பாண்டிச்சேரியில் 30 தொகுதிகளுக்கு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக, கண்ணனின் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை சேர்ந்து போட்டியிடுகின்றன.
அ.இ.அ.தி.மு.க – 16 இடங்கள்
பு.மு.கா – 10 இடங்கள்
வி.சி – 2 இடங்கள்
ம.தி.மு.க – 2 இடங்கள்
யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்று ஏற்கெனவே பிரித்துக்கொண்டுள்ளார்கள்.
கண்ணன் தலைமையில் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்று ஒரு கட்சி உருவாக்கப்பட்டு பின்னர் அது காங்கிரஸுடன் இணைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் பிளவு ஏற்பட்டது.
ஆனால் மறுபக்கம் திமுக கூட்டணியில் இதுவரையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. காங்கிரஸ், திமுக, பாமக ஆகிய மூன்றுமே பாண்டிச்சேரியில் ஆட்சி அமைக்கும் திட்டத்தில் உள்ளனர். இதில் யார் விட்டுக்கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. முக்கியமாக இப்பொழுதைய ஆளும் கட்சி காங்கிரஸ். சொந்தமாகவே தேர்தலில் நின்று ஜெயிக்கக்கூடிய திறன் தமக்கு இருப்பதாக நினைக்கிறார்கள். அதே சமயம் மத்தியில் கூட்டணி, தமிழகத்தில் கூட்டணி என்ற நிலையில் சோனியா காந்தி பாண்டிச்சேரியிலும் கூட்டணியை விரும்பலாம். சென்ற முறை பாமகவுக்கு பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதி சென்றதில் பாண்டிச்சேரி காங்கிரஸ் கடும் கோபம் கொண்டது.
மேற்படிக் காரணங்களால் பாண்டிச்சேரியைப் பொருத்தமட்டிலும் அதிமுக கூட்டணி ஆரம்பத்திலிருந்தே நல்ல வலுவான நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது.











புதுவையில் அரசியல் கணக்குகள் தனி ரகம். இந்த கூட்டணி சமாச்சாரமெல்லாம் அங்கே ஒரு விஷயமே இல்லை. அதிமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்கும் அங்கே பெரிய ஆதரவொன்றும் கிடையாது. காங்கிரஸ் தான் அங்கே பலம் வாய்ந்தது, அதற்கு அடுத்து திமுக. ஆனால் இவை இரண்டும் மோதிக் கொண்டால் காங்கிரஸுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.
சரிதான். அதிமுக கூட்டணி வெற்றி பெரும் தருவாயில் புதுவை முதல்வர் பதவி கண்ணனைச் சென்று சேரும் என்றும் நாளிதழ்களில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும், சென்ற முறை புதுச்சேரியில் பாமக வாங்கிய அடியால் இந்த முறை அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்றும் சொல்கிறார்கள். மறுபடி திமுக கூட்டணி அத்தகு முடிவை எடுத்தால் யாரோ அவர்கள் தலையில் எதையோ போட்டுக்கொண்டது மாதிரி ஆய்விடலாம்.