Monthly Archives: மார்ச் 2006

India Trip – Varanasi

காசி, சாரநாத், அலஹாபாத் என்று புனிதப் பயணம் சென்று வந்ததில் இருந்து சில புகைப்படங்கள். புகைப்படத்தை க்ளிக்கினால், இன்னும் பெரிய படம் தெரியும்.

1. வாரநாசியில் மூன்று மசூதிகள் இருப்பதாக ஓடக்காரர் + நகர விவரிப்பாளர் (Guide) சொன்னார்.

ஒன்று பா.ஜ.க. மெல்லுவதற்கு வசதியாக, காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் நிறைவான போலீஸ்காரர்களுடனும், குறைவான பாதுகாப்புடனும், அடுத்த இனக்கலவரத்தை எப்போது வேண்டுமானாலும் கொடுக்க சர்வ வல்லமையுடனும் விளங்குகிறது.

இந்த ஷாட்டில் வேறொரு மிகப் பெரிய மசூதி.

2. ‘லைவ் ரிலே‘வாக ‘டெட் சலோ‘ என்று இறந்தவர்களின் உடலை (சில சமயம்) அப்படியே கங்கையில் அனுப்புகிறார்கள். மற்றவர்கள் ஹரிச்சந்திரா காட், மணிகர்ணிகா காட் என்னும் கங்கைக் கரையிலேயே எரியூட்டப்பட்டு, கரைக்கப்படுகிறார்கள்.

இறுதிச்சடங்கு நடக்கும் ‘கட்டங்களும்’ கறைகளைப் போக்கவல்ல & அவசியம் குளிக்கவேண்டிய புனிதக் கரைகள்.

3. பீட்ஸா புகழ் ‘பைஸா நகரத்து சாய்ந்த கோபுரம்’ போல் மக்களின் பாவங்களைப் போக்கி போக்கி, சாய்ந்து போன கங்கைக் கரை கோவில் கோபுரம்.

4. ‘பாரதி‘யும் சாகேத் ‘ஹே ராமு‘ம் இன்ன பிறரும் ஸ்நானம் செய்த தளம்.

பாசி பிடித்த படிக்கட்டுகள். நிம்மதி தேடும் வெள்ளைக்காரர்கள். ஆள் பிடிக்கும் படகுக்காரர்கள். கம்பி தோறும் பிச்சைக்காரர்கள். காலைக்கடன் கழிக்கும் உள்ளூர்வாசிகள். சூரியக்குளியல் மிதக்கும் எருமைகள். துணி அழுக்கைத் துவைக்கும் தோட்டிகள். அசுத்த நீருக்கும் தீர்த்தக்கரை பாவியாவதற்கும் பயந்து ப்ரோஷணம் மட்டுமே செய்துகொள்பவர்கள். பான் பராக் கொப்பளிக்கும் ஓடக்காரன். அஸ்தி கரைக்கும் துக்கம் கொண்டவர்கள். கௌபீனத்துடன் படிக்கட்டில் காட்சிகளை ரசிப்பவர்கள்.

தஷாஷ்வமேத் காட் – ஆயிரம் குதிரைகளைக் கொன்(டு)று அசுவமேத யாகம் செய்த கங்கைக் கரை.

5. தினசரி மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை கங்கைக் கரையில் பஜனையும் கங்கா ஆரத்தியும் நடந்தேறுகிறது. நயாகரா அருவியில் இரவு விளக்குகள் பல்வண்ணத்தில் நீர்வீழ்ச்சியை ரம்மியமாக்கும். அதே போல், இரவு நேர நதிக்கரை ஆராதனைகள் (பார்வையாள பக்திமான்களும்தான்) கங்கை ஹாரத்தியை ரசிக்க சொல்கிறார்கள்.

சென்னை பீச் சுண்டல் போல் சூடான டீ கிடைக்கிறது. கங்கையில் விளக்கு அனுப்ப சொல்கிறார்கள். இரவு நீச்சல் நிம்மதியானது என்றால்; கங்கை தீரத்தின் வெளிச்சத்தை, காலையில் குற்றங்களைப் போக்கிக் கொண்ட நதியின் கும்மிருட்டு நடுவில் இருந்து பார்க்கலாம்.

(பயணமும் படமும் தொடரும்)


| |

திமுக சந்திக்கும் கடைசி தேர்தல்: ஜெ

அதிமுகவின் பரம்பரை எதிரியான திமுக சந்திக்கும் கடைசித் தேர்தல் இது. வரும் காலங்களில் தேர்தல் களத்தில் திமுகவை சந்திக்க வேண்டிய நிலை அதிமுகவுக்கு ஏற்படாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜெயலலிதா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கோரி 11,420 விண்ணப்பங்கள் வந்தன. இத்தனை விண்ணப்பங்கள் வந்தும் கூட என்னையும் சேர்த்து 182 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடிந்தது.

அதிமுக வரலாற்றிலேயே அதிக தொகுதிகளில் முதல் முறையாக தற்போது போட்டியிடுகிறோம். இருப்பினும் 182 பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடிந்தது.

இதனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் தகுதி அற்றவர்கள் எனக் கூறி விட முடியாது. மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கும் நிச்சயம் வாய்ப்பு அளிக்கப்படும்.

ஒவ்வொரு தொகுதியிலும் தகுதி படைத்த பலர் இருந்தாலும் கூட ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடியும். எனவே மற்றவர்கள் மனம் வருந்தக் கூடாது, மனம் தளரக் கூடாது.

வருகிற தேர்தலில் போட்டி அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான். அதிமுகவின் பரம்பரை எதிரி திமுக மட்டுமே. அரசியல் ரீதியாக நாங்கள் எதிரியாகப் பார்ப்பது திமுகவை மட்டுமே.

