Dinamani.com – TamilNadu Page
34 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு :: ஆர்.ராமலிங்கம்
வேலூர், செப்.13: தமிழகத்தில் 34 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 4 இடங்கள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ள நகராட்சிகள் (அடைப்புக்குறிக்குள் மாவட்டம்):
கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி (திருவாரூர்),
சிதம்பரம் (கடலூர்),
கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்),
ஆரணி (திருவண்ணாமலை),
மணப்பாறை (திருச்சி),
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி (விருதுநகர்),
தூத்துக்குடி, ராமநாதபுரம், பரமக்குடி (ராமநாதபுரம்), புதுக்கோட்டை ,
திருமங்கலம் (மதுரை),
போடிநாயக்கனூர், கம்பம் (தேனி),
மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி (கோவை),
சங்கரன்கோயில் (திருநெல்வேலி),
பெரியகுளம், சின்னமனூர் (தேனி),
சீர்காழி (நாகப்பட்டினம்),
கரூர், மதுராந்தகம் (காஞ்சிபுரம்),
அரக்கோணம் (வேலூர்),
உசிலம்பட்டி (மதுரை),
கிருஷ்ணகிரி.
தாழ்த்தப்பட்ட மகளிருக்கு
செங்கல்பட்டு (காஞ்சிபுரம்),
துறையூர் (திருச்சி),
திருப்பத்தூர் (வேலூர்),
ஆத்தூர் (சேலம்) ஆகிய நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தாழ்த்தப்பட்ட பொது பிரிவினருக்கு
தாராபுரம் (ஈரோடு),
புளியங்குடி (திருநெல்வேலி),
திண்டிவனம் (விழுப்புரம்),
தேனி அல்லிநகரம் (தேனி),
திருவள்ளூர்,
ஆவடி (திருவள்ளூர்),
மேட்டூர் (சேலம்) நகராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிகள்
மதுரை மாநகராட்சி மகளிர் பொதுவுக்கும், சேலம் மாநகராட்சி தாழ்த்தப்பட்ட மகளிர் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நிலை நகராட்சிகள்
மூன்றாம் நிலை நகராட்சிகளில் 17 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 இடங்கள் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்: தாழ்த்தப்பட்ட மகளிருக்கானவை:
கூடலூர் (வடக்கு) (நீலகிரி),
புஞ்சைபுளியம்பட்டி (ஈரோடு),
பூந்தமல்லி (திருவள்ளூர்).
மகளிர் (பொது):
தாராபடவேடு,
ஜோலார்பேட்டை,
சத்துவாச்சாரி (வேலூர்),
கூடலூர் (நகரம்) (தேனி),
வெள்ளக்கோயில், குனியமுத்தூர் (கோவை),
ஆனையூர், திருப்பரங்குன்றம் (மதுரை),
அனகாபுத்தூர் (காஞ்சிபுரம்),
தாந்தோனி, இனாம்கரூர் (கரூர்),
கள்ளக்குறிச்சி (விழுப்புரம்),
அரியலூர் (பெரம்பலூர்),
திருத்தணி (திருவள்ளூர்).
நரசிங்கபுரம் (சேலம்), மணலி (திருவள்ளூர்), ஜெயங்கொண்டம் (பெரம்பலூர்), திருத்தங்கல் (விருதுநகர்) ஆகிய 4 மூன்றாம் நிலை நகராட்சிகள் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.