ஒபாமா சொல்லிய 106 வயதுப் பெண்மணியும், சொல்லாத 114 வயதுப் பெண்மணியும்


44வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா, தனது பேச்சில்,  ஜியார்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த 106 வயதான ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’  எனும் கறுப்பின மூதாட்டி இன்று வாக்களித்ததைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.  மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் ‘செல்மா’, அலபாமாவில் 1965இல் நிறவெறிக்கெதிராக நடத்திய போராட்டத்தில் உடனிருந்திருக்கிறார் ‘ஆன் நிக்ஸன் கூப்பர்’.

ஆன் நிக்ஸன் கூப்பர் பற்றி அறிய -> http://www.thehistorymakers.com/biography/biography.asp?bioindex=739

ஆன் நிக்ஸன் கூப்பரிலும் வயதில் மூத்த 114 வயதுக் கறுப்பின பெண்மணியும் இன்று ஒபாமாவிற்காக வாக்களித்திருக்கிறார். லாஸ்ஏஞ்சலஸ் நகரில் வசித்துவரும் ‘கெர்ட்ரூட் பெயின்ஸ்'(Gertrude Baines) உலகின் மூன்றாவது வயது முதிர்ந்தவரான ( அமேரிக்காவின் இரண்டாவது வயது முதிர்ந்தவர்) இவரின் பெற்றோர்கள் ஆப்ரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு அடிமையாக நடத்தப்பட்டிருந்தவர்கள்.  மேலே படிக்க   http://www.latimes.com/news/local/la-me-baines5-2008nov05,0,1853339.story

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.