எனவே பரம்பரை எதிரியான திமுகவை, அதிமுக கடைசியாக சந்திக்கும் தேர்தல் இதுதான். வருகிற தேர்தல்களில் பரம்பரை எதிரியை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது.

வரும் தேர்தலில் ஜனநாயக மக்கள் கூட்டணி அமோக வெற்றி பெறும். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் ஆதரவுடன், 234 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

அதிமுக தேர்தல் அறிக்கை: ஜெயலலிதா வெளியிட்டார்
5லட்சம் பேருக்கு வேலை

அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க பாடுபடுவோம் என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. சென்னை பெருநகரில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி செலவில் மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அக்கட்சி உறுதியளித்துள்ளது.

தமிழகத்தில் தொழில்வளத்தை மேம் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகம், புதுவை, கேரளா ஆகிய மூன்று மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

தமிழகத்திற்கான தேர்தல் அறிக்கை 114 பக்கங்களை கொண்டுள்ளது. 38 அம்சங்களை கொண்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் அதிமுக அரசு செய்துள்ள சாதனைகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.
தமிழகத்துக்கான தேர்தல் அறிக்கை யின் முக்கிய அம்சங்கள் வருமாறு: பள்ளிகளில் வசூலிக்கப்படும் சிறப்பு கல்விக் கட்டணம் ரத்து செய்யப் பட்டு, அந்த தொகையை பள்ளிக் கூடங்களுக்கு அரசே மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து பள்ளிகளிலும் கணினி பயிற்சிக் கூடம் அமைக்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சுய தொழில் பயிற்சி அளிக்கப்படும். கிராமப்புற மாணவர்களின் நலன் காக்க கொண்டு வரப்பட்ட நுழைவுத் தேர்வினை ரத்து செய்து இயற்றப் பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஐ.ஐ.டி.க்கு இணையாக உலகத்தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படும். கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். விளையாட்டுகளில் திறமையாக உள்ளவர்களை ஊக்குவிக்க மாவட்ட தலைநகரங்களில் அனைத்து வசதி களுடன் விளையாட்டு அகாடெமி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழை உயர்தனி செம்மொழியாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தப் படும். மத்திய அரசு மாநிலங்களுடன் தொடர்பு கொள்ள அந்தந்த மாநில மொழியையே பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழ் உள்ளிட்ட 19 தேசிய மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக அங்கீரிக்க வலியுறுத்தப்படும்.

இந்தி பேசாத மாநிலங்கள் இந்தி பேசும் மாநிலங்களோடு தொடர்பு கொள்ள ஆங்கிலமே தொடர்பு மொழி என்ற கொள்கை உறுதிப்பட வேண்டும். மாநில அரசு அலுவலகங்கள், கீழ் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் தமிழ் முழு அளவில் பயன்படுத்தப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும் உணவு பதப்படும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். 150 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்கப்படும். சென்னை பெருநகர எல்லையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மாபெரும் திட்டம் செயல் படுத்தப்படும். இரண்டு புதிய பல் மருத்துவக் கல்லூரிகளும், 21 புதிய செவிலியர் கல்லூரிகளும் துவக்கப்படும்.

தமிழகத்தின் தொழில் வளத்தை மேல்மேலும் பெருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும். பெண்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு, அதிகார பிரதிநிதித்துவ அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக பெற்றுத் தர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு பிற்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையின் படி சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கச்சத்தீவை நிரந்தர குத்தகை அடிப்படையில் மத்திய அரசு பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். தமிழ்மொழிக்காக வாழ்ந்த, வாழ்கின்ற அறிஞர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்களின் படைப்புகள் போற்றி பாதுகாக்கப்படும்.

அயல்நாட்டு இந்திய வம்சாவளி தமிழர்களின் தொழில்முனைவோர் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப் படும். மத்திய அரசின் அரிசி கொள்முதல் விலையேற்றத்தையும், அரிசி அளவு குறைப்பையும் கடுமையாக எதிர்ப்பதுடன், தொடர்ந்து பொது விநியோக முறையில் அதே குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சார்பில் அதிக அளவில் நியாய விலைக் கடைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிறு வணிகர்களின் நலன் காக்க அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்.

ஆட்சியில் தூய்மை; நிர்வாகத்தில் திறமையான, நேர்மையான அணுகுமுறை; நீதி, நிர்வாகத்தில் நடு நிலைமையும், புனித தன்மையும் மிக்க செயல்பாடுகள்; வளமும் வற்றாத நலமும் மிக்க வாழ்க்கைத் தரம்; அமைதியும், பாதுகாப்பும் மிக்க பொது வாழ்க்கை ஆகியவை அதிமுகவின் கோட்பாடுகள். இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Courtesy: Maalaisudar
Thatstamil

அதிமுக வேட்பாளர் பட்டியல்

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
போட்டியிடும் 182 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆண்டிப்பட்டியிலேயே போட்டியிடுகிறார். நீண்ட காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மாஜி மந்திரி செங்கோட்டையனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் கோபிச்செட்டிப் பாளையத்தில் போட்டியிடுகிறார்.

அதே போல பாஜகவில் இருந்து தாவி வந்து சீட் எதிர்பார்த்துக் காத்திருந்த நாடக காமெடி நடிகர் எஸ்.வி.சேகருக்கும் சீட் தரப்பட்டுள்ளது. அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னையில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த ஜெயலலிதாவின் பள்ளித் தோழியும் வக்பு வாரியத் தலைவியுமான பதர் சயீதுக்கு திருவல்லிக்கேணி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அமைச்சர்களில் ஜெயக்குமார், வளர்மதி, உடலை 180 டிகிரி வரை ‘வளைந்து’ கும்பிடு போடுவதில் வல்லவரான பாண்டுரங்கன், விஜயலட்சுமி பழனிச்சாமி, ஜெயராமன், சண்முகம் உள்ளிட்டோருக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது.

