Monthly Archives: ஜூன் 2006

75 Years of Tamil Cinema – Lakshman/Sruthi Chennai…

75 Years of Tamil Cinema – Lakshman/Sruthi Chennai Celebrations :: Duncan to Mishkin by Raj TV with Brooke Bond 3 Roses Posted by Picasa

Madras University Refurbishing – Thinamalar.com 

Madras University Refurbishing – Thinamalar.com Posted by Picasa

Browse 2.0

Plum: சொந்த சிக்கல்களுக்காக ‘தைராய்ட்’ எப்படி வரும்? என்ன தீர்வு? இயற்கை மருந்துகள் என்ன? நச்சென்று விளக்கும் வலையகங்கள் எது? தொடர்ந்து அவதிப்படுபவரின் வலைப்பதிவுகள் எவை என்றெல்லாம் அலசி ஆராய்ந்து வைத்திருந்தேன்.

பிறிதொருவருக்கும் இந்தத் தேடல் முடிவுகள் இலகுவாக உதவலாம். வலையகத்தில் போட்டு வைத்தால் கூகிளாண்டவரின் முடிவில் நூல் பிடித்தால்தான் உண்டு. தற்காலத்திற்கு ஏற்றவாறு கூட்டுப்புழுவாக உலகோடு பகிர்வது எப்படி…

Plum பயன்படும்.


Sharpcast: என்னுடைய புகைப்படங்களில் சில கேமிராவிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கும். சிலது வெகு பாதுகாப்பாக backup ஆகி புற கடிவறையில் தூங்கும். மற்றவை காம்பாக்ட்-ஃப்ளாஷ், எஸ்-டி நினைவகம், குறு எஸ்டி, மெமரி ஸ்டிக், என்று ஏதாவதொன்றில் கண்ணாமூச்சி விளையாடும். முக்கியமானவை கணினிக்குள் பதுங்கும்.

இவ்வளவையும் நொடி நேரத்தில் கண்ணாரப் பார்த்து அலுங்காமல் ஒருங்கிணைக்க வேண்டுமா?

Sharpcast பயன்படும்.


JAJAH – web-activated telephony: ஸ்கைய்ப்புடன் கடமுடா வரலாம் என்று பயமுறுத்துகிறார்கள். வில்லன் போல் பாவிக்காமல், ஹீரோ போன்ற சேவையைத் தேர்ந்தெடுக்க விருப்பமா? இந்தியாவிற்கு 0.1361 டாலர் ஆகிறதால், ரிலையன்ஸை விட கம்மியாகக் கொடுப்பதில்லை.

என்றாலும், இஸ்ரேல், இத்தாலி போன்ற நாடுகளுக்கு லோக்கல் கால் போல் பேசவேண்டுமா?

ஜ.. ஜா… பயன்படும்.


Prosper: The online marketplace for people-to-people lending: கடன் கொடுக்க யாருமே இல்லையா? உங்கள் நம்பிக்கைக்கு சான்றுப் பத்திரம் தர மக்கள் க்யூவில் நிற்கிறார்களா? $25,000 வரை கைமாற்றுக் கொடுத்து இடுக்கண் களைகிறார்கள். உங்களிடம் பணம் சேமிப்பில் தூங்கிக் கொண்டிருந்தால், மற்றவர்களுக்கு கடன் கொடுத்து உதவிய திருப்தியும் கிடைக்கும்; கொஞ்சம் டப்பும் பார்க்கலாம்


Lala – Discover, Listen, Enjoy: கேட்கவேண்டிய அருமையான ஆங்கிலப் பாடல்களின் ப்ட்டியல் பர்ஸை கரைக்கும் என்று பயமாய் இருக்கிறதா? அந்த மாதிரி மாபெரும் இசைத்தட்டு எல்லாமும் இலவசமாக வீடு தேடி வர வேண்டுமா? ஒரே ஒரு டாலர் செலவழித்தால் போதுமானது.

