தேர்தல் முடிவுகளும் அரசியல் திருப்பங்களும் – இரா. செழியன்
2001 – 2006 சட்டசபைத் தேர்தல்களில் வாக்களித்தவர்களின் விகிதாசார அளவுகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் முறையே
தமிழ்நாடு 59.1% – 70.8%,
மேற்கு வங்காளம் 75.3% – 82.0%,
புதுச்சேரி 70.1% – 85.7%,
அசாம் 74.6% – 79.1% என்று அதிகரித்துள்ளன.
கேரளத்தில் மட்டும் 72.5% – 72.3% என மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளது.
ஐந்து மாநிலங்களில் வந்து வாக்களித்தவர்களின் விகிதாசாரங்கள்
தமிழ்நாடு 60.8%,
புதுச்சேரி 76.1%,
கேரளம் 71.5%,
மேற்கு வங்காளம் 78.0%,
அசாம் 69.1%.
இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் 2004 நாடாளுமன்றத் தேர்தலைவிட 2006 சட்டசபை தேர்தல்களில் வாக்காளர்கள் அதிகமான ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள்.
தி.மு.க. அணிக்கு 44.7% என்றும் அ.தி.மு.க. அணிக்கு 44.1% என்றும் இருப்பதால், இடையில் குறைந்த அளவில் வித்தியாசம் வந்துள்ளது.
நாம் கடைப்பிடிக்கிற இங்கிலாந்து நாட்டுத் தேர்தல் முறையில் அதிகமான வாக்குகள் பெற்ற வேட்பாளர் மொத்த வாக்குகளில் பத்து சதவிகிதம்தான் விழுந்தன என்றாலும் 5.1 சதவிகிதம் வாங்கிய வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். வாக்கு விகிதாசாரப்படி இடங்கள் கிடைப்பதில்லை. ஜெர்மன் நாட்டில் உள்ள பட்டியல் முறைப்படி, பாதியிடங்கள் நேரடியான தேர்தலாகவும், மறுபாதி இடங்கள் கட்சிகள் பெற்ற விகிதாசார முறையிலும் அமைவதாகவும் இருப்பதைப்போல பல ஆண்டுகளாக இந்தியாவிலும் தேர்தல் சீர்திருத்தம் பற்றி பேசப்பட்டு வருகிறது.











நேற்று பேசிக் கொண்டிருந்த ஒரு நண்பர், இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஓட்டு சதவிகிதம் உயர்ந்ததற்கு விஜயகாந்த் வரவு தான் காரணம் என்று பேசிக் கொண்டிருந்தார்…
விஜய்காந்த் தமிழ்நாட்டில் மட்டும் தானே போட்டியிட்டார்?
அவருக்கு இந்தப் பதிவை அனுப்ப வேண்டும்…தகவலுக்கு நன்றி!
182 தொகுதிகளில் போட்டுயிட்டு 44.1%
130 தொகுதிகளில் போட்டுயிட்டு 44.7%
என்பது தானே சரி??
இல்லை கண்க்கீடு வேறுமுறையிலா?
தெரியவில்லை… ‘அணி’ என்பதால் கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளை மொத்தமாக கணக்கிட்டிருக்கலாம். நமக்கே ஒரு எக்ஸெல் கோப்பாக இறக்கிக் கொள்ள எல்லா தொகுதி வாக்குகளையும் கொடுத்தால், வேண்டியபடி அலசலாம்! (ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளருக்கு சார்பாக விழுந்த ஓட்டுகளையும் இன்னொரு தொகுதியில் இன்னொருவருக்கு விழுந்ததையும் எவ்வாறு ஒப்பிட முடியும் என்னும் கேள்வியும் எழுகிறது.)
wHEN THE REPORTED PERCENTAGE CLEARLY SHOWS THE WORD ‘ANI’ MEANING FRONT, BRINGING IN THE 182 VS 130 ISSUE IS A CLEAR-CUT DIVERTING TACTICS, I THINK!
I UNDERSTOOD THAT THE dmk “FRONT” GOT 44.7% AND admk “FRONT” GORT 44.1%.
நான் வேலை மெனக்கெட்டு தேர்தல் ஆணையத்தின் தளத்தில் இருந்து இறக்கி வைத்திருக்கிறேன்.
ஒரு பதிவு போட வேண்டுமென்று நினைத்திருக்கிறேன், நேரம்தான் இல்லை.
சில வெட்டிப் புள்ளி விவரங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
பிரதீப்… அவசியம் இடுங்கள். நான் ஒப்பிட நினைத்தது:
1. 2001-இல் மதிமுக வாக்கு வங்கியும் 2006-இல் விஜய்காந்த்தின் வாக்கு விகிதமும்
2. அன்பழகன் போன்ற விஐபி தொகுதிகளில் எவ்வளவு வாக்குகள் அதிகரித்திருக்கிறது/குறைந்திருக்கிறது.
3. வில்லிவாக்கம் நெப்போலியன் x மைலப்பூர் நெப்போலியன்
4. குறைந்த வாக்கு வித்தியாசங்களில் ஜெயித்தவர்களின் வாக்குகள் அதே அளவில் இருந்தாலும், அடுத்த வேட்பாளருடன் ஆன வாக்கு வித்தியாசம் பெருமளவில் குறைந்துள்ளது (சென்னையில் பல தொகுதிகளில் இதை அவதானிக்க முடிகிறது!)
5. ஒரு எக்ஸெல் கோப்பில் எல்லா access டேட்டாபேஸ் விடைகளையும் கோர்த்து தயாரித்து கொடுத்தால் பலருக்குப் பயனளிக்கும்.
தங்களின் அலசலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்! 🙂
முன்கூட்டிய நன்றிகள்.