உ.பி. தேர்தலில் போட்டியிட அபு சலீம் விருப்பம்
மும்பை, செப். 7: மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா அபு சலீம் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அவர் முபாரக்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும் முழு விருப்பத்துடனும் தெளிவான மனநிலையோடும் தான் இம்முடிவை எடுத்துள்ளார் என அபுசலீமின் வழக்கறிஞர் அசோக் சார்கி தெரிவித்திருந்தார்.
அபுசலிம் பாரதிய சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் அபு சலீம் மற்றும் தாவூத் இப்ராஹிமுற்கு அப்னா தளம் என்ற கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க தயாராக உள்ளதாக அக்கட்சின் தலைவர் சோனிலால் பட்டேல் தெரிவித்துள்ளார்.











என்னங்க ஒன்னுமே புரியவில்லை… இந்திய அரசியலை நினைத்தா… ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஏங்க நாட்டுக்காக உயிரையும் கொ(ஏ)டுக்கு தலையா வேலையை பார்த்த ஒரு தகுதி போதாதா அவர் தேர்தலில் போட்டியிட.
//முழு விருப்பத்துடனும் தெளிவான மனநிலையோடும் தான் இம்முடிவை எடுத்துள்ளார் என அபுசலீமின் வழக்கறிஞர் அசோக் சார்கி தெரிவித்திருந்தார்.// இதெல்லாம் இவர் சொல்லித்தான் நமக்கு தெரியுமா என்ன?
//பாரதிய சமாஜ் கட்சி, அப்னா தளம் // இதெல்லாம் சப்ப கட்சிங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணா காங்கிரஸ், பா.ஜா.க விலிருந்தும் அழைப்புவரும்.
ஏன்ன பண்ண அவரும் ஜெயிச்சு நம்ம பார்லிமெண்ட்ல எது எது எங்க இருக்கு, எங்க பாம் வெச்சா கரெக்டா பொசுங்கிவிழும் பார்த்துட்டு வரட்டுமே தலைவா!