Monthly Archives: செப்ரெம்பர் 2006

Tamil Nadu Local Body Polls – Books by NCBH

Dinamani.com – TamilNadu Page

உள்ளாட்சித் தேர்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் 5 நூல்கள்: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியீடு

பா. ஜெகதீசன்

சென்னை, செப். 22: உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் பொது மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் 5 நூல்கள் வெளியாகி உள்ளன.

ஜனநாயகத்தின் நாற்றங்கால்களாகத் திகழும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 13. 15-ல் இரு கட்டங்களாகத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. புதன்கிழமையில் இருந்து வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி விட்டது.

சுமார் 1.31 லட்சம் பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், பொது மக்களும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் குறித்து எளிதாக அறிந்து கொள்ள உதவும் விளக்கக் கையேடுகளாக இந்நூல்கள் அமைந்துள்ளன.

சென்னையில் உள்ள “நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்’ வெளியிட்டுள்ள இந்த 5 கையேடுகளும் மொத்தம் ரூ.95 விலைக்கு விற்கப்படுகின்றன.

கையேடுகளின் பெயர்:
(1) சிற்றூராட்சி நிர்வாகம்,
(2) ஊராட்சி ஒன்றிய நிர்வாகம்,
(3) மாவட்ட ஊராட்சி நிர்வாகம்,
(4) சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும்,
(5) கிராமசபை அதிகாரங்களும் கடமைகளும்
என்கிற ஐந்து தலைப்புகளில் இந்த விளக்க நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஊராட்சி அமைப்புகளை மக்கள் பங்கேற்கும் இயக்கமாகவும், வளர்ச்சியை உருவாக்கும் நிறுவனங்களாகவும் மாற்றும் நோக்கில் இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன என நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மக்கள் தலைவர்களுக்கும், அலுவலர்களுக்கும் பயிற்சி அளித்து வரும் க. பழனித்துரை இந்த 5 நூல்களையும் எழுதி உள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் வரலாறு, அவற்றின் சட்ட விதிகள், உரிமைகள் -கடமைகள், வரி விதிப்பு முறைகள், மன்றக் கூட்டங்களை நடத்தும் விதம், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் போன்றவர்களுக்கு உள்ள அதிகாரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இந்நூல்களில் விளக்கப்பட்டுள்ளன.

Social Class Identity

இந்தப் படம் எந்த வித்தியாசங்கள்், எவ்வித பாகுபாடுகள், எத்தகைய ஏற்றத்தாழ்வுகளுக்கு எல்லாம் பொருத்தமாக இருக்கும்?

Secret Asian Man © 2006 Tak Toyoshima

நன்றி: Secret Asian Man – Tak Toyoshima


Social Class :: சமூகப் பிரிவு:

  • வேலை
  • படிப்பு
  • வருமானம்
  • பழக்கவழக்கம்
  • செல்வம்
  • பதவி
  • சொத்து
  • செல்வாக்கு
  • மொழி
  • இனம்
  • ஆண்/பெண் பால்வகை
  • பால் விருப்பத் தேர்வு
  • அந்தஸ்து

| |

Local Body Elections : DMK Alliance’s Conundrum

Dinamani.com – TamilNadu Page

நேரடித் தேர்தல் ரத்தால் நெருக்கடியில் அரசியல் கட்சிகள்

எஸ்.திருநாவுக்கரசு

கோவை, செப்.21: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளிடையே இடப் பங்கீடு செய்வதில் அரசியல் கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பின்னர் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் முதல் தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் என அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தபோது, தலைவர் பதவியைக் கொண்டு இடப் பங்கீட்டை அரசியல் கட்சிகள் செய்து கொண்டன. வார்டுகளை மட்டும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மட்டத்தில் பேசிப் பிரித்துக் கொண்டனர்.

தலைவரை வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், மெஜாரிட்டி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினருக்கே தலைவர் பதவி கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந் நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் எத்தனை வார்டுகளில் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சி போட்டியிடுவது, மீதியை கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது என்ற சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். இல்லையேல், கூட்டணிக் கட்சிகளின் தயவை நாட வேண்டியிருக்கும். மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினரைப் பெற வேண்டுமானால் அந்த அளவுக்கு வார்டுகளில் போட்டியிட வேண்டும்.

மொத்த வார்டுகளில் 50 சதத்துக்கும் மேலாக ஒரு கட்சி போட்டியிட்டால் கூட்டணிக் கட்சிகளுக்கு மீதி வார்டுகளை பிரித்துக் கொடுப்பது சாத்தியமில்லை என கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர்.

மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யும் முறை இருக்கும்போது, அப்பதவியை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பறிக்க முடியாது. ஆனால், கவுன்சிலர்கள் சேர்ந்து அவர்களில் ஒருவரை மேயராகவோ, நகர்மன்றத் தலைவராகவோ, பேரூராட்சித் தலைவராகவோ தேர்ந்தெடுக்கும்போது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் அவர்களின் பதவியைப் பறிக்க முடியும்.

