வெப்-உலகம்: நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்


சந்திப்பு : ஆர். முத்துக்குமார்

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?

எஸ். ரா : முதலில் அந்தத் தீமில் எனக்கு ஈடுபாடு இல்லை. காலம் என்பது சில பல வஸ்துக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காலமும் ஒரு `மனவளர்ச்சி’ கொண்டது. குறிப்பிட்ட பிரத்யேகமான பய உணர்ச்சி கொண்டது. ஒரு ஆதிகுடி குகைவாசிக்கு பகல் / இரவு என்பது தெரியாது. அவனுக்கு பொருள் தோன்றுகிறது / மறைகிறது அவ்வளவே. ஆனால் பகல் / இரவின் விளைவுதான் தோன்றுதல் மறைதல் என்பது எப்படி எழுதப்படுவது?

ஒரு கட்டத்தை எழுத்தில் நாவலாகக் கொண்டுவரும் போது அதன் `மனம்’ எப்படி புரியப்படவேண்டும் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. இயற்கை மதங்கள் பல்வேறு பயங்களால் உருவானதே. தற்போது இருக்கும் மதங்கள் அதைப் `பயன்பாடா’ மாற்றிக் கொண்டது. இப்ப-நம்ம பாரம்பரியத்துல ஏகப்பட்ட பக்தி இலக்கியம்-பாசுரம், எல்லாம் இருக்கின்றன. ஆனால் நாயன்மார்களுக்கோ-ஆழ்வாக்ளுக்கோ அது ஒரு மார்க்கம், ஞான மார்க்கம், அல்லது ஏதோ ஒன்றை அடைவதற்கான ஒரு கருவி. ஆனால் நமக்கு அது இன்று ஒரு கவிதை மட்டுமே. திருப்பாவை பாடல்கள் இன்னிக்கு நாம கேட்டா அதன் கவிதைத் தன்மையை மட்டும்தான் எடுத்துக்குறோம் அவங்களோட வாழ்வியலுக்குள்ள நாம் போகமுடியாது.

`விஷ்ணுபுரம்’ நாவல் பழைய தத்துவம் / இலக்கியம் / வாழ்வு போன்றவைகளை நவீன காலக்கட்டப் பார்வையில் அணுகுகிறது. மேலும் பல இடங்கள் `சினிமாட்டிக்கா’ இருக்கு, இப்ப நாம யானைய பார்த்திருக்கோம், அதுக்கு மதம் பிடிக்கும்னு கேள்விப்பட்டுருக்கோம், தமிழ் இலக்கியத்துல உதயணன் கதையில் தான் யானை ஊரையே துவம்சம் செய்யும்னு கேள்விப்பட்டிருக்கோம், இவர் கதைல ஒரு யானை ஒரு ஊரையே காலி செய்கிறது. இது, சினிமாடிக் தனமாகும். நமக்கும் யானைக்குமான உறவுகள் அப்படி இல்லையே. மேலும் அவரால் `பவுத்தம்’ சம்பந்தப்பட்ட தீவிரத் தேட்டத்தை வைக்க முடியவில்லை. பவுத்த நபர்கள் வருகிறார்கள். பவுத்த தர்க்கம் இருக்கிறது. ஆனால் பவுத்த சாரம் இல்லை.

கேள்வி : அந்த நாவலின் முடிவில் வரும் `பிரளயம்’ என்ற `Apocalypse’ ஏற்புடையதா?

எஸ். ரா : மார்க்வெஸின் `நூறாண்டு காலத் தனிமை’ நாவலில் வரும் Apocalypse’ ஞாபகம் என்பதன் நாட்டியமாக இருக்கிறது. அந்தப்பகுதி நாவலையே வேறுவிதமாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெயமோகனின் நாவலில் அது ஒரு `condition’ என்பதாக வருகிறது. மேலும் நம் தத்துவ புராண மரபு பிறப்பு / இறப்பு , படைப்பு / அழிவு என்பதை தொடர்ச்சியானதாக சர்க்குலராகப் பார்க்கிறது. பிரம்மாவிற்கும் சிவனுக்கும் இதுதான் வேலை. இவர் கதையில் இது ஒரு `வீழ்ச்சி’ என்பதாக முன்வைக்கப்படுகிறது. `வீழ்ச்சி’ என்பது கிறித்தவ மத விவகாரம்.

கேள்வி : ஏன் இதுலயும் பிரளயத்துலேந்து `நீலி’ புறப்படுகிறாளே?

எஸ். ரா : கொஞ்சம் Tribes மரபு, கொஞ்சம் – ரிலிஜன் – மரபு இது எல்லாத்தையும் அப்படிஅப்படியே அடுத்தடுத்து வைக்கிறார். ஆனா `நீலி’ என்பது அவரது Nostalgia சம்பந்தப்பட்ட விஷயம். அவருக்கு `உக்கிரமான பெண்’ என்பது ஏதோ ஒரு விதத்தில் தேவைப்படுகிறது. அவருக்கு `உக்கிரம்’ மேல் ஒரு obsession இருக்கு.

கேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவலை ஒரு அழகியல் வேலைப்பாடாக ஏற்கிறீர்களா?

எஸ். ரா : நாவல் என்ற மிகப்பெரிய வகையினத்தில் `விஷ்ணுபுரம்’ நிச்சயமாக ஒரு முக்கியமான வேலைப்பாடுதான். ஆனால் ஒரு மரபார்ந்த மனம்தான் அதில் ஆப்ரேட் ஆகிறது. ஆனால் நடை மரபு ரீதியானதாக இல்லை.

கேள்வி : ஜெயமோகனின் `பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலின் கம்யூனிச எதிர்ப்பு களம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எஸ். ரா : நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட `கம்யூனிசம்’ வைத்துதான் நாம் அதை அறிந்து கொண்டுள்ளோம் :

மேலும் படிக்க —> வெப்-உலகம்

2 responses to “வெப்-உலகம்: நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்

  1. விஷ்ணுபுரம் குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் பதில்கள் அருமை. பகிர்விற்கு நன்றி.

  2. பிங்குபாக்: Writer S Ramakrishnan: 20 Links « 10 Hot

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.