நீங்கள் கேட்டு கேட்டு போரடித்துப் போன ஒலிக்கோப்பைகளை வேண்டுபவர்களுக்குக் க்டாசி விடுங்கள். உங்களுக்குத் தேவையானதை கேளுங்கள்… கொடுக்கப்படும்… ஊ… ல… லா…


FilmLoop: என்னிடம் நயாகரா புகைப்படங்கள் ஐம்பது இருக்கும். அழகாக வீடியோவே செய்து விடலாம். காலையில் எப்படி இருக்கும்; ஹெலிகாப்டரில் இருந்து… படகில் இருந்து… வெகு அருகில் இருந்து… இரவில்… எல்லாவற்றையும் கோர்த்து படச்சுருள் ஆக்குவதற்கு வகை செய்கிறார்கள்.

நண்பர்களிடம் கனடாவில் இருந்து எடுத்த மேலும் சில புகைப்படங்கள் உள்ளது. நயாகரா அருகிலேயே இருக்கும் பஃபோலோ ஊர்க்காரரிடம் பனிக்காலப் படங்கள் கிடைக்கும். இவற்றை சொருக வேண்டிய இடத்தில் இட்டு, மற்றவர்களால் செப்பனிடவும் வழி செய்து தருகிறார்கள்.

படம் எல்லாம் எடுப்பது டைம் வேஸ்ட் என்று நினைப்பவரா நீங்க? வாங்க… கொட்டிக் கிடக்கும் பொக்கிஷங்களைப் பார்ப்பதற்கு நீங்கதானே தேவை 🙂


Mercora – Music Search and Internet Radio Network: நீங்கள் ஜெத்ரோ டல் பிரியரா? அதே போன்ற கலக்கலான ஆனால் ‘டல்’ போன்று அதிகம் பிரபலாமாகாத இசைக்குழுக்களையும் பாடல்களையும் மற்றவர்களுடன் பகிர விரும்புகிறீர்களா? நாப்ஸ்டர், வக்கீல், சம்மன் என்று எல்லாம் பயப்படாமல் உங்களுக்கே உங்களுக்கான ரேடியோவைத் தொடங்க விருப்பமா?

Mercora பயன்படும்.

உதவி: Who’s Building the Next Web? – Next Frontiers – MSNBC.com


| | |

Boston Cambridge in Symphony

இந்த மாத திசைகள் வலையிதழில் என்னுடைய ‘பாஸ்டனுக்கு வரலாம்‘ சுற்றுலா கட்டுரை வெளியாகியுள்ளது. திசைகள்.காமுக்கும் அருணா ஸ்ரீனிவாசனுக்கும் நன்றிகள் 🙂

இந்த வலையகங்களுடன் சௌகரியம் என்னவென்றால், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ·பயர்·பாக்ஸ் என்று விதவிதமான உலாவியில் பார்த்தாலும், 640×480 என்று டைனோசார் காலத்து அரங்குகளில் ஆரம்பித்து உள்ளங்கைக் கணினி வரை எல்லாவிதமான திரைகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தெரியும்.

பெரும்பாலான அமெரிக்க நகரங்கள் இதே மாதிரிதான். நியுயார்க், அட்லாண்டா, சிகாகோ என்று முக்கிய நகரங்கள் அனேகமாக வார்ப்புருவில் உருவான வலையகம் போல் காட்சியளிக்கும்.

ஊர் நடுவே ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடம். நகரத்தை சுற்றிக் காட்ட சிறப்பு பேருந்துகள். கலை அருங்காட்சியகம், செத்த அருங்காட்சியகம், உயிர் காட்சியகம், மீன் காட்சியகம் என்று விருப்பத்துக்கு ஏற்றவாறு சுற்றலாம்.

ஐந்து வயதுக்குட்ப்பட்ட குழந்தைகள் இருந்தால் விலங்கியல் பூங்கா. ஐந்துக்கு மேல் குழந்தைகள் இருந்தால் ஆட்டம் போட்டு தள்ளிவிடும் மாபெரும் சவாரிகள் கொண்ட தீம் பார்க். அம்பதுக்கு மேற்பட்ட பெருசு இருந்தால் சரித்திரத்தையும் சிற்பங்களையும் அள்ளிவிடும் ம்யூஸியம் என்று வகை செய்து வைத்தல் நலம்.