இச்சூழலில் உள்ளாட்சி மன்றத்தின் தலைவர் பதவிக்கு வரும் கட்சி, மன்ற உறுப்பினர்களில் மெஜாரிட்டியைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால், கூடுதல் வார்டுகளில் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சியிலும் கூட்டணி தான்?: திமுக கூட்டணியைப் பொறுத்தவரை மாநில அரசில் எப்படி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறதோ, அதேபோல உள்ளாட்சி அமைப்புகளிலும் கூட்டணி ஆட்சி நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிப் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வோம். அதற்கேற்ப, வார்டுகளை விட்டுக்கொடுத்து போட்டியிடுவோம் என திமுக தரப்பில் கூறப்படுகிறது. தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை புதன்கிழமை சென்னையில் முடித்து, சனிக்கிழமைக்குள் மாவட்ட அளவிலான பேச்சுவார்த்தையை முடிக்க திமுக கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அதிமுக கூட்டணியில் உள்ளாட்சி அமைப்பு இடங்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் சிக்கல் இல்லை. கூட்டணிக் கட்சிகளான மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் பெரிய எதிர்பார்ப்பில் இல்லை. எனவே, சுமுகமான முறையில் இடப் பங்கீடு நடக்கும் என அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சினை இல்லாத கட்சி: நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் எவரும் எதிர்பார்க்காத வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான வாக்குகளைப் பெற்ற நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியினர் உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரை அனைத்து நிலைகளிலும் வேட்பாளர்களைக் களம் இறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. எக்கட்சியுடனும் கூட்டணி இல்லாத நிலையில் இடப் பங்கீடு பிரச்சினைகள் எதுவும் இல்லாத கட்சியாக அது உள்ளது.

Sun TV’s re-entry into Doordarshan’s DTH free-to-air Channels

Dinamani.com – Headlines Page

தூர்தர்ஷன் தொகுப்பில் சன் டி.வி. மறுபிரவேசம்: புதிய இணைப்பு சன் நியூஸ்

ஏ.தங்கவேல்

புது தில்லி, செப்.21: உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தூர்தர்ஷனின் டிடிஎச் (கேபிள் இணைப்பின்றி, வீட்டுக்கு நேரடியாக டி.வி. இணைப்புப் பெறும் வசதி) தொகுப்பில் மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு சந்தடியின்றி மறு பிரவேசம் செய்திருக்கிறது சன் டி.வி.

இதில் விசேஷம் என்னவெனில், சன் டி.வி. மட்டுமின்றி, கட்டண சானலான சன் நியூஸ் சானலும் இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

தூர்தர்ஷனின் டிடிஎச் ஒளிபரப்பில், 33 சானல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஐம்பதாக உயர்த்த பிரசார் பாரதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதில் தூர்தர்ஷன் சானல்கள் தவிர, இலவசமாக ஒளிபரப்பாகும் தனியார் சானல்களும் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில்தான் சன் டி.வி.யும் இடம் பெற்றிருந்தது.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு, ஜூன் 16-ம் தேதி சன் டி.வி. தூர்தர்ஷனின் (டிடி -டிடிஎச்) தொகுப்பிலிருந்து விலகிக் கொண்டது. டிடி-டிடிஎச் ஒளிபரப்புத்தரம் மிகவும் மோசமாக இருப்பதால் விலகியதாக அப்போது காரணம் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், சன் டி.வி. கட்டண சானலாக மாறப் போகிறது என்றும் பேச்சு அடிபட்டது.

ஆனால், இதுவரை இலவசமாக ஒளிபரப்பப்பட்டு வந்த சானல்கள், இனிமேல் ஒளிபரப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று பிரசார் பாரதி புதிய விதியை அமல்படுத்தியதே சன் டி.வி.யின் கோபத்துக்குக் காரணம்.

சன் டி.வி டிடி தொகுப்பிலிருந்து வெளியேறியதும், அந்த இடம் (அலைவரிசை 12534) ஜெயா டி.வி.க்குக் கொடுக்கப்பட்டது. பிரசார் பாரதி கேட்ட ஒரு கோடி கட்டணத் தொகையையும் ஜெயா டி.வி. செலுத்திவிட்டது.

ஆனால், தமிழ்த் தொலைக்காட்சி நேயர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், கடந்த 15-ம் தேதி முதல் மீண்டும் டிடி-டிடிஎச் தொகுப்பிலிருந்து சன் டி.வி. ஒளிபரப்பாகத் துவங்கியிருக்கிறது. பிரசார் பாரதி கேட்ட ஒரு கோடி ரூபாய் கட்டணத்தையும் செலுத்திவிட்டது.

