எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு மாபெரும் ஓட்டுப்பதிவு சதவீதம் தமிழகத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது.
திடீரென்று வந்து ஓட்டளித்துள்ள இந்த பத்து சதவீதம் ஆட்கள் யார்? என்பதை அலசுவதே இந்த பதிவின் நோக்கம்.
1. இவர்கள் அனைவரும் விஜயகாந்துக்கு ஓட்டளித்த நடுநிலை(?) வாக்காளர்கள் என்று சில தகவல்களும் பல பெண்கள் விஜயகாந்திற்கு வாக்களித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.( மதுரையில் உள்ள என் மேலிடமும் முரசுக்கு குத்தியதாக கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன. என் கருத்தை வீட்டில் செலாவணி செய்யமுடியாத இரண்டாவது சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.பெண்ணுரிமைங்க.)
2. இவ்விதம் முரசுக்கு குத்தப்பட்ட ஓட்டுக்கள் அதிமுக கட்சியை அதிகம் பாதிக்கும் என்பது என் கருத்து. திமுகவிற்கும் ஓரளவு பாதிப்பு இருக்கலாம். இனி தினமலர் போன்ற பத்திரிக்கைகள் விஜயகாந்த் அடிவருடியாக மாறலாம். சொந்தமாக எந்த அடிப்படை கொள்கையும் இல்லாத தினமலருக்கு இது சுலபம்.அதிமுகவிற்கு இது பிரச்சினைதான்.
3.இதுவரை வெட்டி வியாக்கியானம் பேசிதிரிந்த படித்த பருப்புகள் இந்த முறை வந்து ஓட்டு போட்டிருக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அரசு ஊழியர் மற்றும் அவர்கள் குடும்பம். இது சரியானால் அது திமுக மற்றும் கூட்டணிக்கு சாதகம்.
4.மற்றபடி ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் இத்தனை அதிக அளவு ஓட்டுப் பதிவு என்பது சரியா என்று தெரியவில்லை.எனக்கு தெரிந்தவரை எதிர்கட்சிகளுக்கு ஆதரவு என்றால்தான் ஓட்டுப்பதிவு அதிகரிக்கும்.எதிர்கட்சி என்பது இங்கு தமிளன் விஜயகாந்தையும் குறிக்கும்.
நாளை நல்ல காமெடி உண்டு. DAY OF THE YEAR என்று சொன்னால் அது மிகையாகுமா?











// மதுரையில் உள்ள என் மேலிடமும் முரசுக்கு குத்தியதாக கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன. என் கருத்தை வீட்டில் செலாவணி செய்யமுடியாத இரண்டாவது சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.பெண்ணுரிமைங்க//
🙂
நல்ல அலசல்! நாளைக்குக் காயப் போட்டுடலாம்.
எப்படிப்பார்த்தாலும் இந்த அதிகப்படியான வாக்குப் பதிவு யாருக்கு சாதகமோ இல்லையோ அ.தி.மு.க விற்குப் பாதகம் என்றே கருதுகிறேன்.
சிபி சொல்வதில் உண்மை இருப்பதாக படுகிறது…
//சிபி சொல்வதில் உண்மை இருப்பதாக படுகிறது… //
எதைச் சொல்றீங்க ரவி?
//நல்ல அலசல்! நாளைக்குக் காயப் போட்டுடலாம்//
இதையா? அல்லது
//எப்படிப்பார்த்தாலும் இந்த அதிகப்படியான வாக்குப் பதிவு யாருக்கு சாதகமோ இல்லையோ அ.தி.மு.க விற்குப் பாதகம் என்றே கருதுகிறேன். //
இதையா?
🙂
தே.மு.தி.க.விற்கு விழும் ஓட்டுக்கள் எல்லாம் விஜய்காந்திற்காக விழுந்த ஓட்டுக்கள் இல்லை. அவருடைய கொள்கைக்காக (ஏதாவது இருக்கா – அது வேறு விஷயம்) விழுந்த ஓட்டுக்கள் இல்லை.
