செய்தித் தொகுப்பு
இலங்கை திருகோணமலை மாவட்டம் மூதூரில் ஆகஸ்ட் 4 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டு ஆக்சன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர் என்ற தன்னார்வத்தொண்டர் அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அரச ஆயுதப்படையினரே காரணம் என யுத்த நிறுத்தக்கண்காணிப்புக் குழு நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையினை அடுத்து, இலங்கையில் ஐ.நா அமைப்பு தனது பணிகளை இடைநிறுத்தக்கூடும் என அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக் குறித்து உடனடியாகக் கருதுக்கள் எதனையும் வெளியிட மறுத்துள்ள இலங்கை அரசு, கண்காணிப்புக் குழுவினது அறிக்கையினை தவறு என்றும் ஆதாரமற்றது என்றும் சாடியிருக்கிறது.
பல்வேறு மின்னணு மற்றும் மின் கருவிகள் அவற்றின் உடைமையாளர்களுக்குப் பயன்படாமல் போகும் பட்சத்தில் அவை மின்னணு குப்பையாக உரு மாறுகின்றன. ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டத் துறை 2005-ல் நடத்திய ஆய்வானது, உலகில் ஒவ்வோர் ஆண்டும் 20 முதல் 50 மில்லியன் டன்கள் மின் குப்பை உருவாகிறது எனத் தெரிவிக்கிறது. மின்னணுக் கருவிகளின் ஆயுள்காலம் அவ்வளவு அதிகமில்லை. உதாரணத்திற்கு ஒரு கம்ப்யூட்டரின் ஆயுள் 5 முதல் 6 ஆண்டுகள்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மின்னணுக் கருவிகள் கம்ப்யூட்டர், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின்கள் ஆகும். இவற்றிலிருந்து உருவாகும் கழிவுகள் 2004-2005ல் 1,46,180 டன்கள் எனக் கணக்கிடப்பட்டு, 2012ஆம் ஆண்டில் இது 16,00,000 டன்களாக உயரும் எனக் கணிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், தில்லி, கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து உருவாகிறது.
நகரங்கள் என்று பார்க்கையில் மும்பை, தில்லி, பெங்களூர், சென்னை, கோல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், புனே, சூரத் மற்றும் நாக்பூராகும். சமீபகாலமாக அதிகரித்து வருவது செல்பேசிக் குப்பையாகும். ஓர் ஆய்வின்படி 2005ல் மட்டும் உலகில் 130 மில்லியின் செல்பேசிகள் கழித்துப் போடப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் கழிவுகள், அதாவது பாட்டரிகள் மற்றும் சார்ஜர்களையும் சேர்த்து, ஆண்டொன்றிற்கு 65,000 டன்கள் ஆகும்.
கட்டற்ற வணிகம் எனும் இலக்கை அடைய பெருந்தடையே அமெரிக்காதான் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. ஜூலை கடைசி வாரத்தில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்த WTO-வின் பிரதான அமைச்சர்களின் பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்தது. தமது விவசாயிகளுக்கு வழங்கி வரும் அபரிமிதமான சலுகைகளையும் மானியங்களையும் பின்வாங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. சலுகைகள் மற்றும் மானியங்களால் செயற்கையாக விலை குறைக்கப்பட்ட செல்வந்த நாடுகளின் விவசாய விளைபொருள்களோடு தங்களால் போட்டியிட முடியவில்லை; இந்த வணிகம் சமனாக்கப்பட வேண்டும் என்று வளரும் நாடுகளின் பிரதிநிதிகளான இந்தியாவும் பிரேசிலும் வலியுறுத்தியபோது கட்டற்ற வணிகம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் கசந்தது. பேச்சுவார்த்தைகள் முறிந்தன. இப்போது வேளாண் மானியங்களை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்பதிலிருந்து, WTO எனும் அமைப்பே நீடிக்குமா என்பது வரையிலான ஐயங்கள் உறுப்பு நாடுகளிடையே தோன்றியிருக்கின்றன.
சென்ற வார செய்தித் தொகுப்பு











பி.பி.சி மாதிரி .. பா.பா.சி
Annathey,
Can you pls tell us about the movie that you acted ???
Eagerly waiting,
Jim
Jim,
konjam waitees (away for the long weekend) please :-D)
-b
இதென்ன புது செய்தி.. பாபான்னு ஏற்கனவே படம் வந்துடுச்சே..?
🙂
Annathey,
Vacation yellam mudinji pochaa ?
Konjam seekram sollungoo … Waiting eagerly..
Cheers
Jim
ஒரே இடத்தில் நிறைய செய்தி படிக்க தந்தமைக்கு நன்றி.
நன்றி ஜெஸிலா.
ஹஜ் யாத்ரீகர்களுக்கு அரசு மானியம் நடப்பு ஆண்டும் உண்டு: உச்ச நீதிமன்றம்
புதுதில்லி, செப். 20: ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்க அலாகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்த உத்தரவு நடப்பு ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
வரும் நவம்பரில் நடப்பு ஆண்டு ஹஜ் பயணம் தொடங்க உள்ளது. இதற்காக அரசு செய்துள்ள ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெü பெஞ்ச், மத்திய அரசும், உத்தரப் பிரதேச மாநில அரசும் ஹஜ் உள்ளிட்ட எந்த மதத்தின் புனிதப் பயணங்களுக்கும் மானியம் வழங்கக் கூடாது என கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி இடைக்காலத் தடை விதித்தது.
ஹஜ் பயணிகளுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று கூறி 1995-ம் ஆண்டு சிவ சேனைக் கட்சியின் தலைவர் தாக்கல் செய்த மனு மீது இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
அலாகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த தடை காரணமாக, ஹஜ் பயணத்திற்காகச் செய்யப்பட்டுள்ள ஒட்டுமொத்த ஏற்பாடுகளும் பாதிக்கப்படும். மட்டுமன்றி, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு உள்ள நன்மதிப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என சொலிசிட்டர் ஜெனரல் ஜி.இ.வாகன்வதி தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
சவூதி ஏர்லைன்ஸில் ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது ரத்து செய்யப்பட்டால் ஏராளமான பொருளாதார இழப்பு ஏற்படும். இது மட்டுமன்றி 1.49 லட்சம் ஹஜ் பயணிகள் தங்குவதற்கான ஏற்பாட்டுக்காக சவூதி அரேபியாவுடன் அரசு ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது என சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.