அதுமட்டுமன்றி, மேலும் ஒரு கோடி செலுத்தி, கட்டண சானலான சன் நியூஸ் சானலையும் இந்தத் தொகுப்பில் சேர்த்திருக்கிறார்கள்.

பிரசார் பாரதி நிறுவன விதிகளின்படி, டிடி-டிடிஎச் தொகுப்பில் ஒளிபரப்பாகும் எந்தச் சானலும் கட்டணச் சானலாக இருக்க முடியாது. இதுபற்றி தினமணிக்குப் பேட்டியளித்த பிரசார் பாரதியின் பொது மேலாளர் (ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு) மணீஷ் தேசாய், “இலவச சானலாக டிடி தொகுப்பில் சேர்ந்த பிறகு, கட்டணச் சானலாக மாற முடிவெடுத்தால், அந்தத் தொகுப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும்’ என்றார்.

“சன் நியூஸ் தொலைக்காட்சி டிடி தொகுப்பில் சேர்ந்ததால் பிரசார் பாரதியின் கொள்கைகளில் எந்தப் பாதிப்பும் வராது. இத்தொகுப்பில் உள்ள எல்லா சானல்களும் இலவச சானல்கள் என்ற கொள்கையை சன் டி.வி. நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும் நிலையில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை’ என்றார் தேசாய்.

சன் டி.வி அலைவரிசையில் இருந்த ஜெயா, ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிகள், சன் டி.வி.யின் மறுபிரவேசத்தால் புதிய அலைவரிசைக்கு (10977) மாற்றப்பட்டன. அதாவது, சன் டி.வி.யில் இருந்து 30 சானல்கள் பின்னால் தள்ளப்பட்டுவிட்டன. ஆனால் இந்த மாற்றம் பற்றி ஜெயா டி.வி. நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. அந் நிறுவனத்தின் சார்பில் மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் புகார் செய்த பிறகுதான் மாற்றம் பற்றிய தகவல் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

“சன் டி.வி. நீண்டகால சந்தாதாரர் என்பதால் அவர்களுக்கு பழைய இடமே கொடுக்கப்பட்டது. அதனால், ஜெயா டி.வி.யைப் புறக்கணிப்பதாக அர்த்தம் இல்லை’ என்றார் தேசாய்.

சன் டி.வி. நிறுவனத்தின் துணைத் தலைவரான (தொழில்நுட்பம்) கண்ணனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சன் நியூஸ் தொலைக்காட்சியும் டிடி தொகுப்பில் சேர்ந்திருப்பதை உறுதி செய்தார்.

ஆனால், டிடி தொகுப்பிலிருந்து வெளியேறி மூன்று மாத இடைவெளியில் மறுபிரவேசம் செய்திருப்பது ஏன்? தூர்தர்ஷனின் தொகுப்பிலிருந்து விலகியதால், ஜெயா டி.வி. தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும், தரப்பட்டியலில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடும் என்றும் சன் கருதியிருக்கலாம்.

மேலும், சமீபத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய உத்தரவின்படி, ஜனவரி 1 முதல் ஒரு தொலைக்காட்சிக்கு சந்தாதாரரிடம் மாதம் ரூ.5 மட்டுமே வசூலிக்க வேண்டும். மேலும், ஒரு நிறுவனத்தில் உள்ள எல்லா சானல்களையும் வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. அதனால், எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்று அச்சமடைந்திருக்கலாம்.

அத்துடன், திமுகவின் சாதனைப் பிரசார விளம்பரங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய தூர்தர்ஷனின் தொகுப்புதான் சரியான வழியாக இருக்கும் என்றும் முடிவெடுத்திருக்கலாம்.

53rd Fairone Filmfare Awards 2005

இந்த வருடம் ஃபேர்-ஒன் – ஃபிலிம்ஃபேர் விருதுகளை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். கவர்ந்த சில விஷயங்கள்:

Actor Thilagan

  • திலகன் :: வாழ்நாள் சாதனையாளர் #1: 50+ வருடமாக குணச்சித்திர மலையாள நடிகர்; ‘அருமைநாயகம்’ என்றவுடன் அம்மா வயிற்று குழந்தை கூட கதிகலங்கும்; கிரீடம், பெருந்தச்சன் முதல் ‘நீ வேணுண்டா செல்லம்’ வரை இயல்பான நடிப்பு; தேசிய விருது வாங்கியவர்; நெகிழ்வுடன் பேசினார்.

  • சுகுமாரி :: வாழ்நாள் சாதனையாளர் #2: 55 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருப்பவர். கலைமாமணி; பத்மஸ்ரீ; ‘வாராய் என் தோழி வாராயோ’ முதல் காதலுக்கு மரியாதை வரை பல தலைமுறைகளை மகிழ்விப்பவர்.