பெரும்பாலான ஓட்டுக்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க மேல் உள்ள வெறுப்பினால் விழுபவை. சுமார் 40 ஆண்டுகள் இருவரும் ஆண்டுவிட்டனர். இப்போது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று நினைக்கின்றனர். இது கணிப்பு இல்லை. வோட்டு போட்ட சிலரிடம் பேசிய போது தெரிந்தது.
தேர்தல் முடிவை பார்த்து ஒருவர் பெருமூச்சு விட போகிறார். அடடா வாய்ப்பை இழந்து விட்டோமே என்று.
// மதுரையில் உள்ள என் மேலிடமும் முரசுக்கு குத்தியதாக கடைசி தகவல்கள் தெரிவிக்கின்றன.//
தலைவா என்னா இது. நாம் தேர்தலில் நிற்கும் போது, தொகுதிக்கு 2 வோட்டு கிடைக்கும் என்று இருந்தேன் – இப்போ ஒரு வோட்டுதானா??
என் கணிப்புகள்
1.இதுவரை ஓட்டுபோடாத அரசு ஊழியர்,சாலைபணியாளர்,லாட்டரி வியாபாரிகள்,அவர் குடும்பம் பெருவாரியாக வந்து ஓட்டளித்திருக்கலாம்(திமுகவுக்கு சாதகம்)
2.சங்கராச்சாரியார் விஷயத்தால் பிராமணர்கள் அதிகம் ஓட்டளித்திருக்கலாம்.பெருமளவில் அவர்களை குறிவைத்து பிரச்சாரம் நடந்தது(திமுக+பிஜேபிக்கு சாதகம்)
3.விஜய்காந்த் காரனமென்றால் அவர் படித்தவர் இளைஞர்களின் ஓட்டுக்களை அதிகம் பெற்றிருக்கிறார் என அர்த்தம்(அவை பெரும்பாலும் அதிமுகவுக்கு போகாது)
4.கார்த்திக் தேவரின மக்களையும் சரத்குமார் நாடார் இன மக்களையும் அதிகம் வரவழைத்திருக்கலாம்(திமுக,அதிமுகவுக்கு சாதகம்)
ஆனால் புதுவையில் கிட்டத்தட்ட 85% வாக்குப்பதிவு நடந்திருக்கிறதே?அது ஏன்?
//ஆனால் புதுவையில் கிட்டத்தட்ட 85% வாக்குப்பதிவு நடந்திருக்கிறதே?அது ஏன்?//
பொதுவாகவே அங்கு அதிகம் வாக்குப்பதிவு நடக்கும்.
சிறிய தொகுதிகள்.
நேர்பழக்கம் கொண்டவர்கள் நிறைய.
ஓரளவு தமிழக மனநிலை அங்கு இருக்கும்.
இவை என் யூகங்கள்.
//தலைவா என்னா இது. நாம் தேர்தலில் நிற்கும் போது, தொகுதிக்கு 2 வோட்டு கிடைக்கும் என்று இருந்தேன் – இப்போ ஒரு வோட்டுதானா?? //
என்னத்த சொல்லி என்னத்த பண்றது?!
இதுக்கெல்லாம் சலிச்சிக்காதீங்க முத்து. இப்பல்லாம் இதுதான் முதல் தகுதி.
நம்மாளு ஊர் ஊராய் போயி, சாமி இல்ல, சாமி இல்லவே இல்லன்னு சொல்லிட்டு இருப்பாரு, வூட்டம்மாங்க, ஊர் ஊராய் இருக்கற கோயிலுக்கு போயி அவரு ஜெயிக்கனுமுன்னு வேண்டிக்கிட்டிருக்காங்க…
//தலைவா என்னா இது. நாம் தேர்தலில் நிற்கும் போது, தொகுதிக்கு 2 வோட்டு கிடைக்கும் என்று இருந்தேன் – இப்போ ஒரு வோட்டுதானா?? //
என்னத்த சொல்லி என்னத்த பண்றது?!
