Category Archives: Uncategorized

டைம்ஸ் ஆஃப் இந்தியா

மும்பை பதிப்பு

விமர்சகரும் வாசகரும்

பிகேஎஸ் என்ன சொல்ல வருகிறார் என்று நினைக்கிறீர்கள்?

1. பொருள் குற்றம், சொற் குற்றம், இலக்கணக் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது.

2. சுய விருப்பு வெறுப்பு சார்ந்து படைப்புகளை விமர்சிக்கிறார்கள்.

3. படைப்புகளைப் பாராட்டுபவர்கள் நார்ஸிஸ மனப்பாங்குடையவர்கள்.

4. வாசகரின் அறிவும் திறனும் படைப்புகளை விட குறைந்து இருந்தால்தான் ரசிக்க முடியும்.

5. விமர்சனங்களால் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் எவ்வித நன்மையும் கிடைக்காது.

6. எழுதிய எழுத்தாளரைவிடவும் சிறப்பாகவும் நுட்பமாகவும் எழுத்தாளரின் படைப்பை அனுபவித்து ரசிக்க வேண்டும். (ஆனால் எழுத்தாளருக்கு அறிமுகமாகியிருக்கக் கூடாது; படைப்பையும் பாராட்டக் கூடாது).

7. தமிழில் விமர்சகர்கள் பெருகி விட்டார்கள். வாசகர்கள் குறைந்து விட்டார்கள்.

8. விமர்சனம் என்கிற பெயரில் எழுதாமல், வாசக அனுபவங்கள் என்று தலைப்பிடவும்.

சென்னையில் ஒரு வெயில் காலம்

பெங்களூரில் இரண்டு வருடம், டெல்லியில் ஒரு வருடம், கல்கத்தாவில் இரண்டு மாதம், ராஜஸ்தானில் நான்கு வருடம், என்று இந்தியாவை க்ளோசப்பில் பார்த்தாலும் சென்னையோடு இருக்கும் love-hate தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டேன். வழக்கமாக ஒரு நாள் மட்டுமே சென்னையில் தங்கி பாஸ்டன் திரும்பிவிடும் எனக்கு இந்த முறை நீண்ட விடுமுறை. பத்து நாட்கள் இருந்தாலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா என திகட்டாத இருப்பு.

போன முறை ஏ.ஆர்.ரெஹ்மானையும் அதற்கு முந்திய முறை ரஞ்சிதாவுடனும் விமானத்தில் சிறிய சந்திப்புகள் கிடைத்தது. இந்த முறை மனைவி+குழந்தை. ‘ஆண்ட்டி என்ன கேட்டா’ என்று ஏர் ஹோஸ்டஸ் ஆங்கிலத்தில் கேட்டதை மொழி பெயர்த்தும், ‘அங்கிள் என்ன சொல்றா’ என்று பைலட் ஜெர்மனில் பேசுவதை விளக்கியும், மஞ்ச பொத்தானை அமுக்காதே என்று சொல்லியும் அமுக்கியதால் வந்து கோபத்துடன் ‘என்ன வேணும்’ என்று வினவிய விமான-விருந்தோம்பியிடம் மன்னிப்பு கேட்டும், மேகங்களையும் பாலைவனங்களையும் வேடிக்கை காட்டியும் விமானப் பயணம் சென்றது.

எனது celebrity meeting disorder syndrome-ஐ த்ரிஷா தீர்த்துவைத்தார். பார்க் ஷெராடன் வாசலில் பேசாத செல்·போனை ரொம்ப நேரம் காதில் வைத்துக் கொண்டு சோகமாகக் காத்திருந்தார். ரொம்ப நேரம் காத்திருந்தும்

பேசுவதாகவும் தெரியவில்லை; செல்பேசியைக் காதை விட்டும் எடுக்கவில்லை என்பதால் பொறுமையிழந்து நகர்ந்தேன்.