  • ‘வான்மதி’ ஸ்வாதி, ரீமா சென், நமிதா, ‘மழை’ & ‘சிவாஜி’ ஷ்ரேயா, ஸ்மிதா (‘அனுகொகுண்ட ஒக ரோஜு’ பாடகி), மேக்னா நாயுடு (தெலுங்கு?), மாளவிகா என்று நிறைய பேர் மூச்சிறைக்க ஆடினார்கள். ஷோபனாவும் கிரிக்கெட், ஹாஸ்ப்பிடல் என்று நவீனங்களை நாட்டியத்தில் அவசரமாக மூன்று நிமிடத்துக்குள் ஓடியாடினார். எதுவுமே சோபிக்கவில்லை.

  • வாயசப்பதை மட்டும் செய்யும் தேவி ஸ்ரீபிரசாத் போன்றோருக்கு எதற்கு வாயின் அருகே மைக்? ஜெஸிகா சிம்ப்ஸன் போல் பாவ்லா கூட காட்டுவதில்லை. விருதுக்கு வாக்களித்தோரை நகைக்கும்விதமாக, தலையோடு ஒட்டி உறவாடும் ஒலிப்பான் (Head phone). இளைய தளபதி விஜய்யின் உச்சரிப்புக்கு ஏற்ப, கையசைத்தார்.

    Actress Sukumari

  • அனைத்து அவார்ட்களையும் ‘நுவ்வொஸ்தானண்தே நேநொத்தண்தானா‘ (Nuvvostanante Nenoddantana) தெலுங்கிலும் ‘அன்னியன்’ தமிழிலும் குத்தகை எடுத்தது. தெலுங்கு நடிகை த்ரிஷாவுக்கு ஃபிலிம்பேர் கொடுப்பதற்கு முன் செம டைமிங் சென்சுடன் பாக்யராஜ், கையைத் துடைத்துக் கொண்டு கைகுலுக்கியது ‘சிறந்த எண்டெர்டெயினர்’ விருதைக் கோரியது.

  • தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு கொடுக்கப்பட்ட குணச்சித்திர நடிகர் (ராஜ்கிரண்) & நடிகை (சரண்யா) விருதுகள், சன் டிவியில் கத்தரிக்கப்பட்டது.

  • ஸ்ரேயாவை அறிமுகம் செய்த கண்ணன், மாமனார், மாப்பிள்ளை இருவருடன் நடிக்கும் என்பதை உபசாரமாக சொன்னாலும், நம்ம புத்திக்கு நக்கல் செய்த மாதிரி அர்த்தம் கொடுத்தது.

  • அஜீத்தின் நடிப்பை விட பயமுறுத்துமாறு, சேரனின் சிகையலங்காரம் பூச்சாண்டியாக அச்சுறுத்தியது.

  • ‘கேளடி கண்மணி’ வசந்த் இளைத்து, படு ட்ரிம்மாகி சுசி கணேசன், எஸ் ஜே சூர்யாவுக்கு போட்டியாக களமிறங்க ரெடி என்றார்.

  • ஒரு மாறுதலுக்காக இயக்குநர் பார்த்திபன் மாறுதலாக பேசி கடித்துக் குதறாமல், தன் குரு பாக்யராஜ் போல் எதார்த்தமாய் ‘self-deprecating humor’ முயற்சிக்கலாம். ‘மலையாளத்தில் மாரடித்து’ என்று சொல்லி பார்வையாளர் பக்கம் கைதட்டலுக்காக ஏங்கினார்.

  • அடுத்த வருடம் நிச்சயம் பரிந்துரைக்கப் படுவேன் என்று ‘ஜித்தன்’ ரமேஷ் வாக்களித்தார். தம்பி ஜீவா அடக்கி வாசித்தார்.

    Vikram gets Best Actor from one of the Best Actress

  • ஆஸ்காருக்கு இணை பிலிம்பேர் என்று கிடைத்ததை வைத்து பலரும் பெருமை கொண்டனர். பரிந்துரைப் பட்டியலை முழுமையாக அறிவிக்கும் விதத்திலாவது அகாடெமியை பின்பற்றினால், நிகழ்ச்சி சுவாரசியமாகும்.

  • ‘எட்டு எட்டா மனுசன் வாழ்வைப் பிரிச்சுக்கோ’ என்று சொல்லிவிட்டு, நிறைய பேரின் பிறந்த நாள் எட்டாம் தேதியாக இருப்பதாக எண் கணிதம் போட்டார்
    1. நடிகர் விக்ரம். முத்தாய்ப்பாக
    2. சாபு சிறில் (கலை),
    3. ரவி வர்மன் & மணிகண்டன் (ஒளிப்பதிவு),
    4. ஷங்கர் (இயக்குநர்),
    5. ஆஸ்கர் ஃபிலிம்ஸ் (தயாரிப்பு),
    6. ஹாரிஸ் ஜெயராஜ் (இசை),
    7. பீட்டர் ஹெய்ன்ஸ் (சண்டைப் பயிற்சி),
    8. வைரமுத்து (பாடலாசிரியர்)

    என்று எட்டு விருதுகளை அன்னியன் பெற்றிருக்கிறது என்று எட்டின் பெருமையை எடுத்து வைத்தார்.