இந்த மாதிரி நகரங்களுக்கு பாஸ்டனும் விதிவிலக்கல்ல. நயாகரா என்றால் பெரிய அருவி ஒன்று, சிற்றருவி ஒன்று; லாஸ் வேகாஸ் சூதும் சூதாட்டமும் சார்ந்த இடம்; மவுண்ட் ரஷ்மோரில் வெறுமனே கோபுர சிற்ப தரிசனம்; ·ப்ளோரிடாக்களில் டிஸ்னி பங்குக் குறியீடுகள் உயர விதவித மொந்தையில் ஒரே கள் என்றில்லாமல் கொஞ்சம் வித்தியாசமாகவும் கொஞ்சம் பழக்கமான தலங்களும் துளி மெனக்கிட்டால் பூரிப்படைய வைக்கும் தனித்துவமான இடங்களும் கொண்டது.

அலுவல் சம்பந்தமாக பாஸ்டன் பக்கம் வர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால், அரை நாள்தான் ஊர் சுற்ற ஒதுக்க முடியும் என்று வைத்துக் கொண்டால்…

அவசியம் ‘பாஸ்டன் வாத்து சிற்றுலா’ என்றழைக்கப்படும் பாஸ்டன் டக் டூர் சென்று விடுங்கள். டிக்கெட் கிடைப்பது கொஞ்சம் சிரமமானது. பைசாவும் நிறையவே பிடுங்குவது போலும் தோன்றலாம். ஆனால், ஒன்றேகால் மணி நேரத்தில், உங்களுக்கு பாஸ்டன் குறித்த சரித்திரத்தை நகைச்சுவை உணர்வோடு விவரித்து இடஞ்சுட்டி விளக்கி விடுவார்கள்.

மீதம் இருக்கும் காலரைக்கால் நாளில் ஊருக்கு நடுவே இருக்கும் ப்ருடென்சியல் கோபுரத்தின் ஐம்பதாவது மாடியைத் தொட்டு, கண்ணாடிக் கூண்டில் இருந்து அக்ரோ·போபியா இல்லாமல் கண்குளிர மாநகரத்தை தரிசிக்கலாம். ஏறக்குறைய தண்ணீரில் இறங்கும் விமானங்கள் கொண்ட லோகன் விமான நிலையம், கண்ணுக்கெட்டிய தூரத்தில் எம்.ஐ.டி, ஹார்வார்ட் போன்ற பல்கலைகள், குத்துச்சண்டைக்குக் கூவும் சமபலம் கொண்ட வீரன் போல் அறுபது மாடிகளுடன் ஜான் ஹான்காக் டவர், ஈராக்கில் கடத்திப் பிணையாக இருந்த ஜில் கரோல் போன்றோரை நிருபராகக் கொண்ட கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர் கட்டிடங்கள் என்று வனப்பாக பரந்த பார்வை நோக்கலாம்.

அரை நாள்தான் அவகாசம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, வேலை சீக்கிரமே முடிந்துவிட்டு, மதிய உணவுக்கு கம்பெனிக் கொடுப்பவளும் டேக்கா கொடுத்துவிட, ஒரு நாள் முழுக்கக் கிடைத்துவிட்டால்…

அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் தலைநகரங்களாக இருப்பதில்லை. நியு யார்க் மாகாணத்துக்கு எங்கோ மூலையில் இருக்கும் ஆல்பனி; லிங்கனின் இல்லினாய்க்கும் சிகாகோ கிடையாது. அமெரிக்காவுக்கு தலையான வாஷிங்டன் டிசி-யிலோ, அமெரிக்க பாராளுமன்றத்தைப் பார்வையிட ஏழு கடல் ஆறு மலை என்பது போல் தடைக்கற்கள் மிக அதிகம். அமெரிக்க செனேட்டரைப் பார்க்க வேண்டும்… கையெழுத்துடன் சிபாரிசுக் கடிதம் வாங்க வேண்டும்… ஒரு மண்டலம் முன்பே ஒப்புதல் கொடுக்க வேண்டும்… நடக்கிற (சாரி…) பார்க்கிற காரியமா அது?!

அந்த மாதிரி எதுவும் இல்லாமல், கவர்னர் அறை, மாஸாசூஸட்ஸ் மக்களின் பிரதிநிதிகள் சண்டமாருதம் பொழியும் அவை, செனேட்டர்கள் கர்ஜிக்கும் விவாதக் களம், பெருந்தலைவர்கள் வந்தால் விருந்து கொடுக்கும் சபா மண்டபம், சிலைகளும் அவற்றின் தாத்பர்யங்களும் என்று விளக்கமாக அறிய, பார்வையிட ‘ஸ்டேட் ஹவுஸ்‘ செல்ல வேண்டும்.

