தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்வு:
இணையத்தினாலும் உலகமயமாக்கலினாலும் நிகழும் சாபக்கேடாக பணவீக்கம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, சூடு மீட்டர் பொருத்திய ஆட்டோவாக எகிறுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் நமது நாட்டில் தங்கம் மற்றும் வைரம் போன்ற ஆடம்பர பொருள்களில் விலைகள் மட்டும் உயர்ந்து வந்தது.
தற்போது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரத் தொடங்கி இருப்பதை
வலைவாசிகளிடம் விசாரித்தேன். ‘
இணையத்தில் இப்போது தமிழில் மிகப் பலர் எழுத ஆரம்பித்திருக்கிறோம். அதன் நேரடிப் பலனாக விகடன் வாசகர் வட்டம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே #1 ஆனார்கள். குங்குமமோ போட்டி போட்டுக் கொண்டு சோப்பு, சீப்பு கொடுத்தாலும் சல்லிசாக இதழ் நடத்துகிறது. விற்பனையில் சாதனை புரிகிறது. இதெல்லாம் கூட வலையின் வீச்சினால்தான் சாத்தியப்படுகிறது. படிப்பவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு பயந்து, ப்ரிண்ட் புத்தகத்தை படிப்பதற்கு ஓடுவது சாதகமான உபாதைதானே!’
என்று எதிர் கேள்வி எழுப்பி முடித்துக் கொண்டார்.
நன்றி: திண்ணை











//தற்போது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரத் தொடங்கி இருப்பதை வலைவாசிகளிடம் விசாரித்தேன்//
கேப்டன் இதை வைத்துதான் பிரச்சாரம் செய்கிறார்…
அப்பறம் இங்கேயும் 2 மாசத்துக்கு முந்தி பருப்பு விலையெல்லாம் ரொம்ப அதிகமா இருந்தது!!!
//இணையத்தில் இப்போது தமிழில் மிகப் பலர் எழுத ஆரம்பித்திருக்கிறோம். அதன் நேரடிப் பலனாக விகடன் வாசகர் வட்டம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே #1 ஆனார்கள். குங்குமமோ போட்டி போட்டுக் கொண்டு சோப்பு, சீப்பு கொடுத்தாலும் சல்லிசாக இதழ் நடத்துகிறது. விற்பனையில் சாதனை புரிகிறது. இதெல்லாம் கூட வலையின் வீச்சினால்தான் சாத்தியப்படுகிறது. படிப்பவர்கள் பதிவுகளைப் படிப்பதற்கு பயந்து, ப்ரிண்ட் புத்தகத்தை படிப்பதற்கு ஓடுவது சாதகமான உபாதைதானே!’//
:-))
வி.பி.
—கேப்டன் இதை வைத்துதான் பிரச்சாரம் செய்கிறார்… —
ஜெயலலிதாவுக்கு சிகுன் குனியா; கேப்டனுக்கு கடலைப் பருப்பா!?
எது எப்படியோ… ‘அனைத்து ரகங்களுமே கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து உள்ளன.’ இந்த விலை உயர்வு, இடைத்தரகர்களுக்கு மட்டுமல்லாமல், விளைவிப்பவர்களுக்கும் பலன் தருமானால் சந்தைப்படுத்தலின் நன்மையாக நினைக்கலாம்.
இவங்க சொல்ற ‘ஆன்லைன்’ வேறமாதிரி வியாபார கலைச்சொல்லோ?
செம காமடிபண்ணியிருக்கீங்க )
ஆன்லைன் வர்த்தகத்தால்
எதுவரினும் அஞ்சோம்!
கூன்விழுந்த தமிழகத்தின்
மக்கள் கவனமேல்லாம்
டாஸ்மாக்கும், டி.வி ஸீரியலும்தான்
அதற்கெது கேடுவரினும்
அப்போது சொல்லும்
இப்போதொன்றும் வேண்டாம்!
சிறில் அலெக்ஸ்
—‘ஆன்லைன்’ வேறமாதிரி வியாபார கலைச்சொல்லோ—
அப்ப்டி இருக்காது. சலுகை விலையில் ரேஷன் கடைகளில் கிடைப்பதால், பருப்புகளின் விலை முன்பு கம்மியாக இருந்திருக்கும். த்ரமான, உயர்தரமான என்று ப்ராண்டட் பொருட்கள் (சூப்பர் கோல்ட், நீல்கிரிஸ் போன்ற வகை) ஸ்பென்சர்ஸ் போன்ற அங்காடிகளின் விற்க ஆரம்பித்தபின், பொது விநியோகத்திற்கும் இந்த பணக்கார சுயசேவைப் பிரிவு விலைக்கும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு இருந்து வந்தது.
சாதாரண மளிகைக் கடை வியாபாரியும் இப்போது விலையை ஏற்றி விற்க ஆரம்பித்திருப்பார். சில்லறை விநியோகத்திலும் பருப்பை அதிக லாபம் காணும் நோக்கில் அதிகரித்திருக்கும்.
இதன் பிரதிபலிப்பாக commodity exchanges வர்த்தகத்தில் விலை உயர்வை கணித்து லாபம் பெற எத்தனித்திருப்பார்கள்.
ரொம்ப குழப்பவில்லை என்று நினைக்கிறேன்.
SP.VR.SUBBIAH
—மக்கள் கவனமேல்லாம் டாஸ்மாக்கும், டி.வி ஸீரியலும்தான்—
உணமை!