  • சோதனைக் காலங்களில் உறுதுணையாக இருந்த அம்மாவை மேடைக்கு அழைத்தார் ‘அன்னியன்’ விக்ரம். பல சமயம் அழைக்க எத்தனித்தாலும், கூச்சம் காரணமாக முடியவில்லை என்றும், இன்று தன் தாயின் பிறந்தநாள் என்பதால் கூப்பிடுவதாக பாசத்தைப் பகிர்ந்தார். பார்வையாளர் அனைவரும் நெகிழ்வுடன் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர். தான் முடங்கியிருந்த மூன்று வருடமும் தன்னம்பிக்கை ஊட்டி, முன்னேற்றிய, தன் கஷ்டத்தைப் பொருட்படுத்தாது கான்வெண்ட்டில் படிக்கவைத்த ஒவ்வொருவரின் அன்னையின் நினைவாகவும் அன்புடன் பகிர்ந்த பரிசு.

  • ‘சந்திரமுகி’க்கு சிறந்த நடிகர் விருது கிடைக்காததால் சூப்பர் ஸ்டார் ரஜினி வரவில்லை. ஆறுதல் பரிசாக நகைச்சுவை (வடிவேலு) நடிகரும், சிறந்த பின்னணிப் பாடகி விருதும் சந்திரமுகிக்கு கிடைத்தது. ‘மும்பை எக்ஸ்பிரஸை’ கண்டு கொள்ளாவிட்டாலும் கமல் ஆஜர்.

  • 21 கேமிராக்கள்; அரங்கு மேடையிலேயே கையில் பிடித்துக் கொண்டு, நடிகையின் தொப்புள் க்ளோசப் கொடுத்து உதவ ஒன்று. மேடைக்கு வெகு உச்சியிலே நாற்பதடி உயரத்தில் ‘பருந்துப் பார்வை’ கொடுக்க ஒன்று. மேடையோடு சரிசமமாக ‘ஸ்டம்ப் விஷன்’ தர ஒன்று. பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஜிலுஜிலு சந்தியாவின் புடைவையில் செய்திருப்பது சம்க்கி வேலையா, ஆரெம்கேவியின் காவியப் பட்டு வேலையா என்று ஆராயும்போது முகபாவங்களை அள்ள மிச்ச பதினெட்டு என்று படத்தொகுப்பை வெகு சிறப்பாக செய்திருந்த சன் டிவிக்கு நன்றி.

  • நேரு விளையாட்டரங்கம் மெச்சுமாறு ஹாக்கி வீரர்களும் தடகள வீராங்கனைகளும் கலக்குவதில்லை. தென்னிந்திய நட்சத்திரப் பட்டாளமும் ரசிகக் கண்மணிகளும் மகிழுமாறு நிகழ்ச்சிகள் நடத்துவதாவது ஆய பயனை அளிக்கிறது.

முந்தைய சில விருதுப் பதிவுகள்
2004 :: மெடிமிக்ஸ் – தினகரன்: தமிழ் சினிமா விருதுகள்
2005 :: தினகரன் – மெடிமிக்ஸ் விருதுகள்


| | |

Madurai’s Deputy Mayor SS Ghouse Basha selected as DMK Candidate for Madurai Central By-poll

Dinamani.com – TamilNadu Page

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் கௌஸ்பாஷா

மதுரை, செப். 20: மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.கௌஸ்பாஷா புதன்கிழமை மனு தாக்கல் செய்கிறார்.

இதையொட்டி, அவர் தமது மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:

தமிழக அரசின் சாதனைகளே எனது வெற்றிக்கு வழி வகுக்கும்.

மறைந்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இத் தொகுதியில் செயல்படுத்துவதாக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவேன். கோயில் மாநகரான மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் செய்து தரவும், அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

நகரில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, கொசுத் தொல்லையைப் போக்கவும், போக்குவரத்து நெரிசலைப் போக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

இத் தொகுதியில் உள்ள 15 வார்டுகளுக்கும் மாதத்துக்கு ஒரு முறை வார்டு வாரியாக மக்கள் குறைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கட்சித் தலைவர் மு.கருணாநிதி, அமைச்சர்கள் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், மு.க.அழகிரி, கூட்டணி கட்சியினரின் ஆதரவுடனும், பொதுமக்கள் ஆதரவுடன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார் எஸ்.எஸ்.கௌஸ்பாஷா.