அப்படியே அங்கிருந்து பொடி நடையாக பாஸ்டன் பொதுமக்கள் பூந்தோட்டத்தையும், சோலைகளையும் மேயலாம். புல்தரையில் மடி மீது தலை வைத்து சூரியன் மறையும் வரை வெயில்காயும் ஜோடிகளைக் காணலாம். டாவின்சி கோட் புரட்டும் படிப்பாளிகளைத் தாண்டலாம். பூத்துவாலைக் குளியலில் குதியாட்டம் கட்டும் சிறார்களோடு இளைப்பாறலாம்.

அங்கிருந்து நடையைக் கட்டி, ‘சுதந்திரச் சுவடுகள்’ என்று நாமகரணமிட்டிருக்கும் ‘Freedom Trail’-ஐ பின்பற்றி கையெழுத்துக்கே இலக்கணம் வகுத்த ஜான் ஹான்காக், சோமபானுத்துக்கு இலக்கணமான சாமுவேல் ஆடம்ஸ் போன்ற பலரின் சமாதிகளை அரகரா போட்டுக் கொண்டே கழைக்கூத்தாடிகளும் இசைக் கலைஞர்களும் முக்குதோறும் காணப்படும் க்வின்சி மார்க்கெட் வந்து சேருவோம்.

‘எனக்கு பீட்ஸா பிடிக்காது; புரீடோ மட்டும்தான் வேணும்’, ‘இட்லி மட்டும்தான் வெளியில் சாப்பிடற பழக்கம்’; ‘சூடா டிகிரி காபி கிடைக்குமா?’, ‘ஐ லைக் ஒன்லி ட்யூட்டி ·ப்ரூட்டி ஐஸ்க்ரீம்’, ‘எலும்பு இல்லாம என்னய்யா சிக்கன்! செட்டி நாட்டு கோழி மாதிரி வருமா?’ என்று விதவிதமாய் மெனு கேட்டு ருசிப்பவர்களுக்கு இது ஏற்ற இடம். அண்டார்டிகா பெங்குயின் முதல் ஆர்க்டிக் பனிக்கரடி வரை சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து வகையறாவும் எப்படியெல்லாம் சமைக்கமுடியுமோ அனைத்தும் ஒருங்கே பரிமாறுவார்கள்.

வெளியில் வந்தால் நாஜிகளினால் கொல்லப்பட்டவர்களுக்கான ‘Holocaust’ நினைவுச்சின்னம். ஆஸ்ஷ்விட்ச் உட்பட ஏழு இடங்களில் விஷவாயு செலுத்தி பலியானதன் குறியீடாக ஏழு கண்ணாடி கோபுரங்கள். தப்பித்தவர்களின் நேரடி அனுபவங்களில் இருந்து சில மேற்கோள்கள், நேரடியாக பார்த்தவர்களின் சாட்சிக் குறிப்புகள், காலவரிசை, ஹிட்லரின் செய்முறை என்று உறைய வைக்கும் நினைவாலயம்.

இன்னுமொரு நாள் இருக்கிறதா?

கடல்வாழ் உயிர்காட்சிசாலை, விலங்கியல் பூங்கா, அருங்காட்சியகம் போன்றவை உலகத்தரமானது. உங்களின் வெறுப்பிற்கேற்ப எதைத் தவிர்க்க வேண்டுமோ அதை விடுத்து ஏதாவது ஒன்றுக்கு செல்லலாம்.

அட… நாள்களை எண்ணாதே! ரசிக்க வேண்டியதை நின்று நிதானமாகப் பார்த்துக் கொள்வோம் என்கிறீர்களா?

மார்த்தாவின் பழரசத் தோட்டம் என்னும் ரசமான பெயருடைய Marthas Vineyard அல்லது நான்ட்டுக்கெட் தீவுகளுக்கு கடல் வழியாக கப்பல் பயணத்தில் சென்றடையலாம். வெயிலில் திராவிடனாகும் வரை காயலாம். கடற்கரையோரமாக சைக்கிளில் சுற்றலாம். நகரத்தின் நச்சுப்புகையும் அவசர மனிதர்களும் விரட்டல் மனப்பானமையும் ·பாஸ்ட் ·புட் உணவும் இல்லாமல் கிராமத்தின் அன்னியோன்மும் தீவின் தனிமையும் மலையின் குளிரையும் மணல் ஒட்டிய கால்களுடன் மகிழலாம்.

