ட்விட்டர்: எளிய அறிமுகம்


1. ட்விட்டர் எங்கே இருக்கு? Twitter.com

2. அது என்ன கேள்வி ‘What are you doing?‘ பெட்-காபி குடிக்கறீங்களா, அம்ருதா ராவ் படங்களைத் தேடறீங்களா, டெஹல்காவில் எதைப் படிக்கறீங்க, என்பனவற்றைக் குறிக்கிறது.

3. பார்ப்பது, முகர்வது, தொடுவது, கேட்பது, பேசுவது மட்டும்தான் ட்விட்டலாமா? சுவைப்பது எதுவாயினும் சொல்லலாம். தினசரி கோல்கேட் கொண்டு பல் தேய்ப்பதை சொல்லிக் கொண்டிருந்தால் எவரும் ஃபாலோ செய்யமாட்டார்கள். “காலியான பற்பசையை இரண்டாக அறுத்து, பிதுக்கி, பாக்கி இருக்கும் க்ளோஸ் – அப்பை ‘நீ பாதி… நான் பாதி’யாக மக்கட்செல்வத்துக்கு பகிர்ந்தளித்தேன்” போன்ற பணவீக்கத்திற்கேற்ற துப்புகள் அளிக்கவேண்டும்.

4. அது என்ன ‘ஃபாலோ’ செய்வது? ஒருவரின் கொள்கையை பின்பற்றுவதா? ஆர்குட்டில் ‘நண்பன்’; ஃபேஸ்புக்கில் ‘விசிறி’; ஃப்ரெண்ட்ஃபீட்டில் ‘சந்தாதாரர்’. தளங்கள் தோறும் வாசகராக சேர்த்துக்கொள்வது வித்தியாசப்படும். அதுபோல், இன்னாரை பின் தொடர்ந்து அவரின் செய்கைகளை, தகவல்களை ட்விட்டர் கொண்டு அறிய விரும்பினால் ‘ஃபாலோ’.

5. ட்விட்டரில் தத்துவம், வாழ்க்கை அவதானிப்பு, பொதுமைப் படுத்துதல் செய்யலாமா? செய்யலாம்.

6. அது தவிர வேறு என்ன செய்யலாம்? நான் தொடரும் சிலர் எழுதியதில் இருந்து உதாரணங்கள். வலைப்பதிவுக்கு முன்னோட்டமாக சில குறிப்புகளை ரத்தின சுருக்கமாக எடுத்து வைக்கலாம். கூகிள் அரட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

7. 140 எழுத்துக்களுக்குள் என்ன கருத்து சொல்லிவிட முடியும்? நவீன உலகின் திருக்குறள் எனப் போற்றப்படுவது குறுந்தகவல். மனதில் நினைப்பதை நச்சென்று சுருக்கமாக சொல்லமுடியாவிட்டால், நாகரிக உலக வாசகரின் கவனம் சிதறிப் போகலாம். அப்படி சிதறாது என்றால், இருக்கவே இருக்கிறது வலைப்பதிவு.

8. மௌனமொழியாக புகைப்படங்களை ஏற்றுமதி செய்யலாமா? பத்ரி ஷோஜு (Shozu.com) உபயோகிக்கிறார். ஸ்னாப்ட்வீட் மற்றுமொரு புகழ்பெற்ற சேவை. செல்பேசியில் இருந்தே படங்களை அனுப்ப Twitxr -உம் உண்டு. என்னோட பரிந்துரை: ட்விட்பிக்.

9. இந்தியாவிலும் வேலை செய்யுமா? Vakow உபயோகிக்க பரிந்துரைக்கிறார்கள். நேரடியாகவும் 5566511 அல்லது 5566595 மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றாலும் ‘வாகோவ்‘தான் இந்தியர்களின் இதயத்தை கொள்ளை கொண்டிருக்கிறது.

10. அப்படியானால் ட்விட்டரில் செய்தி அனுப்ப செல்பேசி அவசியம் வேண்டுமா? தேவையே இல்லை. நேரடியாக வலையகத்தில் இருந்தே குறுந்தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கலாம்.

