அசல் இடுகை: ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா?
வாக்காளர் நலம் சார்ந்து பேசினால், “தேர்தல் சமயத்தில் ஆரத்தியெடுத்து, தேர்தலை வைத்து சோறு தின்பவர்களுக்கு ஏன் ஊழல் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்?” என்கிறார்கள்.
ஓட்டுதான் சோறு போடுகிறது என்றால், வாக்கு அளித்தவர்கள் அல்லவா பணக்காரர்களாக இருக்க வேண்டும்? ஜனநாயகம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே? இந்தியாவில் வோட்டளித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள்? எத்தனைத் வாக்காளர்களுக்கு ஓட்டு சோறு போடுகிறது?
அரசியலை முதன்மையாக வைத்து தொழில் நடத்துபவருக்கு கூட வேறு பல திறன்கள் தேவை. வெறும் ஓட்டை வைத்துக் கொண்டு **** முடியாது.
ஒரு துறை சார்ந்த அறிவு, தொடர்பாடல் திறன், உழைப்பு, முயற்சி என்று வெற்றிக்குத் தேவைப்படும் பல காரணகளில் ஒன்று தான் வெற்றிக்கான கள்ள வாக்கு. அதற்கு மேல் booth capturingஐ உயர்த்திப் பிடிக்கவும் வாலாட்டவும் காலை ***** தேவையில்லை.
ஓட்டு மக்களாட்சி முறைகளுள் ஒன்று. அதற்காக உலகத்தினர் அளவு கடந்தும் தேவையே இல்லாமலும் தங்கள் பிரதிநித்துவங்களில் வாக்குரிமையைக் கலப்பதில்லை. ஓட்டளிக்க விரும்பாததும் முயலாததும் சமூகப் போக்காகவும் தனியாள் உரிமையாகவும் இருக்கலாம்.
ஆனால், “சோறு போடும் நன்றிக்காக கள்ள வாக்கை கலக்கலாம்” என்பதைத் தன்மானமுள்ள எந்த சுதந்திர நாடும் ஏற்றுக் கொள்ளாது.
தொடர்புடைய இடுகை: சுருக் + சறுக் + நறுக் பகீர்












