மாநகராட்சி தேர்தல்: நெல்லை, கோவையை ம.தி.மு.க. கேட்கிறது
சென்னை, செப். 22-
உள்ளாட்சி தேர்தலுக்கான இடப் பங்கீடு அரசியல் கட்சிகள் இடையே அதி வேகத்தில் நடந்து வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே நேற்று மாலை முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இன்று 2-வது நாளாக பேச்சுவார்த்தை நீடித்தது.
நெல்லை
ம.தி.மு.க. தனக்கு சாதக மான நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி பகுதிகளை குறிப் பிட்டு பட்டியல் கொடுத்து இருக்கிறது. அதே போல விடுதலை சிறுத்தை கட்சியும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள பகுதிகளை கேட்டு பட்டியல் கொடுத்து இருக் கிறார்கள்.
ம.தி.மு.க.வினர் கோவை, திரு நெல்வேலி மாநகராட்சியை கேட்கிறார்கள். ஆனால் ம.தி.மு.க.வுக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.
சென்னையில் கணிச மாக வார்டுகளை ம.தி.மு.க. கேட்டுள்ளது. தென்சென்னை யில் 29 வார்டுகளையும், வட சென்னையில் 25 வார்டுகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வற் புறுத்துகிறார்கள்.
சேலம்
விடுதலை சிறுத்தை சேலம் மாநகராட்சியை குறி வைத்துள்ளது. சேலம் மாநகராட்சி பெண்களுக்கு (எஸ்.சி.) ஒதுக்கப்பட்டு இருப்பதால் அதை விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்கினால் வெற்றி பெற வாய்ப்பாக இருக்கும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சேலத்தை விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்கலாமாப என அ.தி.மு.க. பொதுச் செய லாளர் ஜெயலலிதா பரிசீலித்து வருகிறார். இது தவிர விடுதலை சிறுத்தை 11 நகராட் சியையும், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 6 இடங்களையும் கேட்டு உள்ளது.
ஒன்றிய, ஊராட்சி பதவி களை பொறுத்தவரை சதவீத அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை
சென்னை மாநகராட்சியில் 21 வார்டுகள் தனி வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 15 வார்டுகளையும் பொது வார்டுகளில் 8-ம் விடுதலை சிறுத்தை கேட்டுள்ளது.
அ.தி.மு.க.வை பொறுத்த வரை ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற வார்டுகள், நகரசபைகள், பேரூராட்சிகள், மாவட்ட பஞ்சாயத்துகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரி கிறது. மற்ற இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்க அ.தி.மு.க. தீர்மானித்துள்ளது.