முத்து(தமிழினி)
உங்கள் அரசியல் அறியாமையை காட்டி விட்டீர்களே:-((
மேலிடத்தையே வேட்பாளராக்கிவிட்டால் வாக்கு சிதறாது போகும். பெண்ணுரிமையும் போற்றியதாகிவிடும்:-)
//மேலிடத்தையே வேட்பாளராக்கிவிட்டால் வாக்கு சிதறாது போகும். பெண்ணுரிமையும் போற்றியதாகிவிடும்:-)//
அரே..அரே..அரே..அரே….அரே..அரே..அரே..அரே தேவுடா தேவுடா இங்க கொஞ்சம் சூடுடா….
நன்றி..உங்களுக்கு தி.ரா.மு.மு கட்சி சார்பாக Think Tank Strategist என்ற பட்டமும் பதவியும் வழங்கப்படுகின்றது
//நம்மாளு ஊர் ஊராய் போயி, சாமி இல்ல, சாமி இல்லவே இல்லன்னு சொல்லிட்டு இருப்பாரு, வூட்டம்மாங்க, ஊர் ஊராய் இருக்கற கோயிலுக்கு போயி அவரு ஜெயிக்கனுமுன்னு வேண்டிக்கிட்டிருக்காங்க…//
🙂
சரிதான் கிருஷ்ணா!
நாளை வரை ஓரு திக் திக் தான்.
இல்லத்தரசிகள் “மாறன்” குடும்பம் ஓரு தீவை வாங்கப் போகிறதாமே என்ற அளவில் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். “டாடா” வை பற்றி படித்தார்களா பெண்கள் என்று புரியவில்லை.
விஜயகாந்துக்கு ஓட்டுப்போடுவேன் என்று கிளம்பிப்போனார்கள். முதன் முதலில் வாக்களிக்கப்போகும் ஓருவர் ஜெவுக்கு ஓட்டளிப்பேன் என்ற சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் விஜயகாந்துக்கு ஓட்டுபோட்டு வந்திருக்கிறார்.
திமுக தீவிர ஆதரவாளரான என் நண்பருடைய அப்பா ஜெவுக்கு ஓட்டு போட்டு வந்திருக்கிறார்.
மகளிரும் அதிக சதவிகித வாக்குப்புதிவும் ஜெவுக்கு சாதகமாகும் என்று நம்பினேன். ஆனால் நடக்காது போலிருக்கிறது.
ரொம்பவே சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது. எல்லோருடைய எண்ணத்திற்கும் ஓரு ஆப்பு இருக்கும் போலிருக்கிறது.
விஜயாகாந்த் தனித்து நின்றதால், அதிமுகவிற்கு பின்னடைவு என்றும் அதனாலேயே திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது என்று தினமலரும், மக்கள்குரல், தினபூமி போன்ற நாளிதழ்கள் சொல்லும். திமுக வெற்றியை ஜீரணிக்க முடியாமல் அஜீரண செய்திகளை இன்நேரம் தயார்படுத்தி வைத்திருப்பார்கள்.
அதாவது, கடந்த மே8 தேர்தலில், கருணாநிதி தலைமையிலான கூட்டணி அரசு போதுமான இடங்களை கைப்பற்றி வெற்றி அடைந்தது. இந்த வெற்றி கார்த்திக் தேவரின ஓட்டுகளை பிரித்ததாலும், தேமுதிக மதிமுகவின் சாதி ஓட்டுகளைப் பிரித்தாலும் இந்த வெற்றி சாத்தியமானதாக தேர்தல் நோக்கர்கள் கருதுகிறார்கள் என்று சொல்லும்
என்னமோ எல்லாக் கட்சிகளும் கொளுகையோட இருக்காமாதிரி விஜயகாந்த் மட்டும் கொளுஹை இல்லாம வந்துட்ட மாதிரி அவரை மட்டும் நக்கல் செய்வது நல்லா இல்ல ஆமா. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் “எப்படியாவது” ஜெயிப்பதே கொளுகை.
கொள்கையைச் சொல்லி ஓட்டுக் கேட்ட ஒரு கட்சியைச் சொல்லுங்கள் பாப்போம்?
