இந்தியாவில் ஆளும் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று புது டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆளும் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் நிறைவானதையடுத்து, பல்வேறு துறைகளில் கண்ட முன்னேற்றங்களை அமைச்சர்கள் இன்றைய கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தனர். இந்தியாவில் உள்ள உயர்திறன் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு, கடந்த தமிழகத் தேர்தலில் அஇஅதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்ட மதிமுக சார்வில் எவரும் கலந்து கொள்ளவில்லை என்றும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.











மதிமுகவைச் சார்ந்த யாருக்கும் அழைப்பு இல்லை. அதனால்தான் செல்லவில்லை.