சென்னையில் ட்ரா·பிக் நன்றாக நகர்கிறது. பாஸ்டனையோ வேறு வளர்ந்த அமெரிக்க நகரங்களின் downtown-களுடன் ஒப்பிட்டால், ஆனந்தக் கண்ணீரே வருகிறது. பாரிமுனையாகட்டும், திரையரங்குகள் நிறைந்த அண்ணா சாலையாகட்டும், கடைகள் மட்டுமே உள்ள தியாகராய நகர் முதல் ஸ்டெர்லிங் ரோட் வரை எல்லா இடங்களிலும் வெகு எளிதாக ஆட்டோவும், காரும், டூ-வீலர்களும் ஓட்டப்படுகின்றன.

அமெரிக்கர்களுக்குக் கலாசார அதிர்ச்சி ஏற்படும் என்று முன்பு சொல்வார்கள். இப்பொழுது அந்த மாதிரி ஏதும் நிகழாது என உறுதியாக சொல்லலாம். பெண்கள் சுதந்திரமாக க்விகீஸ் காபி கடை வாசல்களிலும், மாண்டியத் ரோட் சந்திப்புகளிலும், இன்ன பிற upscale hangout-இன் திறந்தப் பிரதேசங்களில் ஊதித் தள்ளுகிறார்கள். லை·ப்ஸ்டைல், க்ளோபஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் என எல்லாப் பிரதேசங்களிலும் ஸ்லீவ்லெஸ் மினி டாப்களும், மைக்ரோ ஸ்கர்ட்களும் பாய் ·ப்ரெண்ட்களால் வாங்கித்தரப்படுகின்றன.

பைக்களில் முன்பு குழந்தையை இடுக்கிக் கொண்டு சேலையைப் பிடித்துக் கொண்ட மனைவியை பின்புறம் அமர்த்திய பேண்ட்-ஷர்ட் கனவான்களைப் பார்ப்பேன். அவர்களுடன், டை கட்டிய வாலிபர்கள் கொஞ்ச நாள் முன்பு பார்த்தேன். இப்பொழுது இவர்களுடன் காதில் கடுக்கண் அணிந்த, கறுப்பு பனியன் அணிந்த, அரை நிஜார் அணிந்த வாலிபர்களையும் அவர்களை இறுகப் பற்றிய இறுக்கமான ஆடைகளை அணிந்த வாலிபிகளையும் புதிதாக சேர்த்துக் கொள்ளலாம்.

ஐயங்கார் கல்யாணங்களில் இன்னும் ‘சாத்தமுது வேணுமா’ என விசாரிப்புகளுடன் (காதல் செய்தாலும்) விரிவான கல்யாணங்கள் நடைபெறுவது; கோவில்களில் எக்கச்சக்க கூட்டத்தினால், திடகாத்திரமாக இருந்து தள்ளுமுள்ளு தெரியாவிட்டால் பிரதோஷக் காலங்களில் கபாலி கோவில் உள்ளே கால் வைக்க முடியாமல் இருப்பது; லேண்ட்மார்க் அருகே ‘பார்க்’ என்று நண்பருடன் பேசிக் கொண்டு செல்லும்போது உரிமையோடு மக்கள் ‘பார்க் ஹோட்டல்

இங்கே இல்லையே… வழி தவறிட்டீங்களா?’ என நட்போடு வழி காட்ட முயல்வது; என்று பலவிதத்தில் சென்னையின் flavor intact-ஆக இருக்கிறது.

நிறைய ஆர்ட் காலரிகள்; அவற்றில் விதவிதமான கண்காட்சிகள். ரசனைக்கேற்றவாறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், திருவிழாக்கள், பொருட்காட்சிகள் என்று ரசிக்கத்தக்க சுவாரசியமான இடம்.

உணர்வுத் தளத்தில் விரியும் உன்னதப் படைப்பு – வையவன்

அமுதசுரபி – சிஃபி: உணர்வுத் தளத்தின் முழு வெளிப்பாடு மட்டுமே கலையாகி விடுவதில்லை. வெளியீட்டு நயம், சிந்தனை, சொந்தக் கால் தடங்களின் வழியே கடந்து செல்லும் புலனுணர்வுகள், இப்படிக் கனிந்த பக்குவத்தை எட்டினால்தான் கலைஞன் தான் அனுபவித்துப் பதிவு செய்யும் ஆனந்தம் கிட்டும்.

