ADMK Alliance Apportioned & Thirumavalavan Interview


தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக தொகுதிப் பங்கீடுBBC

அஇஅதிமுக தனது முக்கிய தோழமைக்கட்சிகளுடன் உள்ளாட்சித் தேர்தல்களுககான தொகுதிப்பங்கீட்டினை இறுதி செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மதிமுகவிற்கு 17.5 சத தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 4 சதமும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அஇஅதிமுக தலைமைக்கழகத்தின் செய்தி அறிக்கை கூறுகிறது.

நகராட்சி, பஞ்சாயத்துக்களின் தலைவரகளுக்கு நேரடி தேர்தல்கிடையாது, உறுப்பினர்களே தேர்ந்தெடுப்பார்கள் என்ற நிலையில், தலைவர்களே தனித்தனித் தொகுதிகளை அடையாளம் காணவேண்டிய அவசியமில்லை, மாறாக அந்தந்த வட்டார நிர்வாகிகளிடமே அப்பொறுப்பை விட்டுவிடலாம் என ஜெயலலிதா வைகோவிடமும், திருமாவளவனிடமும் கூறிவிட்டதாகக் கூறப்படுகிறது.


Headline News – Maalai Malar :: விடுதலை சிறுத்தைகளுக்கு இட பங்கீடு போதாது ஆனாலும் திருப்தி அளிக்கிறது: திருமாவளவன் பேட்டி

சென்னை, செப். 25- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அவர் கூறியதாவது:-

  • உள்ளாட்சி தேர்தல் கால அவகாசம் தராமல் திடீர் என தமிழக அரசு அறிவித்தது மரபு மீறிய செயல், வேதனை அளிக்கும் செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
  • முஸ்லிம்களின் ரம்சான் நோன்பு நடக்கும் காலத்தில் இஸ்லாமியர்களை மதிக்காமல் தேர்தல் நடத்துவது வேதனை அளிக்கும் செயல்.
  • மேயர், நகரசபை தலைவர்களை உறுப்பினர்களே தேர்ந் தெடுக்கும் நடவடிக்கையின் மூலம் ஆள்கடத்தல், லஞ்ச லாவண்யம் கொடுத்து சட்ட மீறல் ஆகியவற்றுக்கு வழி வகுக்கும். மேலும் மறைமுக தேர்தலை நடத்தக்கூடாது என்று இன்று ஒரு வழக்கு தொடரப்படுகிறது.
  • தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு செய்த குளறுபடியை எடுத்துக் கூறியும், அதையும் மிறி தேர்தலை நடத்துகிறார்கள். இது தொடர்பாக ஐகோர்ட்டில் 3 வழக்குகளை தொடர்ந்துள்ளோம்.
  • ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவி, நகரசபை தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர், மேயர், துணை மேயர் பொறுப்புகளில் கடந்த 10 ஆண்டுகளாக தாழ்த்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கவில்லை. இந்த பொறுப்புகளில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  • மக்கள் தொகை அடிப்படையில் கீழ் இறங்கும் வரிசையில் தனித்தொகுதி ஒதுக்க வேண்டும். சென்னை மாநகராட்சியில் 14 சதவீத தலித் மக்கள் உள்ளனர். மற்ற மாநகராட்சி பகுதிகளை விட இங்கு 3 சதவீதம் அதிகம் இருக்கிறார்கள். இதனால் சென்னை மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் ஆருடமாக வெற்றி பெறும். எங்களுக்கு போதுமான இடங்கள் தரவில்லை என்றாலும் அவர்கள் ஒதுக்கிய 4 சதவீதம் திருப்தி அளிக்கிறது. கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். எப்போணீஜ்து எங்கு இருந்தாலும் உண்மையாக இருப்போம். நேற்று அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தையில் முதல் நிலை மாவட்டங்கள் 10 கேட்டு இருக்கிறோம். மற்ற மாவட்டங்களில் எங்களது வாய்ப்பு அடிப்படையில் ஒதுக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

    சென்னை மாநகராட்சியில் கூடுதலாக வார்டுகளை ஒதுக்கு மாறு கேட்டு வருகிறோம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 4 சதவீத கணக்கின்படி எங்களுக்கு 7 வார்டுகள்தான் கொடுக்கப்படுகிறது. ஜிப்மர் மருத்துவமனைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

    கல்லூரி விரிவுரையாளர்கள் பின்னடைவு காலி யிடங்களை நிரப்பக்கோரி 28-ந்தேதி சென்னையில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழ் எம்.பி.க்களை அழைத்து பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழன் டி.வி. நிர்வாக இயக்குனர் கலைக்கோட்டுதயம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்தார்.

    பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் ரவிக்குமார், செல்வ பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.

  • One response to “ADMK Alliance Apportioned & Thirumavalavan Interview

    1. ஆக எலக்ஷன் இப்ப இல்லே!

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.