.

    தானாக விருப்பப்பட்டு ஒதுங்கி நின்று, பதிவையும் தொடர்பவர்கள் எண்ணிக்கை: 1

  10. தேர்தலுக்கு பின் ‘ஏன் ஜெயித்தார்கள்? எப்படி தோற்றார்கள்’ அலசல்களும், ‘சிவாஜி’ வெளிவந்து ஒரு மண்டலம் முடிந்தவுடன் போஸ்ட மார்ட்டங்களும், உலகக் கோப்பை விமர்சனங்களும், அமெரிக்காவிற்கான வசவுகளும் நிறையும்.

    கால் பந்து உலகக் கோப்பையை விட ஜிதான் நிறைய அடிபட்டார். தமிழ் நாடு தேர்தல் தொடர்கதையாக உள்ளாட்சி இன்றும் முடிந்தபாடில்லை. அமெரிக்கா மேலான தாபங்களும் வடியவில்லை.


| |

Hussain immortalizes Amrita Rao on canvas

NDTV செய்தி: அம்ருதா ராவின் ஓவியத்தை எம்.எஃப். ஹுசேன் வரைகிறார்.

எப்படி இருக்கீங்க…?
அடுத்த மாதுரி நான்தான்!

இப்படி துண்டு துண்டா படம் போடறது திப்பு சுல்தான் காலத்து மணியம் செல்வன் பழக்கம்.
புதுசு புதுசா கதாநாயகிகளை ஓவியம் தீட்டறது எம்.எஃப்.ஹூஸேன் நவநாகரிகம்.

எனக்கு கமிஷன் எவ்வளவு கிடைக்கும்?

படம் போட்டு விற்ற பிறகு எம்.எஃப். ஹூசேனை காலி செஞ்சிடுவேன் என்பதைன் உருவகக் காட்சி.

விவா‘ (VIVAH) தலைக்குப் போட்டால் இப்படி முடி வளருமா?

அசப்பில் ‘ஜெமினி’ கிரண் மாதிரி இருக்கேனா? அல்லது திவ்யபாரதியை நினைவுக்குக் கொண்டுவருகிறேனா??


| |

Boston Bloggers Meet – Dec 16th: Invite

அமெரிக்காவின் வடகிழக்கில் வலைப்பதிவர் சந்திப்பு போடலாம் என்று எண்ணம்.

தேன் துளி பத்மா அரவிந்த், பாஸ்டன் பக்கம் வருகிறார்.

மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவி ஷங்கர் நியூ ஜெர்சியில் இருந்து வரப்போகிறார்.

அக்கம்பக்கத்தில் இருக்கும் வெயிலில் மழை ஜி, வெட்டிப்பயல் பாலாஜி, பாடும் நிலா பாலு! சுந்தர் போன்ற பல பதிவர்களும் உறுதி செய்திருக்கிறார்கள்.

பாஸ்டன் சந்திப்பு என்றாலே தங்கள் கருத்துக்கள் மூலம் சுவையும் காத்திரமும் மகிழ்வையும் கூட்டும் Navan’s weblog நவன், பார்வை மெய்யப்பன், வேல்முருகன் போன்ற நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.

நீங்கள் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பக்கம் வசிப்பவரா?

வாஷிங்டன் டிசி-யில் இருந்து எட்டு மணி நேரம்தான்.
நியு யார்க்கில் இருந்து நான்கு மணி நேரம்.
மாஸசூஸட்ஸ் மற்றும் நியு ஹாம்ப்ஷைர் வாசிகளுக்கு எட்டிப் பிடிக்கும் தூரம்.

இடம்: பாஸ்டன்
நாள்: டிசம்பர் 16, சனிக்கிழமை
நேரம்: மதியம் ஆரம்பித்து…

தொடர்புக்கு: bsubra@yahoo.com அல்லது bsubra@gmail.com

வாக்குறுதிகள்:
1. புகைப்படங்கள் எடுக்கப்படாது.
2. எடுத்தாலும் இட்லி-வடைக்கு அனுப்பப்பட மாட்டாது.
3. தாங்கள் வாசகராக இருந்தாலும், அவ்வண்ணமே கலந்து கொள்ளலாம். வலைப்பதிவு தொடங்குமாறு நிர்ப்பந்திக்க மாட்டோம்.
4. என் பதிவில் நான் நடந்து கொள்ளும் விதத்தை விட, நேரில் நல்ல மாதிரியாகப் பழகுவேன் ; )

வேண்டுகோள்:
1. தனி மடலிடவும். எனது முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற பிற தகவல்களைப் பகிர்கிறேன்.
2. அவசியம் கலந்து கொள்ளவும்.