வரைந்த படம் வேறு; அனுபவிக்கும் பிரத்யட்சம் வேறு. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நுட்பமான இடை வெளியை இல்லாமல் ஆக்குவதே கலையின் வெற்றி. பாரதிபாலன் இந்தக் தொகுதியில் அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கிறார். அவரது கிராமம், ஒளி, ஒý சுவை, அசைவு கணங்கள் என்ற மிகைப்படுத்தப்படாத ஸ்பஷ்டமான பதிவுகளோடு இந்தத் தொகுதியில் வெளிப்படுகிறது.

வண்ணத்துப் பூச்சியைக் கொன்றவர்கள் – பாரதிபாலன்,

பக்கங்கள் : 219, விலை : ரூ 80/- வெளியீடு: சந்தியா பதிப்பகம்

உலகமெலாம் தமிழோசை – திருப்பூர் கிருஷ்ணன்

அமுதசுரபி – சிஃபி:”ஒருமுறை என் சகோதரியுடன் பேருந்தில் கேரளப் பயணம் மேற்கொண்டேன். அவளுக்காக வழியில் இறங்கிப் பூ வாங்கினேன். அதற்குள் பேருந்து புறப்பட எத்தனித்தது. அவசர அவசரமாகப் பூவுடன் பேருந்தில் ஏறினேன். “பூவா!’ என்று உரத்த குரýல் கூவினார் நடத்துநர். “ஆமாம்!’ என்றேன் நானும் பதிலுக்கு உரத்த குரýல்! என் சகோதரியின் முகமெல்லாம் முறுவல். என்ன செய்ய? “பூவா’ என்றால் “போகலாம்!’ என்று அர்த்தம் என்பதும் நடத்துநர் ஓட்டுநரிடம் போகலாம் என்பதைத்தான் உரத்த குரýல் தெரிவித்திருக்கிறார் என்பதும் அப்போது எனக்குத் தெரியவில்லை!

இந்தி மக்கள், மிக ஆதரவான வர்கள். நாம் சுமாரான இந்தியில் பேசினால் கூட, அன்போடு சிரித்தவாறே பதில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் பேசினால் அவர்களிட மிருந்து பதில் கிடைப்பது சிரமம். ஆங்கிலம் பெரும் பாலானவர் களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல; தெரிந்த சிலரும் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

ஆங்கிலம் தெரியாவிட்டாலும் கூடத் தெரிந்ததாகக் காட்டிக்கொண்டு அதில் பெருமையும் அடைபவர்கள் தமிழர்கள் மட்டுமே. இந்தியர்கள் இருவர் எங்கு சந்தித்தாலும் தாய்மொழியில் பேசிக்கொண்டால் அவர்கள் மலையாளிகள் என்றும் தப்புத் தப்பான ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் தமிழர்கள் என்றும் சொல்வதுண்டு.

தாய்மொழியைத் தவிரக் கூடுதலாக ஓரிரு மொழிகள் தெரிந்துகொள்வது எல்லோருக்கும் நல்லது. குறிப்பாக எழுத்தாளர்களுக்கு மிக மிக நல்லது. எழுத்தாளர்கள் ராஜம்கிருஷ்ணனைப் போல அதிகப் பயணங்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் மனம் விசாலமடையும். தமிழ் மட்டுமே தெரிந்து தமிழகத்தில் மட்டுமே உழன்று கொண்டி ருக்கும் எழுத்தாளர்களால் குறுகிய கண்ணோட்டங்களிýருந்து மீள இயலாது. அடிமனத் திலேயே குறுகிய கண்ணோட் டங்கள் தவறு என்று அவர்கள் உணராதவரை வெறும் அறிவுபூர்வ விவாதங்களால் அவர்களை மாற்றவும் இயலாது. அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்கள், ஜாதி, மதம் போன்ற குறுகிய பார்வைகளை விட்டுவிட்டு மேலான தளத்தில் மனிதனை மனிதனாகப் பார்த்து எழுதப் பல காரணங்கள் உண்டு. அவர்கள் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதும் அதற்கான முக்கியமான காரணமாய் இருக்கக்கூடும். நாட்டின் பல பாகங்களையும் உலகின் பல பாகங்களையும் போய்ப் பார்த்து வருகிற போது மனம் சுலபமாய் விசாலமடைகிறது. “யாதும் ஊரே!’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த் தைகளை உண்மையாகவே அனுபவித்து உணர்ந்தால்தான் “யாவரும் கேளிர்!’ என்ற அடுத்த வார்த்தைகளின் ஆழம் புரியும்.”

