கொஞ்சம் கொஞ்சமாய்…


இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஒரு காமெடி படங்களே. கடந்த முறை இந்த கூத்துத்தான் நடந்தது.ஆகவே எனதருமை ரத்தத்தின் ரத்தங்களே. கவலை வேண்டாம்.யார் யார் எந்த கட்சி ஆதரவாளர்களின் என்பது அனைவருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

ஆகவே இப்போது வந்திருக்கும் இந்த எக்ஸி்ட் போல் எனப்படுவதை பார்த்து பம்மி கருத்தே லேசாக மாற்றி நான் அன்னைக்கே நினைத்தேன்,இருந்தாலும் பரவாயில்லை, எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன, அராஜகம் பண்ணி ஜெயிச்சானுங்க போன்ற கருத்துக்களை கழக கண்மணிக்ள அள்ளிவிட வேண்டாம்.சில ரத்தத்தின் ரத்தங்கள் நம்பிக்கை இழப்பதாக தகவல்கள் வருகின்றன.

அதிமுக அவ்வளவு சுலபமாக தோற்கும் அணி அல்ல. கிராமப்புறங்களில் கணிசமாக ஆதரவு கொண்ட அந்த இயக்கம் எக்ஸிட் போல்கள், கருத்து கணிப்புகள் ஆகியவற்றை ஏற்கனவே சிலமுறை தவிடு பொடியாக்கி உள்ளது.

தேர்தல் நேரங்களில் சின்ன சின்ன வெட்டுகுத்துக்கள் நடந்ததை எல்லாம் வைத்து முழு தீர்ப்பை யாரும் எழுதமுடியாது.அது நியாயமும் அல்ல.ரவுடிகள் இரு கட்சிகளிலும் இருப்பது உலக உண்மை.

விஜயகாந்த் என்பவருக்கும் இது முதல் சோதனை. கருத்து கணிப்புகளில் பத்து சதவீதம்வரை ஓட்டு வாங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இது காமெடியன் வைகோவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.இது அதிகம் ஆகலாம்.ஆனால் எதிர்காலத்தில் யாருடனாவது கூட்டணி சேர்ந்தால் இது நீர்த்து போகலாம்.

ஒருவேளை திமுக ஜெயித்தாலும் தயாநிதி மாறன் டாடா விஷயத்தில் தவறு செய்திருந்தால் இந்த வெற்றியை காண்பித்து அவர் செய்ததை நியாயம் என்று சொல்ல மக்கள் அனுமதிக்கக்கூடாது.

16 responses to “கொஞ்சம் கொஞ்சமாய்…

  1. மர்மம் விலகி, இழுபறி நிலை நீங்கி, திமுக அணிக்கே வெற்றி வாய்ப்பு என்ற சேதி வந்ததிலிருந்தே தமிழ்மணத்தில் சுரத்தே இல்லாமல் போயிடுச்சிப்பா. கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டலாமா. என்ன பண்ணலாம்.

    ரத்ததின் ரத்தங்கள் யாராவது இதெல்லாம் சும்மா, ஜெயிப்பாங்க அம்மான்னு சொல்லியிருந்தாலாவது, உடன்பிறப்புக்களும், நடுநிலைவாதிகளும் (ஜெயிக்கற கட்சிக்கு தாவி, நான் அப்பவே சொன்னேனேன்னு சொல்றவங்க!!) தர்ம அடி போட்டுருப்பாங்க. கொஞ்சம் வேடிக்கை பார்த்திருக்கலாம். ஆனா, எல்லாம் பம்மராங்க. (அந்த மட்டும் நம்ம விஜியோட ஆளு மட்டும் ஸ்டெடியா நிக்கறாரு.).

    ஐடியா, உடன்பிறப்ப வெச்சே, தளராதே தங்கமே, வருமே ஜெ-க்கு ஜேயமேன்னு சொல்ல வச்சா?

    யாரங்கே, கூப்பிடு அந்த தெரிஞ்ச உடன்பிறப்பு முத்துவ, போடச் சொல்லு ஒரு பதிவ…..