வடக்கு பக்கமாக சென்றால் கோடை காலத்தில் கூட பனியை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கும் வாஷிங்டன் மலை. நன்றாக வண்டியோட்டுவேன் என்பவர்கள் கூட நடுங்கிக் கொண்டே வண்டியோட்டும் ஒரு வழிப்பாதை மலையேற்றம். காரோட்டி திகிலில் இன்புறாவிட்டால், சிக்குபுக்கு ரயில் பயணம். காட்டுவழிப் போக ஆயிரம் பாதைகள். வரைபடங்களும் கொடுத்து விடுவதால் ‘ப்ளேர் விட்ச் ப்ராஜெக்ட்’ போல் பயப்படத் தேவையில்லை. ஆற்றோடு துடுப்பு போட்டு துள்ளலாம். ஏரி நீரில் ஜெட் ஸ்கீயும் பாயலாம்.

ஊர் சுற்றி விட்டு ஏறக்கட்டும்போது பாஸ்டன் ட்ரினிட்டி தேவாலயத்திலும் நியு இங்கிலாந்து மஹாலஷ்மி கோவிலிலும் சொல்லிக் கொண்டு போக மறந்து விடாதீர்கள்.

நண்பரின் பாஸ்டன் புகைப்படங்கள்


| |

Will Stalin be a better CM – Survey Results


Tamil Nadu Satisfaction Survey – DataNumerics: “The Tamil Nadu Satisfaction Survey statistic shows that Is Karunanidhi a better CM is at 35.62%, Is Jayalalitha a better CM is at 12.31%, Will Stalin be a better CM is at 42.24%, Will VaiKo be a better CM is at 0.47%. Clearly, this pattern indicates that People want Stalin as Chief Minister of TN.”

மக்களின் ஆதரவு திமுக மற்றும் ஸ்டாலின் பக்கம் இருக்கிறது என்பதற்கு இது போன்ற நடுநிலையான ஆய்வை விட வேறு எந்த கருத்துக் கணிப்பு வேண்டும்!

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி ஸ்டாலின் தலைமையில் சந்திக்க வேண்டும் என்று கருதுவதாக மக்களின் நாடித் துடிப்பை டேட்டா ந்யூமெரிக்ஸ் ஆய்வு அறிக்கை தெரிவித்திருக்கிறது. அந்த முடிவுகள் இங்கே…


| |

Selective Outrage

கடைந்தெடுத்து கண்டிப்பது

The Lesson of the Baseball Bat on Flickr - Photo Sharing!Israel the unfair target of selective outrage – The Boston Globe:

இங்கிலாந்தின் உயர்கல்வி ஆசிரியர்களின் தேசிய கூட்டமைப்பும் (National Association of Teachers in Further and Higher Education), ஒண்டாரியோவின் பொது ஊழியர் சங்கமும் (Canadian Union of Public Employees) இஸ்ரேலை பகிஷ்கரிக்க முடிவு செய்துள்ளது.

பாலஸ்தீனர்களை இஸ்ரேல் நடத்தும் விதம் கடும் கண்டனத்துக்குரியது எனக் கருதும் கட்டுரையாசிரியர், இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினையை ரஷ்யா-செசன்யா; சீனா-திபெத்; அமெரிக்கா-ஈராக்; சவூதி அரேபியா-மற்ற மதநம்பிக்கை ஒடுக்குமுறைகளுடன் ஒப்பிடுகிறார்.

