கூத்தப்பார் பேரூராட்சித் தலைவர் பதவி: ஒருவர்கூட மனுச் செய்யவில்லை
திருச்சி, செப். 28: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தப்பார் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில்லை.
18 வார்டுகளைக் கொண்டது கூத்தப்பார் பேரூராட்சி. திருச்சி மாநகருக்கு அருகிலுள்ள இப்பேரூராட்சித் தலைவர் பதவி சென்ற தேர்தல் வரை பொதுத் தொகுதியாக இருந்தது. இதுவரை கிராமத்தினர் ஒன்றுகூடி தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளனர்.
சுழற்சிமுறையில் ஏற்பட்ட மாற்றத்தில் கூத்தப்பார் பேரூராட்சித் தலைவர் பதவி, எஸ்சி-எஸ்டி வகுப்பினருக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் கூத்தப்பார் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
22-ம் தேதி 7 மனுக்களும், 23-ம் தேதி 1, 25-ம் தேதி 1, 26-ம் தேதி 21, 27-ம் தேதி 11 என 41 மனுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடைசிவரை ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து பேரூராட்சியின் செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான பி. அழகிரிசாமி கூறியது:
மனுக்களை வாங்கிச் சென்றவர்களும்கூட மனு தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விளக்கமளித்து விட்டேன்’ என்றார்.
இதுவரை ஊர்க் கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஒருமனதாகத் தேர்வு செய்து வந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது எஸ்சி தொகுதியாகத் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதையடுத்துப் புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் திணறியதாகக் கூறப்படுகிறது.
திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தப் பெரிய கட்சியும் வேட்பாளர்கள் தேர்வுப் பட்டியலிலும் கூத்தப்பாரைக் குறிப்பிடவில்லை.











Dinamani.com – TamilNadu Page
வேட்டுவபட்டி ஊராட்சி எஸ்.சி. வார்டில் மனு தாக்கல் இல்லை
சங்ககிரி, செப். 28: சேலம் மாவட்டம், இடைப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேட்டுவபட்டி ஊராட்சி எஸ்.சி. வார்டில் யாருமே மனு தாக்கல் செய்யவில்லை.
வேட்டுவபட்டி 3-வது வார்டில் 751 வாக்காளர்கள் உள்ளனர். முன்பு பொது வார்டாக இருந்த இப்பகுதி இம்முறை எஸ்.சி. வார்டாக மாற்றப்பட்டது. இப்பகுதியில் ஒரே ஒரு குடும்பத்தினர் மட்டுமே எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
இந்த வார்டில் புதன்கிழமை வரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஸ்டன், அது பாப்பார பட்டி இல்லை, பாப்பாபட்டி!
Rosa, Thanks for the correction. will be careful in the future.