ராமர் கோவில் என்பதற்கு பிரச்சினை என்று அர்த்தம். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் பழமொழிக்கேற்ப, அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் ஹிந்து மந்திர் இருக்கிறது. அங்கே நடக்கும் சண்டையில், பிரிந்து போய் இரண்டாவது கோவிலும் நிச்சயமாக இருக்கும்.
கத்ரு, வினதை கதை ஆகட்டும்; காந்தாரி x குந்தி ஆகட்டும். புராண காலத்தில் இருந்து போட்டிக்கு பிள்ளை பெறுவது இந்தியர் வழக்கம். வாஷிங்டன் டிசி நகரத்தில் ஒரே தெருவில் இரு ஆலயங்கள். சிகாகோவில் பத்து மைல் வட்டத்துக்குள் இரு ஆலயங்கள்.
அரோரா ஆலயம் திருப்பதி போல் என்றால் பக்கத்து ஊரான லெமாண்ட் ஆலயம் கொஞ்சம் வடக்கிந்திய பாணியில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா கலந்த பத்ராசலம் இராமர்.
மூலஸ்தானத்தில் பளிங்கு கற்களும் இருக்கும்; கூடவே கருங்கற் சிலையும் இருக்கும்; பஞ்சலோக உற்சவரும் காணக்கிடைப்பார்.
இந்த நிலையில் திடீரென்று வடக்கு வழக்கத்திற்கு நாக் அவுட் கிடைத்திருக்கிறது.
போட்டி கோவிலிலேயே போட்டி. பலிபீடத்திற்கு யார் பலி என்றெல்லாம் தமிழ்ப் பேப்பர் தலைப்பு கொடுத்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் ஆங்கில நாளிதழ் மட்டுமே இதை கவனித்திருக்கிறது.
உள்ளூர்காரர்கள்தான் உள்விஷயங்களை சொல்ல வேண்டும்.
துவக்க காலத்தில் கோவிலை அமைத்தவர்களின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டுமா? தென்னிந்திய ஆகமவிதிப்படி மொழுமொழு சிலைகள் மூலஸ்தானத்தை ஆக்கிரமிக்கலாமா? தெலுங்கு வண்ணமான கருப்பு அல்லாத வெள்ளை வெளேர் சிலைகள் நீக்குவது தர்மமா என்றெல்லாம் கோர்ட்டில் வாதாடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
கோவில் பொக்கீடு கணக்கு: HTGC – Lemont – Chicago – Temple -IL – Financials – Annual Report 2009_new
சுண்டல் வினியோகத்துக்காக ஃபாலோ-அப்.