Category Archives: Uncategorized

அகராதிகள்

அடோபி அகராதி – 1: தூய தமிழ்ப் பதங்கள்

அடோபி அகராதி – 1 (மாற்றுப் பதி): தூய தமிழ்ப் பதங்கள்

அடோபி அகராதி – 2: எளிமையான அன்றாட வார்த்தைகள்

அடோபி அகராதி – 2 (மாற்றுப் பதி): எளிமையான அன்றாட வார்த்தைகள்

சுஜாதாவின் கலைச்சொற்கள்

சுஜாதாவின் கலைச்சொற்கள் (மாற்றுப் பதி)

தமிழ் இணையப் பல்கலை.: கலைச்சொற்கள்

தமிழ் இணையப் பல்கலை. (மாற்றுப் பதி): கலைச்சொற்கள்

இணையத்தில் எடுத்தது – 1: ஆங்காங்கே கண்டதில் பிடித்தது

இணையத்தில் எடுத்தது – 1 (மாற்றுப் பதி): ஆங்காங்கே கண்டதில் பிடித்தது

திரு. ஞானவெட்டியான் கொடுத்தது – 1: திரு. இராம.கியின் சொல்லாக்கங்கள்

திரு. ஞானவெட்டியான் கொடுத்தது – 1 (மாற்றுப் பதி): திரு. இராம.கியின் சொல்லாக்கங்கள்

தூய தமிழ் மற்றும் இன்ன பிற: திரு. இராம.கி., திரு. ஞானவெட்டியான், திரு. ஆசாத் மற்றும் பலரின் மடல்களின் தொகுப்பு.

தூய தமிழ் மற்றும் இன்ன பிற (மாற்றுப் பதி): திரு. இராம.கி., திரு. ஞானவெட்டியான், திரு. ஆசாத் மற்றும் பலரின் மடல்களின் தொகுப்பு.

நன்றி: தமிழ் உலகம்

வாழ்த்துகள்: பொங்கலோ பொங்கல்

ஐடியா கொடுத்தவர்: இரா. முருகன்

நிறைவேற்றியவர்: பிபி

உரு மாற்றி: பொங்கு தமிழ்

சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி

சோம்பலில்லாம ஏர் நடத்தி

கம்மா கரையை ஒசத்திக் கட்டி

கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி

சம்பா பயிரை பறிச்சு நட்டு

தகுந்த முறையில் தண்ணீர் விட்டு

நெல்லு வெளைஞ்சிருக்கு

வரப்பும் உள்ளே மரைஞ்சிருக்கு

அட காடு வெளைஞ்சென்ன மச்சான்

நமக்கு கையும் காலும் தானே மிச்சம்

கையும் காலும் தானே மிச்சம்

இப்போ காடு வெளையட்டும் பொண்ணே

நமக்கு காலம் இருக்குது பின்னே

வைரமுத்துவின் வாய் – ரஜினி படம் (ப்ளாக் Syndication)

::Internet Bridge of World Tamils:Webtamilan.com::: “ரஜினிகாந்த் அநேகமாக ஜுன்2004மாதன் தன் அடுத்த படத்தை துவங்குவார்.படம்2005ஜனவரி மாதம் படம் திரைக்கு வரும் என்று சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இனிப்பான புத்தாண்டு செய்தியை அறிவித்தார் வைரமுத்து.”

சுவையான தளம். தமிழ் வலைப்பதிவுலகின் அரசர்களான சுபா, வெங்கட்டின் சில பதிவுகளும் மறு ஒலிபரப்பாகிறது!

கொரிய சுற்றுப்பயணம்(4) -சுபாஷிணி கனகசுந்தரம்(ஜெர்மனி)

மைக்ரோஸாப்ட் கறவை இயந்திரம்-வெங்கட்(கனடா)

தாசில்தார் அனுபவங்கள்

அமுதசுரபி – தமிழ் சிஃபி: “தாசில்தார் என்ற வார்த்தையைக் கேள்விப்படாதவர் மிகமிகக் குறைவாகத்தான் இருக்க முடியும். பிறந்தாலும் வாழந்தாலும் வீழ்ந்தாலும் இறந்தாலும் ஏதாவது ஒரு வகையில் தாசில்தாரிடம் சென்றாக வேண்டிய அவசியம் பெரும்பாலோருக்கு வந்தே தீரும். ஒன்றுமே இல்லாதவனிýருந்து இல்லாதது எதுவுமே இல்லை என்ற நிலையில் உள்ளவன் வரை எப்போதாவது ஒரு முறையாவது தாசில்தாரைச் சந்தித்தாக வேண்டிய கட்டாயம் நிர்பந்தம் வரும்.

