தேர்தல் செய்திகள்


* தமிழகத்தில் உள்ள இரண்டு தலித் கட்சிகளில் ஒன்றான புதிய தமிழகம் (தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி), தனியாகத் தேர்தலில் நிற்பதாக முடிவு செய்துள்ளது. 150 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

* ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக், தமிழ்நாடு கிளை (தலைவர்: நடிகர் கார்த்திக்) 111 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஃபார்வர்ட் பிளாக் (சந்தானம்) கட்சிக்கு ஓர் இடம் தருவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

* இன்னமும் பாஜக, விஜயகாந்தின் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் இரண்டும் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யவில்லை. முடிந்தால் 234 தொகுதிகளிலும் போட்டியிடலாம்.

One response to “தேர்தல் செய்திகள்

  1. பத்ரி
    “சொல்றாங்க சொல்றாங்க” வைத் தொடரவும் 🙂

mAvu uruNdai -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.