Category Archives: Arasu

Arasu Bathil – Kumudham: Growth of a Political Party

கேள்வி: திராவிட இயக்கம் வளர்ச்சி அடைந்திருக் கிறதா?

பதில்: வளர்ச்சி என்றால் சாதாரண வளர்ச் சியா? பிரம்மாண்டமான வளர்ச்சி! தி.மு.க., ஆரம்பிக்கப்பட்டபோது நம் இயக்கத்தில் கோடீஸ்வரர்களும், இலட்சாதிபதிகளும் ஒருவர், இருவர் இருக்கக் கூடும் என்று கனவில் கூடக் கருத முடியாது. சாதாரணமான நாம்தான் இயக்கத்தை நடத்துகிறோம் என்று முழங்கினார் அண்ணா – இன்று? எத்தனை பெரிய வளர்ச்சி!

Arasu Pathilgal – Kumudham

எம். சகா, மேலூர்.

அறிவாளிகள், முட்டாள்கள் இருவரின் வாழ்க்கையும் எப்படிப் பட்டது?

‘எத்தனையோ அறிவாளிகளை நான் கண்டிருக்கிறேன். அவர் களிடம் நான் காணாதது சந்தோ ஷம்’ என்றார் ஹெமிங்வே.
க.நா.ராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்.

கம்யூனிஸ்டுகளுக்கும் பா.ம.க.வுக்கும் என்ன வித்தியாசம்?

கம்யூனிஸ்டுகள் எக்காலத்திலும் பி.ஜே.பி.யோடு சேரமாட்டார்கள்.

பா.ம..க. எக்காலத்திலும் எவரோடும் கூட்டுச் சேரும்.

ஆர்.அஜிதா, கம்பம்.

சிரிப்பில் எத்தனை வகை உண்டு?

  • டாக்டர் ராமதாஸ் கலைஞரைப் பார்த்து சிரிப்பது டார்ச்சர் சிரிப்பு.
  • கம்யூனிஸ்டுகளைப் பார்த்து மன்மோகன் சிங் சிரிப்பது நக்கல் சிரிப்பு.
  • மிருகவதைத் தடுப்புச் சட்டத்தைப் பார்த்து சல்மான்கான் சிரிப்பது கேலிச் சிரிப்பு.
  • டால்மியா வகையறாக்களைப் பார்த்து கங்குலி சிரிப்பது எக்காளச் சிரிப்பு.
  • சன் டி.வி.யைப் பார்த்து கலைஞர் டிவி சிரிப்பது சவால் சிரிப்பு.
  • சிம்புவைப் பார்த்து நயன்தாரா சிரிப்பது எஸ்கேப் சிரிப்பு.
  • சில கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் அரசு சிரிப்பது கேனைச் சிரிப்பு.

இப்படிச் சிரிப்பில் பல வகைகள்.

எம். குமாரசாமி வேலூர்

தன்னுடைய படங்களில் வருவதைப் போலவே பல புள்ளி விவரங்களைச் சொல்லி கூட்டங்களில் அசத்துகிறாரே கேப்டன்?

அதில் நான் ரசித்த ஒன்று. ஒரு பெண்கள் கூட்டதில் அவர் சொன்ன கணக்கு : “ இலவச காஸ் அடுப்பு தர்றோம்னு சொல்லி அரசாங்கம் உங்களை ஏமாத்துது. மண்ணெண்ணை அடுப்புன்னா உங்களுக்கு மாசம் 180 ரூபாய்தான் செலவாகும். ஆனா காஸ் அடுப்பு சிலிண்டருக்கு மாசம் 300 ரூபா ஆகும்..உங்களை அதிகமா செலவழிக்க வெச்சி ஏமாத்தற திட்டம் இது”

பாட்டாளி மக்கள் கட்சியும் பசுமை தாயகமும் :: அரசு பதில்கள்

வீ.பெரியசாமி, தேளூர்.

‘ஊருக்கு உபதேசம்’ என்பதற்கு உதாரணம்?

சென்னைக்கு அருகே நடந்த பா.ம.க. இளைஞர் அணி மாநாட்டுக்காக நிழல் தரும் சாலையோர புங்க மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம்.

Arasu Bathilgal – Tamil Nadu Politics

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

“காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது” என்பதற்கு நல்லதொரு உதாரணம்?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவானேன், பாவம் அந்தச் சகோதரர்களை விட்டு விடுவோம்.

—————————————————————————–

பி.ராஜாமணி பெரியசாமி, முத்தம்பட்டி.

அடுத்தடுத்து வெற்றி கிட்டாமைக்கு எது காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

யாரைச் சொல்கிறீர்கள்? ஜெயலலிதாவையா?.

Arasu Bathilgal

1. கே.பலராமன், கடலூர்.

கலைஞர் டி.வி. எப்படி இருக்கும்?

‘முரசொலி’ மாதிரி இருக்குமோ?

—————————————————————————

2. துரைராஜ், திருப்பூர்.

அசின், த்ரிஷா, நயன்தாரா, பாவனா என்று வரிசையாகப் பலர் வந்தாலும் சிம்ரன் விட்டுச் சென்ற இடம் காலி யாகவே இருக்கிறதே?

குறிஞ்சி மலர்கள் உடனுக்குடன் பூக்காது.
—————————————————————————
3. சந்திரகுமார், தில்லையாடி.

‘டாக்டர் ராமதாஸ் காந்தியைப் போல் சிந்தனை செய்கிறார்’ என்று கலைஞர் சொல்லியிருக்கிறாரே?

பல நேரங்களில் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதால் இருக்கலாம்.

தசாவதாரத்தை குறை சொல்லும் ‘அரசு பதில்கள்’

ஆர்.சுகுமாரன், பொள்ளாச்சி

வெயில், மொழி, பருத்திவீரன், சென்னை 28 – வரிசையாக வெற்றி பெறும் வித்தியாசமான படங்கள் தமிழ் சினிமாவை மாற்றுமா?

மாற்றாது. கீழே பிடித்து இழுக்கும் தவளைகள் சும்மா இருக்காது.

கமலின் தசாவதாரம் வருவதற்கு முன்பே விமர்சிப்பதற்காக என் கண்டனங்களை பதிவு செய்து வைக்கிறேன் 😛