சசிகலாநடராஜன் கோஷ்டிக்கு நெருக்கமான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு கலசப்பாக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

ஆண்டிப்பட்டி ஜெ. ஜெயலலிதா

ராயபுரம் ஜெயக்குமார்

ராதாகிருஷ்ணன் நகர் சேகர் பாபு

பூங்கா நகர் சீனிவாசன்

புரசைவாக்கம் வெங்கடேஷ் பாபு

தியாகராய நகர் கலைராஜன்

ஆயிரம் விளக்கு ஆதிராஜாராம்

திருவல்லிக்கேணி பதர் சையீத்

மயிலாப்பூர் எஸ்.வி.சேகர்

சைதாப்பேட்டை செந்தமிழன்

கும்மிடிப்பூண்டி விஜயக்குமார்

பொன்னேரி (தனி) பலராமன்

திருவொற்றியூர் மூர்த்தி

ஆலந்தூர் பா.வளர்மதி

திருப்போரூர் (தனி) மா.தனபால்

செங்கல்பட்டு ஆறுமுகம்

மதுராந்தகம் அப்பாதுரை

அச்சரப்பாக்கம் (தனி) சரஸ்வதி முத்துக்கிருஷ்ணன்

உத்திரமேரூர் சோமசுந்தரம்

காஞ்சிபுரம் மைதிலி திருநாவுக்கரசு

திருவள்ளூர் ரமணா

திருத்தணி ஹரி

பள்ளிப்பட்டு நரசிம்மன்

அரக்கோணம் (தனி) சு.ரவி

சோளிங்கர் கோபால்

ராணிப்பேட்டை பெல் தமிழரசன்

ஆற்காடு சந்திரன்

காட்பாடி நாராயணன்

குடியாத்தம் பழனி

பேரணாம்பட்டு (தனி) சந்திரா சேட்டு

நாட்ராம்பள்ளி சுப்பிரமணி

தண்டாரம்பட்டு ராமச்சந்திரன்

திருவண்ணாமலை பவன்குமார்

கலசப்பாக்கம் அக்ரி கிருஷ்ணமூர்த்தி

போளூர் வேடியப்பன்

அணைக்கட்டு பாண்டுரங்கன்

ஆரணி சந்தானம்

செய்யாறு பாவை ரவிச்சந்திரன்

வந்தவாசி (தனி) சக்ரபாணி

பெரணமல்லூர் அன்பழகன்

(மேலும் வரும்)

மேல்மலையனூர் தமிழ்மொழி

திண்டிவனம் சி.வி.சண்முகம்

வானூர் (தனி) கணபதி

கண்டமங்கலம (தனி) சுப்பிரமணியன்

விழுப்புரம் பசுபதி

திருநாவலூர் குமரகுரு

கடலூர் குமார்

பண்ருட்டி ராஜேந்திரன்

புவனகிரி செல்வி ராமஜெயம்

சிதம்பரம் அருண்மொழித் தேவன்

விருத்தாச்சலம் காசிநாதன்

ரிஷிவந்தியம் ஆதிநாராயணன்

சின்னசேலம் ப.மோகன்

சங்கராபுரம் பெ.சன்னியாசி

ஓசூர் சம்பங்கி ராமையா

பெண்ணாகரம் எஸ்.ஆர்.வெற்றிவேல்

காவேரிப்பட்டனம் கே.பி.முனுசாமி

கிருஷ்ணகிரி வி.கோவிந்தராஜ்

பர்கூர் எம்.தம்பிதுரை

மொரப்பூர் கே.சிங்காரம்

பாலக்கோடு கே.பி.அன்பழகன்

மேட்டூர் கே.கந்தசாமி

ஓமலூர் சி.கிருஷ்ணன்

ஏற்காடு (தனி) ஜெ.அலமேலு

சேலம் 1 எல்.ரவிச்சந்திரன்

சேலம் 2 ஆர்.சுரேஷ்குமார்.

வீரபாண்டி விஜயலட்சுமி பழனிச்சாமி

பனைமரத்துப்பட்டி ஆர்.இளங்கோவன்

ஆத்தூர் மஞ்சினி ஏ.கே.¬முருகேசன்.

தலைவாசல் (தனி) ப.இளங்கோவன்

ராசிபுரம் பி.ஆர்.சுந்தரம்

சேந்தமங்கலம் (தனி) பூ.சந்திரன்

நாமக்கல் (தனி) ஆர்.சாரதா.

திருச்செங்கோடு பி.தங்கமணி

சங்ககிரி (தனி) எஸ்.சாந்தாமணி

எடப்பாடி கே.பழனிச்சாமி

மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ்

அவினாசி (தனி) ஆர்.பிரேமா

கோவை மேற்கு தா.மலரவன்

கோவை கிழக்கு வி.கோபாலகிருஷ்ணன்.