அல்லது ஜெயித்து வந்த பிறகு கொள்கைப்படி நடந்த ஒரு கட்சியைச் சொல்லுங்கள்.
விடுங்கப்பா விஜயகாந்தும் ஆட்டையில இருந்துட்டுப் போறார்.
///கல்வெட்டு said…
என்னமோ எல்லாக்
கொள்கையைச் சொல்லி ஓட்டுக் கேட்ட ஒரு கட்சியைச் சொல்லுங்கள் பாப்போம்?///////
அரசியல்வாதியின் ஒரே கொள்கை ஆட்சியை பிடிப்பது.
இந்த வை.கோபால்சாமிதான் கொள்கை கொள்கைன்னு ஒரு காலத்தில் கூவிக்கினு இருந்தாரு….
இருக்கற எடம் தெரியாமப் போகப்போகும் மனுசனில் இவரும் ஒருவராக வேண்டும் என்பதே என் ஆசை
//நன்றி..உங்களுக்கு தி.ரா.மு.மு கட்சி சார்பாக Think Tank Strategist என்ற பட்டமும் பதவியும் வழங்கப்படுகின்றது//
பட்டமெல்லாம் நமக்கெதுக்கு
காலத்தின் கையில் அது இருக்கு:-))
&
உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மாட்டேன்.
உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன்:-)))
கனியட்டும் காலம் இருக்கு முத்து(தமிழினி)..
என்னமோ திட்டம் இருக்கு:))
முத்து அத ஏன் கேக்குறீங்க காலையில இருந்து மண்டைய பிச்சுக்குற கேள்வியா இது இருக்குது, இந்த வெய்யில் நேரத்துல நீங்க வேற… சூடேத்துறீங்க… 11 சதவீதம் வாக்குகள் கடந்த 2001 தேர்தலை விட இந்த ஆண்டு அதிகம் என்று நச்சுன்னு சொல்லியிருக்காங்க… இது யாருக்குப் போச்சோ? நாளைக்கு பொட்டியத் தொறந்தாத்தான் தெரியும்! அதுவரை மர்மம்தான்…. முதல் முதலில் வாக்களிப்போர் கணிசமானவர்கள் முரசு கொட்டினர். அத்துடன் இந்த அணியில் பெண்களும் இணைந்து கொண்டதாக கூறப்படுகிறது. தமிழக தேர்தல் வரலாற்றில் இந்த 2006 தேர்தல் புது வரலாற்றை எழுதும் இது மட்டுமே இப்போதைக்கு கூறக்கூடிய விஷயமாக இருக்கிறது.
//பட்டமெல்லாம் நமக்கெதுக்கு
காலத்தின் கையில் அது இருக்கு:-))
&
உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மாட்டேன்.
உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன்:-)))
//
இப்ப எதுக்குங்க இதெல்லாம்!
பேசாம சிவனேன்னு…..
General thumbrule: அதிக வாக்குப்பதிவு சதவீதம் anti-establishment அலை.
பார்ப்போம் அலை கரைவரை ஏறுமா, கடலினுள் வீழுமா என்று.
மேலிடம் எந்தக் கட்சிக்கு வாக்களித்தது என்பதனை வெளிப்படையாக இங்கே சொல்லிய முத்துவுக்கு என் கடுமையான கண்டனங்கள். ஸ்மைலி இல்லை என்பதனைக் கவனிக்கவும். பெண்ணுரிமை என்று சொல்லும் நீங்கள் அவரின் வாக்கு யாருக்கு என்ற இரகசியத்தை வெளியே சொல்லி அவருடைய தனிமனித உரிமையில் விளையாடுகிறீர்கள்.
இன்னொரு விடயம். நேற்றைய தமிழ்மண கருத்துக் கணிப்பில் வாக்களிக்காத 35% யார் என்ற கேள்வியில் வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களைப் பற்றி ஒரு தனிப் பிரிவு இல்லை. அவர்கள் குறைந்தது ஒரு ஐந்து சதவீதமாவது இருக்க மாட்டார்களா? நான் வேண்டா வெறுப்பாக மற்ற பிரிவுகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்தேன்.
