Category Archives: Uncategorized

விமர்சனம் எழுத வேண்டிய ஹாலிவுட் படங்கள்

  1. The Accidental Tourist: அமைதியான படம். முடிவு ஏமாற்றமளிக்கிறது, ஆண்,பெண்களின் திருமண உறவின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நன்கு அலசும் படம்.
  2. Duplex: தயவு செய்து பார்க்காதீர்கள். ஏன் என்று எழுதலாம்.
  3. Adaptation: நான் ஒருவிதமாகப் புரிந்து சிலாகித்தேன். என் மனைவி இன்னொரு விதமாய் புரிந்து கொண்டு ரசித்தாள். உங்கள் ரசனை எப்படி இருந்தாலும் பார்க்க வேண்டிய படம்.
  4. Y tu mama tambien: ஸ்பானிஷ் படங்களுக்குத் தப்பாமல் கொச்சைப்படுத்தபடும் உறவுமுறைகள், அதிர்ச்சியூட்டும் காட்சியமைப்புகள், அடவைஸ் கொடுக்கும் தோரணை என்றிருந்தாலும், முடிவு என்ன என்று பார்த்த பிறகு, மீண்டும் முதலில் இருந்து மறுவாசிப்பைக் கோரும் படம்.
  5. Mulloholland Drive: வித்தியாசமான திரைக்கதை அமைப்பு. ஆய்த எழுத்தை ஆராதித்தால், இந்தப் படத்தையும் இரு முறை பார்க்கலாம்.
  6. Bend it like Bekham: நார்மல் படம். நம்ம ஊரு கதை.
  7. Road to Perdition: டாம் ஹான்க்ஸ் உருப்படியாக நடித்த (அரிதான) படம். அந்தக் கால நடை உடை சமாசாரங்களை இம்மி பிசகாமல் கொண்டு வந்ததற்காகவே கை தட்டலாம் என்றலாம், சிறப்பான திரைக்கதை, முடிவு என்று பலதையும் சொல்ல வேண்டும்.
  8. Inventing the Abbotts: ஜெனிஃபர் கானலி சிந்தனையைத் தூண்டாவிட்டாலும், உளவியல் அலசல்களை சப்-டெக்ஸ்ட்டாக சொல்லுகிறார்கள். உண்மை என்ன என்று தோண்டித் துருவுகிறோம்; தெரிந்து விட்ட அடுத்த விநாடியில் புழுவாய்த் துடிக்கும் சில கதாபாத்திரங்களின் ஆய்வு.
  9. Bruce Almighty: ஒரே ஒரு தபா பார்க்கலாம். அற்புதமாக எடுக்கப் படவேண்டிய கதையை எவ்வாறு கொடுமை படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ள. நல்ல கரு; மோசமான திரைக்கதை + படத்தொகுப்பு!
  10. Chicago: நொடிக்கொரு பாடல் வந்தாலும், அலுக்காமல், ஒவ்வொன்றிலும் அசத்திய, தியேட்டர் டிராமாவைத் தழுவிய படம். ஒரிஜினலைப் பார்த்து விட்டு படத்திற்கு இண்ட்ரோ கொடுக்க வேண்டும்.

மறுமொழிக் கவியருவி

நடக்கும் ஐ.பி.கே.எஃப் விவாதம் (163) கஞ்சி சித்தர்களை (170) மறுமொழிகளில் மிஞ்சிவிடும் போல் இருக்கிறது. எட்ட நின்று பார்த்ததில் எனக்குத் தோன்றியவை சில:

1. தமிழ்ப் படைப்பாளிகளின் சமூக இருப்பு:

ஒரு படைப்பாளி எல்லாப் பிரச்சினைகளிலும் தனது கருத்தைப் பதிவுசெய்யவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. ஒருவருக்குக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நிலைப்பாடு எதுவும் இல்லாமல் இருப்பதற்கோ அல்லது அப்படியே இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் இருப்பதற்கோ உரிமையுண்டு. தன்னுடைய நிலைகளையும் கோழைத்தனத்தையும் பாதுகாத்துக் கொள்வதும் கூட ஒருவரது அடிப்படை உரிமையே. ஆனால் ஒரு சமூகம் நீடித்திருப்பதற்கான அடிப்படை நியாயங்கள் மீறப்படும்போதுகூட ஒருவர் எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை என்ற நிலை அந்த நியாயங்களை அழிப்பவர்களை ரகசியமாக ஆதரிப்பதாகிவிடும்.

மிக நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கூடத் தமிழ் எழுத்தாளர்களிடையே அவர்களது தனிப்பட்ட உறவுநிலைகள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. (‘கலைஞரின் கைது வைபவத்தின் போது… மனுஷ்யபுத்திரன்)

2. பலரும் முன்பே நிர்ணயிக்கப்பட்ட முடிவுரைகளை மனதில் வைத்துக் கொண்டுதான் மறுமொழியவே ஆரம்பிப்பது போல் தோன்றுகிறது.