சிந்தனையைக் கவர்பவர்கள்

மக்களை அதிகம் தாக்கம் செய்யும் புகழ் பெற்ற நூறு பேர்களை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அல் க்வெய்தாவின் அல்-ஸர்காவிக்கும் ஒஸாமாவுக்கும் பக்கத்தில் வாஜ்பேயும், புஷ்ஷ¤ம் இருக்கிறார்கள். ரப்பர் ஸ்டாம்புகளான கோ·பி அன்னானை ‘வளரும் நாடுகளின் வாய்’ என்றும் கொண்டலீசா ரைஸை ‘அடுத்த உள்துறை அல்லது பாதுகாப்பு மந்திரி’ என்றும் வருணித்துள்ளார்கள்.

ஆஸ்கார் கொடுக்கப்படும் பிரிவுகள் அனைத்திலும் வென்ற இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன், ஹாரி பாட்டர் மூலம் சிறிய வயதிலேயே மக்களை ஆக்கிரமிக்கும் ரௌலிங் பாட்டி, அமெரிக்காவின் ‘வணக்கம் தமிழகத்தை’ நடத்தும் கேடி கௌரிக், கூட நம்ம ஐஷ்வர்யா ராயுக்கும் இடம் உண்டு.

நிஜமாகவே மக்கள் மனதை மாற்றும் சக்தி கொண்ட பில் கேட்ஸ், போப், வ்ளாடிமிர் பூடின், நியுஸை கொடுக்கும் ரூபர்ட் முர்டாக், சர்ச்சைகளைக் கிளப்பும் அல்-ஜஸீரா, குப்பை கூளத்தைக் கூட கூவி விற்க செய்த ஈ-பே நாயகி மெக் விட்மான், அகியோர் கூட விப்ரோவின் ஆசிம் ப்ரேம்ஜி இருக்கிறார்.

பிரான்ஸ் சைக்கிள் போட்டியை வென்று கொண்டே இருக்கும் ஆர்ம்ஸ்ட்ராங், பாஸ்டன் பாட்ரியாட்ஸின் கோச் பெலிசிக், ஜீசசின் அதிகாரபூர்வ இயக்குநர் மெல் கிப்ஸன், புத்தகம் முதல் எல்லாவற்றிலும் ரசனையை மேம்படுத்தும் கனிவுள்ள ஓப்ரா, கல்யாணம் நிச்சயித்த பிறகு கோப்பையே வெல்லாவிட்டாலும் டைகர் வுட்ஸ், கலி·போர்னியாவின் ம.கோ.ரா. ஆர்னால்ட், அமெரிக்காவின் நிரந்தர காதல் மன்னன் கிளிண்டன், வருங்கால ஜனாதிபதி ஹில்லாரி, கூட நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, டேவிட் பெக்கம் என்று பட்டியல் நீளுகிறது.

இவர்களில் பில் கேட்ஸ், ஓப்ரா, போப், மண்டேலா ஆகியோர் ஏற்கனவே டைம் பத்திரிகையின் ‘வருட நாயகர்’ பட்டம் சூட்டப்பட்டவர்கள். ஆராய்ச்சியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் பட்டியலில் (டொவால்ட்ஸ் தவிர) என்னால் ஒருவரைக் கூட டக்கென்று அடையாளம் கண்டு பிடிக்க முடியாததுதான் மிகப் பெரிய வருத்தம்!

ரால்·ப் நாடெர் போல வேற எந்த முக்கியமானவரை விட்டுவிட்டார்கள் என்று ஒரு பட்டியல் போடலாம்.