  2. Unknown's avatar வரவனையான்

    நல்ல பதிவுதான் ! ஆனால் தயாநிதி மாறனுக்கு இடதுசாரிகளின் ஆதரவு “டாட்டா” விடயத்தில் மிகப்பலமாய் இருப்பது வைகோ,குருமூர்த்தி வகையறாவின் கூற்றை நம்பவிடாமல் செய்துவிட்டது.

    இதையும் படியுங்கள்-http://kuttapusky.blogspot.com/2006/05/blog-post.html

  3. உங்களைப்போல நானும் கருத்துக்கணிப்புகளை நம்புபவன் அல்ல. கிராமப்புற அதிமுக செல்வாக்கையும் மக்களின் மனநிலையையும் ஓரளவு அறிந்தவன் .எனவே முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்கு எதிராக அமைந்தால் ,என் தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் இருக்குமே தவிர ,அதிர்ச்சி இருக்காது .பல முறை அதிர்ச்சி இப்போது பழகி விட்டது.

    இப்போது முடிவு கொடுத்தாகி விட்டது .இதில் யார் ஜெயித்தாலும் ,அது நாம் விரும்பாதவராக இருந்தாலும் ,அவர்களை நமது முதல்வராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமே தவிர ,ஓட்டு போடாதவருக்கு அவர் முதல்வர் இல்லை என்றாகி விடாது.

    ஆகவே ரத்தத்தின் ரத்தங்களாக இருந்தாலும் ,உடன்பிறப்புகளாக இருந்தாலும் இனி மாநிலம் நலம் பெற பொதுவாக சிந்திப்போம்.

    அமைதியான முறையிலும் ,ஆர்வத்துடனும் தேர்தலில் பங்குகொண்ட தமிழக வாக்காள பெருமக்கள் வாழ்க! வளர்க அவர் தம் ஜனநாயகப் பண்பு!

  4. Unknown's avatar சின்ன பிள்ளை

    திமுகவின் இந்த எலக்சன் ஸ்டார் பேச்சாளர் கலைஞரும் தயானிதியும்தான்.
    ஸ்டாலின் கூட 3ம் இடத்திற்கு தள்ளப் பட்டு விட்டார். இதற்கு தயாநிதிக்கு கூடிய
    கூட்டமே சாட்சி.இந்த கூட்டங்களை பார்த்து
    அரண்டு போன கோமாளிகள் கிழப்பி விட்ட உதவா கதைதான் டாட்டா விவகாரம்.

  5. Unknown's avatar அருண்மொழி

    தல,

    முத்ளக் பத்திரிக்கை ஆரம்பிக்க போகிறீர்களா? ஒன்னுமே பிரியல.

    அருண்மொழி
    மாணவர் அணி செயலாளர்
    தி,ரா,மு.மு.

  6. Unknown's avatar வினையூக்கி

    நீங்கள், வைகோவை காமெடியன் என்பதை கடுமையாக ஆட்சேபிக்கின்றேன். அவர் ஒரு நல்ல குணச்சித்திர நடிகர்.

  7. வைகோவை காமடியன் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். துணை நடிகர் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.

  8. Unknown's avatar முத்து(தமிழினி)

    பானுராசு மற்றும் வினையூக்கி,
    நாளைக்கே வைகோவின் குத்துப்பாட்டு திமுகவிற்கு தேவைப்படலாம்.

    நல்லபடம் அழகியில், குருவி குடைந்த கொய்யாப்பழம் பாட்டு வரல்லையா?

    கலைஞருக்கு இரக்கஉணர்வு ஜாஸ்தி…வைகோ அழுது அரற்றி திரும்ப சேரலாம..(இதை உங்களால் மறுக்க முடியுமா)

    அருண்மொழி,
    கண்மூடித்தனமாக யாரையும் ஆதரித்தால் அசிங்கம்தான்.நீங்கள் கண்மூடித்தனமாக ஆதரிக்கவேண்டிய ஒரே இயக்கம் தி.ரா.மு.மு
    திமுக அல்ல…(தெளிவாக இருங்கள்)

    சின்னபிள்ளை,
    ஸ்டார் பேச்சாளர் சரி…ஆனால் தயாநிதி இன்னொசன்ட் என்று என்னால் நம்ப முடியவில்லை…..(இதைப்பற்றி பிறகு பேசலாம்)

    ஜோ,

    முழுமையாக ஒத்துப்போகிறென்…

    கிருஷ்ணா,

    தல…

    //வந்ததிலிருந்தே தமிழ்மணத்தில் சுரத்தே இல்லாமல் போயிடுச்சிப்பா. //

    yes

    //ஆனா, எல்லாம் பம்மராங்க. (அந்த மட்டும் நம்ம விஜியோட ஆளு மட்டும் ஸ்டெடியா நிக்கறாரு.). //

    ஹிஹிஹிஹி…

    கிருஷ்ணா,
    ரெண்டு பதிவு ரெடி. யார் ஜெயிக்கிறாங்களோ அதை பொறுத்து அடிச்சி விட்டிருவேன்….