3. ஒருவரின் எழுத்தை வைத்து, (கருப்பொருளை விட்டுவிட்டு) தனிமனிதரை குறித்த அபிப்ராயத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

4. மறுமொழிப் பெட்டியில் பதில் கொடுப்பதை விட சொந்த வலைப்பதிவில் எழுதுவதால், எழுத்துக்கள் கோர்வையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

5. ஈழ வலைப்பதிவாளர்கள் பெரும்பாலானோர் களத்தில் இறங்கி, தங்களின் இரண்டு செண்டுகளை சொன்னார்கள். இந்தியத் தமிழர்களில் ஒரு சிலரே மௌனம் கலைத்தனர். ஏன் என்பது புரிவது போல் இருந்தாலும், ‘நோநோ’க்களும், ‘நேமில்லை’க்களும், ‘அனானிமஸ்’ திருவாய்மொழிகளும் முகம் கலைக்காதது ஏன் என்று குழப்பமாகவே இருக்கிறது.

6. அசிங்கமான வார்த்தை சொல்லி அழைத்தால், மறுத்துப் பேசுபவர்களும், கிட்டத்தட்ட அதே லெவலுக்கு இறங்குவது நாகரிகமா அல்லது ‘விடாக்கண்டன் – கொடாக்கண்டன்’தனமா என்று மனசுக்குள் பட்டிமன்றம் நடத்தி வருகிறேன்.

7. முகமூடி போட்ட ரியல் முகங்களுக்கும், அமைதி காத்தோரும், இட்லி-வடை போல பெரிய மனுஷத்தனத்தோடு கலந்துகொண்டவர்களை நான்கு வருடம் கழித்து ‘சுட்டி’க்காட்டி உரல் கொடுப்பார்கள்.

8. கும்புடு போட்டு பேச்சு வெட்டியாகாமல், செயல்திட்டமாகவோ, ஒவ்வொருவரின் எண்ண முடிவுரைகளாகவோ இல்லாமல், அங்கும் இங்கும் சிதறலாகவே நின்று விடுகிறது. (இதற்கும் காரணம் ஓரளவு ஊகிக்க முடிகிறது: இந்த மாதிரி ‘resolutions’களுக்கு பின்னூட்டங்களாக சில நக்கல், குத்தல் பதிவுகள் வந்து, தொடர்வதால் என்று நினைக்கிறேன்).

9. என்னதான் ஸ்மைலி, கண்ணடிப்பு போட்டாலும், இணையத்தில் எவர் பதில் பேசினாலும் ‘preconceived notion’ கொண்டே பார்க்கப்படுகிறது.

10. இந்தப் பதிவு, ‘யார் மனதையும் புண்படுத்த அல்ல; புரிந்து கொள்ளவே!’ என்று டிஸ்க்ளெய்மர் போட்டாலும்; இந்த மாதிரி போஸ்ட்களைப் போலவே எந்தப் பயனும் கொடுக்காதது.

தலைப்புக்கு நன்றி : மறுமொழிக் கவியருவி

நன்றி: குமுதம்.காம்

தொல். திருமாவளவனுடன் ஒரு நேர் காணல்: “ஈழவிடுதலை, தமிழர் பாதுகாப்பு, திரைப்படங்களின் மூலமாக தினிக்கப்படும் தமிழர்களின் பண்பாட்டு சீரழிவிற்கு எதிர்ப்பு என வருகிறபோது எங்களுக்கும் பா.ம.க.விற்கும் ஒத்த கருத்துகளே நிறைந்திருக்கிறது.”

குறிப்பு: உங்கள் கருத்துகளை திருமாவளவனுடன் பகிர்ந்து கொள்ளலாம். 94440 10076 , 24841720



சுள்ளான்: “படத்தில் மொத்தம் 59 சீன்கள். இதை 92 நாட்களில் சென்னை, வைசாக், பாண்டிச்சேரி, நியூசிலாந்து ஆகிய இடங்களில் எடுத்திருக்கிறார்கள். படத்திற்கு, வெளிநாடுகளுக்கு 19 பிரிண்ட், வெளிமாநிலங்களுக்கு 19 பிரிண்ட், இங்கே 118 பிரிண்ட் என மொத்தம் 156 பிரிண்ட் போட்டிருக்கிறார்கள். சென்னை கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரியம் பகுதியிலும், ஏவி.எம்.ஸ்டுடியோ, பிரசாத் ஸ்டுடியோ ஆகிய இடங்களில் தனுஷ் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்தார்கள்.

தினமும் நெற்றியில் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி, அடிபட்ட வடு மாதிரியான மேக்கப் செய்துகொள்வாராம் தனுஷ். இதற்காக மும்பையிலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட ஸ்டிக்கர்கள் ஸ்பெஷலாக வரவழைத்திருக்கிறார்கள். பசுபதி தினமும் ஒரு ரீல் மட்டுமே டப்பிங் பேசுவாராம். அதுவும் மிகவும் உச்சஸ்தாயியில் டப்பிங் இருப்பதால், தொண்டை வலிக்காமல் இருக்க அதிமதுர குச்சிகளை வாங்கி மென்றுகொண்டே இருப்பாராம்.