பேரூர் கே.பி.ராஜு

கிணத்துக்கடவு செ.தாமோதரன்

பொள்ளாச்சி பொள்ளாச்சி ஜெயராமன்

உடுமலைப்பேட்டை சண்முகவேல்

தாராபுரம் (தனி) சிவகாமி வின்சென்ட்

பொங்கலூர் பி.வி.தாமோதரன்

பல்லடம் செ.ம. வேலுச்சாமி

காங்கேயம் என்.எம்.எஸ்.பழனிச்சாமி

மொடக்குறிச்சி பி.சி.ராமசாமி

பெருந்துறை சி.பொன்னுத்துரை

ஈரோடு இ.ஆர்.சிவக்குமார்

பவானி கே.சி.கருப்பண்ணன்

அந்தியூர் (தனி) செல்வி துரைசாமி

கோபிச்செட்டிப்பாளையம் கே.ஏ.செங்கோட்டையன்

பவானி சாகர் சிந்து ரவிச்சந்திரன்

குன்னூர் (தனி) எம்.செல்வராஜ்

உதகமண்டலம் கே.என்.தொரை

கூடலூர் ஏ.மில்லர்

பழனி (தனி) ஆர்.தமிழரசி

ஒட்டன்சத்திரம் கே.பி.நல்லசாமி

பெரியகுளம் ஓ.பன்னீர் செல்வம்

தேனி ஆர்.டி.கணேசன்

போடி நாயக்கனூர் எம்.பரமசிவம்

சேடப்பட்டி சி.துரைராஜ்

உசிலம்பட்டி ஐ.மகேந்திரன்

நிலக்கோட்டை (தனி) தேன்மொழி

திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ்

மதுரை மேற்கு எஸ்.வி.சண்முகம்

மதுரை மத்தி கா.காளிமுத்து

சமயநல்லூர் (தனி) பி.லட்சுமி

மேலூர் ஆர்.சாமி

நத்தம் விஸ்வநாதன்

ஆத்தூர் திண்டுக்கல் சி.சீனிவாசன்

வேடசந்தூர் ச.பழனிச்சாமி

கரூர் வி.செந்தில் பாலாஜி

கிருஷ்ணராயபுரம் (தனி) சசிகலா ரவி

மருங்காபுரி செ.சின்னச்சாமி

குளித்தலை பாப்பா சுந்தரம்

உப்பிலியாபுரம் (தனி) பெ.முத்துச்சாமி

முசிறி டி.பி.பூனாட்சி

லால்குடி டி.ராஜாராம்

பெரம்பலூர் (தனி) டாக்டர் சுந்தரம்

வரகூர் (தனி) மா.சந்திரகாசி

அரியலூர் ம.ரவிச்சந்திரன்

ஆண்டிமடம் என்.கே.பன்னீர்செல்வம்

ஜெயங்கொண்டம் கே.ராஜேந்திரன்

ஸ்ரீரங்கம் பரஞ்சோதி

திருச்சி 2 என்.மரியம் பிச்சை

பூம்புகார் எஸ்.பவுன்ராஜ்

குத்தாலம் எஸ்.ராஜேந்திரன்

நன்னிலம் (தனி) க.அறிவானந்தம்

திருவாரூர் (தனி) தங்கமணி

நாகப்பட்டனம் கே.ஏ.ஜெயபால்

வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன்

திருத்துறைப்பூண்டி (தனி) ஏ.உமாதேவி

மன்னார்குடி ஆர்.காமராஜ்

பேராவூரணி வீரகபிலன்

ஓரத்தநாடு வைத்தியலிங்கம்

திருவோணம் தங்கமுத்து

தஞ்சாவூர் ரெங்கசாமி

திருவையாறு துரை கோவிந்தராஜன்

பாபநாசம் துரைக்கண்ணு

வலங்கைமான் (தனி) இளமதி சுப்பிரமணியன்

கும்பகோணம் ராம. ராமநாதன்

திருவிடைமருதூர் பாரதி மோகன்

திருமயம் ராதாகிருஷ்ணன்

கொளத்தூர் (தனி) ந.சுப்பிரமணியன்

புதுக்கோட்டை நெடுஞ்செழியன்

ஆலங்குடி வெங்கடாச்சலம்

அறந்தாங்கி பி.எம்.பெரியசாமி

திருப்பத்தூர் உமாதேவன்

காரைக்குடி செல்லையா

திருவாடானை ஆணிமுத்து

இளையாங்குடி அய்யாச்சாமி

மானாமதுரை (தனி) குணசேகரன்

பரமக்குடி (தனி) டாக்டர் சுந்தரராஜ்

கடலாடி சத்தியமூர்த்தி

முதுகுளத்தூர் காளிமுத்து

அருப்புக்கோட்டை முருகன்

சாத்தூர் சொக்கேஸ்வரன்

ஸ்ரீவில்லிபுத்தூர் விநாயகமூர்த்தி

ராஜபாளையம் (தனி) சந்திரா

விளாத்திகுளம் சின்னப்பன்

ஒட்டப்பிடாரம் (தனி) பெ.மோகன்

கோவில்பட்டி எல்.ராதாகிருஷ்ணன்

சங்கரன்கோவில் (தனி) சொ.கருப்பசாமி

கடையநல்லூர் அயூப்

ஆலங்குளம் வி.பி.ஈஸ்வரன்

திருநெல்வேலி நயினார் நாகேந்திரன்

சேரன்மாதேவி மனோஜ் பாண்டியன்

அம்பாச¬த்திரம் முருகையா பாண்டியன்

நாங்குனேரி சூரியகுமார்

ராதாபுரம் ஞான புனித.

திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன்

ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி.சண்முகநாதன்

தூத்துக்குடி டேனியல் ராஜ்

கன்னியாகுமரி தளவாய் சுந்தரம்

குளச்சல் கே.டி.பச்சைமால்

பத்மநாபபுரம் கே.பி.ராஜேந்திர பிரசாத்

திருவட்டார் பி.சி.என்.திலக் குமார்

விளவங்கோடு எப். பிராங்க்ளின்

கிள்ளியூர் டாக்டர் குமாரதாஸ்

Courtesy: Thatstamil

சத்தியமூர்த்தி பவன் அடிதடி

இட்லிவடை பதிவு, ஜெயா டிவி விடியோ பிட்

கடந்த சில தினங்களாக காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியை மிக மோசமாக வெளிக்காட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த 48 இடங்கள் மிக அதிகம் என்று தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைவருமே எண்ணும்போது காங்கிரஸ் கு(தொ)ண்டர்களுக்குமட்டும் வேறு எண்ணங்கள். காங்கிரஸ் வெற்றுப் பெருங்காய டப்பா என்பது அவர்களுக்கு ஏனோ புரியவில்லை.

வீரப்ப மொய்லி உருவ பொம்மை எரிப்பில் தொடங்கி, மாநிலமெங்கும் ஆங்காங்கே எதிர்ப்புகள் என்றாகி கடைசியில் கூட்டமாக சத்தியமூர்த்தி பவனில் அடித்துக்கொண்டுள்ளனர் காங்கிரஸ்வாதிகள்.

எகப்பட்ட உள்கோஷ்டி. காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் தொண்டர்களால் கூட்டணிக் கட்சிக்கு ஏதாவது ஆதாயம் உண்டா என்று கூட்டணிக் கட்சிகள் யோசித்துப் பார்க்கவேண்டும். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக உழைக்கும். அங்கும்கூட காங்கிரசின் உள்கோஷ்டிப் பூசலால் வாக்குகள் சிதறும். காங்கிரஸ் போட்டியிடாத பிற தொகுதிகளிலோ கேட்கவே வேண்டாம்.

திமுக தலைவர் கருணாநிதி சொன்னதுபோல கூட்டணியும் வேண்டும்; அதே சமயம் விட்டுக்கொடுக்காமல் வேண்டுய தொகுதிகளும் வேண்டும் என்றால் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதுபோலத்தான் உள்ளது!

பிற கட்சிகளில் ஓரளவுக்குக் கோபம் இருந்தாலும் காங்கிரஸ் அளவுக்கு வெளியே தெரியவில்லை.

தேர்தல் செய்திகள்

* தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும்.

* சுமார் 100 தொகுதிகளில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிடும்.

* சுமார் 50 தொகுதிகளில் பால் தாக்கரே(?)யின் சிவசேனா போட்டியிடும்.

* இதுவரையில் அதிகாரபூர்வமாக எந்தப் பெரிய கட்சியின் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படவில்லை. Unofficial மதிமுகவின் பட்டியல் ஒன்று இட்லிவடை பதிவில் உள்ளது (மாலைச்சுடர் வழியாக).

தேர்தல் கருத்துக் கணிப்பு

வலைஞர் நாக.இளங்கோவன் தமிழகத் தேர்தலுக்கான முதல்கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளார்.

2006-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்கணிப்பு-1: DMK-191, ADMK-43

அ.தி.மு.க. 182 தொகுதிகளில் போட்டி

கூட்டணி பட்டியல் முழு விவரம்: அ.தி.மு.க. 182 தொகுதியில் போட்டி; ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், தேசிய லீக், பார்வர்டு பிளாக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் 234 தொகுதிகள் பட்டியலை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

அ.தி.மு.க. 182 தொகுதிகளிலும், ம.தி.மு.க.- 35 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள்-9 தொகுதிகளிலும், தேசிய லீக், ஐ.என்.டி.ï.சி. தலா 2 தொகுதிகளிலும், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சந்தானத்தின் பார்வர்டு பிளாக், முஸ்லிம் லீக் கட்சியினர் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க. போட்டியிடும் 182 தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. ராயபுரம் 2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 3. பூங்காநகர் 4. புரசைவாக்கம்5. தியாகராய நகர் 6. ஆயிரம்விளக்கு7. திருவல்லிக்கேணி 8. மயிலாப்பூர் 9. சைதாப்பேட்டை10. கும்மிடிப்பூண்டி 11. பொன்னேரி (தனி )12. திருவொற்றிïர் 13. ஆலந்தூர் 14. திருப்போரூர் (தனி) 15. செங்கல்பட்டு16. மதுராந்தகம் 17. அச்சரப்பாக்கம் (தனி) 18. உத்திரமேரூர் 19. காஞ்சிபுரம் 20. திருவள்ளூர் 21. திருத்தணி 22. பள்ளிப்பட்டு 23. அரக்கோணம் (தனி )24. சோளிங்கர் 25. ராணிப்பேட்டை

26. ஆற்காடு 27. காட்பாடி 28. குடியாத்தம் 29. பேரணாம்பட்டு (தனி) 30. நாட்ராம்பள்ளி 31. தண்டராம்பட்டு32. திருவண்ணாமலை33. கலசப்பாக்கம் 34. போளூர் 35. அணைக்கட்டு 36. ஆரணி 37. செய்யார் 38. வந்தவாசி (தனி) 39. பெரணமல்லூர் 40. மேல்மலையனூர் 41. திண்டிவனம் 42. வானூர் (தனி)43. கண்டமங்கலம் (தனி) 44. விழுப்புரம் 45. திருநாவலூர் 46. கடலூர் 47. பண்ருட்டி 48. புவனகிரி 49. சிதம்பரம் 50 விருத்தாசலம்

