தீபம் சின்னத்தில் போட்டியிட விஜயகாந்த் கட்சி முடிவு
சென்னை, செப். 27: உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடர் கழக வேட்பாளர்கள் தீபம் சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ராமுவசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில் கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகின்ற மாவட்ட ஊராட்சி குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர், மாநகராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தீபம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட பதவிகளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவில் தீபம் சின்னத்தை குறிப்பிட்டு வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.