ஐய்யர் ஐ.பி.எஸ்: கவிஞர் பிறைசூடன் எழுதிய பாடல்…

‘‘டவலு டவலு டவலு பேபி

டவலு மட்டும் இல்லாங்காட்டி

அமுலுபேபி

கும்தலக்கா கும்மா அம்தலக்கா

அம்மா

போடு போடு போட்டு தாக்கடி

கும்மாங்குத்து குத்தி குத்தி

பட்டையை கிளப்படி’’



அசோகமித்திரன் பக்கம்:

  • உண்மையே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் சொன்னால்தான் கவனிக்கப்படுகிறது.

  • வாசகச் சோதனையின் உச்சம் என்ற ‘உலிஸிஸ்’ நாவலைக் கூறலாம்.



காலபைரவன் கவிதை: மரணம் 1

அவர் திடீரென மறைந்து விட்டதாக

செய்தி வருகிறது.

மரணம் அப்படியன்றும்

திடீரென வந்து விடுவதில்லை

நள்ளிரவில்

நாயின் அழுகை

சாக்குருவியின் சிறகசைப்பு

கோட்டானின் கூவல்கள்

வழியாக மரணம் தன் வருகையை

நிச்சயப்படுத்துகிறது.

மரணம் தங்கள் வீட்டையே

வட்டமடித்ததாகக் கூறி அழும்

பெண்களின் அழுகை

மரணத்தின் வருகையை இன்னும் அடர்த்தியாக்குகின்றது.

அந்த ஊருக்கு

குறிப்பிட்ட அந்த தெருவுக்கு

பின் அந்த வீட்டுக்கு

மரணம் பல ஒத்திகைகளுடன்

வந்து சேருகிறது.

மரணம் ஒருவரை நெருங்கி விட்டதென்பதை

அவர்

உத்திரத்தைப் பார்த்து விடும் இறுதி மூச்சு

உறுதி செய்கிறது.

உரிய நேரத்திற்காக மரணம்

மிக நிதானமாக ஆனால் கவனமாக

காத்திருக்கிறது.

கடைசியில்

அந்த நபர் இறந்து விடுகிறார்.

மரணம்

ஒரு பூவைப்போல

அங்கே மெதுவாகப் பிறந்துவிட்டிருக்கிறது.

மாலதி மைத்ரி: “ஆண்களைப் போல் அன்றி பெண்கள் எப்போதும் கூட்டமாகவும் துணையோடும் நெருக்கமாகவுமே பழகக் கூடியவர்கள். அவர்களுடைய ஒவ்வொரு சைகையும் ஆண்களுக்கு ஓர் அர்த்தத்தையும் தங்களுக்குள் வேறொரு அர்த்தத்தையும் நடித்துக் காட்டுகின்றன. தங்கள் உடலைப் பற்றியும் உணர்வுகளைப் பற்றியும் பெண்கள் அதிக தடைகளற்றுப் பேசக்கூடியவர்களே. பெண்களுக்கிடையிலுள்ள அன்னியோன்யமும் நேசமும் காதலைவிடவும் காமத்தை விடவும் தீவிரமும் ரகசியமான மர்மமும் நிறைந்ததுமாகவுள்ளது. இதைப்பற்றி அவர்கள் குற்றவுணர்வு கொள்வதில்லை.

ஒவ்வொரு கிராமத்துப் பெண்ணும் தனது தோழிகளைக் காதலனைவிடவும் கணவனை விடவும் நேசிப்பவளாகவே உள்ளுக்குள் இருக்கிறாள். ஆண், அவள் மீது கவிழ்க்கும் பாலியல் வலிமையோ, காவியக் காதலோ இந்த நேசத்தை அழிக்க முடியாதவை. இது உள்ளுக்குள்ளிருந்து ஒவ்வொரு பெண்ணையும் எல்லாத் துயரங்களையும் வலிகளையும் தாண்டி வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேசமென்பது பாலியலையெல்லாம் தாண்டிய தீவிரத் தன்மையுடையது. இதில் உடல் சார்ந்த நெருக்கம் நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் மனநெருக்கமும் இன்பமும் உள்ளுக்குள்ளே இருந்துக்கொண்டேயிருக்கிறது.

தன் மீது ஏதேச்சையாக மோதிய ஒருவன் மீது ஒரு இளம்பெண் தீராத காதல் கொண்டு, உடனே ஸ்லோமோஷனில் பறந்து தன்னுடலைக் குலுக்கி ஆடுவதாகக் காட்டுவதைவிட பெண் தன்பால் காதல் திரையில் காட்டப்படுவது பெரிய ஆபாசமொன்றுமில்லை. முன்னது பண்பாட்டு ஆதரவுப் பெற்றது. பின் நிகழ்வு இவர்களை ஏதோ ஒரு வகையில் தொந்தரவு செய்கிறது. அது என்ன? இவர்களுடைய புனித குடும்பம் என்ற கற்பனையுலகம் இங்கு கேள்விக்குள்ளாகிறது. ஆணின் உறவை மீறி ஒரு பெண் செல்ல முடியும் என்ற உண்மை இவர்களை முகத்தில் தாக்குகிறது.