முழு விவரங்களுக்கு

இறப்பு… கொலை… விபத்து…

தமிழ் சிஃபி.காம்: நடிகை சவுந்தர்யா மரணம்



32 வயதான சௌந்தர்யாவுக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்ரீதர் என்பவருடன் திருமணம் நடந்தது. மொத்தம் நான்கு மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் தயாரித்த ‘துவீபா’ என்ற கன்னட படம் கடந்த ஆண்டு தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 12 ஆண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்புக்கள் வரவே படிப்பை விட்டுவிட்டு நடிகையானவர் சௌந்தர்யா.

ராஜேஷ் பைலட், மாதவராவ் சிந்தியாவைத் தொடர்ந்து இன்னொரு ஹெலிகாப்டர் விபத்து. இந்தியாவில் காட்டப்படும் அலட்சிய மனப்பான்மை மனதில் நிழலாடுகிறது. பலவித கனவுகளுடன் இருக்கும் அனைவரையும் நினைக்கிறது மனம். திடீரென்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பகவத் கீதை தோன்றுகிறது. கொடுத்த வாழ்க்கைக்குக் கடவுளுக்கு நன்றியும்; ரம்பா, ஹேமாமாலினி செல்லும் விமானங்கள் பழுதின்றி பறக்கவும் மனம் வேண்டுகிறது.

Palestinians gather round Rantissi's Subaruஹமாஸ் தலைவர் கொலை: ஹமாஸின் தோற்றுனர் ஷேக் அஹ்மத் ஹாஸினைக் கொன்றது போலவே, அப்தெல் ஆஸிஸ் அல்-ராண்டிஸியும் இறக்கடிக்கப் பட்டார். இஸ்ரேலி ஹெலிகாப்டர்கள் அவரின் காருக்கு ஏவுகணைகள் கொண்டு தாக்கியிருக்கிறது. ஹமாஸின் நம்பர் டூவை வீழ்த்திவிட்டார்கள். ஆனால், மற்ற ஹமாஸின் அடுத்த தலைவர்கள், தொண்டர்களை வெகுவாக சூடேற்றும் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

பிறப்பு: 1947

படிப்பு: குழந்தை நல மருத்துவம்

தகவல்களுக்கும் படங்களும் — பிபிசி

வாரயிறுதிக்கு ஓ போடு!

உலாக்கு உலா



Pardon my Planet

ரொம்ப நாளாய் உறங்கிய கலீல் கிப்ரான் விழித்துக் கொண்டு விட்டார்.

இட்லி-வடையின் உதவியால் காம்ப்ளெக்ஸ் நம்பர்களின் ஞாபகம் வந்தது. எட்டாவதிலோ ப்ளஸ் ஒன்னிலோ ஆரம்பித்து சுவாரசியமாய் கூடவே வந்து கொண்டிருந்தது. எதற்கு பயன்படுகிறது, எங்கு உபயோகிக்கிறார்கள் என்று யாராவது சொல்ல வேண்டும்.

பெயரிலி கவிதை மழை பொழிந்து கொண்டிருந்தது போல் பிகேஎஸ் ஆரம்பித்து உள்ளார். ரமணீயின் பதிவுகள் இன்னும் விளங்கிக் கொண்டேனா என்று சந்தேகத்தோடு படிக்க வைக்கிறது. இவருடையது direct delivery.

டைனோ என்று வலைப்பதிவு ஆரம்பித்து கவிதை டைம் கொடுக்கப் போகிறாரோ!

வலைப்பதிவில் சிறுகுறிப்பாக இட்டதை இன்னும் கொஞ்சம் விவரங்கள் சேர்த்து தமிழோவியத்தில் கட்டுரையாக வந்துள்ளது.

உலகத்தமிழின் 43, 44 பதிப்புகள் வெளிவந்து விட்டது. அதில் வெளிவந்த காலச்சுவடு கண்ணன் கட்டுரைக்கு மெய்யப்பர் பதில் கொடுத்துள்ளார்.

