செய்தி: பிபிசி
மும்பை குண்டுவெடிப்புகளைத் துப்பறிந்த இந்திய காவல்துறை, 186 மக்கள் இறந்த சதிக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையே காரணம் என்று கண்டுபிடித்துள்ளது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு, லாஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Toiba) நிறைவேற்றியிருக்கிறது. சிமி (Students’ Islamic Movement of India)யும் நாசவேலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் பயிற்சியும் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் தகவல்துறை அமைச்சர் இந்த துப்பு துலக்கின் முடிவுகளை நிராகரித்துள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்தியா முன்வைத்துள்ளதாக தாரிக் ஆஸிம் கான் (Tariq Azim Khan) பிபிசியிடம் சொன்னார். பாகிஸ்தானின் மதிப்பை இந்தியா தொடர்ந்து பாழ்படுத்துவதன் நோக்கத்தின் ஓர் அங்கமே இந்த முடிவுகள் என்று முடித்துக் கொண்டார்.
இந்தியா எந்தவிதமான ஆதாரங்களைக் கொடுத்துள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.
பாகிஸ்தான் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த பிற விஷயங்களுக்குப் புத்தகம் போட்டு பணம் பண்ணும் முஷாரஃப் இந்த அத்தியாயத்தை இரண்டாம் பதிப்பில் இணைப்பதற்காக சுறுசுறுப்பாக எழுதுவதாக தெரிகிறது.
புதிய வெளியுறவு அமைச்சராக (தினமணி: External Affairs Minstry – Conundrum for Prime Minister « Tamil News: யார், புதிய வெளியுறவு அமைச்சர் – நீரஜா சௌத்ரி :: தமிழில்: லியோ ரொட்ரிகோ) எவரும் இல்லாத நிலையில் நட்வர் சிங்காவது ஜஸ்வந்த்தாக புத்தகம் எழுதுவாரா என்பது தெரியவில்லை.
ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தலைகள் மறைந்திருப்பதாக தெரிந்தவுடன் தாக்கிய அமெரிக்கா போல், இந்தியா பாகிஸ்தானை தாக்க முடியாத நாடாக இருக்கிறது என்பது தெரிகிறது.
பாகிஸ்தானின் கைவரிசையுடன் கூடிய அப்பாவி இந்திய மக்கள் இறக்கும் அடுத்த குண்டுவெடிப்பு வரை பாகிஸ்தானை கண்டித்து பதிவு வெளிவிடுவேனா என்பது தெரியவில்லை.
முந்தைய பதிவுகள்
1. Train Stories
2. Attacks continue in India: இந்தியாவில் தீவிரவாதம் & மும்பை குண்டுவெடிப்புகள்
Bomb Blasts | India Terrorists | Mumbai