51. ரிஷிவந்தியம் 52. சின்னசேலம் 53. சங்கராபுரம் 54. ஓசூர் 55. தளி 56. காவேரிப்பட்டினம் 57. கிருஷ்ணகிரி 58. பர்கூர் 59. மொரப்பூர்60. பாலக்கோடு61. மேட்டூர்62. ஓமலூர்63. ஏற்காடு (தனி)64. சேலம்-165. சேலம்-266. வீரபாண்டி 67 பனமரத்துப்பட்டி 68. ஆத்தூர் 69. தலைவாசல் (தனி) 70. ராசிபுரம் 71. சேந்தமங்கலம் (தனி) 72. நாமக்கல் (தனி ) 73. திருச்செங்கோடு 74. சங்ககிரி (தனி) 75. எடப்பாடி

76. மேட்டுப்பாளையம் 77. அவினாசி (தனி) 78. கோயம்புத்தூர் மேற்கு 79. கோயம்புத்தூர் கிழக்கு 80. பேரூர் 81. கிணத்துக்கடவு 82. பொள்ளாச்சி 83. உடுமலைப்பேட்டை 84. தாராபுரம் (தனி) 85. பொங்கலூர் 86. பல்லடம் 87. காங்கேயம் 88. மொடக்குறிச்சி 89. பெருந்துறை 90. ஈரோடு 91. பவானி 92. அந்திïர் (தனி) 93. கோபிசெட்டிப் பாளையம் 94. பவானிசாகர் 95. குன்னூர் (தனி) 96. உதகமண்டலம் 97. கூடலூர் 98. பழனி (தனி) 99. ஒட்டன்சத்திரம் 100. பெரியகுளம்

101. தேனி 102. போடிநாயக்கனூர் 103. ஆண்டிப்பட்டி 104. சேடபட்டி 105. உசிலம்பட்டி 106. நிலக்கோட்டை (தனி) 107. சோழவந்தான் 108. திருப்பரங்குன்றம் 109. மதுரை மேற்கு110. சமயநல்லூர் (தனி)111. மேலூர்112. நத்தம்113. ஆத்தூர் 114. வேடசந்தூர் 115. கரூர் 116. கிருஷ்ணராயபுரம் (தனி) 117. மருங்காபுரி 118. குளித்தலை 119. உப்பிலியாபுரம் (எஸ்.டி.) 120. முசிறி 121. லால்குடி 122. பெரம்பலூர் (தனி) 123. வரகூர் (தனி) 124. அரியலூர் 125. ஆண்டிமடம்

126. ஜெயங்கொண்டம் 127. ஸ்ரீரங்கம் 128. திருச்சிராப்பள்ளி-2129. பூம்புகார் 130. குத்தாலம் 131. நன்னிலம் (தனி) 132. திருவாரூர் (தனி) 133. நாகப்பட்டினம் 134. வேதாரண்யம் 135. திருத்துறைப்பூண்டி (தனி) 136. மன்னார்குடி 137. பேராவூரணி 138. ஒரத்தநாடு 139. திருவோணம் 140. தஞ்சாவூர் 141. திருவையாறு 142. பாபநாசம் 143. வலங்கைமான் (தனி) 144. கும்பகோணம் 145. திருவிடைமருதூர் 146. திருமயம் 147. கொளத்தூர் (தனி) 148. புதுக்கோட்டை 149. ஆலங்குடி 150. அறந்தாங்கி

151. திருப்பத்தூர் 152. காரைக்குடி 153. திருவாடானை154. இளையான்குடி155. மானாமதுரை (தனி) 156. பரமக்குடி (தனி) 157. கடலாடி 158. முதுகுளத்தூர்159. அருப்புக்கோட்டை160. சாத்தூர்161. ஸ்ரீவில்லிபுத்தூர்162. ராஜபாளையம் (தனி) 163. விளாத்திகுளம்164. ஒட்டப்பிடாரம் (தனி)165. கோவில்பட்டி166. சங்கரநயினார் கோவில் (தனி) 167. கடையநல்லூர் 168. ஆலங்குளம் 169. திருநெல்வேலி 170. சேரன்மகாதேவி171. அம்பாசமுத்திரம்172. நாங்குநேரி 173. ராதாபுரம் 174. திருச்செந்தூர் 175. ஸ்ரீவைகுண்டம்

176. தூத்துக்குடி 177. கன்னியாகுமரி 178. குளச்சல் 179. பத்மநாபபுரம் 180. திருவட்டார் 181. விளவங்கோடு 182. கிள்ளிïர்.

ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்

அதன் விபரம் வருமாறு:-

1. துறைமுகம் 2. பெரம்பூர் (தனி) 3. எழும்பூர் (தனி) 4. அண்ணாநகர் 5. தாம்பரம் 6. பூந்தமல்லி 7. திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) 8. வேலூர் 9. செஞ்சி 10. நெல்லிக்குப்பம் 11. குறிஞ்சிப்பாடி 12. தருமபுரி 13. தாரமங்கலம் 14. கபிலர்மலை 15. தொண்டாமுத்தூர் 16. வெள்ளக்கோவில் 17. திருப்பூர் 18. சத்தியமங்கலம் 19. கம்பம் 20. திருமங்கலம்21. மதுரை கிழக்கு 22. திண்டுக்கல் 23. அரவக்குறிச்சி 24. தொட்டியம்

25. திருச்சிராப்பள்ளி-1 26. மயிலாடுதறை 27. பட்டுக்கோட்டை 28. சிவகங்கை 29. ராமநாதபுரம் 30. விருதுநகர் 31. சிவகாசி 32. வாசுதேவநல்லூர் (தனி) 33. தென்காசி 34. சாத்தான்குளம் 35. நாகர்கோவில்

விடுதலை சிறுத்தைகள்

1. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 2. செங்கம் (தனி) 3. முகைïர் (பொது) 4. உளுந்தூர்பேட்டை (தனி) 5. காட்டு மன்னார்கோயில் (தனி) 6. மங்களூர் (தனி) 7. அரூர் (தனி) 8. வால்பாறை (தனி) 9. சீர்காழி (தனி

.என்.டி.ï.சி. (தமிழ்நாடு

1. வில்லிவாக்கம் 2. சிங்காநல்லூர்

இந்திய தேசிய லீக்

1. வாணியம்பாடி 2. பாளையங்கோட்டை

இந்திய ïனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு)

1. சேப்பாக்கம்

மூவேந்தர் முன்னேற்ற கழகம்

1. திருவெறும்பூர்

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி

1. மதுரை மத்திய தொகுதி

மதச்சார்பற்ற ஜனதா தளம்

1. பெண்ணாகரம்.

