வீ.பெரியசாமி, தேளூர்.
‘ஊருக்கு உபதேசம்’ என்பதற்கு உதாரணம்?
சென்னைக்கு அருகே நடந்த பா.ம.க. இளைஞர் அணி மாநாட்டுக்காக நிழல் தரும் சாலையோர புங்க மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம்.
வீ.பெரியசாமி, தேளூர்.
‘ஊருக்கு உபதேசம்’ என்பதற்கு உதாரணம்?
சென்னைக்கு அருகே நடந்த பா.ம.க. இளைஞர் அணி மாநாட்டுக்காக நிழல் தரும் சாலையோர புங்க மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம்.
Posted in Anbumani, Answers, Arasu, Environment, Kumudam, Pasumai Thayagam, Pasumai Thayakam, PMK, Ramadas, Trees
ஏறுமுகமாக செல்லும் பங்குச்சந்தையில், லாபம் காண ஏதாவது சாக்கு சொல்ல வேண்டும். ஒரு வருடம் முன்பு 100 டாலருக்கு வாங்கிய பங்கு, இன்று 150-க்கு விற்றுக் கொண்டிருந்தால், அதை விற்றுவிடும் போக்கு வரும். பங்குச்சந்தைக்கு இப்போது ஆடித் தள்ளுபடி.
டாட் காம் கீழே விழுந்தபோது அமெரிக்கப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தியது வீட்டுச்சந்தைதான். இப்போது வீட்டுச்சந்தை விழும்போது, மற்ற சந்தைகளான எரிபொருள், நுட்பம், போர் போன்றவை கை கொடுக்கும் காலம்.
ஐந்தாண்டுகள் முன்பு வட்டி விகிதம் சல்லிசாக இருந்தது. வட்டியில்லாமல் கடன் கூட கொடுக்கப்பட்டது. இதை சாக்காக வைத்துக் கொண்டு அளவுக்கு மீறி செலவுகள் செய்து குடும்பம் கட்டியவர்கள் ஏராளம். வரவு நாலணா. வீட்டு வாடகை இரண்டணா; வட்டி போடாத கடனில் வீடு வாங்கினாலோ மாதந்தோறும் இரண்டணா மட்டும் அசலுக்கு தாரை வார்த்தால் போதும். அப்போது சரியாகத்தான் பட்டது. சில ஆண்டுகள் கழித்து, வட்டி விகிதம் ஏறி, மாதந்தோறும் எட்டணா கேட்க ஆரம்பித்தவுடன் துந்தனா…
இந்த மாதிரி அகலக்கால் வைத்த எல்லோரின் கடனும் நம்பகமானது என்று பறைசாற்றி இடைத்தரகர்கள் வங்கிகளையும் வீட்டுக்காரர்களையும் கோர்த்து விட்டார்கள். பதினாறு சதவீத வட்டிக்கு ஆசைப்படும் முதலீட்டாளர்களும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள். நிதி நிறுவனங்களும், வீடுகள் என்றும் அழியாச் சொத்துதானே, எங்கே ஓடிப் போகப் போகிறது என்று கடன்களாக அள்ளி விட்டார்கள். இப்போது விவாகரத்து, வேலை இழத்தல், குழந்தை பிறத்தல், மணமுடிப்பு என்று இல்லறக் குழப்பங்களும் டைமிங்காக சேர்ந்து கொண்டிருக்கிறது.
வீட்டுக்கான கடனைத் தொடர முடியாத நிலை. கடன் கொடுத்த வங்கிக்கோ, வீட்டை விற்றால் கூட அசல் கூட கிடைக்காத நிலை. வங்கியில் நிலுவைப் பணம் போட்டவர்களுக்கோ, இருப்பதைப் பறித்துக் கொண்டு தப்பித்து ஓடிப்போகும் பயம். இதையெல்லாம் வெளியில் இருந்து பார்க்கும் முதலீட்டாளருக்கோ, பங்குச்சந்தையை விட்டு விலகி பாதுகாப்பாக ஓய்வெடுக்கும் விருப்பம்.
