வந்தே மாதரம் நிகழ்ச்சியில் சோனியா பங்கேற்காததை பாஜக பிரச்சினை ஆக்கும்?
டேராடூன், செப். 8: வந்தே மாதரம் பாடல் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்காததை, பிரச்சினை ஆக்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த வந்தே மாதரம் பாடல் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சோனியா கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் ஏனோ அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
சோனியாவின் இந்த நடவடிக்கை பாஜகவுக்கு நிச்சயம் ஆதாயம் அளிக்கும் என டேராடூனில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்துக்கு வந்துள்ள அக் கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.
காங்கிரûஸ தாக்குவதற்கு இது ஓர் ஆயுதமாகப் பயன்படும் என்றார் அவர். செயற்குழுவுக்கு முன்னதாக நடைபெற்ற கட்சி தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், வந்தே மாதரம் பாடல் பிரசார இயக்கத்துக்கு என தனியாக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அருண் ஜேட்லி, வெங்கைய நாயுடு, சஞ்சய் ஜோஷி, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் இக் குழுவில் உள்ளனர்.











அனுமானங்கள்கூட தலைப்புச் செய்திகளா?
அனுமானங்களை வைத்து அரசியல் வாரப் பத்திரிகைகளே நடத்தப்படுகையில் அனுமானங்கள் தலைப்புச்செய்தியானால் தவறு ஒன்றுமில்லை.
இதற்கு Sonia apologist-கள் என்ன பதில் சொல்வார்கள் என யூகித்து விடலாம்.
– தடாலடியாக, “நாட்டுக்காக தன் கணவனை இழந்து, பதவியையே துறந்த தியாகி சோனியா அம்மையார் இதன்மூலம்தான் நாட்டுப்பற்றை நிரூபிக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பலாம்.
– ஏன் வரவில்லை என்பதை வசதியாய் ஒதுக்கி விட்டு வராதவர் பட்டியல் ஒன்று போட்டு “இவர்களெல்லாம் நாட்டுப்பற்று இல்லாதவரா” என்ற கேள்வி எழுப்பலாம்.
– எதுவும் பலிக்கவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது சிறுபான்மை பிரம்மாஸ்திரம். ‘இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து சோனியாஜி கலந்து கொள்ளவில்லை” என்று சொல்லி உபி தேர்தல் மைனாரிட்டி ஓட்டு வேட்டையைத் துவங்கி வைக்கலாம்.
சோனியாவுக்கு ஒரே கல்லில் மூன்று மாங்காய். வந்தே மாதரம் என்று சொல்லி இந்திய மண்ணைத் தனது தாய்மண்ணாகப் போற்றும் பாடலைப்பாடாமல் தப்பித்து தான் பிறந்த நாட்டிற்கு உண்மையாக இருந்ததாகவும் ஆயிற்று; சிறுபான்மை முஸ்லீம்களின் (சரியாகச் சொன்னால் சில தீவிரவாத முல்லாக்களின்) மத உணர்வுகளை மதித்ததாகவும் ஆயிற்று; தேர்தலை மனதில் வைத்து மைனாரிட்டி ஓட்டு வங்கியைத் திருப்தி செய்த மாதிரியும் ஆயிற்று.
தலை மோடி குஜராத்தில் வந்தே மாதரம் கட்டாயமில்லை என்று சொன்னது (உண்மையில், யூகம் அல்ல) எத்தனை பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியானது? பாஸ்டன் பாலா பதிவு செய்தாரா?
பி.ஜே. பி முட்டாள்கள், இது போல் உள்ள சப்பை மேட்டரில் அவர்கள் எனர்ஜியை வீணடிப்பதை விடுத்து…வேறு வழிகள் யோசித்தால் நாட்டுக்கு நல்லது…குறைந்த பட்ச்சம் அப்படி யூகிக்கும் வாய்ப்பையாவது தேசியப் பத்திரிக்கைகளுக்கு கொடுக்கவேண்டும்…!! (அப்படி யூகிப்பது செக்குலரிஸத்திற்ககம், லிபரலிஸத்திற்கும்(sic) தீங்கு!!)
இதப் பார்த்தீங்களா?
‘வந்தே மாதரம்’ பாடமாட்டோம் – சீக்கிய அமைப்புகள் முடிவு
http://maruthanayagam.blogspot.com/2006/09/blog-post_115759377786075679.html