தமிழ்-உலகத்தில் வரும் தொடருங்கள் கதைப் போட்டியையும் நடந்த பறிமாடல்களையும் இன்றைய தினமலர் கம்ப்யூட்டர் மலர் விவரிக்கிறது.

பாராவின் காதல் அத்தியாயங்கள் கிறங்கடிக்கும். மெல்லினத்தில் வரும் இளவயதுக் காதல், அலகில்லா விளையாட்டின் கதாநாயகனை உழற்றும் வாத்தியார் மகளுடனான காதல் தோல்வி, தூணிலும் இருப்பான் மீனாட்சி என்று எல்லாவற்றிலும் தொட்டுக் கொள்ள உபயோகித்த காதலை தலைப்பிலே வைத்து 19.75 காதல் கதைகள் வர ஆரம்பித்துள்ளது. இந்த சமயமாவது ஹீரோவும் ஹீரோயினும் சேருவாங்களா???



Rudy Park by Darrin Bell and Theron Heir



ராஜா எழுதியது:

1 புதிய வானம் அஃமார்க் மசாலா படம். அது எந்த வகையில் சிறந்தது என்று விளக்கினால் நல்லது.

2 “அடிதடி” இடம் பெற்றிருக்கும் பட்டியலில் “என்னம்மா கண்ணு” இல்லாதது குறையாக தெரிகிறது. என்னம்மா கண்ணு பரவலாக அனைவராலும் பாராட்ட பட்ட வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படம்.

கடமை கண்ணியம் கட்டுபாடு, கடலோர கவிதைகள், வேதம் புதிது, பூவிழி வாசலிலே, அண்ணா நகர் முதல் தெரு,நடிகன் ( சிறந்த நகைச்சுவை சித்திரங்கள், என் பொம்மு குட்டி அம்மாவுக்கு (சத்யராஜும், ரகுவரனும் சந்திக்கும் காட்சிகள் – மிக யதார்த்தம் ஆகியவை சத்யராஜ் படங்களுள் அமரத்துவம் பெற்றவைகளாக நான் கணிக்கிறேன்.

படங்களைப் பட்டியலிட்டது அவரது வளர்ச்சியை சொல்லவே. எப்படிப்பட்ட படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன… எங்கே எப்படி மாற்றங்களைக் கொண்டிருக்கிறார்… எவ்வாறு சத்யராஜ் என்னும் பொருள் பரிணாமம் பெற்று மக்கள் மனதில் பதிந்திருக்கிறது என்பதை சொல்ல, நான் கண்ட அவருடைய ஹிட் படங்களை பட்டியலிட்டேன்.

புதிய வானத்தை மிக சமீபத்தில்தான் பார்த்தேன். (அப்பொழுதெல்லாம் பொறுக்கியெடுத்துதான் படம் பார்ப்போம்… சில படங்கள் மசாலா என்பதால் தள்ளுபடி செய்யப்படும். ‘ஜீவா’ போன்ற சில காவியங்கள், அமலாவின் நீச்சலுடைக்காக தடா செய்யப்படும்.) சன் டிவியின் ஒரு சனி மதியத்தில் ‘புதிய வானம்’ காட்டப்பட்டது. அன்று மாலை விஜய் நடித்த படம். புதிய வானத்தின் ஆரம்பத்தில் டாங்கர் ட்ரெய்லர் நிறைந்த சண்டைக் காட்சி. கடைசியில் வீரதீர சண்டைக்குப் பின் குழந்தையைக் காப்பாற்றி தாயிடம் ஒப்படைக்கிறார். அதே டாங்கர் ட்ரெயிலர்+க்ரேன்கள் நிறைந்த வளாகத்தில் ஹீரோயினை மீட்டெடுக்கிறார் விஜய், பத்து வருடத்திற்குப் பிறகு. புதிய வானமுக்கு முன்பே இவ்வகை சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருக்கக் கூடும். ஆனால், ஜனரஞ்சகமான வெற்றிப் படம் என்பதை சொல்ல நினைத்தேன்.

