தைரியமான தேர்தல் அறிக்கை – தினமணி
பெரும்பாலான மக்கள் எதை விரும்புகிறார்களோ அதற்கு மாற்று கருத்து கூறும் தைரியம் எந்த அரசியல் கட்சிக்கும் இல்லை. ஆனால் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கட்சித் தேர்தல் அறிக்கையில் தைரியமாக சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
ரேஷன் கடைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லி உள்ளார். அதற்கு மாற்றாக அவர் முன்வைத்துள்ள திட்டம் சிறப்பான திட்டம்தான் என்றாலும் அது நடைமுறையில் எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் ஹிந்தி கற்பிக்கப்படும். மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்ற நெஞ்சை நிமிர்த்தி கூறியுள்ளார்.
கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்தான் நாடாளுமன்ற தோல்விக்கு காரணம் என்று கருதி முதல்வர் ஜெயலலிதா அதை கைவிட்டதோடு பாஜக ஜனதாகூட அதற்கு பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை. ஆனால் கட்டாய மதமாற்ற தடை சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்கிறார் சுப்பிரமணிய சுவாமி.
ஓட்டுக்காக ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு சிறுபான்மையினரை தாஜா செய்ய முயற்சியில் ஈடுபட்டிருக்க இவரோ சிறுபான்மையினர் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு தேவையற்ற அளவுக்கு சலுகைகள் கொடுக்கப்படுவதாக குறை கூறியுள்ளார்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஜயேந்திரர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு. அந்த வழக்கை ஜோடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். ஜயேந்திரர் கைது விவகாரம் குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒரே கட்சி ஜனதா கட்சி மட்டுமே.
அவர் கூட்டணி சேர்ந்துள்ள பாரதீய ஜனதா கட்சி கூட தேர்தல் அறிக்கையில் ஜயேந்திரர் கைது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்று அடித்துச் சொல்லியுள்ளார்.
தமிழகத்தில் எல்லா கட்சிகளிலும் இருந்து வித்தியாசமான கருத்துகளை முன்வைத்துள்ளார் சுப்பிரமணியசுவாமி.











அப்டி போடு அருவாளை!
இதுதாண்டா தேர்தல் அறிக்கை!
வாழி நீ எம்மான், சுப்ரமணிய ஸ்வாமி!
:))))) his party wont get deposit anywhere!!.who want his election manifesto!!
சுப்ரமணிய ஸ்வாமியைத் தெரியாதா?
அவர் தேர்தல் வாக்குறுதியல் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்.சூடான் நாட்டிலே டார்ஃபூர் பகுதியிலுள்ள பன்னாட்டுப் படையினர் விலகவேண்டும் என்று சொல்லலாம்.
ஈரான் மீது அமெரிக்கா உடனேயே போர் தொடுக்க வேண்டும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்………
வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்.
இவர் அறிக்கயை தைரியமானது என கூறுவது தவறு.கோமாளித்தனமானது என்பதுதான் சரி
Unfortunately he is the one who could get things done also. Whatever said and done, he also needs to change his position based on different scenarios. He has real guts… Indira Gandhi could not arrest him during emergency, though he came and signed in the parliament session.
Rest of the parties are suckers, and who support them will be suckers too.
Looks like the Madurai Joker wont learn from his past humiliations – pathetic 40000 votes and relegation to #4 in the 1999 elections – Dunno what’s he’s been doing in politics for the last 30 years.
Its high time somebody gives him a copy of What They Don’t Teach you in Harvard Business School 🙂
Being dumped by the Congress after Rajiv’s assassination seems to have got his goat – he expected a position in 1991 but AIADMK snubbed him and since then he has completely lost his marbles in the political arena running after different parties to get a piece of bone.