மதுரையைச் சேர்ந்த கௌஸ்பாஷா (44) எஸ்எஸ்எல்சி படித்துள்ளார். இவர் திமுகவில் 1977-ம் ஆண்டு சேர்ந்து, கட்சியில் இளைஞர் அணி அமைப்பாளர், மாவட்டத் தொண்டர் அணி துணை அமைப்பாளர், வட்டச் செயலர், மாமன்ற உறுப்பினர், துணை மேயர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

Tamil Nadu Local Body Polls – Election Dates Announced

Dinamani.com – TamilNadu Page

தமிழகத்தில் அக்.13, 15-ல் உள்ளாட்சித் தேர்தல்

சென்னை, செப். 20: தமிழகத்தில் 1.31 லட்சம் பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 13, 15 தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது.

வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (செப். 20) தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 18-ம் தேதி நடைபெறும்.

இதுதொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது உள்ள மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிகிறது.

எந்தெந்த இடங்களில்…: முதல் கட்டமாக சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய 4 மாநகராட்சிகளில் அக்டோபர் 13-ல் தேர்தல் நடைபெறும்.

2-ம் கட்டமாக மதுரை, திருச்சி மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அக்டோபர் 15-ல் நடைபெறும்.

1.31 லட்சம் பதவிகள்: சிற்றூராட்சிகளில் தொடங்கி மாநகராட்சி வரையிலான அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் நிர்வகிக்க ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 962 மக்கள் பிரதிகள் இத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மொத்தம் உள்ள 12,618 ஊராட்சிகளில் 97 ஆயிரத்து 485 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

385 ஊராட்சி ஒன்றியங்களில் 6,570 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

29 மாவட்ட ஊராட்சிகளில் 656 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

561 பேரூராட்சிகளில் (டவுன் பஞ்சாயத்துகளில்) 8,807 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.

50 மூன்றாம் நிலை நகராட்சிகளில் 987 கவுன்சிலர்களும், 102 நகராட்சிகளில் 3,392 கவுன்சிலர்களும், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளில் 474 கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இவற்றில் சிற்றூராட்சித் தலைவர், அவற்றின் வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது. இதர அனைத்துப் பதவிகளுக்கும் கட்சி சின்னத்தில் போட்டியிடலாம்.

டெபாசிட் தொகை: உள்ளாட்சிப் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை பற்றி மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.200.

சிற்றூராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் -ரூ.600.

மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், நகராட்சி உறுப்பினர் -ரூ.1,000.

பேரூராட்சி -3-ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் -ரூ.500.

மாநகராட்சி உறுப்பினர் -ரூ.2,000.

பொது வேட்பாளர்களுக்கான இந்த டெபாசிட் தொகையில் பாதியை தாழ்த்தப்பட்ட -பழங்குடி சமுதாய வேட்பாளர்கள் கட்டினால் போதும்.

இத்தேர்தலில் வாக்குச் சீட்டு முறைதான் பின்பற்றப்படும்.

தேர்தல் பணியில் 4.5 லட்சம் ஊழியர்கள்: இத்தேர்தல் பணிகளில் மாநிலம் முழுவதும் நாலரை லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

தேர்தல் பணிகளைப் பார்வையிட மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். பதற்றமான பகுதிகளைக் கண்டறியவும், அந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாநகராட்சிகளில் அக்.13-ல் தேர்தல்

சென்னை, செப். 20: சென்னை உள்ளிட்ட 4 மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 13-ல் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் இரு கட்டமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் அக். 13-ல் வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. 2-வது கட்டமாக, மதுரை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளுக்கு அக். 15-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் அட்டவணை

வேட்புமனுத் தாக்கல் – 20.09.2006

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் – 27.09.2006

வேட்புமனுக்கள் மீது பரிசீலனை – 28.09.2006

வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் – 30.09.2006

வாக்குப்பதிவு – 13.10.2006, 15.10.2006

வாக்கு எண்ணிக்கை – 18.10.2006

புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு – 25.10.2006

மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் – 28.10.2006

Bypoll ADMK Candidate – Rajan Chellappa : Madurai Central Assembly constituency

Dinamani.com – TamilNadu Page

மதுரை மத்திய தொகுதியில் ராஜன் செல்லப்பா மனு தாக்கல்

மதுரை, செப். 19: மதுரை மத்தியத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் வே. ராஜன் செல்லப்பா மதுரையில் திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தார்.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தமது கட்சியின் மூத்த நிர்வாகிகள் புடைசூழ தமது வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் எஸ். மூக்கையாவிடம் அவர் தாக்கல் செய்தார்.

மாற்று வேட்பாளர்: மாற்று வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த கே.துரைப்பாண்டி மனுத் தாக்கல் செய்தார். பின்னர் கார்களில் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலை, பெரியார் சிலை, எம்.ஜி.ஆர். சிலை, தேவர் சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கு ராஜன் செல்லப்பா மாலை அணிவித்தார்.