Tamiloviam – Luckylook

அக்டோபர் மாதத்தின் தேன்கூடு-தமிழோவியம் போட்டியில் முதலிடம் வென்ற லக்கிலுக்கை சிறப்பாசிரியராகக் கொண்ட தமிழோயவியத்தில் இருந்து…


| |

National Repeal Day – Lets Celebrate


இன்றைய தினம் அமெரிக்கவாசிகளுக்கு மிக முக்கியமான தினம்.

டிசம்பர் 6-ஐ சொல்லவில்லை. டிசம்பர் ஐந்து.

1933-ஆம் ஆண்டு. எஃப்.டி.ஆர் என்று செல்லமாக அழைத்து, பெரிய நினைவுச்சின்னத்தையும் இரண்டாம் உலகப் போருக்காகவுமே அறியப்பட்ட ஃப்ரான்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்டின் முனைப்பினால் இன்றுதான் மதுவிலக்கு நீங்கி, ஆல் காப்போன் மட்டுமே காய்ச்சிய சாராயம் அதிகாரபூர்வமாகப் பெருக்கெடுத்தோடியது.

அன்று முதல் பரவலான சில அறிகுறிகளும் அதற்கான தீர்வுகளும்:

1. உபாதை: குளிர்பாதங்கள்

காரணம்: பாட்டிலை சரியாகப் பிடிக்கவில்லை (காலில் பியர் கொட்டுகிறது).

நிவர்த்தி: கையில் இருக்கும் கிளாஸை நேர் செய்யவும். புட்டியின் திறந்த பாகம் மேலே பார்த்தபடியும், மூடிய பாகம், தரையை நோக்கியும் அமைந்திருத்தல் அவசியம்.

2. உபாதை: உங்கள் முகத்துக்கு நேராக ஒளிவெள்ளம் பாய்கிறது.

காரணம்: கீழே விழுந்துவிட்டீர்கள்.

நிவர்த்தி: தரைக்கும் உங்களுக்கும் உள்ள கோணம் 90 டிகிரியாக இருத்தல் அவசியம்.

EXTRA EXTRA!!!3. உபாதை: தரை மசமசவென்று இருக்கிறது.

காரணம்: காலியான கிளாஸ் வழியாக பார்க்கிறீர்கள்.

நிவர்த்தி: சரக்கை கடகடவென்று நிரப்பவும்.

4. உபாதை: தரை நடந்து, உங்களைக் கடந்து செல்கிறது.

காரணம்: நீங்கள் தரதரவென்று இழுத்து செல்லப்படுகிறீர்கள்.

நிவர்த்தி: எங்கே அழைத்துப் போகிறார்கள் என்று கேட்டு வைத்துக் கொள்ளவும்.

5. உபாதை: அருகாமையில் அமர்ந்திருப்பவர் அளவளாவினாலும், எதிரொலியாக ஒசைக் கேட்கிறது.

காரணம்: காதில் கோப்பையை வைத்திருக்கிறீர்கள்.

நிவர்த்தி: பைத்தியக்காரி போல் நடந்துகொள்வதை நிறுத்துங்கள்.

Repeal of Prohibition6. உபாதை: அறை எக்குத்தப்பாக ஆடுகிறது. அனைவரும் வெள்ளுடை தரித்திருக்கிறார்கள். பழுதுபட்ட எம்பி3-ஆக இசை மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகிறது.

காரணம்: நீங்கள் ஆம்புலன்ஸில் இருக்கிறீர்கள்.

நிவர்த்தி: அசைய வேண்டாம். படாத இடத்தில் பட்டுவிடப் போகிறது.

7. உபாதை: உங்கள் குடும்பத்தினர் அனைவரும் அன்னியர் போல் புதிதாக தோன்றுகிறார்கள்.

காரணம்: வீடு மாறி வந்துவிட்டீர்கள்.

நிவர்த்தி: தங்கள் உறைவிடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுகோள் வைக்கவும்.


| |