தன்பால் காதலோ, எதிர்பால் காதலோ எதுவானாலும் காட்சிப்படுத்தி விற்கப்படுவதற்கானவை அல்ல. எதிர்பால் காதலைப்போல தன்பால் காதலும் இயல்பானதுதான். (அதனால்தான் பல நாடுகள் சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது). இது இயற்கைக்கு புறம்பானது என்று சில வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் இனப்பெருக்கத்துக்கு உரிய சேர்க்கை மட்டுமே இயற்கையானது. காதல், காமம், அன்பு, நட்பு, குடும்பம், ஒழுக்கம், சட்டம், மதம் எல்லாம் இயற்கைக்கு புறம்பானதே.”



நினைவில் பதித்த சுவடுகள் – வாஸந்தி:

  • ‘‘நல்ல வேளை காந்தியை ஒரு முஸ்லிம் சுடல்லே’ என்றாள் என்னிடம். ‘சுட்டிருந்தா ரொம்ப பெரிய கலாட்டா நடந்திருக்கும். முஸ்லிம்களை இந்துக்கள் க்ளோஸ் செய்திருப்பாங்க’’ என்றாள். நானும் க்ளோஸ் ஆகியிருப்பேன்’’ என்று அவள் சொன்னபோது ‘சீ அப்படிச் சொல்லாதே’ என்று அவளைக் கட்டிக் கொண்டு நான் அழுதேன்.
  • பெண்ணியம் என்ற வார்த்தையைக் கேள்விப் பட்டிராத என் பாட்டி, மாசற்ற சீதையை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்ன ராமனின் அநியாய கோபத்தை ஏற்ற இறக்கத்துடன் விவரிக்கும்போது என் நெஞ்சு பதறும். கர்ப்பிணி சீதையை நாடு கடத்த ஆக்ஞை இட்டதும் ‘என்னைப் பெற்ற தாயே என்னை ஏற்றுக்கொள்’ என்று சீதை பூமா தேவியைக் கேட்ட அவலத்தைப் பாட்டி உருகி உருகிச் சொல்லும்போது நாங்கள் உள்ளம் வெடித்துக் கண்ணீர் விடுவோம்.

இந்திய சுதந்திர தினத்துக்கு உலகளாவிய விடுமுறை



JAI H
JAI HIN JA
JAI HIND JAI HI
JAI HIND JAI H
JAI HIND JAI HI
JAI HIND JAI
JAI HIND JAI
JAI HIND JAI
JAI HIND
JAI HIND J
JAI HIND JAI H
JAI HIND JAI HIN
JAI HIND JAI HIN JAI H
JAI HIND JAI HIND J JAI HIND J
JAI HIND JAI HIND JAI H J JAI HIND J
JAI HIND JAI HIND JAI HIND JAI JA JAI HIND JAI
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND J JA JAI HIND
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND J JAI HIND JAI
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI
JAI HI JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN JAI HI
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI H
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI JAI
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI HIN J
JAI HI JAI HIND JAI HIND JAI HIND JAI HIND JAI
JAI H JAI HIND JAI HIND JAI HIND JAI HIND J
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND
JAI HIND JAI HIND JAI HIND JAI HIND
JAI HIND JAI HIND JAI HIND JAI
JAI HIND JAI HIND JAI HIND JAI
JAI HIND JAI HIND JAI HIND J
JAI HIND JAI HIND JAI HIND
JAI HIND JAI HIND JAI HIN
JAI HIND JAI HIND JAI HI
JAI HIND JAI HIND JA
JAI HIND JAI HIND J
JAI HIND JAI HIN
JAI HIND JAI HIN
JAI HIND JAI HI
JAI HIND JAI H
JAI HIND JAI
JAI HIND JAI
JAI HIND JAI
JAI HIND
JAI HIN
JAI HI
JAI H
JAI

மைக்ரோ ஒட்டக்கூத்தரின் தமிழோவியம் விமர்சனம்

பழையன கழிதலும் புதியன புகுதலும் – வந்தியத்தேவன் : என்னுடைய இளமைக் காலத்தைக் கிளறும் அருமையான கட்டுரை. நன்றி. rediff.com: Piperno is cause of Paes-Bhupathi split என்று கதைத்தாலும், மஹிமா சவுத்ரிதான் காரணம் என்று சொல்கிறார்கள் 😛

Where did the crazy 15/30/40 tennis scoring system come from? : Tennis scoring | Why are tennis games scored as 15-30-40?

இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் பற்றி – பத்ரி சேஷாத்ரி : எம்.ஆர்.எஃப். ஸ்பின் அகாதெமியும் நடத்துகிறதா? இல்லையானால், ஒன்றை ஆரம்பிக்கச் சொல்ல வேண்டியதுதான் 🙂

முத்தொள்ளாயிரம் : சோழன் வீதி உலா – என். சொக்கன் : ராஜாவை விதவிதமாகத் துதித்திருக்கிறார்கள். சோழன் மனங்குளிர்ந்து புலவர்களுக்கு பரிசு கொடுத்திருப்பார் 🙂



>>>குளிர்ந்த மாலை அணிந்த சோழனை

சங்கப் பாடல்கள் பலவற்றிலும் இந்த குளிர்ந்த மாலை வருகிறதே? அது எப்படி இருக்கும்? இப்பொழுது கிடைத்தால், சம்மருக்கு சௌகரியமாக இருக்கும்.



>>>நீல நிறக் குவளை மலர்கள்

குவளை மலரின் படம் போட்டிருக்கலாமே! இந்த மலருக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்?

கவிதை : அப்பியாசம் – வந்தியத்தேவன்: ஒரு சார்பை மட்டும், புரியாத மொழியில் இங்கு வெளியிட்டது வருந்த வைக்கிறது. குறைந்தபட்சம், எதற்காக இந்தக் ‘கவிதை’ எழுதப்பட்டது என்பதற்கான சுட்டிகளாவது கொடுக்கப் பட்டிருக்க வேண்டும் 😦

3D கதைகள் : கறுப்பு வெள்ளை கனவுகள் : கலக்குங்க ‘தகடு’ குமார் 🙂

நேர்கோட்டுப்பாதையில் இட்டுச் செல்லாமல், பலவழிப் பாதை கதைகளைத் தருவீர்கள் என்று நம்புகிறேன். Recursive-ஆக எழுதி காய விட்டு விடாதீர்கள் 😉 வாசகர்களுக்கு அவ்வப்பொழுது வீட்டுப் பாடங்கள் மாதிரி, சில க்ளூக்கள், அவர்களையும் பங்குபெறச் செய்வது போன்ற பரிசோதனைகளையும் செய்து பார்க்கலாம்.

நிறைய எதிர்பார்க்கிறேன். நன்றி.

கோடம்பாக்கம் : இசையமைப்பாளர் பரத்வாஜுடன் ஒரு பேட்டி – என்.டி. ராஜன் : ஏமாற்றம் அளிக்கும் பேட்டி 😦

எல்லாக் கேள்விகளுக்கும் மேலோட்டமான பதில்; ‘தனிப்பட்ட ஒரு இசையமைக்கும் விதம்’ என்றால் என்ன, எப்படி மாறுபட்டது என்று எல்லாம் உப-கேள்விகள் கேட்டிருக்கலாம்.

திரைவிமர்சனம் சுள்ளான் – கணேஷ் சந்திரா: நச்

காந்தீய விழுமியங்கள் : பால்ய விவாகம் – ஜெ. ரஜினி ராம்கி : எந்த கருத்துகள் ‘யங் இந்தியா’, எந்த கருத்துகள் காந்தியினுடையது, எது ஆசிரியருடையது என்பதை எளிதாக அறியமுடியவில்லை. color coding கொடுங்க ப்ளீஸ்.

ரஜினி ராம்கி இன்னும் கோர்வையாக எழுதுவாரே! 🙂

இசை உலா : ஸ்டுடியோ 1234 வழங்கும் வாழ்க ‘பாரதம்’: அருமையான ஆரம்பம்; இனிமையான குரல்; தெளிவாகப் புரியக்கூடிய பாடல் வரிகள். ஏன் இன்னும் ஸ்ரீகாந்த் திரையிசைக்குச் செல்லவில்லை என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா!?

சுதந்திர தின வாழ்த்துக்கள்.

கொஞ்சம் monotony-யையும், சேர்ந்திசை வாசனையும் தவிர்த்திருக்கலாம் என்று என்னைப் போன்ற சினிமாப் பாடல்விரும்பிக்குத் தோன்றுகிறது!

தராசு : ஒலிம்பிக்கும் இந்தியர்களின் எதிர்பார்ப்புகளும் – மீனா: ஏமாற்றம் தருகிறது தராசு. புளித்துப் போன மாவை மேலும் புளிக்க விட்டிருக்கிறீர்கள். ஆக்கபூர்வமாக எதுவும் இல்லாமல், கேள்விகளால் மட்டுமே கட்டுரை நிரப்பப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு தேசத்துக்கு ஒவ்வொரு குறிக்கோள். இந்தியாவுக்கு ஏழ்மையை நீக்குவது முக்கியத்துவம் பெற்றிருக்கலாம்.

உங்கள் ஸ்டைலிலேயே சம்பந்தமில்லாத பின்குறிப்பு: பி.கு.விற்கும், மெயின் குறிப்புக்கும் சம்பந்தம் இருந்தால்தான் பின்குறிப்பு; இல்லாவிட்டால், அதற்குப் பெயர் ‘தனி குறிப்பு’ அல்லது ‘உப குறிப்பு’ 🙂

சரித்திரங்கள் மீண்டும் நிகழும்; விபத்துகள்? – ரமா சங்கரன்: டாலே அல்ல… டேலி – (Daley, Richard Joseph. The American Heritage Dictionary of the English Language: Fourth Edition. 2000.)