நிச்சயிக்கப்பட்ட வெற்றி: வேட்பு மனுத் தாக்கல் செய்தபின் ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம். அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் அமோக ஆதரவு உள்ளது என்றார்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்: அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அதிமுக தொடங்கியபோது அக்கட்சியில் சேர்ந்தவர். மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்துடன் நெருக்கமாக இருந்தவர்.

பி.எல். பட்டதாரியான இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். தொடர்ந்து அதிமுகவில் கட்சிப் பணியாற்றிவந்த இவர், 1992-ம் ஆண்டு மதுரை மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் அதிமுகவை விட்டு விலகி எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கியபோது ராஜன் செல்லப்பாவும் அதிமுகவில் இருந்து விலகினார்.

அதையடுத்து, 2001-ம் ஆண்டு அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிப் பணியாற்றி வந்தார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, மதுரை நகர் மாவட்ட அதிமுக செயலராக நியமிக்கப்பட்டார். தற்போது மதுரை மத்தியத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராகக் களம் காண்கிறார்.

முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரது சொந்த ஊர், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாக்கிலிப்பட்டி கிராமம். இவரது தந்தை பெயர் வேலுச்சாமி, தாயார் பாப்பாத்தி. இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ராஜசத்தியன் என்ற மகனும் உள்ளனர்

More AIADMK Functionaries Resign in Madurai

Dinamani.com – TamilNadu Page:

மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் நவநீதகிருஷ்ணன் அதிமுகவிலிருந்து விலகல்

மதுரை, செப். 18: அதிமுக முன்னாள் நகர் மாவட்டச் செயலரும், மதுரை முன்னாள் துணை மேயருமான சோ. நவநீதகிருஷ்ணன் அக்கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விலகினார்.

தமது விலகல் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆரம்ப காலம் முதல் அதிமுகவில் இருந்துவருகிறேன். கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். எனக்குத் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்துவந்தார்.

முதலில் வட்டச் செயலராகவும், பின்னர் நகர்மன்ற உறுப்பினராகவும், துணை மேயராகவும், மாவட்டச் செயலராகவும் என்னைப் பல்வேறு பதவிகளில் நியமித்தார். கட்சியின் ஆய்வுப் பணிகள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் என்னிடம் ஒப்படைத்தார்.

அவர் மறைந்த பின், அவர் தொடங்கிய கட்சிக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக கட்சியில் தொடர்ந்து பணியாற்றினேன்.

அவர் தந்த எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலராக இருந்தேன். எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு கட்சியின் பொதுச் செயலராக ஜெயலலிதா வரவேண்டும் என முதலில் முன்மொழிந்தவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறோம். அதிமுகவில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. கட்சித் தலைவரை பார்க்கவோ, பேசவோ முடியாத நிலை நீடிக்கிறது.

இந்த நிலை தொடர்ந்ததால் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்போது விலகி உள்ளேன். மத்திய தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் எடுக்கப்பட்ட முடிவல்ல.

என்னைப் போன்று, அதிமுகவிலிருந்து விலகும் நிலையில் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உள்ளனர். விரைவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பல எம்.எல்.ஏ.க்களும், கட்சி நிர்வாகிகளும் விலகுவார்கள்.

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக பகுதிக் கழகச் செயலராக இருந்த செல்லத்துரை மற்றும் துணைமேயராக இருந்த மிசா.பாண்டியன் ஆகியோர் ஏற்கெனவே விலகியுள்ளனர். தற்போது நானும் விலகியுள்ளேன். இதுவே அதிமுகவின் பலவீனத்தைக் காட்டுகிறது என்றார் சோ.நவநீதகிருஷ்ணன்.

மதுரை மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் (அதிமுக) எஸ்.வி.சண்முகம் அரசு விழாவில் பங்கேற்று அதிமுக-திமுக இணையவேண்டும் எனக் கருத்துக் கூறிய நிலையில் சோ.நவநீதகிருஷ்ணன் அதிமுகவிலிருந்து விலகியிருப்பது மதுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Dinamani.com – TamilNadu Page

மதுரை மத்திய தொகுதியில் மும்முனை போட்டி?

மதுரை, செப்.18: மதுரை மத்திய தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படும் முன்பே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளும் தேர்தல் களத்தில் ஆர்வம் காட்டி வருகின்றன.

மத்திய தொகுதி தேர்தலுடன் உள்ளாட்சித் தேர்தலும் நடைபெறக் கூடும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதால் ஒவ்வொரு வார்டிலும் தேர்தல் பணியை கட்சித் தொண்டர்கள் ஆர்வத்துடன் துவங்கியுள்ளனர்.