Courtest: Maalaimalar

கம்யூனிஸ்டுகள் போட்டியிடும் தொகுதிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

1. பெரம்பூர்
2. குடியாத்தம்
3. நாகப்பட்டினம்
4. திண்டுக்கல்
5. சிங்காநல்லூர்
6. திருப்பூர்
7. திருப்பரங்குன்றம்
8. வாசுதேவநல்லூர்
9. விளவங்கோடு
10. திருவட்டாறு
11. மதுரை கிழக்கு
12. அரூர்
13. சிதம்பரம்

இந்திய கம்யூனிஸ்ட்

1. திருத்துறைப்பூண்டி
2. மன்னார்குடி
3. நன்னிலம்
4. கோவில்பட்டி
5. சிவகங்கை
6. அவினாசி
7. ஆலங்குடி
8. தளி
9. பெருந்துறை
10. திருவில்லிபுத்தூர்

(மீதமுள்ள தொகுதிகளில், முஸ்லிம் லீக் 1. அரவக்குறிச்சி 2. பாளையங்கோட்டை 3. வாணியம்பாடி ஆகிய இடங்களில் திமுக சின்னத்தில் போட்டியிடும். மீதியிடங்கள் திமுகவுக்கு.)

திமுக – பாமக தொகுதி உடன்பாடு

பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்

1. செங்கல்பட்டு 2. காஞ்சிபுரம் 3. திருப்பத்தூர் (வேலூர்) 4. அணைக்கட்டு 5. கும்மிடிப்பூண்டி 6. திருத்தணி 7. மேல்மலையனூர் 8. வானூர் 9. தாரமங்கலம் 10. ஓமலூர் 11. பெரணமல்லூர் 12. கலசப்பாக்கம் 13. விருத்தாசலம் 14. பண்ருட்டி 15. பெண்ணாகரம் 16. கபிலர்மலை 17. பாலக்கோடு 18. பவானி 19. ஜெயங்கொண்டம் 20. பூம்புகார் 21. முகையூர் 22. ஆர்க்காடு 23. திருவிடைமருதூர் 24. புவனகிரி 25. திருப்போரூர் 26. எடப்பாடி 27. காவேரிப்பட்டினம் 28. வரகூர் 29. மேட்டூர் 30. திண்டிவனம் 31. சைதாப்பேட்டை

பா.ம.க தேர்தல் அறிக்கை

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்று பாமக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. குறைந்தபட்ச செயல் திட்டம், மாநில அரசை கண்காணிக்க நிழல் அரசாங்கத்தை அமைப்போம் என்பது உட்பட 67 அம்சங்களை பாமக தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளது. திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆட்சி அமைப்பதற்கு பாமக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். தமது குடும்பத்தை சேர்ந்த யாரும் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பாமகவின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்டார்.

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக இன்று வெளியிட்டது. இதன் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள மீனாட்சி பவன் ஓட்டலில் நடைபெற்றது. தேர்தல் அறிக்கையை டாக்டர் ராமதாஸ் வெளியிட, முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, புதுவை ராமதாஸ் எம்.பி., ஜி.கே.மணி, திருக்கச்சூர் ஆறுமுகம் எம்எல்ஏ ஆகியோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக் கொண்டார்கள். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து ராமதாஸ் கூறியதாவது:

இந்த தேர்தல் அறிக்கை 41 பக்கங்களை கொண்டுள்ளது. 67 தலைப்புகளில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மத்தியில் உள்ளது போல குறைந்தபட்ச செயல் திட்டத்தை இங்கும் செயல்படுத்த வேண்டும். தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் அமையும் ஆட்சியில் கூட்டணி கட்சிகள் விரும்பினால் இந்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்கவும், ஆலோசனைகள் கூறவும் குழு ஒன்றை அமைக்கலாம்.

ஏற்கனவே தெரிவித்தபடி திமுக ஆட்சியில் பங்கு பெறுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக் கிறோம். புதிதாக அமையும் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்போம். மேலை நாடுகளில் ஆட்சியில் இடம் பெறாத கட்சிகள் ஒன்று சேர்ந்து நிழல் அரசாங்கத்தை அமைத்து திட்டங்களையும், சட்டங்களையும் எடுத்துக் கூறுகிறார்கள்.

அது போல பாமக நிழல் அரசாங்கத்தை ஏற்படுத்தி திமுக அரசு முன்மாதிரி அரசாக விளங்க உதவிகரமாக இருப்போம். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த திட்டம் மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

கட்டாய கல்வி தற்போது 6 வயது முதல் 14 வயது என்று இருப்பதை 3 வயது முதல் என்று திருத்தி கட்டாய கல்வியை வழங்க வேண்டும். கல்விக்கு ஒதுக்கும் நிதியை 50 சதவீதத்தை ஆரம்ப கல்விக்கு செலவிட வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை கல்வி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்காக தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புத்துறை என்ற புதிய துறையை உருவாக்க வேண்டும். பெண்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது 30 மாவட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு மாவட்டம் என்ற வகையில் 39 மாவட்டமாக பிரிக்க வேண்டும்.