எழுத்தாளர் பிரபஞ்சன் அளித்த பிரத்யேக பேட்டி – கணேஷ் சந்திரா: மிகவும் சுருக்கமான பேட்டி. ஆற அமர உட்கார வைத்து பேசியிருக்கலாம் 😉

Thendral.com – ‘தென்றல்’ மணிவண்ணனின் பிரபஞ்சன் பேட்டி

  • புதுமைப்பித்தனில் தொடங்குகிறதா நவீன இலக்கியம்?

  • குழு மனப்பான்மை?

  • பல்கலை.களும் பேராசிரியர்களும் படைப்பாளர்களும்

  • சிற்றிதழ்களின் இடம்

  • மரபும் புதுசும்

  • படைப்பாளியாக என்ன படிக்க வேண்டும்?

  • புலம்பெயர்ந்த தமிழர்கள் படிக்க வேண்டிய தமிழர்கள்

  • கல்கி போன்ற சிலர் ஏற்கனவே இருக்கும்போது, தமிழில் நீங்கள்தான் முதல் வரலாற்றுப் புதினம் எழுதியவர் என்று ஏன் அழைத்துக் கொண்டீர்கள்?

ஓடிப் போனானா ? – பகுதி 4 – ஹரிகிருஷ்ணன்: அருமை

பாராவின் காமெண்ட்“பத்திரிகை ஆசிரியருக்கு வாரண்ட் அனுப்புவதெனில் பதவியின் பெயர், அதனைத் தொடர்ந்து ஆசிரியரின் பெயர் இரண்டையும் தெளிவாகக் குறிப்பிட்டே அனுப்புவார்கள். வாரண்டின் பிரதியொன்று அவசியம் பதிப்பாளருக்கும் போகும். மேற்படி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் ‘குறிப்பிடப்பட்டிருந்த’ ஆசிரியர் பேருக்குத்தான் வாரண்ட் சென்றிருக்கவேண்டும். பாரதியின் பெயர் வாரண்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன்.”

அள்ள அள்ளக் குறையாது… 3 – மதுரபாரதி : அருமை

என்னை எழுதியவர்கள்

சத்யராஜ்குமார்

கதையை ஆரம்பித்த இடம் தப்பு. சிறுகதையைப் பொறுத்த வரை முடிவுக்கு ரொம்பப் பக்கத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

-oOo-

அவர்கள் முதல் கடிதத்துக்கு நான் பதில் போட – ” வானத்திலிருந்து நிலவு இறங்கி வந்து, மெழுகுவர்த்தியை வாழ்த்தி விட்டுப் போனது போலிருக்கிறது ” என்று கவிதையாய் எனக்கு நன்றி சொன்னார்கள்.

-oOo-

முதல் கதை கேட்ட போது என்னிடம் அவர் – ” தம்பி, நாவல் ரொம்ப திகிலா இருக்கணும். ரொம்ப கொடூரமா அதில் ஒரு கொலை இருக்கணும். ஏன்னா படிக்கிறவங்க தங்களோட நிஜ வாழ்க்கையில் பண்ண முடியாததை பத்திரிகைல படிக்கிறதுக்கு விரும்புவாங்க. ” என்றதும், அவர் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற மாதிரி அந்தக் கதையில் ஒரு வாலிபனின் மண்டை மேல் பாறாங்கல்லைப் போட்டு நச் நச்சென்று அடித்து மூஞ்சியை உருத் தெரியாமல் சிதைத்து – அதே கல்லைக் கட்டி அவனின் பிரேதத்தை ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி விட்டிருந்தேன். அவனுடைய செத்த உடம்பை போலிசார் வெளியே எடுத்தபோது – மீன்கள் அரித்துத் தின்றது போக மிச்சம் மட்டும் கொச கொசப்பாய் வெளியே வந்தது என்று நான் வர்ணித்தது அவருக்கு ரொம்பப் பிடித்து விட்டது.

வக்கீல் இல்லாமல் விடுதலை

அமெரிக்கா சுதந்திர நாடு என்பது பல சமயம் தொடுக்கப்படும் வழக்குகளாலும், சில சமயம் நீதிபதிகளின் விநோத தீர்ப்பாலும் எனக்குத் தெரியவரும். புகை பிடித்ததால் புற்றுநோய் வந்ததற்காக, பல கோடி டாலர் நஷ்ட ஈடு கோருவதும், குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் கொலை செய்ததாக ஒரு வழக்கிலும்; செய்யாததாக இன்னொரு வழக்கிலும் தீர்ப்பாவதும், ‘நான் ஒரு பைத்தியம்’ என்று சான்றிதழ் வாங்கி சாதாரண மனிதனாவதும், இன்னும் எனக்குப் புதிர்கள்தான்.