தாசில்தார் என்றதுமே அவரது அதிகாரம் நினைவுக்கு வரும். கூடவே தங்கள் அலைச்சல் நினைவுக்கு வரும். எரிச்சலும் வரும். இருந்தாலும் சமூகத்தில் தாசில்தார் எண்பவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தி இன்று வரை.

தாசில்தார் என்பது அரபி வார்த்தை.தமிழில் வட்ட ஆட்சியர் அல்லது வட்டாட்சியர். “

போடுங்கம்மா ஓட்டு

BBC NEWS: புஷ், டீன், கெர்ரி, ஷார்ப்டன், லீபர்மான் என்று பல முகங்கள் நிற்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தப் பருந்துப் பார்வை.

என்ன செய்திருக்கிறார்கள், என்னென்ன வாக்குறுதிகள், விளம்பர வாசகம் என்ன என்று பத்து நிமிடத்தில் நுனிப்புல் மேயலாம்.

கொஞ்சம் வம்பு

1. சூர்யாவுக்கு ஃபிலிம்·பேர் விருது!? (மிஸ்டர் மியாவ் – ஜூவி – யாரோ சொன்னாங்க)

2. ரஜினி அடுத்த படம் ஆரம்பிப்பதாய் பட்டி தொட்டி எங்கும் பேச்சு. நான் கேள்வி பட்ட இரு இடங்கள்: வைரமுத்து வாய், சினிசவுத்

தமிழோவியம் – Blatant Self Promotion

என்னுடைய போன வார மவுஸ் போன போக்கில் இந்த வாரமும் படியுங்கள். எழுதும் விதத்திலோ, கருத்திலோ குறை (நிறை) சொல்லுங்கள். போன வருடம் நிகழ்வுகள் குறித்த பட்டியலையும் அலசலாம்.

காமகோடி – ஜனவரி 2004 – அம்மாவின் எழுத்துகள்

ஆர். பொன்னம்மாளின் ஜனவரி மாத பரமாசார்யாள் பாதையிலே, விசேஷ தினங்கள், கிராம தேவதைகள் இணையத்தில் கிடைக்கிறது.

Top Ten Replies by Literati

தங்கள் கதை வெளிவரவில்லை என்பதற்கு எழுத்தாளர்களின் தலை பத்து பதில்:

10. அந்த பத்திரிகையின் ‘நடை’க்கு உட்பட்டு நான் எழுதவில்லை.

9. வெளிவந்தால்தான் ‘நல்ல’ எழுத்தா?

8. போன கதை மாதிரிதானே இதையும் எழுதினேன்!

7. வெகுஜன ஊடகங்களுக்காக நான் எழுதுவதில்லை.

6. நல்ல எழுத்துக்கு இப்போது மதிப்பேது?

5. என் கதைகள் சாதாரணர்களுக்குப் புரியாது.

4. புகழ் பெற்றவர்களையும், விதண்டாவாதம் செய்பவர்களையும்தான் மதிக்கிறார்கள்.

3. எனக்கு பதிப்பாளர்களுடன் அறிமுகம் கிடையாது.

2. சினிமா, அரசியல், டிவியில் எல்லாம் பங்கு பெறாததால்தான்….

கடைசியாக…

1. இறந்த பிறகுதான் பாரதி போன்றோருக்கே அங்கீகாரம் தரப்படுகிறது.

யார் மனமாவது புண்பட்டிருந்தால், அவரே உண்மையான படைப்பாளி! 🙂

சிரிச்சுடுங்க… ப்ளீஸ்



Hmmm... Indian in a rare comic appearance