இந்தியாவிலும் இதன் பாதிப்புகள் தெரியும். இந்திய பங்குச்சந்தையும் வீழ்வது ஒருபுறம். வேலைகளை வெளியேற்றாதே என்னும் கோஷம் இன்னொரு புறம். பெங்களூரு, சென்னை போன்ற இறக்கை கட்டி பறக்கும் ரியல் எஸ்டேட்கள், பறவைக் காய்ச்சல் வந்தது போல் இறங்குமுகமாகும் அபாயம் மறுபுறம்.
இந்தியாவில் இதன் பிரதிபலிப்பைத் தாங்கிக் கொள்ள முடியுமா? வாழ்ந்தே, அனுபவித்தே பழக்கப்பட்ட தலைமுறை. செலவழித்தே கொஞ்சித் திரிந்த சமுதாயம், ஏற்ற இறக்கங்களை சமதளமாக பாவிக்குமா? அல்லது, இந்தியாவின் நடுத்தர வர்க்கத்துக்கு எவ்வித இழப்பும் (தற்போதைக்காவது) ஏற்படப் போவதில்லையா?
அமெரிக்காவில் ஜனாதிபதிகளின் எட்டாண்டு காலம் முடியும்போதெல்லாம், இந்த பங்குச்சந்தை வீழ்ச்சியும் நடக்கிறது. எட்டாண்டு முன்பு க்ளின்டன் ஆரம்பித்தார். ஆல் கோர் கவிழ்ந்தார். இன்று புஷ் ஆரம்பிக்கிறார். அடுத்து க்ளின்டன் (ஹில்லாரி) வருவார்?
மொபைல் நுட்பம் வளரப்போகிறது என்று ஏழாண்டுகளாகக் கதைத்த காலம் கழன்று ஐஃபோன் வந்திருக்கிறது. வெப் 3.0 என்று ஜல்லி மாறியிருக்கிறது. போரும் முடிந்த பாடில்லை என்பதால் அரசின் பற்றாக்குறை பொக்கீட்டுக்கும் குறைபாடில்லை. அமெரிக்காவில் எண்ணெயும் நோட்டும் வழிவதில் பிரச்சினையிருக்கக் கூடாது.
இது தொடர்பான சில பத்திகள்:
But a shadow has been cast over the industry as some lenders have been threatened with bankruptcy.”நல்ல விஷயங்கள் தாமதமாகத்தான் எனக்குத் தெரிய வருகிறது.
ஹாரி பாட்டர் அதகளமான அசந்தர்ப்பமான வேளையில் புத்தகக் கடைக்கு சென்று நோட்டமிடும் எண்ணம். திருவிழாவில் ஒயிலாட்டம், ஓரத்தில் ஒதுங்கும் ஆட்டம் எல்லாம் பார்க்காமல், வேண்டுதல் எதுவும் முன்வைக்காமல் சாமியை மட்டும் பார்ப்பது போல், தேவையான புத்தகம் என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் இலக்கின்றி சுற்றியபோது, இந்தப் பத்திரிகை அம்புட்டுக் கொண்டது.
நூலகத்தில் இலவசமாக இதழ் கிடைத்தாலும் எடுக்காமல் புறந்தள்ளுபவர் கூட, பைசா போட்டு வாங்க வைக்கும் நேர்த்தி.
சில சாம்பிள்:
1. 
2. நீரால் ஆனது:
3. விக்கிப்பீடியா:
4. அமெரிக்காவில் வீடற்றவர்கள்:
5. GE என்னும் ராட்சஸன் (அமெரிக்க நிறுவனம்):
6. சிரித்து வாழ வேண்டும்: சென்ட் அடித்துக் கொண்டால் மகிழ்ச்சி பிறக்குமா? ஒஷோ பிரச்சினை மாதிரி வாதங்களில் உண்டாகும் அழுத்தம் நீங்க வேண்டுமா? ரிலாக்ஸ் செய்ய ப்ர்ஃப்யூம் போட்டுக்குங்க…
7. கடைசியாக வலைப்பதிவில் இருந்து சில திரைப்படங்களும் & இயக்குநரும்.