11. பதிவுகளைப் படிக்க கூகிள் ரீடர், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க ட்யூப்தமிழ், என்பது போல் ட்விட்டர் தகவல்களை வேறு வழியில் படிக்க, கோர்க்க இயலுமா? நீங்களே ஒன்றை தயாரித்துக் கொள்ளலாம் என்பதைப் போன்று ட்விட்டர் API கொடுத்திருக்கிறது. அதை உபயோகித்து பல நிரலிகள் புழகத்தில் இருக்கின்றன

  1. ட்வீட் டெக்: புதுசு கண்ணா புதுசு; தமிழ் வராது; வகைப்படுத்தல் வசதி இருக்கிறது
  2. ட்விட்டர் ஃபாக்ஸ்: ஃபயர் ஃபாக்சுடன் ஒட்டி உறவாடும்; நம்பகமானது இல்லை.
  3. ட்விட்டர் பார்: இனிமேல்தான் உபயோகிக்க வேண்டும். ஃபயர் ஃபாக்ஸ் பயனர்களுக்கானது.
  4. ட்வஹிர்ல்: உச்சரிப்பதற்கு கடினமாக இருந்தாலும், உபயோகத்தில் எளிதானது. பல பயனர் கணக்குகளை ஒருங்கே மேய்க்கலாம். என்னுடைய தேர்வு.

இது தவிர:

12. என்னிடம் ஃபேஸ்புக் கணக்கு இருக்கிறது. அங்கே கேட்கும் ‘What are you doing right now?’க்கு பதில் சொல்லித்தான் வழக்கம்! ஒன்றும் பிரச்சினையில்லை. இணைத்துவிடலாம்.

13. என்னிடம் ‘டைப் பேட்’ வலைப்பதிவு இருக்கிறது. இணைக்க முடியுமா? முடியும்.

14. நான் வோர்ட்பிரெஸ், ப்ளாகர் போன்ற செய்தியோடை தரும் இடங்களில் பதிகிறேன். ஆர்.எஸ்.எஸ்ஸை எவ்வாறு சேர்த்து விடுவது? ட்விட்டர் ஃபீட் பயன்படுத்தலாம்.

15. அங்கே இருந்து ட்விட்டருக்கு வந்தாச்சு. இப்போ, ட்விட்டரில் இருந்து, ப்ளாகர், வோர்ட்பிரெஸ் போன்ற வலைப்பதிவுகளுக்கு கொண்டு செல்வது எவ்வாறு? இப்படி.

16. இது வார்ப்புருவில், பக்கவாட்டில் மட்டுமே இடுகிறது. என்னுடைய பதிவே அன்றாட ட்விட்டர்களில் இருந்து தயாராக்க முடியுமா? உங்களுக்குத் தேவை லவுட் ட்விட்டர்.

17. எனக்கு ‘தசாவதாரம்’ குறித்த தகவல் அனைத்தும் தெரிய வேண்டும். எப்படி அறிந்து கொள்வது? ட்ராக்கிங் வசதியைக் கொண்டு செல்பேசியில் ‘தசாவதாரம்’ வார்த்தை வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பெறலாம். எனக்கு சம்மைஸ் கொண்டு தேடி, தேடல் முடிவுகளின் ஓடையைப் பெற்றுக் கொள்ளுதல் தோதுப்படுகிறது.

18. அட… ட்விட்டரில் தேட முடியுமா? சம்மைஸ் கொண்டு இதுவரை கதைத்ததை தெரிந்து கொள்ளலாம். அதுதான் என்னுடைய பெரும்பாலான தேடல்களுக்கு பயனாகிறது என்றாலும், ட்வீட் ஸ்கான் கூட தேவலாம்தான்.

19. என் நண்பர்கள், எதிரிகள், முன்னாள் காதலிகளைக் கண்டு கொள்வது எப்படி? இவர்களை மட்டுமல்ல. அறியவேண்டிய சகாக்களை ட்வெலோ அடையாளம் காட்டுகிறது.

20. இவர்களை எல்லாம் பின்பற்றி என்ன பிரயோசனம். ஏதாவது சுட்டி மாட்டுமா? விஷயம் புகழ்பெறுவதற்கு முன்பே ட்விட்டரில் உரையாடப்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு, ட்விட்டரில் அதிகம் சுட்டப்படும் உரல்களைத் தொகுத்து, தகவல் யுகத்தின் நுனிக்கே செல்லலாம்.

