INTUC – அதிமுக கூட்டணி செல்லாது
INTUC தமிழ்நாடு, அதிமுகவுடன் அமைத்துக்கொண்ட கூட்டணி செல்லாது என்று அவர்களது அகில இந்திய தலைமை கூறியுள்ளது. இரண்டு சீட்கள் ஒப்பந்தம் செய்த தமிழ்நாடு தலைவர்கள் இருவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பார்வர்ட் பிளாக் தனித்துப் போட்டியிடும்
நடிகர் கார்த்திக் தலைமையிலான ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக்கின் தமிழகக் கிளை தனித்தே போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளது. கார்த்திக் அதிமுகவுடன் கூட்டுசேர்வதை விரும்பினாலும் அம்மா விரும்பவில்லை போல…
விஜயகாந்த் நடிக்கும் படம் சுதேசி
விஜயகாந்த் நடித்து வெளியாகும் ‘சுதேசி’ படம் அவரது கட்சியின் (அவருடைய) கொள்கை விளக்கமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
பிற கட்சியின் தலைவர்களும் இப்படிப் படமாக எடுத்து வெளியிட்டால் மக்கள் நிலைமை என்னாகும்?
மற்றபடி தேர்தல் களத்தில் வேறு ஏதும் அதிரடியாக நடக்கவில்லை.











>> மற்ற தலைவர்களும் படம் எடுத்தால் எப்ப்படி இருக்கும்?<< ‘பட்ஜெட் உரை என எதுவும் தனியாக நடத்தத் தேவையில்லை.என்னுடைய திட்டங்களை நான் நாடோடி மன்னன் படத்திலேயே தெரிவித்து விட்டேன். -எம்ஜி.ஆர் “அப்படியானால் நாடோடி மன்னன் பாட்டுப் புத்தகத்தையே சட்டமன்றத்தில் தாக்கல் செய்துவிடலாமே?
-துரைமுருகன்
70களில் சட்டமன்றத்தில் நடந்த விவாதம்.