Movie Watching – Quick Reviews


1. மெர்க்குரிப் பூக்கள் – படம் நன்றாக இருக்கிறது. மீரா ஜாஸ்மினுக்காகவே இரண்டு தடவை பார்க்கலாம். சிந்திக்கவும் வைக்கிறது. கடைசியில் கருணாஸ் கதாபாத்திரம் சினிமாடிக் ஆக நடந்தாலும், தேவையான வலி கொடுக்கிறது. அவசியம் பாருங்கள்.

‘ஆண் எப்போதும் தன் நிலையில் இருந்தே மனைவியை அணுகுகிறான்’ என்பது போன்ற அலைகள், தொடர்ச்சியான உள் அலசலகள் எழும்.

2. அத்தடு – சிம்ப்ளி கலக்கல். ஏற்கனவே சிறப்பு பதிவு போட்டாச்சு

3. பொம்மரில்லு – இரண்டாம் பாதி அமர்க்களம். நல்ல நகைச்சுவை. ஏற்கனவே ஜோடி போன்ற சில படங்களில் பார்த்த கதையம்சம்; என்றாலும், இதில் வெகு சிறப்பாகவே வந்திருக்கிறது.

‘மனசுக்குப் பிடிச்சதை செய்யணும்’ என்று அமெரிக்க கருத்தாக்க பாணியில் ஜெனீலியவின் பாத்திரம். பிரகாஷ்ராஜ்தான் ஹீரோ. ‘அத்தடு’வுக்கு அடுத்த வாரம் பாத்ததாலோ என்னவோ சித்தார்த் சோபிக்கவில்லை.

4. Memoirs of a Geisha – ஆவணப்படம் போல் ஆகும் அபாயம். வரைவின் மகளிர் போன்ற சித்தரிப்பு கொண்டுவந்துவிடும் சறுக்கல் நிகழ்ந்து விடலாம். அழகு, நளினம், கலை, அரசியல், திறமை, வாக்கு சாதுர்யம் என்று பன்முகத்தையும் காதலையும் அசலாகக் கொடுத்த படம். அனுபவம் பாதிப்புகளை ஏற்படுத்தி தளத்தையும் விரிவாக்கும்.

5. Borat – ஏதோ மெஸேஜ் சொல்ல வருகிறார்கள் என்று புரிகிறது. அமெரிக்க ஸ்டைல் நகைச்சுவைக்கு இன்னும் க்ராஜுவேட் ஆகலை. வித்தியாசமான நக்கல் + திரைப்பட முயற்சி

6. Children of Men – திண்ணையில் இந்த வாரம் விமர்சனம் எழுதியிருந்தார்கள். (இணைப்பு) மோசமான படம். ஏதோ ஒரு குழந்தை பிறக்கிறதாம். லோகமே சுபிட்சமாக ஆயுதங்களை கிடத்திவிடுகிறதாம். மேலும் பிள்ளைகளாகப் பெற்றெடுத்து அமைதியை ரட்சிப்போம் என்கிற ரீதியில் கருத்தாக்கம். ஆனால், கூண்டுகளில் சிறுபான்மையினரை அடைப்பது, அராஜக மேற்கத்தியம் போன்றவையும் மேலோட்டமாக இருந்தாலும், சிந்தனையை விரிவாக்கும் முயற்சி.

7. பச்சைக்கிளி முத்துச்சரம் – Derailed படத்தின் (கதையின்) தமிழாக்கம். மொழிமாற்றம் என்ற முறையில் சிறப்பாக செய்திருக்கிறார்கள். தெரிந்த கதை என்பதால் சுவாரசியமில்லை. வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறிய சரத் மனைவி, மீண்டும் திரும்பியவுடன் நடக்கும் உரையாடலில் நச் & முக்கியமான விவாதம் + வசனம். அந்தக் காட்சி மட்டும் பார்த்து, பதிந்து கொள்ள வேண்டிய இடம்.

8. பருத்திவீரன் – இந்தப் படத்தில் குறித்து வைத்துக் கொள்ள எதுவும் இல்லை என்னுமளவில் இகாரஸ், பொறுக்கி என்று பல குறிப்பிடத்தக்க பார்வைகள்.

3 responses to “Movie Watching – Quick Reviews

  1. >>கூண்டுகளில் சிறுபான்மையினரை அடைப்பத

    pray pannum kizhavi, german pesara mari kattirukkanga. cuaron’s brand of irony.

    >>ஏதோ ஒரு குழந்தை பிறக்கிறதாம். லோகமே சுபிட்சமாக ஆயுதங்களை கிடத்திவிடுகிறதாம

    enna annachi ipdi sollipitteenga.. koyandha appala pona udanae thiruppi allam suda arambichuruvanga patheengala. naanum ai thamil padam mari irukkennu ninachaen!

  2. —german pesara mari kattirukkanga. cuaron’s brand of irony.—

    இதெல்லாம் கவனிக்கவே இல்லையே 😦

    —koyandha appala pona udanae thiruppi allam suda arambichuruvanga patheengala.—

    இந்த அபார்ஷன் எதிர்ப்பு கும்பலின் பிரச்சாரவாடை அடித்தது. நீங்கள் சொல்வதும் உண்மைதான்… இன்னும் ஒரு ரெண்டு ரிவ்யூ மேஞ்சப்புறம், ‘மொழிமாற்றத்துடன்’ சினிமா அனுபவம் போடலாம் 😀

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.