தேர்தல் கருத்துக் கணிப்பு


வலைஞர் நாக.இளங்கோவன் தமிழகத் தேர்தலுக்கான முதல்கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளார்.

2006-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்கணிப்பு-1: DMK-191, ADMK-43

3 responses to “தேர்தல் கருத்துக் கணிப்பு

  1. Looks like one of those dubious unscientific opinion polls – similiar to the one’s published by Tamil Political weeklies like Nakeeran

    I think this election will be a psephologist’s nightmare.

    Prediciting TN election outcome was always a cakewalk for pollsters.If pollsters discerned positive swing in favor of one party/alliance,they could easily predict that party/alliance will get a huge landslide (mimimum 180/234 for assembly and 30/39 for Loksabha)

    But this election will be different and will go down to the wire .

    I think Karunanidhi is got his arthimetic woefully wrong.Besides contesting in only 129 seasts,DMK is fighting 105 seats directly against AIADMK.I will be suprised if DMK hitrate against AIADMK exceeds even 40 %

    Jaya and Vaiko are powerful campaigners.There is only Karuna in the other side of the divide to counter them

    And rarely i have seen Tamil electorate expressing their anger and resentment against the same party in two continous elections continously

    My Sincere advise to the DMK election strategist will be not to go overboard with their well-oiled propaganda Machinery(Sun TV especially) as it might backfire

  2. பதிவிற்கு நன்றி,
    பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்ட இக்கணிப்பு எத்தகைய அளவுக்கு சரியாக அமையும் என்பது சந்தேகமே!

    வடமாவட்டங்களுக்கான கணிப்பில் என்னுடைய அனுமானங்கள்:
    நெல்லிகுப்பம், கடலூர், குறிஞ்சிப்பாடி – அதிமுகவோ, விடுதலை சிறுத்தைகளோ நின்றிருந்தால் ஒரளவு நன்றாயிருந்திருக்கும்.

    அதிமுக அணி எளிதில் வெற்றி பெரும் தொகுதிகள் வரிசையில் குறிஞ்சிப்பாடியையும் சேர்த்துள்ளீர்கள்.இதுவரை நடந்த தேர்தல்களின் முடிவுகளைப் பார்க்கும் பட்சத்தில் திமுகவுக்கு எளிதில் வெற்றி பெரும் தொகுதியாகவே இது உள்ளது. கடந்த தேர்தலில் பன்னீர்செல்வம் மட்டுமே திமுக சார்பில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்?!

    மேலும் திமுக தோல்வியடைந்த காலங்களில் கூட மிகக் குறைந்த ஓட்டு சதவிகிதமே. ஆகையால் இங்கு திமுகவிற்கு நிரந்தர ஓட்டு வங்கி உள்ளது தெளிவாகிறது.

    கடலூரிலும் இதே நிலை தான். விசி அதிமுகவில் இருப்பதால்., கடந்த முறை சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக இம்முறை சுலபமாக வெற்றி பெற இயலும். மேலும் மதிமுக சார்பில் திரு. சௌ. பத்மநாபன் நிறுத்தப்படும் பட்சத்தில் ஓரள்வு ஓட்டுகளை பெறுவார். (மூன்று முறை தேர்தல்களில் நின்று தோல்வியுற்றவர் என்ற sympathy factor)

    நெல்லிக்குப்பம் பகுதி ஒரு கலவர பூமியாகவே காட்சியளித்திருக்கிறது. இங்கு அதிமுகவுக்கு நிரந்தர ஓட்டு வங்கி இருந்தாலும், பாமகவின் பங்களிப்பே வெற்றியை நிர்ணயம் செய்துள்ளது. ஆக இங்கு பாமக – விசி யின் வாக்குகளே முக்கியமாகிறது. இங்கு மதிமுகவிற்கு பெரிதாக சொல்லுமளவிற்கு தொண்டர் படையோ அல்லது கட்சியின் வளர்ச்சியோ இல்லை. திமுக சார்பில் விரிவுரையாளர்
    திரு. சன்முகம் நிறுத்தப்படும் பட்சத்தில் அவருக்கு வெற்றி உறுதியாகிறது.

  3. நாகை. இளங்கோவன் கணிப்பு சாத்தியமாவதற்கு வாய்ப்பு உள்ளது. பெரிதாக அலையொன்றும் தென்படாமற்போனாலும், கூட்டணிக் கட்சி பலம் தி.மு. கழகத்திற்குச் சாதகமாகத்தான் இருக்கிறது.

    ‘Anti-incumbency factor’ இருக்கோ இல்லையோ அம்மையார் மீது Aunty Incumbency நிலவத்தான் செய்கிறது.

    களத்தில் வாரியிறைக்கப்படும் பணமும், தி.மு.கழகத்தின் கோஷ்டிப்பூசலும் வேண்டுமானால் அண்ணா தி.மு.கவிற்கு ஓரளவு நம்பிக்கையைத் தரலாம்.

    மற்ற Psephologist-களெல்லம் கண்விழிக்குமுன்னே, ஆரூடம் சொன்ன நாகை. இளங்கோவனுக்கு பாரட்டுகள். மனிதர் இந்நேரம், அடுத்த ரவுண்டிற்குத் தயாரகியிருப்பார் என நினைக்கிறேன்.

    – அத்திம்பேர்

Pot"tea" kadai -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.