காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகளும் இப்பொழுது முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
என்னென்ன தொகுதிகள் என்று ஒரு பட்டியலை தினமலர் வெளியிட்டுள்ளது. ஆனால் திமுக, காங்கிரஸ், பாமக வட்டாரங்களின்படி யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்னும் விவரம் அனைவருக்கும் தொகுதிகளை ஒதுக்கியபின்னரே வெளியிடப்படும் என்று தெரிகிறது. அதனால் தினமலர் வேண்டுமென்றே குட்டையைக் குழப்ப முடிவு செய்திருக்கலாம்.
தினமலர் தகவலின்படி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1. ஆர்.கே.நகர் 2. திருப்பெரும்புதூர் 3. பூந்தமல்லி 4. மதுராந்தகம் 5. பள்ளிப்பட்டு 6. சோளிங்கர் 7. செய்யாறு 8. பேரணாம்பட்டு 9. வேலூர் 10. செங்கம் 11. வானூர் 12. ரிஷிவந்தியம் 13. காட்டுமன்னார்கோவில் 14. தர்மபுரி 15. ஓசூர் 16. ஆத்தூர் 17. நாமக்கல் 18. சேலம்-1 19. தொண்டாமுத்தூர் 20. ஊட்டி 21. வால்பாறை 22. கோவை மேற்கு 23. வேடசந்தூர் 24. நிலக்க்கோட்டை 25. மேலூர் 26. தேனி 27. தொட்டியம் 28. திருவரங்கம் 29. அரியலூர் 30. மயிலாடுதுறை 31. பேராவூரணி 32. பாபநாசம் 33. பட்டுக்கோட்டை 34. திருமயம் 35. காரைக்குடி 36. திருவாடானை 37. பரமக்குடி 38. கடலாடி 39. சிவகாசி 40. விருதுநகர் 41. திருவைகுண்டம் 42. கடையநல்லூர் 43. நாங்குநேரி 44. ராதாபுரம் 45. சாத்தான்குளம் 46. கிள்ளியூர் 47. குளச்சல் 48. மதுரை மேற்கு
Update: (24 மார்ச் 2006) காங்கிரஸ் அதிகாரபூர்வ இடங்கள்
நேற்று தினமலரில் unofficial-ஆக வெளியான 48 இடங்களையும், பின்னர் official-ஆக வெளியான இடங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் 6 இடங்கள் மாறியுள்ளன.
நேற்றைய பட்டியலில் இருந்து நீக்கவேண்டிய தொகுதிகள்:
1. கடலாடி 2. சிவகாசி 3. செங்கம் 4. தர்மபுரி 5. நாங்குநேரி 6. பேரணாம்பட்டு
அதற்கு பதிலாகச் சேர்க்க வேண்டிய தொகுதிகள்:
1. காங்கேயம் 2. சேரன்மாதேவி 3. மானாமதுரை 4. போளூர் 5. மொடக்குறிச்சி 6. ராமநாதபுரம்











//30. மயிலாடுதுறை 🙂
எங்க ஊரை இனிமே ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது! அம்மா கட்சிக்கு ஒரு சீட் கிடைச்சுடுத்தே! 🙂
இவை அனைத்தும் காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ள தொகுதிகள் ஆயிச்சே, கேட்டது கிடைக்குமா?
மொய்லி கொடும்பாவி எரிப்பு
தமிழ்முரசு – காங்கிரசுக்கு தோற்கும் தொகுதிகளை வாங்கியதாக காங்கிரஸ் மேலிட பிரதிநிதி வீரப்ப மொய்லி உருவ பொம்மையை இன்று காலை 11.20 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகே காங்கிரசார் எரித்தனர்.