‘என்னம்மா கண்ணு’ இன்னும் பார்க்கவில்லை. அண்ணா நகர் முதல் தெரு கூட கடைந்தெடுத்த மசாலாப் படம்தான். நல்ல பாடல் (மெதுவா… மெதுவா ஒரு காதல் பாட்டு…), ரெண்டு மூணு டிஷும் டிஷூம், காமெடி சரி விகிதாசாரத்தில் வந்த படம்.

வாரயிறுதிக்கு ஓ போடு!

எனக்குப் பிடித்த கதைகள் – பாவண்ணன் (51-100)

51. திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் – மு.தளையசிங்கத்தின் “கோட்டை”

52. மோகமும் வேகமும் – த.நா.குமாரசாமியின் “சீமைப்பூ”

53. நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும் – வ.அ.இராசரத்தினத்தின் “தோணி”

54. இயல்பும் இன்பமும் – மா. அரங்கநாதனின் “சித்தி”

55. பேதம் உணராத குழந்தைமை – அ.முத்துலிங்கத்தின் “அக்கா”

56. கடவுளும் குழந்தையும் – பி.எஸ்.ராமையாவின் “நட்சத்திரக் குழந்தைகள்”

57. அழுக்காறும் ஆவேசமும் – எஸ்.பொன்னுத்துரையின் “அணி”

58. அன்பாலான உலகம் – து.ராமமூர்த்தியின் “அஞ்ஞானம்”

59. உதிர்தலும் உருமாற்றமும் – அ.செ.முருகானந்ததனின் “பழையதும் புதியதும்”

60. எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி – கிருத்திகாவின் “தீராத பிரச்சனை”

61. அதிகாரமும் அடிமைத்தனமும் – துர்கனேவின் “முமூ”

62. ஒரு கல்லும் இரண்டு மாங்காய்களும் – அ.மாதவையரின் “ஏணியேற்ற நிலையம்”

63. கசப்பும் இனிப்பும் – நா.பார்த்தசாரதியின் “வேப்பம்பழம்”

64. இயற்கை விடுக்கும் செய்தி – பிரபஞ்சனின் “பிரும்மம்”

65. பழைய முடிவும் புதிய முடிவும் – ஆர்.சூடாமணியின் “ரயில்”

66. உரிமையும் பருவமும் – கிருஷ்ணன் நம்பியின் “மருமகள் வாக்கு”

67. உளைச்சல்களும் ஊசலாடும் மனமும் – காளிந்திசரண் பாணிக்கிரஹியின் “நாய்தான் என்றாலும்”

68. தயக்கங்களும் தந்திரங்களும் – சி. ஆர்.ரவீந்திரனின் “சராசரிகள்”

69. விலைகொடுத்துக் கற்கும் பாடம் – தூமகேதுவின் ‘போஸ்டாபீஸ்’

70. உயிரின் போராட்டம் – தெளிவத்தை ஜோசப்பின் “மீன்கள்”

71. இந்திரா பார்த்தசாரதியின் “நாசகாரக்கும்பல்”

72. அழித்தலும் அஞ்சுதலும் – உமா வரதராஜனின் “எலியம்”

73. தேடியதும் கிடைத்ததும் – கரிச்சான் குஞ்சுவின் “நு£றுகள்”

74. ஆவேசமும் குழந்தைமையும் – வில்லியம் பாக்னரின் “இரு சிப்பாய்கள்”

75. தந்திரங்களும் அவலங்களும் – நாஞ்சில் நாடனின் “ஒரு இந்நாட்டு மன்னர்”

76. அச்சமும் அருவருப்பும் – மலர்மன்னனின் “அற்பஜீவிகள்”

77. அகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் “ஞானதா”

78. புரிந்துகொள்ள முடியாத புதிர் – ஜெயந்தனின் “அவள்”

79. மனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் “அலையும் சிறகுகள்”

80. அக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் – ஜே.வி.நாதனின் “விருந்து”

81. ஒருகணக் காட்சி – சிவசங்கரியின் “வைராக்கியம்”

82. மனத்தின் மறுபக்கம் – ந.முத்துசாமியின் “இழப்பு”