ஈராக் சிறையில் கொடுமைகள் இழைத்ததாக நடக்கும் லிண்டன் ஜான்சன் வழக்கும், கோபி ப்ரையண்ட் வன்புணர்ந்ததாக நடக்கும் அத்துமீறல் வழக்கும் தற்போது ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. முதலாம் வழக்கில் குற்றவாளி தரப்பில் சதாம் ஹூஸேனைத் தவிர, கிட்டத்தட்ட அனைவரையும் சாட்சிக்கூண்டுக்கு அழைத்திருக்கிறார்கள். டிக் செனியும் டொனால்ட் ரம்ஸ்ஃபீல்டும் சாட்சி சொல்வதைப் பார்ப்பதற்கு ‘என்ன தவம் செய்ய வேண்டுமோ!’

கோபி ப்ரையண்ட் வழக்கில் அவரை குற்றம் நிரூபிக்கப்படும் வரை ‘குற்றஞ்சாட்டப்பட்டவர்’ என்று கூட அழைக்கக் கூடாது என்று நீதிபதியின் உத்தரவை வரவைக்கும் சாமர்த்திய வக்கீல்கள் ஆஜராகிறார்கள். அடுத்த கூடைப்பந்து சீஸனின்போது நிரபராதியாக ஆடுவது நிச்சயம் என்று தோன்றுகிறது. ஆனால், கூடவே பீமப் பெரியண்ணன் ஷக்கீல் ஓநீல், தரும வாயிற்காப்போன் கேரி பேட்டன், சகாதேவ வஸ்தாத் ரிக் ஃபாக்ஸ், எல்லாவற்றுக்கும் மேலாக துரோணாச்சாரியார் ஃபில் ஜாக்ஸன் என பாண்டவர்கள் பலரையும் இழந்து நிராயுதபாணியாக ஆடப்போகிறார். கண்ணனாக கார்ல் மலோன் தொடருவது ப்ரையண்ட்டுக்கு ‘லாபமா, நஷ்டமா’ என்பதை அறியேன்.

ஆரம்பித்த விஷயத்துக்கே வருவோம். எவ்வளவு பெரிய வக்கீல் வாதாடினாலும் ‘ஃப்யூ குட் மென்‘ போன்ற மேஜிக் எல்லாமல் நடக்காமல் லிண்டன் ஜான்ஸன் பலிகடா ஆகப் போவதும், ஒஜே சிம்ப்ஸன் போன்ற பெரிய குற்றங்களுக்கே விடுதலையான அமெரிக்காவில், கோபி ப்ரையண்ட் வழக்கு பிசுபிசுக்கப் போவதாகவும் தோன்றுகிறது. சொல்ல வந்தது அது இல்லை. இரண்டு வாரம் முன்பு எச்சரிக்கை கொடுத்தார்கள். முந்தாநாள் விடுவித்தே விட்டார்கள். பெர்மிட் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த குற்றங்களுக்காகவும், போதை மருந்து வழக்கிலும் கைது செய்யப்பட்ட மூவரை, நீதிமன்றம் விடுவித்து இருக்கிறது.

இவர்களுக்காக வழக்கில் ஆஜராவதற்கு, அரசாங்கமே செலவை ஏற்கும். அவர்களுக்குப் பணவசதி இருந்தால், விருப்பப்பட்டால், கோபி ப்ரையண்ட் போல கோடிகள் செலவழித்து, புகழ்பெற்ற வக்கீல்களை அமர்த்திக் கொள்ளலாம். அப்படி சொந்த வக்கீலுக்கு செலவு செய்ய முடியாத நிலையில், நீதிமன்றமே வக்கீல்களை நியமிக்கும்.

பென்ச் நீதிமன்றங்களில் ஒரு மணி நேரத்துக்கு வாய் கிழிய கத்துவதற்கு முப்பது டாலர்கள் தரப்படுகிறது. இதுவே உயர்நீதிமன்றங்களில் வாதாடுவதற்கு 39 டாலராக இருக்கிறது. கொலை கேஸில் ஆஜரானால் 54 கொடுக்கிறார்கள். சில காலம் முன்புதான் இவர்களுக்கு பணவீக்கம் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு ஏழரை டாலர் அதிகம் கொடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. இன்னும் அதிகம் கிடைக்கும் ஆசையில் இருக்கும் வக்கீல்களுக்கு இந்த ஏழரை டாலர், பிச்சைக்காசாக பட்டது. அதில் இருந்து, அரசு பரிந்துரைக்கும் வழக்குகளை எடுத்து நடத்துவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

வக்கீல்கள் இல்லாததனால், காலவரையில்லாமல் ஜெயிலில் வைத்திருக்க ‘பொடா’ போன்ற சட்டம் அரசுக்குக் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றமும் இந்த மாதிரி வக்கீல் இல்லாமல் சிறையில் இருப்பவர்களை ஏழு நாட்களுக்குள் மேல் வைத்திருக்க அனுமதி கிடையாது என்று தீர்ப்பளித்து விட்டது. இதை விடப் பெரிய கவலை: நாற்பத்தைந்து நாள்களுக்குள் இலவச வக்கீல் அமர்த்தப்படா விட்டால், அவர்கள் மேல் சாற்றப்பட்ட குற்றம் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.