பத்திரிகையாளர் நலனை பேணும் வகையில் நல வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மத்திய அரசு போல பொருளாதார சர்வே அறிக்கையை பட்ஜெட்டுக்கு முன்னதாக தாக்கல் செய்ய வேண்டும்.

ஆண்டு திட்டங்கள் செயல்படுத்தப் பட்ட விதத்தை கண்டறிந்து அது குறித்து அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் முழுமையாக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது மத்திய அரசு செயல் படுத்தும் பணிகள், மாநில அரசு செயல்படுத்தும் பணிகள், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் பணிகள் என்று மூன்று பட்டியல்கள் உள்ளன.

தற்போது புதிதாக ஒரு பட்டியலை உருவாக்கி உள்ளாட்சித்துறை அமைப்புகளுக்கென்று தனி பட்டியலை தயாரிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் மட்டுமே வீட்டு வசதி வாரியம் உள்ளது. கிராமப்புறங்களிலும் வீட்டு வசதி வாரிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த தனி தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும். இது போன்ற முக்கிய அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ராமதாஸ் பேட்டி
பின்னர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:
கிராமப் பஞ்சாயத்துகளுக்கு மாநில அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. கிராம சபையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. இதுபோன்ற குறைகளை முழுமையாக களைந்து, உள்ளாட்சி அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதற்கு உரிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் நிதிகளும் நேரடியாக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கே சென்றடைய வேண்டும்.

வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அதிமுக சார்பாக ஒருவர் கூட இந்த முறை சட்டமன்றத்திற்கு வரமுடியாது; வரவும் மாட்டார்கள். சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்ற நிலை உருவாகாது. ஒருவேளை அப்படி ஒரு நிலை வந்தாலும், திமுக ஆட்சி அமைக்க நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம்.

தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நல்ல முறையில் சுமூகமாக நடைபெற்று வருகிறது. அநேகமாக இன்று மாலை அல்லது நாளை காலை எங்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். கூட்டணி கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது தான் நல்லது.

திமுக இப்போது வெற்றி பெற்றுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. அதேபோல, நாங்களும் வெற்றி பெற்ற ஒரு தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்துள்ளோம். ஆனால், திமுக மற்றும் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி எதையும் எங்களுக்கு தரவில்லை.

வன்னியர் சங்க நிர்வாகிகள் என்ற பெயரில் அறிக்கை விடும் சிலரை பற்றி வன்னிய சமுதாய மக்கள், “கூலிக்கு மாரடிப்பவர்கள், கைக் கூலிகள், பதர்கள், செல்லாக்காசுகள்’ என்று அடையாளம் கண்டு புறக்கணித்திருக்கிறார்கள். இது போன்ற பலரை எனது 25 ஆண்டு கால பொதுவாழ்வில் பார்த்திருக்கிறேன். இதன் மூலம் எனக்கு எந்த தோல்வியும் வராது.

பாமக தொகுதி பட்டியல் வெளியானதும், அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களுடன் நேர்காணல் நடத்தி முடித்த பின்னர், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். 2 அல்லது 2க்கு மேற்பட்ட தனித்தொகுதிகளில் பாமக இம்முறை போட்டியிடும்.

தமிழகத் தேர்தலுக்கான கூட்டணி பட்டியல் வெளியான பிறகு, பாண்டிச்சேரி கூட்டணி பற்றி கருணாநிதி முடிவு செய்வார். தேர்தல் முடிந்த பிறகு, விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து தமிழ் பாது காப்பு இயக்கப் பணிகளை மேற்கொள்வோம். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்திட மாநில அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து நடிகர் கார்த்திக்கை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று பார்வர்டு பிளாக் தீர்மானம் நிறைவேற்றிருப்பது குறித்து கேட்கப்பட்ட போது, வாக்குகளை சிதறடிக்கத்தான் இது உதவும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

குடும்பத்தினர் போட்டி இல்லை

வரும் சட்டசபை தேர்தலில் தமது குடும்பத்தை சேர்ந்த எவரும் போட்டியிட மாட்டார்கள் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். இன்று தமது கட்சியின் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சட்டசபை தேர்தலில் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடுவார்களா என்று நிருபர்கள் கேட்டனர். இந்த கேள்வி எந்த வகையில் பொருத்தம் என்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். வரும் சட்டசபை தேர்தலில் என் குடும்பத் தைச் சேர்ந்த எவரும் நிச்சயமாக போட்டியிட மாட்டார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

முக்கிய அம்சங்கள்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று வெளி யிடப்பட்ட பாமக தேர்தல் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கள்ளச்சாராயத்தை ஒழிக்க பாமக கடும் நடவடிக்கை எடுக்கும். டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்.
* கஞ்சா, பான்பராக் போன்ற புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பொது இடங்களில் விற்கப்படுவதை தடுக்க சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறை தண்டனையும் வழங்கப்படும்.
*மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும். சுற்றுச்சூழல் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
*தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் சென்னை குடிநீர் தேவைகளை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்படும்.
* குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* காவல்துறையின் பணி நேரத்தை 8 மணி நேரம் என நிர்ணயிப்போம்.
* சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
* சலவை தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.
*வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வருமானம் என்பது பாமகவின் தலையாய நோக்கம். அதன் அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க குறைந்தபட்ச வேலைவாய்ப்பு திட்டத்தை பாமக அமல்படுத்தும்.
* அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தேவையான சட்டம் கொண்டுவர பாமக வலியுறுத்தும்.
* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பாமக குரல் கொடுக்கும்.

Courtesy: Maalaisudar