//நான் வேண்டா வெறுப்பாக மற்ற பிரிவுகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்தேன்.
//
அதாவது 49 ஓ படிவம் இல்லாததால்
யாரோ ஒரு வேட்பாளருக்கு வாக்களித்தது போல்!
134 – 100 என்ற வகையில் சட்டமன்றம் பிரிந்தால் சட்டமன்றக் கூட்டத்தொடர்கள் நிச்சயம் ஒரு “மசாலாப் படம்” பார்த்த எபெக்ட் உடன் இருக்கும். அதிலும் விஜயகாந்த் ஜெயிக்கும் பட்சத்தில் அவர் பேச்சுக்கள் எப்படி இருக்கும் (கற்பனை செய்தாலே “குஜால” இருக்கு).
//”குஜால” இருக்கு). //
குஜாலாக்கீதுபா…
//அதிலும் விஜயகாந்த் ஜெயிக்கும் பட்சத்தில் அவர் பேச்சுக்கள் எப்படி இருக்கும் (கற்பனை செய்தாலே “குஜால” இருக்கு).//
அதிலும் அவர் சட்டசபையில் தமிழ்நாட்டில் உள்ள மொத்த மதுபானக்கடைகளில் மொத்த வியாபரம் செய்பவை எத்தனை, சில்லறை வியாபரம் செய்பவை எத்தனை, அனுமதி பெற்ற பார்கள் எத்தனை, அனுமதி பெறாதவை எத்தனை, ஒரு நாளைய மொத்த வியாபரம், மாத வருவாய், ஆண்டு வருபாய், நிகர லாபம் போன்றவற்றை புள்ளி விவரங்களோடு பேசும்போது
மேசகளைத் தட்டாமல் சட்டசபையில் விசில் பறக்கும் இல்லையா வினையூக்கி!
அது மட்டுமின்று சட்ட சபைக்கும் தகராறு ஏற்பட்டால்
“இது மாதிரி புனிதமான இடத்துல உங்களை மாதிரி பாவிங்க ரத்தம் சிந்தக் கூடாது”ன்னு சொல்லொ நம்ம பீச் கிட்டயோ, இல்லாட்டி கிண்டி க்கோ கூட்டிட்டு வந்து சண்டை போடுவார். (வரும்போதே நாற்காலி, மைக் எல்லாம் அவங்கவங்க கொண்டுவந்துடனும்)
நல்ல கற்பனை நாமக்கல் சிபி….. நடந்தாலும் நடக்கக் கூடும் ….. சட்டசபைக் காவலர்களை சுவற்றில் கால் வைத்து அடிக்காமல் இருந்தால் சரி
// இனி தினமலர் போன்ற பத்திரிக்கைகள் விஜயகாந்த் அடிவருடியாக மாறலாம்.சொந்தமாக எந்த அடிப்படை கொள்கையும் இல்லாத தினமலருக்கு இது சுலபம்//
இது போன்ற கருத்தாழமிக்க வசனங்கள் இந்தப் வலைப்பூவின் contributors அனைவருக்கும் ஒப்புமை உண்டா அல்லது இது இவரின் தனிப்பட்ட கருத்தா? அப்படி தனிப்பட்ட கருத்து என்றால் இதை ஏன் அவர் தனது சொந்த வலைப்பதிவில் எழுதக்கூடாது? இந்த கூட்டுப்பதிவின் நோக்கம் என்ன? புரிந்தவர்கள் விளக்குங்களேன். (சொன்னீங்கன்னா.. அடுத்தாப்ல கூட்டு வலைப்பதிவுன்னு ரொம்ப பேரு ஆரம்பிக்க வசதியா இருக்கும்ல!?)
மாயு,
யார் வேணடுமானாலும்அவரவர் கருத்தை எழுதலாம் எனபது எங்களுக்குள் ஒப்பந்தம்.
நீங்க ஏன்டென்சன் ஆகிறீர்கள்?