வியாழன் (ஆக.11) அன்று மேலும் பதினான்கு பேர் இவ்வாறு சுதந்திரமாகப் போகிறார்கள். அவர்களின் முக்கிய வேண்டுதல், இன்னும் ஒரு மண்டலத்துக்கு, வக்கீல்கள் போர்க்கொடி தூக்கியிருக்க வேண்டும்; அதற்கு முன் ஊக்கபோனஸ் எதுவும் கிடைத்து சமாதானமாகக் கூடாது என்பதாகத்தான் இருக்கும். (ஆனால், 45 நாட்கள் தாண்டிய பல கேஸ்களில், எதையும் இதுவரை நீதிமன்றம் தள்ளுபடி செய்யாதது ஆறுதலான விஷயம்).

தமிழகத்தில் கூட வக்கீல்கள் நிறைய ஆர்ப்பாட்டமும், நீதிமன்ற புறக்கணிப்பும் செய்து வருகிறார்கள். அரசு வக்கீல், சிவில்/கிரிமினல், டிஃபென்ஸ் என்று எல்லாம் பாகுபாடு பார்த்து புறக்கணிப்பதாகத் தெரியவில்லை. இதனால், ஜாமீன் வாங்கப் பணம் இல்லாமல் இருக்கும் சிறைவாசிகளின் கதி என்ன? ஏழு நாளுக்குள் வழக்கு எடுத்துக் கொள்ளப்படாவிட்டால், வெளியில் வரமுடியுமா? இல்லை… மதுரை, திருச்சி என்று சமாதானம் ஆகும்வரை கம்பியெண்ணுவதுதான் கதியா?

-பாஸ்டன் பாலாஜி

ஐ….

இது என்னுடைய ஐநூறாவது பதிவு. ஏதன்ஸ் ஒலிம்பிக்ஸில் மரையா ஷரபோவா விளையாடததற்கு வருத்தம் தெரிவித்து இந்தப் பதிவை எழுத எண்ணம் 😉

‘நான்கு வருடம் என்பது மின்னல் வேகத்தில் பறந்து விடும்’, என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார். நான் கூட ஒரு வருடம் முன்பு ஆர்வக் கோளாறில் வலைப்பூக்கள் என்று தலைப்பிட்டு கிறுக்க ஆரம்பித்தபோது, இவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை.

தேவையற்ற படத்துக்கு தேவையான குறிப்புகள் சில:

1. ஒலிம்பிக்ஸில் 1984-ஆம் ஆண்டு டென்னிஸ் சேர்த்துக்கொள்ளப்பட்டாலும், 1988-இல்தான் பதக்கம் பெறும் போட்டியானது.

2. 1984-இல் ஸ்டெஃபி க்ராஃப் பதக்கம் இல்லாவிட்டாலும், போட்டியிட்டு வென்றார்.

3. ஆண்கள் பிரிவில் முதல் முப்பது தரவரிசைகளில் உள்ளவர்களில் 27 பேர்களும், பெண்களில் 23 பேர்களும் கலந்து கொண்டு, வரப்போகும் அமெரிக்க ஓபனுக்கு நிகரான போட்டியைக் கொடுக்கப் போகிறார்கள்.

4. இந்த வருடத்தில் மட்டும் இவ்வளவு முண்ணனி வீரர்கள் கலந்துகொள்வதற்கு மிக முக்கிய காரணம், ஒலிம்பிக்ஸில் வெல்லும் ஒவ்வொரு பாயிண்ட்டும், உலகத் தர வரிசைகளுக்கான புள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப் படுவதே.

5. நாற்ப்பதியேழு வயதான மார்ட்டினாவும் களத்தில் இருக்கிறார்.

6. டென்னிஸ் போட்டிகள், வரும் ஞாயிறு முதல் ஆரம்பமாகிறது.

7. சென்னையின் அக்னி நட்சத்திர வெயிலில் ஆடிப் பழக்கமில்லாத உள்ளரங்குகளில் மட்டுமே ஆடிப் பழகிய வீரர்களுக்கு இந்தப் போட்டி கஷ்டமாக இருக்கும்.

8. டேவிஸ் கோப்பை போன்ற நாட்டுப் பற்று, லியாண்டர் பயஸ், மஹேஷ் பூபதியை மிளிர வைக்கலாம்.

9. ஒலிம்பிக்ஸின் குத்துச்சண்டை போன்ற போட்டிகளில் அரை-இறுதிக்கு சென்றாலே, ஒரு பதக்கம் நிச்சயம் கிடைக்கும். வெண்கலமேயானாலும், கால்-இறுதியை வென்றவுடனேயே, பதக்கத்தை உறுதி செய்து கொள்ளலாம். டென்னிஸில் அவ்வாறு கிடையாது. இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறாவிட்டால், இன்னொரு ஆட்டம் (அரை-இறுதியில் தோற்றவர்களுக்கிடையே) ஆடியபிறகுதான், யாருக்கு வெண்கலம் என்று தெரியும்.

நம்ம ஊரு நாயகர்கள் ஜெயிக்க வாழ்த்துக்கள்.

Maria Sharapova 

Maria Sharapova Posted by Hello

Chennai Silks 

Chennai Silks Posted by Hello