போன பதிவில் ஹில்லரியின் தீவிர ஆதரவாளர்கள் கேட்கும் சில கேள்விகளை பாஸ்டன் பாலா முன்வைத்துள்ளார். முடிந்தவரை பதில்கள் தந்துள்ளேன். தலைப்பு சுவாரஸ்யத்துக்காகவே.
—சாதனைக்கு காத்திருக்கும் விளையாட்டு வீரரைப்போல அடம்பிடித்துக்கொண்டு நிற்கிறார்.—
இன்னும் நடுவர்கள் தீர்ப்பே கொடுக்கவில்லை. நான்சி பெலோசி போன்றோர் நடுநிலையாக பதிலே சொல்லாமல், மௌனம் காக்கும்போது எதற்கு விலக வேண்டும்?
நடு நிலமையாக நின்று பார்த்தால் இது மட்டும்தான் ஹில்லரியின் ஒரே சாதகமான வாதம். ஆயினும் அதிகபடியான மக்கள் வாக்கையும், பிரதிநிதிகளையும் பெற்ற ஒருவரின் வாய்ப்பை சூப்பர்கள் தூக்கி எறிவதென்பதற்கு தீவிர காரணங்கள் தேவை. அப்படி எதுவும் ஒபாமாவுக்கு எதிராக இருப்பதாகத் தெரியவில்லை. நடுவர்கள் தீர்ப்பை பார்த்துவிட்டு ஹில்லரி ஒதுங்கிக்கொள்வாரா என்றால் இல்லை. அவர் அடுத்த வாதத்துக்குத் தாவுவார். ப்ளோரிடா என்பார், மிச்சிகன் என்பார், Pledged delegates யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்பார்.
பிரதிநிதிகள் கணக்கில் ஒபாமாவிற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அறுதி பெரும்பான்மை என்பதை ஒரு இலக்காக எடுத்துக்கொள்ளலாமே தவிர ஜனநாயகத்தில் 51% 49% என்பதே போதுமானதில்லையா. பொதுமக்களின் தேர்வின் அடிப்படையிலேயே வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே முன்னோட்டத் தேர்தல்களின் அடிப்படை நோக்கம். அதை கணக்கிட இருக்கும் அளவுகோல்களின் ஒன்றுதான் அறுதி பெரும்பான்மை இலக்கு. இதிலும் ஹில்லரி FL, MI சேர்த்துக்கொண்டு தகிடுதத்தம் போடுகிறார்.
கீழ்க்கண்டவற்றில் ஒன்று கூட நடந்தேறவில்லை!
மேற்சொன்ன எல்லாமும் ஹில்லரியால், ஹில்லரி க்ளின்டனால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது.
* வெள்ளையர் வாக்கை அள்ளிச் செல்கிறார்
* உழைக்கும் வர்க்கத்தினை கவர்ந்து கொள்ளை கொண்டிருக்கிறார்
* பெண்களை வாக்குச்சாவடிக்கு வரவழைப்பார்
இதேபோல ஒபாமாவின் பக்கத்திலும் சொல்லலாம்..
* ஹில்லரி கறுப்பினத்தவர் வாக்கைப் பெறவில்லை (கிளிண்டன் ஒருகாலத்தில் கறுப்பினத்தவரின் ஆதர்சம்)
* இளைஞர்கள் ஓட்டு ஒபாமாவிற்கே. இந்தத் தேர்தலில் இளைஞர்கள் களைகட்டுகிறார்கள். மெக்கெயினுக்கு எதிராக ஒபாமாவிற்கு இது சாதகமாக அமையும்
வெள்ளையினத்து ஜனநாயகக் கட்சிக்காரர்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கே வாக்களிக்க சாத்தியமுள்ளது. அது ஒபாமா என்றாலும். இதில் கொஞ்சம் குறையலாம், ஆயினும் ஒபாமாவைத் தோற்கடிக்க இவர்கள் மெக் கெயினுக்கு வாக்களிக்க சாத்தியம் குறைவு. இதுபோலவே பெண்கள். சிலர் பொதுத்தேர்தலில் வாக்களிக்காமல் போகலாம் ஆயினும் பிரச்சனையில்லை. நீங்கள் குறிப்பிட மறந்த கத்தோலிக்கர்கள் மெக்கெயினைவிட ஒபாமாவை ஆதரிக்க வாய்ப்பு அதிகம்.