21. இம்புட்டு விஷயமா! எவ்வளவு தகவல் கிட்டுகிறது! ‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற, செய்யாமை, செய்யாமை நன்று’ என்னும் குறளை படிக்காதவங்க சிலரும் ட்விட்டரில் சுற்றுவதால் கவனம் தேவை. எளிதில் வதந்தி உலாவும் இடம் இது.

22. நான் எல்கியவாதி. ட்விட்டரின் கட்டுப்பாடுகள் எனக்கு ஒத்துவராது! யாராக இருந்தாலும் டக்கென்று பதில் வாங்குவது முதல் சட்டென்று வாசகரை கவர்ந்திழுக்க செல்பேசி புரட்சிக்கு தயாராக இருக்கோணும்.

23. ட்விட்டர் வியாதியாகும் அபாயம் உண்டா? சோதித்துக் கொள்ளவும்.

24. ரொம்பப் பேசறீங்க. இன்னும் சுருக்கமா ஒரு வார்த்தையில் சொல்ல முடியுமா? ஒரேயொரு வார்த்தையா! உங்களுக்கு எடாகு சரிப்படலாம்.

25. என்னோட கேள்வி ஒன்றுக்குக் கூட விடை கிடைக்கவில்லையே!? இங்கு செல்லவும். மேலும் விலாவாரியான பயனர் புத்தகமும் கிடைக்கிறது.

கொசுறு: இன்னும் நிறைய ட்விட்டர் நிரலிகள் இருக்கிறதாமே? அவற்றில் மெச்சக் கூடியவை எவை? பகுதி #5– இல் இட்டிருக்கும் பட்டியல் பார்க்கவும்.

கருத்துப்படம்: டேவிட்

28 responses to “ட்விட்டர்: எளிய அறிமுகம்

  1. Very Comprehensive!
    வழக்கம்போல கலக்கீட்டீங்க பாபா!

  2. நன்றி, இளா, டைனோ & ரவி 🙂

  3. Amazing work baba. Very comprehensive and very informative. ஆனால்… புதுமுகங்களுக்கு சற்றே பயத்தை வரவழைக்கலாம். ஓர் எளிய அறிமுகமும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

  4. விரிவாக, தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். ஆனாலும்
    ஜோதியில் கலக்க பயமாயிருக்கிறது.
    அழகாயிருக்கிறாய், பயமாயிருக்கிறது
    தொழில்னுட்பத்திற்கு மிகவும்
    பொருந்தும்.

    பாபா, நீங்கள் எதற்கெல்லாம் (unofficial)
    evangelist என்று ஒரு பட்டியல் தரமுடியுமா :).

  5. அருமையாக கோர்த்திருக்கிறீர்கள். சுவாரஸ்யமாகவும் தகவல்களுடன் இருக்கிறது.

  6. சாய்ராம்,
    ட்விட்டரில் தங்களின் பரிந்துரைக்கும் நன்றிகள் பல 🙂

  7. பத்ரி, A Concise Introduction to Twitter.com and Why you should join there? – ஈ – தமிழ் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  8. ஜோதியில் கலக்க பயமாயிருக்கிறது.—

    மகர ஜோதியா என்ன! பயப்படறதுக்கு? தகிரியமா வாங்க. செல்பேசியில் வரும் தகவல்களுக்கு மட்டும் மறக்காமல் ‘ஆஃப்’ போட்டுவிடுங்க. இல்லையென்றால் பில் எகிறிடும்

    எதற்கெல்லாம் (unofficial) evangelist என்று ஒரு பட்டியல் —

    ரொம்ப நாளாக ஃப்ளிக்கருக்கு ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்துக்குள் வந்துவிடும் 😀

  9. ட்விட்டர் பற்றி சின்ன அறிமுகம் என்று சொல்லிவிட்டு இப்படி பின்னி பெனலெடுத்திட்டீங்களே???