மத்திய தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்று, தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் திடீர் மறைவை அடுத்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான மனுத்தாக்கல் சனிக்கிழமை (அக்.16) தொடங்கியது. ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு: பாரம்பரியமாக இது காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதி என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்ட போதிலும், கடந்த பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தற்போது நடைபெறும் இடைத் தேர்தலிலும் திமுகதான் இத் தொகுதியில் போட்டியிடும். இதர கூட்டணிக் கட்சிகள் திமுக வேட்பாளரை ஆதரிக்கும் என்பதை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திமுக வேட்பாளராக மறைந்த இந்து அறநிலையத்துறை அமைச்சரின் மனைவி ருக்மணி பழனிவேல்ராஜன் போட்டியிட வாய்ப்பு அதிகம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் துணை மேயர் கௌஸ் பாட்சா, மாவட்டச் செயலர் வ. வேலுச்சாமி, வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் பெயர்களும் பரிசீலினையில் உள்ளது என்றனர்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியிடம் இத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளாதா என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு,” வேட்பாளரை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். நான் போட்டியிட வேண்டும் என பெரும்பான்மையான கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் விரும்புவது அவர்களுக்கு என்மீதுள்ள பற்றுதலைக் காட்டுகிறது. இருப்பினும் வேட்பாளரை கட்சித் தலைவர்தான் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.

அதிமுகவை பொருத்தமட்டில் கடந்த பொதுத் தேர்தலின்போது இத்தொகுதிக்கு மூன்று முறை வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். அப்போது முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் கா. காளிமுத்துவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேட்பாளர் மாற்றம் நடைபெற்றது.

இத் தொகுதியில் இம்முறை அதிமுக வேட்பாளராக மதுரை நகர் மாவட்டச் செயலர் வெ. ராஜன்செல்லப்பா போட்டியிடுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. வேட்பாளர் போட்டியில் மேலும் சில முன்னணி அதிமுக நிர்வாகிகளும் களத்தில் உள்ளனர். இத் தொகுதியில் தேமுதிக கடந்த பொதுத் தேர்தலில் மூன்றாவது இடம் பெற்றிருந்தது. தேர்தலுக்குப்பின் எங்கள் கட்சிக்கு மக்களிடம் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

எனவே, இடைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அக்கட்சியின் பொருளாளரும் கடந்த தேர்தலில் இத் தொகுதியில் போட்டியிட்டவருமான சுந்தரராஜன் தெரிவித்தார். இத்தேர்தலில் சுந்தரராஜன் அல்லது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா போட்டியிடக் கூடும் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.

Lord Krishna makes Fashion Statement – Conservatives are against BSNL

a glimpse of Krishna....flow of emotionsகிருஷ்ணர் சிலைக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட்: கண்டித்து பிருந்தாவனத்தில் கடையடைப்பு

பிருந்தாவனம், செப். 18: உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் இருக்கும் கிருஷ்ணர் சிலைக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிவிக்கப்பட்டதைக் கண்டித்து அங்கு இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை கடை அடைப்பு நடந்தது.

பிருந்தாவனத்தில் உள்ள பங்கே பிகாரி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.

Frustrationஇந்தக் கோயிலில் வியாழக்கிழமை ஆனந்த மஹோத்சவ திருவிழா நடந்தது. அப்போது, இங்குள்ள கிருஷ்ணர் சிலைக்கு டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிவிக்கப்பட்டு, கையில் புல்லாங்குழலுக்குப் பதிலாக செல்போன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்செயலுக்கு கோயில் நிர்வாகிகளே காரணம் என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டமும் கடையடைப்பும் நடத்தினர்.

Charcuterieகோயில் நிர்வாகத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் நடத்தின. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பிருந்தாவனத்திலுள்ள சந்தைப் பகுதி வெறிச்சோடியிருந்தது.

கோயிலின் புனிதத்தைக் கெடுத்ததாக இக்கோயிலின் நிர்வாகிகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அனைத்து புகைப்படங்களுக்கும் ஃப்ளிக்கருக்கு நன்றி உரித்தாகுக. நிழற்படங்களின் மேல் மூசிக்குட்டியை சுட்டி, காப்புரிமை பெற்றவரையும் எடுக்கப்பட்ட இடங்களையும் அறிந்து கொள்க.


செய்ய மறந்த அலங்காரங்கள்:

  1. ராதாவுக்கு நீச்சலுடை
  2. ஆயர்பாடிக் கண்ணனுக்கு கொழுப்பு நீக்கிய I Can’t Believe It’s Not Butter

    Japanese Sushi shaped USB drives

  3. கோவர்த்தன கிரிக்கு பதில் Louisiana Superdome
  4. வாயைத் திறந்தால் கூகிள் மேப்ஸ் தெரியும்.
  5. வாகனமாக மோட்டார் பைக்
  6. புல்லாங்குழலுக்கு பதில் ஐ-பாட்
  7. கொண்டையில் மயிலிறகு கிடையாது; புத்தகக்குறித் தொகுப்பின் USB வைத்திருப்பார்.


| | |