கம்யூனிஸ மற்றும் இடதுசாரி அரசுகளின் அடக்குமுறைகள் பரிவோடு பார்க்கப் படும் அதே தராசில் வலது சாரி மற்றும் மேற்கத்திய நாடுகளின் நசுக்கல்கள் மட்டும் கடுமையாக கண்டிக்கப் படுவதை ‘கடைந்தெடுத்து கண்டிப்பது’ என்று நாமகரணமிட்டிருக்கிறார்.


| |

Good (B)looing

காலை எழுந்தவுடன் கடன் முடித்து விட்டுத்தான் அடுத்த வேலை: அசல் மூச்சா இங்கே

தமிழக ஆடல் அரங்கின் புத்தம்புதிய உல்டா வடிவமைப்பு இங்கே!


| |

Toilets in India 

Toilets in India Posted by Picasa

Officers Transferred in TN

 Officers Transferred in TN

நன்றி: http://epaper.dinamalar.com/Web/Article/2006/06/01/009/01_06_2006_009_012.jpg

Anitha Radhakrishnan, Sethu Samuthiram & Assembly hullabaloo

Warrant issued against Anitha Radhakrishnan :: தட்ஸ் தமிழ்

போலி வாக்காளர்களை சேர்த்த முன்னாள் அதிமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.


Webulagam : Sethu Samuthiram Project will end 2 Yearsசேது சமுத்திரப் பணி 2 ஆண்டில் நிறைவடையும்
கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டப் பணிகள் 2008ம் ஆண்டுக்குள் நிறைவு பெற்று விடும் என்று மத்திய நெடுஞ்சாலை, தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.

சென்னையின் பல்வேறு இடங்களில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலங்களை பார்வையிட்ட டி.ஆர். பாலு, பிரதமரால் துவக்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தின் வடக்கு பகுதியில் கடலை ஆழப்படுத்தும் பணி 30 விழுக்காடு முடிந்துவிட்டது. ஜூலை மாதத்திற்குள் மீதப் பணிகளும் முடிந்துவிடும்.

தெற்கு பகுதியில் 3 கட்டங்கள் உள்ளன. இந்த பணிக்கான உத்தரவு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வழங்கப்படும். அக்டோபர் 1ம் தேதிக்குள் பணி தொடங்கப்பட்டு 2008 நவம்பர் 1ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று விடும்.

சென்னை துறைமுகத்தில் ரூ.401 கோடி செலவில் 2வது சரக்கு முனையம் அமைக்கப்படும். ரூ.150 கோடி செலவில் கப்பல் பழுதுபார்க்கும் தளமும் அமைக்கப்படும் என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.


www.webulagam.com :: அதிமுக உறுப்பினர்கள் 6 பேர் மீது உரிமை பிரச்சனை
தமிழக சட்டப் பேரவையில் ரகளையில் ஈடுபட்டதாக அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் மீது கொண்டுவரப்பட்ட உரிமை மீறல் பிரச்சனையை உரிமைக் குழுவின் பரிசீலனைக்கு பேரவைத் தலைவர் அனுப்பி வைத்துள்ளார்!

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், கடந்த 26 ஆம் தேதி உறுப்பினர் பீட்டர் அல்ஃபோன்ஸ் பேசிக் கொண்டிருக்கும் போது, பேசாதே உட்காருடா என்று அதிமுகவினர் குரலெழுப்பினர் என்றும், அதிமுக உறுப்பினர்கள் கலைராஜன், சி. சின்னசாமி, ஆர். சின்னசாமி, சி.வி. சண்முகம் ஆகியோர் தங்களை அடிக்கப் பாய்ந்ததாகவும் கூறினார்.

அவையின் ஒரு ஓரத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்த முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், இருக்கை மீது ஏறி நின்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தங்களை அடிக்கப் பாய்ந்து வந்ததாகவும், அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அதிமுக உறுப்பினர் சேகர் பாபு மீண்டும் அவைக்குள் வந்து மைக்கைப் பிடித்து முறுக்கி முதல்வரை தாக்க முயன்றதாகவும் கூறினார்.

எனவே, கலைராஜன், ஆர். சின்னசாமி, சி. சின்னசாமி, சி.வி. சண்முகம், பாண்டுரங்கள், சேகர் பாபு ஆகியோரின் நடவடிக்கைகளை அவை உரிமைக் குழுவின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து பேசிய பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், “இந்த சம்பவத்தை மேலெழுந்தவாரியாக பார்க்கையில் அவை உரிமை மீறல் இருப்பது தெரியவருகிறது. எனவே, இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க அவை உரிமைக் குழுவிற்கு இதை அனுப்பி வைக்கிறேன்” என்று கூறினார்.