—இண்டியானாவில் குறைந்த வித்தியாசத் தில் தோற்றது ஒபாமாவிற்கு வெற்றியே.—
FL கலந்துகொள்ளாதது அந்தத் தேர்தல் செல்லாமல் போகும் என்பதற்காகவே. ஒகையோ தோல்வியோ அல்லது வேறெந்த தோல்வியோ பெரிய விஷயமே அல்ல ஏனென்றால் ஹில்லரிக்கு கிடைத்தவாக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் ஒபாமாவுக்கு வரும். தற்போதைய ஒபாமா Vs. மெக்கயின் கணிப்புகளில் ஒபாமா முந்தியிருக்கிறார். ஹில்லரி விலகிக்கொண்டால் அவர்பக்கமிருந்து ஒபாமாவுக்கு ஊக்கம் வர வாய்ப்புகள் அதிகம் (The reverse is true too).
ஏன்?
சென்ற முறை குடியரசுக் கட்சிக்கும் ஒபாமா சார்ந்திருக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் ஊசலாடிய ஒஹாயோவில் தோற்றுப் போனார். ஃப்ளோரிடாவில் கலந்து கொள்ளவே இல்லை.
இப்படி இருக்கும் நிலையில், சொந்தப் பேட்டையில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் அண்டை மாநிலமான இந்தியானாவைக் கூட வெல்லத் தெரியாதவர், ‘எப்படி 50 மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் மட்டும் வெற்றியை ஈட்டுவார்?’
இண்டியானா கூப்பிடு தூரமானாலும் அதன் மக்கள் பரப்பு வித்தியாசமானது. ஹில்லரி ஆதரவாளர்கள் அதிகம். சிகாகோவை அடுத்துள்ள கறுப்பினத்தவர் அதிகமாயிருக்கும் பகுதிகளில் ஒபாமா அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். அதாவது ஒபாமாவின் வாக்குகள் ஒபாமாவுக்கும் ஹில்லரியின் வாக்குகள் ஹில்லரிக்கும் விழுந்துள்ளன. No surprises. இண்டியானா ஹில்லரிக்குத்தான் என்பது தெரிந்ததே ஆனால் இத்தனை குறைந்த வித்தியயசத்தில் ஹில்லரி வென்றது அவருக்கு எதிரான வாக்ககய் எடுத்துக்கொள்ளப்படும்.
—ஹில்லரி தொடர்ந்து பெரிய மகாணங்களில் தான் வெற்றிபெற்று வருவதை ஒரு முக்கிய சாதனையாக கூறிவருகிறார். —
நிச்சயமாக!!
இன்னும் சொல்லப் போனால் துணை ஜனாதிபதி பதவியைக் கூட தாரை வார்க்க தயாராக இருக்கிறார். (ஒபாமா இவ்வாறு பெருந்தன்மையாக பேச்சுக்குக் கூட சொல்லவில்லை)
இதில் என்ன பெருந்தன்மை இருக்கிறது. அது வெறும் ஸ்டண்ட். அதுவும் நேரடியாக வெற்றி வாய்ப்பே இல்லாத ஹில்லரி கணக்குகளில் முந்திநிற்கும் ஒபாமாவுக்கு துணைஅதிபர் பதவி வழங்குவது நகைப்புக்குரிய ஒன்று. அதை அவர் செய்யக் காரணம் தன்னைக் குறித்த ஒரு உயர் பிம்பத்தை உருவாக்கவே. ஒபாமாவிற்கு சாதகமான அம்சங்களில் ஒன்று அவர் ஒரு ‘கிளிண்டன்’ இல்லை என்பதுவும்கூட. இதனாலேயே அவர் தூணை அதிபர் பதவியை வழங்க முன்வந்திருக்க மாட்டார். கிளிண்டன் குடும்பம் மீண்டும் வெல்ளை மாளிகை செல்வதை பலர் விரும்பவில்லை.