  9. Unknown's avatar நாமக்கல் சிபி

    //இதற்கு தயாநிதிக்கு கூடிய
    கூட்டமே சாட்சி.இந்த கூட்டங்களை பார்த்து
    அரண்டு போன கோமாளிகள் கிழப்பி விட்ட உதவா கதைதான் டாட்டா விவகாரம்.//

    ஸ்டாலின் ஆதரவாளர்களை கோமாளிகள் என்று வர்ணித்த சின்ன பிள்ளையைக் கண்டிக்கிறேன்.

  10. Unknown's avatar முத்து(தமிழினி)

    சிபி,

    தவறான பார்வை என்று தோன்றுகிறது.

    ஸ்டாலினுக்கும் தயாநிதிக்கும் பிரச்சினை வர வாய்ப்பு இல்லை.இது மற்றவர்களின் ஆசை.

    மாநில அதிகாரம் ஸ்டாலினுக்கு. சன் டிவி,மத்திய அரசாங்க விஷயங்கள் தயாநிதிக்கு…

    (இதிலெல்லாம் திமுக ரொம்ப உஷாருங்க)

  11. Unknown's avatar நாமக்கல் சிபி

    மன்னிக்கவும் முத்து!

    முந்தைய பின்னூட்டத்தின் இறுதியில் ஒரு ஸ்மைலி போட மறந்து விட்டேன்.

    :-))

    இருப்பினும் உங்கள் விளக்கம் நிறைய பேருக்கு தேவைப்படலாம். இப்போதைக்கு சில கட்சிக் காரர்களுக்கே கூட!

  12. ஸ்டாலின்/தயாநிதி விஷயத்தில் நீங்கள் நூற்றுக்கு நூறு.

    ஒரு விஷயம் கவனித்தீர்களா, தயாநிதியை தாக்கித் தாக்கி, அவர் வளர்ச்சியைச் சுட்டிச் சுட்டி, ஸ்டாலினாவது 30 வருடம் அரசியலில் இருந்தார், இவர் தடாலென வந்து, இப்போது ஸ்டாலினுக்கே போட்டியாக முதல்வர் பதவியைக் குறி வைக்கிறார், என சொல்லிச் சொல்லி, ஒரு நல்ல காரியத்தை இவர்கள் ஸ்டாலினுக்குச் செய்துள்ளார்கள். நாளை ஸ்டாலினை ( 2 வருடங்களுக்குள் எப்படியும்) முதல்வராக்கும் போது, அது ஒரு பெரிய விஷயம் அல்ல, தயாநிதி வரவில்லையல்லவா என மக்கள் நினைப்பதற்கு வழி செய்துவிட்டார்கள்.

  13. Unknown's avatar நாமக்கல் சிபி

    அதாவது இரு கோடுகள் கான்ஸெப்ட். அப்படித்தானே கிருஷ்ணா?

  14. Unknown's avatar முத்துகுமரன்

    //அதாவது இரு கோடுகள் கான்ஸெப்ட். அப்படித்தானே கிருஷ்ணா?//
    அதே! அதே!!… இப்பவாவது ஒத்துக்குங்கய்யா கலைஞர் சாணக்கியர்தான்னு:-))))))

  15. அடச்சே! கஷ்டப்பட்டு இதச் சொல்லாம வச்சிருந்தா – இப்பிடி தி.ரா.மு.மு ஆட்களே விசயத்த உடச்சி சொல்லிப்புட்டீங்களேப்பா! இந்தக் கிருஷ்னாவுக்கு ‘விளக்கம் கேட்டு’ நோட்டீஸ் உடணும் தலைவா!

Bharaniru_balraj -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.