சத்தியமூர்த்தி பவன் அடிதடி


இட்லிவடை பதிவு, ஜெயா டிவி விடியோ பிட்

கடந்த சில தினங்களாக காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியை மிக மோசமாக வெளிக்காட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த 48 இடங்கள் மிக அதிகம் என்று தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைவருமே எண்ணும்போது காங்கிரஸ் கு(தொ)ண்டர்களுக்குமட்டும் வேறு எண்ணங்கள். காங்கிரஸ் வெற்றுப் பெருங்காய டப்பா என்பது அவர்களுக்கு ஏனோ புரியவில்லை.

வீரப்ப மொய்லி உருவ பொம்மை எரிப்பில் தொடங்கி, மாநிலமெங்கும் ஆங்காங்கே எதிர்ப்புகள் என்றாகி கடைசியில் கூட்டமாக சத்தியமூர்த்தி பவனில் அடித்துக்கொண்டுள்ளனர் காங்கிரஸ்வாதிகள்.

எகப்பட்ட உள்கோஷ்டி. காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் தொண்டர்களால் கூட்டணிக் கட்சிக்கு ஏதாவது ஆதாயம் உண்டா என்று கூட்டணிக் கட்சிகள் யோசித்துப் பார்க்கவேண்டும். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் கடுமையாக உழைக்கும். அங்கும்கூட காங்கிரசின் உள்கோஷ்டிப் பூசலால் வாக்குகள் சிதறும். காங்கிரஸ் போட்டியிடாத பிற தொகுதிகளிலோ கேட்கவே வேண்டாம்.

திமுக தலைவர் கருணாநிதி சொன்னதுபோல கூட்டணியும் வேண்டும்; அதே சமயம் விட்டுக்கொடுக்காமல் வேண்டுய தொகுதிகளும் வேண்டும் என்றால் கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதுபோலத்தான் உள்ளது!

பிற கட்சிகளில் ஓரளவுக்குக் கோபம் இருந்தாலும் காங்கிரஸ் அளவுக்கு வெளியே தெரியவில்லை.

One response to “சத்தியமூர்த்தி பவன் அடிதடி

  1. kalleriya, kalithanam seyya 10 per irundhal koshti thalaivar ahividalam .mediavum idhai boost pannum enbathal ellorum thalaivargalaga kanavu kanginranar

    ippadi aasaippadubavargal kottani vedam enru koravendiyadhudhane
    than virumbum thoguthi ellorukkum kidaikkuma?
    ella katchigalilum “dissent” undu
    ivargal mattum ippadi seykindranar
    koshti thalaivargalil ethanai peral
    ore thoguthiyil 10000 vote vangamudiyum? thamilnadu muzhudhmaga 10000 vote kooda vangamudiyadhavargal kooda kosti thalaivar aaga arivuthukondu seat ketkum kodumai eppodhu theerum?
    dindivanam…t.rajendar parthum puthi varavillai

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.