83. செய்யாத தவறும் தியாகமும் – தி.சா.ராஜூவின் “பட்டாளக்காரன்”

84. மூலதனம் என்னும் அளவுகோல் – விந்தனின் “மாடும் மனிதனும்”

85. ஐயமும் ஆவேசமும் – என்.எஸ்.எம்.ராமையாவின் “ஒரு கூடைக் கொழுந்து”

86. புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம் – திலீப்குமாரின் “மூங்கில் குருத்து”

87. குகைக்குள் ஒரு பயணம் – ஆர்.ராஜேந்திரசோழனின் “கோணல் வடிவங்கள்”

88. இயற்கையும் எதார்த்தமும் – மாத்தளை சோமுவின் “தேனீக்கள்”

89. சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம் – என்.கே.ரகுநாதனின் “நிலவிலே பேசுவோம்”

90. அகமாற்றத்தின் நிறம் – ஜயதேவனின் “தில்லி”

91. நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள் – என்.எஸ்.எம்.ராமையாவின் “ஒரு கூடைக்கொழுந்து”

92. மனிதர்களை மதிப்பிடும் கலை – கல்கியின் “கேதாரியின் தாயார்”

93. திரும்பிச் செல்லமுடியாத இடம் – கேசவதேவின் “நான்?”

94. தன்னலத்தின் வேஷங்கள் – கே.ஏ.அப்பாஸின் “அதிசயம்”

95. வெறுப்பும் அன்பும் – சாந்தனின் “முளைகள்”

96. பொறாமை என்னும் நெருப்பு – ந.சிதம்பர சுப்ரமணியனின் “சசாங்கனின் ஆவி”

97. ஓங்கியலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல் – எட்கர் ஆலன்போவின் “இதயக்குரல்”

98. அமைதியடைந்த கடல் – சோமுவின் “உதயகுமாரி”

99. நாட்டமும் நடிப்பும் – கி.சந்திரசேகரின் “பச்சைக்கிளி”

100. உயிராசையும் தடுமாற்றமும் – ஐல்ஸ் ஐக்கிங்கரின் “ரகசியக் கடிதம்”

நன்றி: திண்ணை இலக்கியக் கட்டுரைகள்

சத்யராஜ் எனப்படும் பொரிம்பு

நேசமுடன் – மடல் இதழில் சத்யராஜ் தன்னை ப்ராண்ட் செய்வதை அலசியுள்ளார் சிஃபிராயர். சத்யராஜ் நடித்து மனதில் நின்ற படங்கள்:



நூராவது நாள்

காக்கி சட்டை

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

தம்பிக்கு எந்த ஊரு

24 மணி நேரம்

எனக்குள் ஒருவன்

நான் சிகப்பு மனிதன்

பிள்ளை நிலா

பகல் நிலவு

முதல் மரியாதை

ஸ்ரீ ராகவேந்திரர்

மிஸ்டர் பாரத்

விக்ரம்

கடலோரக் கவிதைகள்

வேதம் புதிது

முதல் வசந்தம்

இரவுப் பூக்கள்

விடிஞ்சாக் கல்யாணம்

பாலைவன ரோஜாக்கள்

மந்திரப் புன்னகை

பூவிழி வாசலிலே

மக்கள் என் பக்கம்

இனி ஒரு சுதந்திரம்

அண்ணா நகர் முதல் தெரு

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

ஜீவா

புதிய வானம்

மல்லுவேட்டி மைனர்

நடிகன்

பிரஹ்மா

வால்டர் வெற்றிவேல்

அமைதிப்படை

தாய்மாமன்

மாமன் மகள்

அடிதடி



வெங்கடேஷிடம் ஒரு வேண்டுகோள்: நேசமுடன் இதழை தமிழ் சமாசாரிலோ, சிஃபியிலோ அல்லது உங்கள் வலைப்பதிவிலோ இற்றைப்படுத்த வேண்டும். தேடுதல், சுட்டுதல், கோப்பாக்குதல் எல்லாம் கொஞ்சம் சுளுவாகும்!?!

(படப் பட்டியலுக்கு) நன்றி: தினகரன்