இருப்பினும் இறுதியில் ஹில்லரியின் பக்கத்திலிருந்து ஒருவர் துணண அதிபராக வர வாய்ப்பிருக்கிறது. அந்த அடிப்படையிலேயே ஹில்லரியின் ஒபாமா ஆதரவு அமையும். ஹில்லரி அந்தப் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றே நினைக்கிறேன். அவரின் கணக்கு 2008 இல்லையென்றறல் 2012. 2012ல் ஒபாமா இல்லையென்றறல் ஹில்லரிக்கு இரண்டாவது பிரச்சசரமாக அமையும்.
நெவாடா, நியூ மெக்சிகோ, பென்சில்வேனியா, ஃப்ளோரிடா, நியு ஹாம்ஷைர், ஒஹாயொ போன்ற மாநிலங்களில் வெல்லக் கூடியவர் யார் என்பதுதான் கேள்வி. இவை ஒவ்வொன்றிலும் ஹில்லரி க்ளின்டன் வாகை சூடியிருக்கிறார்.
தற்போதைய நிலவரங்களில் ஏல்லா மாந்நிலங்களும் அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன. FL நினைவுக்கு வரலாம். Texasல் ஹில்லரி போதுமான அளவு வெல்லவில்லை. ஹில்லரி விலகி ஒபாமாவுக்கு ஆதரவளித்தால் இந்த மாநிலங்களில் ஒபாமாவுக்கு ஆதரவு அதிகரிக்கும்.
அதாவது, ஒபாமா நின்றால், சென்ற முறை கெர்ரி வெற்றியடைந்த (சாதாரணமாக எவர் நின்றாலும் ஜனநாயகக் கட்சி பக்கம் வாக்களிக்கும்) மாகாணங்களைத்தான் கைபற்ற முடியும்.
ஆனால், ஹில்லரி வேட்பாளரானால், நூலிழையில் மண்ணைக் கவ்விய மாநிலங்கள் அனைத்தும் கடும் போட்டி களமாகும்!
துணைக்கு ஒபாமாவையும் சேர்த்துக் கொள்கிறேன் என்று பராக்கையும் உபதலைவர் பதவிக்கு வைத்துக் கொண்டால், ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் வாக்கும் சிந்தாமல், சிதறாமல் மாட்டும்.
இது ஒரு முக்கிய வியூகமே ஆயினும் இது மட்டுமே வியூகம் அல்ல. மேலும் உட்கட்சி தேர்தல்கள் எந்த வியூகம் நல்லாயிருக்கும் என்பதை நிர்ணயிக்க நடத்தப்படவில்லை.
சில கேள்விகள்:
* ஹில்லரி x ஒபாமா – ஜெயிக்கக் கூடிய கழுதை யார்?
ஒபாமா வெல்லவில்லையென்றால் அது ஜனநாயகப் படுகொலை. ஏதேனும் சொல்லி சமாளிக்கலாமே தவிர முழுமையான நியாயங்கள் அதற்கில்லை.
* ஹில்லரி & ஒபாமா – 2008-இல் சேர்ந்து போட்டியிட முன்வருவார்களா?
ஹில்லாரி அதிபராக போட்டியிட்டால் ஒபாமா துணையாகச் சேல்லும் வாய்ப்பு 10% இருக்கலாம். ஒபாமாவின் டிக்கெட்டில் ஹில்லரி செல்வது நடக்காது என்றே நினைக்கிறேன்.
* ஹில்லரியா? ஒபாமாவா? – மெகெயினின் வயது/கொள்கை/வாதம், போன்றவற்றை தவிடுபொடியாக்க, குடியரசுக் கட்சிக்கு எதிர்மறையான (polarizing) சின்னமாக விளங்க… யார் பொருத்தமானவர்?
மெக்கெயின் அவரது குறைகளினாலேயே வீழ்வார். ஹில்லரி ஒபாமா இருவருமே அவரை வீழ்த்தலாம். இதற்கு ஒரே பாதகம் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாக மனமாற்றமடைவது. அதாவது ஹில்லரி ஆதரவாளர்கள் ஒபாமாவுக்கு எதிராக ஒபாமா மக்கள் ஹில்லரிக்கு எதிராக.
ஹில்லரியை விலகச் சொல்வது தார்மீக அடிப்படையில்தான் என்பது ஒருபுறமிருக்க அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. தற்போதைய கட்சி விதிகள், தேர்தல்கள நிலவரங்களின்படி சாத்தியமே இல்லை எனலாம்.