இரண்டு பாடல்கள்
அம்பிகாவும் கமல்ஹாஸனும் துள்ளி ஓடும் பாடல். மறந்து விட வேண்டிய படத்துக்கும் இளையராஜா, முக்கியமான பாடல்களைக் கொடுத்த காலம்.
திரைப்படம்: நானும் ஒரு தொழிலாளி
இயக்கம்: ஸ்ரீதர்
தயாரிப்பு: சித்ராலயா (ஸ்ரீதர்)
இசை: இளையராஜா
படத்தொகுப்பு: எம் உமாநாத்
ஒளிப்பதிவு: பி பாஸ்கர் ராவ்
கலை: ஏ ராமசாமி
வெளியீடு: மே 1 1986
பாடலாசிரியர்: வாலி
பின்னணிக் குரல்: எஸ்.பி.பி & எஸ் ஜானகி
ஒரு நிலவும் மலரும்
நடனம் புரியும் கவியரங்கம்
இரு விழிகள் எழுதும்
கவிதை முழுதும் மந்திரம்
பெண் வண்ணம்
பக்கம் நிற்கும் சிற்பம்
கண் வண்ணம்
தென்றல் கொஞ்சும் சிற்பம்
ராகங்கள்…
பாடுங்கள்…
புது ராகங்கள் பாடுங்கள்
தாளங்கள் போடுங்களேன்
படிச்சேனே நான் கூட பாட்டு
இது பாட்டல்ல நான் போடும் வேட்டு
மாமா…
கண் துடிக்குது
பெண் துடிக்குது
கை அணைச்சிடவா…
புது ரோஜா…
பூத்திருக்குது
காத்திருக்குது
நான் பறிச்சிடவா…
அட நீதான் சேர்ந்திருக்கணும்
நான் தான் தேன் கொடுக்கணும்
நெனச்சா முடிப்பே
இதில் நீ ஜெயிப்பே
குலுங்கக் குலுங்க
நடக்கும் கொடிய
வளச்சு வளச்சுப் பந்தாடுவேன்
மற்ற பாடல்கள்: Naanum oru thozhilali – Music by Maestro Ilaiyaraaja
அடுத்த பாடல்
திரைப்படம்: நம்மவர்
இயக்கம்: சேது மாதவன்
வருடம்: 1994
இசை: மஹேஷ்
பின்னணிக் குரல்: (அனேகமாக) எஸ்.பி.பி
‘எதிலும் வல்லவன்டா‘ என்று ஆரம்பிக்கும் பாடல். இசைக்கருவிகள் ஏதும் கிடையாது. பஞ்சாபி பாங்ரா இசை (+ நடனம்), கேரளத்து கதகளி, தெலுங்கு என்று பல மொழிகள் இயல்பாக உருமாறி ஆட்டமாட வைக்கிறது.
கல்லூரிப் பேராசிரியர் (அல்லது ஆசிரியர்) கமல் மேடையில் பாடுகிறார். வில்லன் கரண் இசைக்கருவிகளைத் திருடி மறைத்திருக்க வேண்டும். செந்தில் விடும் ஏப்பம், விக்கல் போன்றவையும் கலந்து வரும் அருமையான பாடல்.
துளியூண்டு சாம்பிள் கேட்க: Welcome to BrasianBeats.com – Nammavar
இசையமைப்பாளர் மஹேஷ் குறித்த பதிவு: அஞ்சலி |
‘நம்மவர்’ படத்திற்காக தேசிய விருதும் அறிமுக இசையமைப்பளருக்கான ‘ஸ்க்ரீன் – பானசோனிக்’ விருதும் கிடைத்த செய்தி: Songs of Mahesh