    பேஷ் .. பேஷ்.. 😉

  10. ‘my daughter is getting addicted to blogging’

    an example for your evil influence 🙂

    மகர ஜோதியா என்ன! பயப்படறதுக்கு? தகிரியமா வாங்க. செல்பேசியில் வரும் தகவல்களுக்கு மட்டும் மறக்காமல் ‘ஆஃப்’ போட்டுவிடுங்க. இல்லையென்றால் பில் எகிறிடும்

    ஐயா, சரக்கில்லாமல் டிவிட்டரில்
    புகுந்து என்ன செய்வது.நீங்க
    சொல்லுங்க, நாங்க கேட்டுக்குரோம்.

    ”ரொம்ப நாளாக ஃப்ளிக்கருக்கு ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்துக்குள் வந்துவிடும்.”

    பிளிக்கர நடத்துபவர்களுக்கு
    தெரியாத ரகசியமெல்லாம்
    அதில் இருக்குமுன்னு சொல்லுங்க.

  11. கலக்கல் தொகுப்பு!!

  12. சரக்கில்லாமல் டிவிட்டரில் புகுந்து என்ன செய்வது—

    நாங்க மட்டும் வச்சுட்டா வஞ்சனை செய்யறோம்… அதுக்குத்தான் சுட்டி போடறது செஞ்சுண்டிருக்கேன் 🙂

  13. Excellent!!! Really concise stuff 🙂

    Don’t keep a Twitter Desktop / browser app or Twitter website open all the time. The notifications, refreshings will suck your time.—

    True. But, use something like Twhirl and ‘Pause Notifications’.

    This helps two purposes:
    1. Gets an archive all of you following
    2. Ability to mark faves, reply etc for old tweets

    ————–

    Don’t flood with tweets. Anything more than 10 a day, people are starting to get annoyed.

    நீங்களுமா 😉

    ————–

    —I have 1000+ tweets gone for ever—-

    No. certainly not according to Twitter / Carmillia: @ev Thanks for answering my…

    —–

    —Comments / replies are spread over and don’t make sense many times. It is confusing for which tweet you get the reply.—

    True. The reply shd have some kind of indication of the subject. மொட்டையாக ‘ஏன்/எப்படி’ போன்ற கேள்விகளைத் தவிர்க்கலாம்.

    எல்லா மறுமொழிக்கும் 🙂 சிரிப்பான் போடுவதைத் தவிர்க்கலாம். அவர்களின் பிறிதொரு மறுமொழிக்கு பொருத்தமான சிந்தனை எழுந்தால் அப்பொழுது மட்டும் பதில் பொடும் வழக்கத்தை வெச்சுக்கலாம்.)

    ————————

    —-Shed your online image and be just friends with people.—-

    Soooooper!!! 101% agreed 😀

  14. //Dr. Boston Bala. PhD. Twitterology :)//

    Repeatey… 🙂

  15. சார்…..!!! எங்கேயோ போயிட்டீங்க (அபூர்வ சகோதரர்கள் ஜனகராஜ்-சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

    நீங்க ப்லாக் எழுதுறதுக்கு ஏதாச்சும் கம்பெனி வச்சு நடத்துறீங்களா?

    நன்றி…

  16. wow,
    u rocks bro
    உண்மையிலேயே எங்கயோ போய்ட்டீங்க
    அருமையாக இருந்தது.

  17. புரியவே இல்லீங்க.

  18. எது புரியலன்னு சொல்லுங்க…

    தனியா கவனிக்கறேன்

  19. பிங்குபாக்: Top 16 Tamil Twitter Users (by influence) « Snap Judgment

  20. //14. நான் வோர்ட்பிரெஸ், ப்ளாகர் போன்ற செய்தியோடை தரும் இடங்களில் பதிகிறேன். ஆர்.எஸ்.எஸ்ஸை எவ்வாறு சேர்த்து விடுவது? ட்விட்டர் ஃபீட் பயன்படுத்தலாம்.//

    இது எனக்கு மிக உதவியாக உள்ளது. நன்றி

  21. பாலா கலக்கிட்டீங்க, தமிழ்ல டிவிட்டர் பத்தி தேவையான தகவல்களை திரட்டி தந்துட்டீங்க!
    Twitterrific!!

  22. நண்பரே, இந்த பதிவை என் பதிவில் சுட்டி இருக்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றிங்க.

    http://surendharj.blogspot.com/2010/08/blog-post_29.html

mayooresan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.